தடம் மாறி உன் வழி நடக்கையில்...
நான் தொடரும் நிழலின் மோதல்களில்...
உன் ஸ்பரிசத்தினை உணருகின்றேன்...
நீ இல்லாமலே.....!
நிறைந்திருக்கும் துயரங்களின் போது...
உன் அறைவனப்பின் மிதப்பினை...
கடந்து செல்லும் மிகுந்து போன எச்சங்களில்...
முகர்ந்து முகர்ந்து கலைத்துப்போகிறேன்...
உன் சுவாசம் இல்லாமல்....!
உன் நினைவுகளுக்கு சிறகுகள் வரைந்து...
கட்டற்ற காலப்பெட்டகத்தின் திக்கற்ற வெளியினில்...
பறக்கவிட நினைக்கையில்...
விடுமுன்னே உதிரத்தொடங்கி விடுகிறதே சிறகுகள்...!
சுமை கூடித்தான் போகிறது....!
இறக்கி வைக்க மனமின்றி
தூக்கிக்கொண்டே திரிகின்றேன்...
மீண்டும்....
தடம் மாறி உன் வழிநடக்கையில்...
நான் தொடரும் நிழலின் மோதல்களில்
ஸ்பரிசத்தினை உணருகின்றேன்
நீ இல்லாமலே.....
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Saturday, January 15, 2011
Friday, January 07, 2011
தென்மேற்குப் பருவகாற்று
உலகத்துல இருக்குற படத்த எல்லாம் தேடித்தேடி பாக்குறப்போ நம்ம ஊர்க்காரங்க ஏன் இப்புடி எல்லாம் எடுக்கமாட்டேங்குறாங்கன்னு ஒரு ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்த இந்தப்படத்தோடு ஒரு பாட்டே போக்கிடுச்சு. ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு அம்மா பாடல். படம் தொடங்கும் போதே டைடில் பின்னனியில் நம்மை படத்தோட பயணிக்க வைக்குது. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை. மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு நிரந்தரமான ஒர் அமைதியை பறவவிட்டு......
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.....
என்னைக் கல்லொடச்சு வளர்த்த நீயே.....
முள்ளுக்காட்டில் முளச்ச தாயே...
என்னை முள்ளுத்தைக்க விடல நீயே......
இப்புடிப்போகும் பாடல்தான் படத்தின் முடிவில் காட்சிகளின் பின்னனியில் தாக்கத்தைக் கொடுத்து மனதைக் கனத்துப்போக வைக்கின்றது. படத்தினைப் பார்த்துவிட்டு இதை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கில்லை. இதற்கு முன்பு கனா கண்டேன் படத்தின் முதல் பாடலில் "தாய் சொல்லும் உறவை வைத்தே உலகம் சொந்தம்" என்று ஆரம்பித்து அந்தப்பாடலின் பின்னனியில் ஒரு கதையை சொல்லி முடித்திருப்பார் இயக்குனர். இரண்டு பாடலுக்கும் சொந்தக்காரர் வைரமுத்து அவர்கள்.
இந்த மாதிர் பாடல்கள் வராதா என்று நீண்ட நாட்களாக இருந்த எனது ஏக்கத்தை தீர்த்து வைத்த தென்மேற்கு பருவக்காற்று குழுவினருக்கும் படம் முழுவதும் இரைச்சல் இல்லாத பாடல்களை தெளிவாகப் புரியும் வகையில் இசையமைத்து இசையமைப்பாளருக்கும் வாய்ப்பினைக் கொடுத்த இயக்குனருக்கும் நன்றிகள்.
இந்த நொடி வரையிலுல் காட்சிகளின் பின்னனியில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. யாருமற்ற தனிமையில் கேட்டுப்பாருங்கள் உணர்வீர்கள் அதன் வலிமையை.
Tuesday, August 10, 2010
ஒரு சில எண்ணங்களும்-துமிழ் அவர்களுக்கு நன்றியும்
மருத்துவர் துமிழ் அவர்களின் மனித உடலின் ஒரு பாகத்தினைப்பற்றிய ஒரு பதிவு.
அந்தப்பதிவினைப்படித்த உடன் எனக்கு என் பள்ளிக்கால நினைவுகள் வந்து போனது. காரணம் இருக்கின்றது. உயிரியல் பாடத்தினை நான் என்றுமே மனனம் செய்து படித்ததில்லை. அந்தப்பருவத்தில் வேறு முக்கியமான வேலையில்லாத சமயங்களில் அந்தப் பாடப் புத்தகத்தினை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அது வாழ்க்கைக் கல்வியாக இருந்ததனாலே அதன் மீது எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. யாரும் சொல்லாமலேயே முக்கியமாக மனனம் செய்யாமல் படித்துவிடுவேன். எங்கள் ஆசிரியரும் அதற்கு முக்கியமான காரணியாக இருந்தார். அவர் மூன்று மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தும் பொழுது எங்களுக்கு என்றுமே அயற்சி உண்டானதில்லை. அத்தனை உற்சாகமாக இருக்கும். இடையே இடைவேளையும் கொடுப்பார். இடைவேளைக்குப் பின் இருக்கக்கூடிய ஒரு மணி நேரத்திற்காகவே நாங்கள் மூன்று மணி நேரத்தைக்கடந்தும் அதே உற்சாகத்துடன் அமர்ந்திருப்போம்.
அந்த வயதினில் அந்த ஒரு மணி நேரம் மிக சுவரஸ்யமானதாகவும் மேலும் எங்கள் அறியாமையை போக்கும் ஒன்றாகவும் இருந்திருக்கின்றது,
என்பதை அறியாமலேயே கடந்து வந்து விட்டோம் என்பதை இன்று உணர்ந்திருக்கின்றேன். எங்களுக்கு இருக்கக்கூடியா பாலியல் ரீதியான சந்தேகங்களை விளக்குவதற்காகவே வாரத்தின் ஒரு நாளில் ஒரு மணி நேரத்தினை ஒதுக்குவார். ஒரு துண்டுச்சீட்டில் எங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை எழுதிக்கொடுப்போம். ஒவ்வொருவருக்கும் விதவிதமான சந்தேகங்கள். தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், அந்த வயதுக்கே உரிய ஒரு சில விருப்பங்களும் எங்களை தூண்டியது. நாங்கள் எழுதிக்கொடுத்த அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு அதிலிருந்து பத்து சீட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக பதில் சொல்வார். மீதி இருக்கக்கூடிய கேள்விகளை படித்துவிட்டு அது பற்றிய போதுவான விசயங்களை கோர்வையாக எங்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவார்.
பாடத்திட்டத்தில் இல்லாத பல விசயங்களை எங்களுக்கு அறியக்கொடுத்தார். ஒரு சிலக்கேள்விகளைப் படித்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தூக்கி குப்பையில் போடுவார். நாங்கள் புரிந்து கொள்வோம் எவனோ ஒருவன் விவகாரமான கேள்வியினைக் கேட்டுள்ளான் என்பதை. நாங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் அதைக்கேட்டால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள் என்பார். அவர் பாதிரியார் என்பதால் நாங்கள் FATHER என்றே அழைப்போம். அப்பொழுது விளையாட்டுத்தனமாக நாங்கள் கேட்டக் கேள்விகள் அப்பருவத்தில் முழுமையாக இல்லையானாலும் பின்பு ஒரு சில விசியங்களில் புரிதலை எனக்குக்கொடுத்தது. மேலும் ஒரு சில விசயங்களை சுய ஆர்வத்தின் காரணமாக படித்து தெரிந்து கொண்டேன். நான் படித்தது ஒரு பாலர் பள்ளியில். அவர் ஒரு ஆண் என்பதால் நிறை விசயங்களை வெளிப்படையாக விவாதித்தார். அதுவே இருபாலர் என்றால் அதுவும் ஆசிரியர் பெண்ணாக இருந்திருக்கும் பட்சத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றே எனக்குத்தோன்றுகிறது.
பின்பு கல்லூரிக்காலத்திலும் தொடர்ந்தது. நான் கல்லூரியில் முதன்மைப் பாடமாக இயற்பியல் பாடத்தினை படித்தேன். அங்கும் NSS இல் இணைந்ததன் மூலமாக பல மருந்துவத்துறை கருந்தரங்களிலும் மற்றும் சமுதாயப்பணிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. எயிட்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு நாடங்களை நாங்கள் கிராமங்களில் சென்று அரங்கேற்றுவோம். எங்களில் ஒரு சிலருக்கு பார்த்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் முகபாவனைகளை கண்காணித்து அறிக்கை தருமாறு கூறுவார்கள். ஒரு சில மிகச் சிக்கலான வசனங்கள் அதாவது மிக வெளிப்படையாக(பச்சையாக) ஒரு சில விசயங்களை (வசனங்களில்) சொல்வோம். அப்பொழுது பெரும்பாலனவர்களின் முகம்மாறும். அதுவரை அவர்கள் நம்பிக்கொண்டிருந்த அல்லது செய்துகொண்டிருந்த ஏதோ ஒன்று தவறு எனப் புலப்படும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.
கல்லூரியில் படிக்கும் போது முக்கியமாக அறிவியல் பிரிவு அல்லாது மற்ற பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பாலியல் ரீதியான அறிவு இல்லை என்பது என் அனுமானம். ஒரு சிலர் என்னிடம் கேட்கும் அல்லது கேட்ட கேள்விகளில் இருந்து அனுமானிக்கின்றேன். இதை பள்ளிப்பருவத்திலே கொண்டுவருவது அவசியமான ஒன்றாகவே எனக்குப்படுகின்றது. ஆனால் இதை தொடங்குவதற்கு முன் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கவேண்டியது அவசியம்.
இந்தப்பதிவை எழுதியதன் நோக்கமே பாலியல் கல்வி தேவை என்பதற்காகத்தான். அது எந்த அளவிற்கு இங்கு வெளிப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக எத்தனையோ பதிவுகள் இந்த வலையுலகில் வந்துள்ளது. இது என்பங்காக இருக்கட்டும்.
மருத்துவர் துமிழ் அவர்களின் வலைப்பூ நிறைய பேருடைய சந்தேகங்களுக்கு நல்ல மருந்தாக அமைந்துள்ளது. மேலும் ஒரு விசயம் அவருடைய வலைப்பூவின் பதிவுகள், என் நண்பர் ஒருவருடைய மனக்குறையை நீக்கி மண வாழ்க்கையை இனிமையாய் தொடங்கிட வழி கோலியுள்ளது. என் நண்பரின் சார்பாக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Thursday, August 05, 2010
புகை எனக்குப் பகை-உங்களுக்கும் தான்
அவர்கள் இருவரும் மிக சுவரசியமான முறையில் அந்த பகுதியே அலரும் வகையில் கத்திக்கொண்டிருந்தனர், இல்லையில்லை அவர்களைப்பொறுத்த வரையில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் நிச்சயம் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயது இருக்கக்கூடும். அவர்களுக்கு என்னைக்கண்டால் பிடிப்பதில்லை. நான் வந்தால் என்னை முறைப்பதும், போகும் வழியினை வேண்டுமென்றே மறைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள். நான் இருப்பதும் அவர்கள் இருப்பதும் ஒரே அடுக்குமாடிக்குடியிருப்பில்தான்.
அவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதிற்கு காரணம், எனக்கு பிடிக்காத ஆனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம். அவர்கள் கைகளும், வாய்களும் எப்போதும் புகைபோக்கிக்கொண்டிருக்கும். அதை ஒரு முறை நான் கண்டிக்க முற்படுகையில், அவர்களுக்கும் எனக்குமான முதல் பேச்சுவார்த்தை சிறு முறைப்புடன் முடிந்தது. நான் அவர்களிடம் இங்கு வேண்டாம், இந்த இடத்திலிருந்து வெளியே சென்று அதை செய்யலமே என்றேன். ஏனென்றால், மாடிப்படி ஏறும் இடத்தில் குறுக்கலாக நின்று கொண்டு முழுப்பாதையையும் மறித்தோ அல்லது மறைத்தோ போவோர்க்கும் வருவோர்க்கும் இடைஞ்சலாக தானும் கெட்டு, போவோர் வருவோரையும் சேர்த்து தன் புகைபழக்கத்தினால் தொந்தரவு செய்துகொண்டிருந்தனர்.
ஒரு நாள் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் விட்டுச் சென்றுவிட்டிருந்தார்கள். நான் அணைத்துவிட்டு நேரக அவர்கள் வீட்டுக்சென்று அதைப்பற்றி கேட்கப்போக அது மீண்டும் பிரச்சனையில் முடிந்தது. மேலும் அதை தாங்கள் செய்யவில்லை என்று சொல்லிவிட்டனர். அதற்குமேல் அங்கு விவாதம் செய்வது வீண் வேலை என்று தோன்றவே அங்கிருந்து நகர்ந்து விட்டேன். அதன் பிறகே நான் மேலே சொல்லிய எதிர்வினைகள் எனக்கு கிடைத்தது. அன்று முதல் சிகரெட்டை அணைப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டிருந்தார்கள். எப்போதும் புகைந்துகொண்டேயிருக்கும். நானும் என் கண்ணில் படும் நேரங்களில் அணைத்துக்கொண்டேயிருந்தேன்.
ஒரு வாரம் சென்றிருக்கும், அவர்கள் இருவரில் ஒருத்தருடைய குழந்தையை மருந்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல் வந்தது. குழந்தையின் முகத்தினில் காயம், நன்றாக ஜுரமும் அடித்துக்கொண்டிருந்தது. மருந்துவமணையில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். அவர்கள் இருவரும் என்னைப் பார்ப்பதற்குத் தயக்கம் கொண்டு நான் சென்ற நேரம் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தனர். அழகான முகத்தின் கண்ணங்களின் ஒரு பக்கத்தில் திருஷ்டிப்பொட்டுப்போல் நல்ல ஆழமான காயம், நெருப்பினால் சுட்டமாதிரி இருந்தது. அந்த பிஞ்சிற்கு எப்படி வலித்திறுக்கும். அதை நினக்கும்போது எனக்கும் வலித்தது. வலியில் குழந்தை சிணுங்கிக்கொண்டிருந்தது.
அதன் பிறகு இரண்டு முறை அவர்கள் வீட்டிற்கு சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன். குழந்தைக்கு முகத்தினில் இருந்த காயம் ஆரத்தொடங்கியிருந்தது. சிறு குழந்தையாதலால் வளரும் போது இந்தக்காயம் மறைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அதன் தாயார் கூறினார். குழந்தைக்குக் காயம்பட்ட அடுத்த நாளிலிருந்து மாடிப்படிகளில் சிகரெட் வாசமும், வழியினை மறித்து பேசுவதும் முற்றிலும் நின்றுவிட்டிருந்தது.
காரணம் வேறொன்றும் இல்லை, இவர்கள் அணைக்காமல் விட்டுச்சென்ற சிகரெட் அவர்களுடைய குழந்தையை தண்டித்துவிட்டது. புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை அறியாத குழந்தை அந்த இடத்தில் கால் தடுமாறி விழ அங்கிருந்த அந்த நச்சுபாம்பு அந்த குழந்தையின் முகத்தை சுட்டுவிட்டது.
அவர்கள் சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக பின்பு அறிந்துகொண்டேன். இதை நான் கூறிய அன்றே நிறுத்தியிருந்தார்களானால் இந்த அசம்பாவிதமே நடந்திருக்காது. நான் அவர்களை விட வயதில் இளையவன், இது கூட அவர்கள் என்னைப் புறக்கணிக்க காரணமாக இருந்திருக்கக்கூடும். இங்கு தனக்கென்று ஒன்று வரும் போதுதான் நம் மக்கள் அதன் வீரியத்தை உணருகின்றார்கள். வரும் முன் காப்போம் என்பதை நினைவு படுத்தினாலும் உணருவதில்லை. இதை நான் கூறுவதால் நான் நல்லவன் என்று நினைக்கவேண்டாம். இந்தப் புகை விசயத்தில் நான் அதற்கு எதிரானவன் என்பதனால்தான் இங்கே இதைப் பகிற்கிறேன். இன்றும் என்றும் நடைப்பாதையில் கண்ணில் படும் புகைந்து கொண்டிருக்கும் அந்த புகையிலை அரக்கனை நான் அணைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன், என் காலைப் பதம்பார்த்த நாளிலிருந்து. உங்களுக்கு புகைபழக்கம் இருக்குமானல் அதை விட்டுவிடுங்கள் இல்லையானல் அணைக்க முற்படுங்கள்.
Wednesday, July 28, 2010
கொஞ்சம் கரைக்க முனைகிறேன்
வறண்டு போன பாலைவனம் என்று சொன்னால் அதில் புதுமையேதுமில்லை
வறண்டு போன நதி என்று சொன்னாலும் அதிலும் புதுமையில்லை
வற்றாத கடல் எனக்கொள்கிறேன் என் வறட்சியை,
அது மீண்டும் மீண்டும் பெருகுமே அன்றி வறண்டுபோகதல்லவா
காரணம் ஏதென்று யோசிக்கின்றேன்...
ஒரு முறைமட்டுமே வந்ததால் இது இப்படி என்று ஒருவர் சொன்னார்
நான் முற்றாக மறுக்கவில்லை,
தொலைத்தொடர்பில் ஒரே அலைவரிசையில் பேசியதுண்டா?
தொலைப்பேசியில்லாமல் ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததுண்டா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக யாரிடமாவது சண்டையிட்டிருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
பேருந்தின் முன் இருக்கையில் நீ இருக்கையில்
பின் இருக்கையில் நான் இருக்க பின் வந்து மோதும்
உன் ஸ்பரிசத்தினை உணர்ந்திருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
இதிலும் புதுமையில்லைதான் ஆனால்
எத்தனை முறை ஆம் என்று கொட்டிக்கொண்டாலும்
வெறுமை என்னும் கடல் கூடிக்கொண்டே போகின்றதடி.
இன்றும் உன் அருகாமையை உணர்கிறேன்
ஆம் ஆம் என்று சொல்லும் போதெல்லாம்
முகத்தினில் முறுவல் தோன்றுதடி.
காய்ந்த சறுகுகள் கூட பசுமையாய் தோன்றிய காலமடி.
அந்த பசுமையை எழுத நினைக்கையில் வெறுமையாய்
வார்த்தைகள் விழுகுதடி.
இது முதல் முறையல்ல
இது எத்தனையாவது முறை என்ற
கணக்கும் என்னிடம் இல்லை
இது தொடர்கதையடி....
முடிவு வரும் வரை தொடருமடி....
என்றாவது ஒரு நாள் பதிவுசெய்வேன் பசுமையுடன்
என்ற நம்பிக்கை அற்றுப்போகவில்லையடி
நீ எங்கிருக்கின்றாய் என்று அறியேனடி
ஒருவர் சொன்னார் காலம் மாறும் வாழ்வில் வசந்தம் வருமென்று!!!!
என் பசுமை உன்னிடம் உள்ளதடி..
ஏன் என்னிடம் பகைமை கொண்டாயடி..
ஒரு நாள் கண்டேன் உன்னை தூரத்தில்
ஐந்து நிமிடத்தில் உன் அருகினில்
ஆழமாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தேன்...
அன்று அறிந்தோ தெரிந்தோ இல்லை
எனக்காகவோ தெரியவில்லை
எதற்காகவோ மூச்சு வாங்கினேன்
அதில் உன் மூச்சும் கலந்திருந்தது,
சேர்த்து இழுத்துக்கொண்டிருந்தேன்
நீயும் இழுத்துக்கொண்டிருந்தாய்
இருவரும் அறிந்திருக்கவில்லை
ஆனால் மறுக்க முடியாது,
என் உன் என இரண்டும் உள்ளும் வெளியும்
கலந்து கலந்து உடல் முழுதும்
அனைத்து செல்களிலும் பொதிந்து விட்டது
அந்த நொடியில் இருவரின் ஜீவனும் ஜனித்திருந்தது
இருவரின் மூச்சிலே அல்லவா!!
இன்றும் உணர்கிறேன் அந்த சுவாசத்தினை
மூச்சு வாங்கும்போதெல்லாம்.
இங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,
என் வெறுமை வெளிப்படுகிறாத என்று,
நீங்கள் இதை சுய புராணம் என்றாலும்
சுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,
இதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்
கரைக்க முற்படுகின்றேன் அவ்வளவே.

Wednesday, July 21, 2010
துபாய் பஸ்ஸில் ஏறிய மானம் (மீள் பதிவு )
(இந்த வலை பதிவ ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை மீண்டும் மீண்டும் படிக்கப்படுகின்ற பதிவில் அதிகம் முறை படிக்கப்பட்ட என் பதிவு இதுதான் )
இந்தியாவோட மானம் போன கதையும் அத தடுப்பதற்கு நம்ம ஹீரோ செய்த காரியமும். இதுதான் மேட்டரு. பிச்சகாசு 2 திர்ஹம்ஸ்க்காகன்னு சொல்ல முடியாது அதுவே ரொம்பப் பெரிய விசயமா தெரிஞ்சதனாலதான் இத செஞ்சிருப்பாங்களோன்னு தோனுது.
ராத்திரி 8 மணி இருக்கும். இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு. இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான். நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு. டிரைவரு நமக்கு ரொம்ப டியரு. ஓமான் காரரு. ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...
ஒரு வழியா டிக்கெட்ட கொடுத்து முடிச்சுட்டு பஸ் கதவ மூடிட்டு எதயோ

தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு அப்போ அவரு கண்ணவுறுத்துற
மாதிரி பச்ச கலர்ல ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல. அதே நெரத்துல
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல. அதே நெரத்துல
அவரு கை, வண்டியையும் ஸ்டார்ட் பண்ணுச்சு, ஆன் பண்ணுனத
ஆஃப் பண்ணிட்டு அந்த 5 ருவாவ எடுத்துக்கிட்டு நம்மவூர்ல படத்துல SPECIAL லா விஜயகுமார் சிபரிசுல அப்பாய்ண்ட் பண்ணுன
போலிஸ்காரராட்டம் கண்ணு சிவக்காம, காத்து அடிக்காம இப்புடி எதுவுமெ இல்லாம ரொம்ப சாதாரணமா அப்புடியே அந்த நோட்டோடப் பக்கவாட்ல இரண்டு கையையும் புடிச்சுகிட்டு நடந்து வந்தாரு.
யாருக்கும் ஒன்னும் புரியல நான் கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால
யாருக்கும் ஒன்னும் புரியல நான் கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால
ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு. முதல்ல லைட்டா கேட்டறு,
கொஞ்சம் குரல மாத்தி ஹர்டாவும கேட்டுப்பாத்தாரு. நம்ம ஆளுங்கதான் எதையும் பிளான் பண்ணி செய்ரவங்களாச்சே. ஒருத்தரும் உண்மைய
ஒத்துக்கல. ஒத்துக்கலனா இப்பவே இங்கயே இந்த நோட்ட
கிளிச்சுடுவேன்னு இடிமாதிரி முழங்கி ரெடியானாரு அப்பொ STOP னு யாரோ கத்துனாங்க. யாரு நம்ம ஹீரோதான். நீயா!!! அவருக்கு ஒரெ ஷாக்.....
(மேஜர் சுந்தர்ராஜன்இருந்திருந்தார்னா, இரண்டு திர்ஹம்ஸ்க்கு பதிலா ஒரு ரூபாவும், ஒரு திர்ஹம்ஸ்சும்னு அன்னைக்கு ஏமாத்துனானே ஒருத்தன்னு இன்னைக்கு சொல்லுரதுக்கு நாகேஷ் இல்ல அத கேக்குறதுக்கு நம்ம மேஜர் சாரும் இல்ல)
உடனே எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க. நம்ம ஹீரோவுக்கு
இதெல்லாம் காதுல விழல அவனுக்கு அந்த நோட்டும் இந்தியாவோடஉடனே எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க. நம்ம ஹீரோவுக்கு
மானமும் தான் தெரிஞ்சது.
ஹீரோ 5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான். இத்தாங்க கத, ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க. அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த, ஹீரோ இந்தியா வந்தப்போ நல்லவங்க யாரோ திருடிட்டாங்கங்குறது வேற கதை.
Monday, July 19, 2010
அரசு அலுவலகத்தில் ராஜ மரியாதை
நண்பர் ஒருவருடைய தொல்லைப்பேசி தொலைந்துவிட்டது. இது நடந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது. தொலைப்பேசியின் விலை 20,000 ரூபாயை தொடும். முக்கியமான விசயம் விலையில்லை அதில் சேமித்து வைத்து இருக்கக்கூடிய அவரது தொழில் தொடர்பான தொகுப்புகள். என்ன செய்வது என்று தெரியாமல் என்னிடம் வந்தார். நான் அவரைக் கூப்பிட்டுக்கொண்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்காகச் சென்றேன்.
காவல் நிலையத்தில் புகார் பதிவாளர் இல்லாத காரணத்தால் சிறிது நேரம் காத்திருக்கச்சொன்னார்கள். எங்கள் பக்கத்தில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். எங்களிடம் என்ன வேலையாக வந்திருக்கின்றீர்கள் என்று விசாரித்து விட்டு, அவர் வேறொரு ஆலோசை கூறினார். அவர் ஆலோசனையின் பேரில், பேருந்தில் தொலைந்து போயிருந்த காரணத்தால் நண்பர் இறங்கிய பேருந்து நிலையத்திற்குச் சென்று விசாரித்தோம்.
வெயில் அடித்து காயப்போட்டுக்கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தின் அலுவலகத்திற்குச் சென்று நாங்கள் வந்த காரணத்தை விளக்கிவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திருந்தோம். எங்களை வெய்டிங் ரூமில் காத்திருக்கச்சொல்லிவிட்டு கணினியில் மும்முராமாக வேலைச் செய்யத் தொடங்கினார். எங்கள் இரண்டு பேருக்கும் நம்பிக்கையில்லை கிடைக்கும் என்று, ஏனென்றால் தொலைந்து இன்றோடு ஒரு வாரக் காலமாகிவிட்டது. எடுத்தவர் நல்லவராக இருந்திருந்தால் போன் செய்த போதே எடுத்துப்பேசியிருப்பார். ஆனால் அது அணைக்கப்பட்டு இருந்தது.
அரை மணி நேரக்காத்திருக்குப் பின் எங்களை அழைத்தனர். என்று தொலைந்தது, எங்கு தொலைந்தது, எப்போது தொலைந்தது, அப்பொது எத்தனை மணியிருக்கும், அதன் நிறம், தயாரிப்பாளர் மற்றும் குறியீட்டு எண் என அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டு மீண்டும் எங்களைக் காத்திருக்கச்சொன்னார். சிறிது நம்பிக்கை வந்தது. நம் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதால். சிறிது நேரம் கழித்து எங்களை அழைத்து நண்பரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிப் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு கடிதத்தை காகித உறையில் போட்டு ஒரு விலாசத்தைக்கூறி அங்குப் போகுமாறு கூறினார்.
நாங்கள் அவரிடம் நன்றி கூறி விடைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்துக் கிளம்பி அவர் கூறிய இடத்திற்குச் சென்றோம். அந்த அலுவலகம் முழுவதும் பழைய கனரகவாகனங்கள், குப்பையைப்போன்று குவியலாகக்கிடந்தன. அவற்றின் மத்தியில் அலுவலகக்கட்டிடம் நல்ல விசாலமான முறையில் கட்டப்பட்டிருந்தது. உள் நுழையும் போதே குளிந்த காற்று உடலையும் சேர்த்து மனதையும் வருடிச்சென்றது. வரவேற்பறையில் இருந்த ஒருவர் எங்களிடம் வெயில் அதிகமா இருக்கிறதா என்று கேட்டுவிட்டு எங்களை ஒரு இடத்தைக்காட்டி ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார். இருவரும் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் . அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்ட படியால் இதை கவனிக்கவில்லை.
நாங்கள் அவர் காட்டிய அறையில் சென்று அமர்ந்து கொண்டோம். அது குளிரூட்டப்பட்ட அரை. அவர் கூறியதற்கும் காரணம் இருக்கின்றது. எங்கள் சட்டைகள் வியர்வையில் நனைந்து தொப்பல் தொப்பலாக இருந்தது. பின் ஒருவர் வந்து குடிப்பதற்குத் தண்ணீரும், அதனுடன் பழச்சாரையும் கொடுத்துவிட்டுப்போனார். மீண்டும் அதே ரேகைகள். இது அரசு அலுவலகம் தானா. பெருமூச்சும், ஆச்சரியங்களும் மாறி மாறி வந்துபோனது. மீண்டும் அதே அலுவலர் வந்து அழைத்து என்ன பிரச்சனையென்று கேட்க நாங்கள் அந்தக்கடிதத்தை அவரிடம் கொடுத்தோம். படித்து விட்டு மீண்டும் எங்களை காத்திருக்கச்சொன்னார். பத்து நிமிட நேர இடைவெளியில் அலைப்பேசி எங்களிடம் வந்து சேர்ந்தது. ஒரு சிறு கீரல் கூட இல்லாமல் விட்டது விட்ட படியே எங்கள் கைகளில். நண்பரின் மன மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.
ஆச்சரியங்கள் அதோடு முடியவில்லை. எங்களிடம் எங்கே போகவேண்டும் என்றார். நாங்கள் இடத்தைச்சொல்லவும் நானும் அங்கே தான் செல்கிறேன். வாருங்கள் என்று அழைத்து வந்து எங்கள் இடத்தில் விட்டுவிட, அவரிடம் நன்றி சொல்லி விடைப்பெற்றோம். ஒரே நாளில் அதுவும் வெகு சுலபமாக எங்கள் வேலை முடிந்தது.
இது நடந்தது அமீரகத்தில். அந்த அலுவலர் தனது பணியைத்தான் செய்தார். ஆனால் அதில் மனிதமும், நேயமும் கலந்திருந்தது. தொலைந்த ஒன்று கிடைத்த மகிழ்ச்சியிருந்தாலும், ஒவ்வொரு அதிர்ச்சியின் போதும் நம் நாட்டின் நினைவுவராமலில்லை. இது இந்தியாவில் நடந்திருக்குமானால். திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, அப்படியே நல்லவர்கள் யாராவது அதை இப்படி ஒப்படைத்திருந்தாலும் இத்தனை எளிதில் கிடைத்துவிடுமா. அங்கே இங்கே என்று சில ஆயிரங்கள் நம்மை விட்டுப் போயிருக்கக்கூடும். ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பதற்கோ, இத்தனையும் கொடுத்த பின்பு நமக்கு கிடைக்க வேண்டிய குறைநதபட்ச மரியாதைக்கோ உத்திரவாதம் கிடையாது. மனிதத்திற்கு விலையென்ன என்றிருப்பார்கள்.
இந்த சம்பவத்தில் எனக்கு பொருள் கிடைத்தது என்பதை விட மனிதம் என்னும் அடிப்படை உணர்வு அற்றுப்போகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அது ஒவ்வோரு மனிதனுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றது. வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது.
மரம் வளர்ப்போம் மனிதமும் வளர்ப்போம்.

Saturday, July 17, 2010
விடிவெள்ளியுடன் ஒரு சந்திப்பு-நம்ம தேவா அண்ணன்தான்
எதிர்பார்த்து நடப்பதை விட எதிர்ப்பாராமல் நடக்கும் சந்திப்புகள் சுவையானதாக இருக்கக்கூடும். அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அண்ணனுக்கு போன் செய்தேன். வழக்கமாக உரையாடிவிட்டு வைக்கும் முன், இன்று உங்களை பார்க்க வருகிறேன் என்றேன். போன் பேசிய ஐந்து நிமிட வேளையில் மனதில் தோன்றிய ஒன்று. அலுவலகத்திலிருந்து அரை மணி நேரம் முன்பாகவே கிளம்பிவிட்டேன். தேராவிலிருந்து டேக்ஸி பிடித்து அல் நாதா செல்ல வேண்டும். அஞ்சப்பர் முன் நின்று கொண்டு மீண்டும் அழைத்தேன். புரிந்தும் புரியாமலும் வழியை கேட்டுக்கொண்டு வேலிதாண்டி சென்றேன். அண்ணன் சொல்லிய பின்புதான் தெரியும் அந்த வேலி துபாயையும்,சார்ஜாவையும் பிரிக்கும் எல்லைக்கோடு என்று.
வெயில் 55 டிகிரி அடித்து முடித்த களைப்பில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தது. அமீரகத்திற்கு வந்த பின் சார்ஜாவுக்குள் செல்வது இது இரண்டாவது முறை. அரைமணிநேரத்தேடலுக்குப் பின் ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அடுத்த சோதனை காத்திருந்தது அது 45 மாடிக் கட்டிடம், கீழே லிப்டில் ஏறுவதற்கு வரிசை ஒன்று நின்றுகொண்டிருந்தது. இது வேரா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். இருபது நிமிட காத்திருப்பிற்கு பின் எனக்கும் உள்ளே இடம் கிடைத்தது.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தேன். உள்ளிருந்து ஒரு வெண்கலக் கவர்ந்திலுக்கும் காந்தக்குரல் கேட்டது. நான் அதிர்ந்து போனேன். போனில் நாம் கேட்டது இந்தக்குரல் இல்லையே. நாம் தவறாக வந்துவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே ஒரு உருவம் கதவை திறந்தது, அந்த நொடியில் நான் இரண்டடி என்னையும் அறியாமல் பின்னால் இழுத்துச்செல்லப்பட்டு பின் உள்ளிழுக்கப்பட்டேன். அந்த அனுபவம் ஒரு பரவசநிலையினைக்கொடுத்தது. கை கொடுத்த அடுத்த வினாடியே என் ஆன்மா உள்நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் ஒரே இருள் சூழ்ந்திருந்தது. எனக்குள் இது சூனியமோ என்ற எண்ணம். ஆனால் உள்ளுணர்வு வந்தவுடன் இது அண்ணனின் வீடு என்று உணர்ந்துகொண்டேன். கவனிக்க தெரிந்துகொள்வதும், உணர்ந்துகொள்வதும் வேறு வேறு.
நீண்ட நெடிய பாதை, பக்கவாட்டில் சமையலறை ஒரு பத்தடி இருக்கும் அதை கடந்த பின் முகப்பறை. உட்காருவதற்கு ஏதுவாக இரண்டு பெரிய பஞ்சுப்பொதிகள் நிரம்பிய நாற்காலிகள். அட்சயாவுக்கு அண்ணிக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அண்ணனைப்பார்த்தேன். ஒரு உண்மையை விளங்கிக்கொண்டேன். கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்வது பொய் என்று. அவருடைய போதி மரத்தையும் கண்டேன். இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார் போதி மரத்துடன். அருவியில் கூட தண்ணீர் வரண்டு காய்ந்துவிடும். ஆனால் இங்கு ஆஹா ஆஹ்ஹா அது ஒரு பரவச அனுபவம்.
என்னுடன் பேச ஆரம்பிக்கும் முன் நானும், அண்ணனும் குடித்து முடித்திருந்தோம் கோலாவை. ஒரு வழியாக என் பக்கம் வந்தார், போதிமரத்தை மூடி வைத்துவிட்டு. இனி பேசலாம் என எத்தனித்த போது அண்டைவீட்டிலிருந்து இருவர் எங்களோடு வந்து இணைந்து
கொண்டார்கள்.
என்னவென்று சொல்வேன் கடவுளின் திருவிளையாடலை.
அங்கிருந்து கிளம்பும் வரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். இங்கு அவர்களை குறைச்சொல்லவில்லை, எல்லாம் எல்லாம் ஆனதால் எல்லாம் எல்லாம் ஆகிப்போனது. அப்படிப்பட்ட நிலையிலும் அண்ணனும் நானும் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது. சில மின்புத்தகங்களை படிக்கக்கொடுத்தார். மணி 10.30 ஐ தாண்டிவிட்டது. இப்பொழுதும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அனைவரிடம் சொல்லிவிட்டு நான் விடைபெற எத்தனிக்கையில் அண்ணியின்(நன்றிகள்) வற்புறுத்தலில் அங்கேயே சாப்பிட்டுவிட்டு விடைப்பெற்றேன்.
அடிக்கடி போனில் பேசி அறிமுகமாகிவிட்டதால் அறிமுகப்படலமும் தேவைப்படவில்லை. போதிமரம்ங்கிறது அவரோட லாப்டாப்.
சீக்கிரமாக முடிந்துவிட்டாதாக தோன்றும் பெரிதாக எழுத வேண்டிய அளவிற்கு விடயங்கள் இல்லாத போது இவ்வளவுதான் எழுத முடிந்தது. அடுத்த சந்திப்பில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் அப்டேட் செய்கிறேன்.
பின்குறிப்பு: அட்சயாக்கிட்ட உனக்கு பிடிச்ச நிறம் என்னண்ணு கேட்டேன். பிங்க் சொல்லுச்சு. ஏன் கேட்டா கேர்ள்ஸ் எல்லாம் கியூட் அதானால அதோட தொடர்ச்சியா சொல்லுச்சு பாய்ஸ்கு பிளாக்னு ஏன்னுகேட்டதுக்கு அவங்க எல்லாம்...... அப்புடின்னுச்சு. உங்கப்பாக்கூடாவான்னு கேட்டேன்.... அதுக்கு...... முடிஞ்சா அண்ணன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.
Friday, July 16, 2010
துபை - விபச்சாரத்தின் அறிமுகம்(மீள் பதிவு)
இந்த பதிவுல துபைக்கு வந்தப்போ ஏற்பட்ட ஒரு அனுபவத்த சொல்லாலாம்னு இருக்கேன்.
துபை தேரா பகுதி நம்ம வசிக்குமிடம். பொதுவா தமிழ் மக்களும், தமிழ் ஆளுங்க கடைகளும், வாரக்கடைசில அனைவரும் கூடும் இடமா இருக்கும்.
வந்த புதுசுல வெளியில போறப்போ அறைல இருந்த அண்ணாச்சி
பாத்து பத்திறமா போயிட்டுவாப்பான்னாரு.
புதுசுங்கறதால சொல்லுறாரு போல நானும் தலைய ஆட்டிட்டு
கிளம்பிட்டேன். தேரா பஜார் ஏரியால நேறய சந்து சந்தா இருக்கும்,
சந்தோட முடிவுல குட்டையா கட்டையா பங்களாதேஸ் காரைங்க
நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போறப்பல்லாம் நம்மல பாத்து ஏதோ ஒன்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க. நான் அத பெருசா காதுல வாங்கிக்காம கடந்து போய்கிட்டேயிருப்பேன். ஒரு நாள் ஒருத்தன் நேரா வந்து கைய கொடுத்தான். நானும் கையகொடுத்தேன். "லடுக்கிச்சாயே" அப்போதான் அந்த வார்த்தைய முதல் முதல்ல கேட்டேன். ஒன்னும் புரியாம நமக்கு தெரிஞ்ச இந்தில "கியா" ன்னேன். "அச்சா லடுக்கிஹே 30 திர்ஹாம்" னான் அப்பவும் விளங்கல, எதேச்சையா அந்த பக்கம் வந்த அறை அண்ணாச்சி இத பார்த்துட்டு ஓடிவந்து தலைல அடிச்சுக்காத குறயா அறைக்கு கூட்டிட்டுவந்துட்டார். வந்ததுக்கு பின்னாடி "இப்புடி இப்புடி அப்புடி அப்புடி னு" பெரிய விரிவுரையே நடத்துனார். அன்னைலேர்ந்து சந்துகள பார்த்தாலே பத்தடித் தள்ளி நடக்க ஆரம்பிச்சேன்.
அப்புடியும் சனி நம்மல விடுல இப்போ ஒரு பெண் வடிவுல. துபைல நான் பார்த்தா வகைல கருப்பின பெண்கள் நல்லா பருமனா பார்க்கவே பயமா இருப்பாங்க. அண்ணாச்சி அவங்கள பத்தியும் விரிவுரை நடத்தியிருந்தால கொஞ்சம் எச்சரிக்கையவே இருந்துட்டு இருந்தேன்.
ஒரு நாள் பதினோரு மணியிருக்கு கொஞ்சம் ஆள் அரவம் இல்லாத ஏரியா நடந்து வந்துகிட்டிருந்தேன். திடீர்னு பின்னாடி போன கை முன்னாடி வரல என்னாடான்னு பார்த்தா கைய ஒரு பொண்ணு புடிச்சுக்கிட்டிருந்துச்சி. நான் திரும்புனதும் " im sudani" அப்புடின்னுச்சு நானும் பதிலுக்கு விட்டுகொடுக்காம பின்னாடி நடக்க போற வில்லங்கம் தெரியாம ரொம்ப கம்பீரமா "im indian" னேன். இப்போ கை கொஞ்சம் இருகுச்சு வலிக்குர மாதிரி இல்ல நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுச்சு. பொண்ணுன்னு சொன்னேன்ல அத பொம்பலன்னு மாத்திக்கோங்க. மறுபடியும் "im sudani" ன்னு சொன்னா. நான் "so what?" னேன்.
"GIVE ME 40 DIRHAM, OTHERWISE I WILL CALL THE POLICE" இப்போ நல்லாவே புரிஞ்சு போச்சு அம்மணி யாருன்னு. போலிஸ்னு சொன்னோன்னே பதட்டத்துல வியற்க ஆரம்பிச்சுடுச்சு. போய்தொலாயுது காச எடுத்து கொடுத்துட்டேன். "shall we go? " ன்னு கேட்டா. அடங்கொய்யால கைய ஒதரிட்டு நடக்க ஆரம்பிச்சுடேன். ஒரு விசியத்துல அவள பாராட்டாம இருக்க முடியல கொடுத்தா அம்பது திர்ஹம்சுக்கு நாப்பது போக மீதி பத்த கொடுத்தா. என்ன ஒரு நேர்மை.
Tuesday, July 13, 2010
விலாசம் இல்லா இத்தருணத்தில்
நான் நீ என்று
என்றுமே அழைத்ததில்லை
நாம் என்ற எழுத்தே நம் முதல் அழைப்பானது
சிரித்து மகிழும் குழந்தையின்
குதூகலத்தை நாம் அருகில் இருந்த
இருக்கப்போகும் தருணங்களை
நீண்டுவிட்ட இந்த இடைவெளியில்
உன் பெயரைக்கொண்டு நிரப்பிக்கொள்கிறேன்.
தூரப்பயணங்கள் அரிதான இக்காலத்தில்
நினைவுகள் உன்னை நோக்கியிழுத்து
உன் ஊர் நோக்கி நடக்கையில்
விலாசம் இல்லா இத்தருணத்தில்
நீ வரைந்து கொடுத்த ஒன்றை வைத்துக்கொண்டு
கடந்துபோகும் புன்னகைகளை புறம்தள்ளி
தேட முற்படுகிறேன்.
ஓர் நாள்
பெருங்கூட்டமொன்றில் ஒற்றைப்புள்ளியாய்
மிகுந்துவிட்ட எறும்புக்கூட்டமொன்றில்
கூடுதெரியாமல் தவித்த என்னை
நீ கூவிக்கூவி அழைத்ததை
என்னிடம் பகிர்கையில்
கூட்டம் என்பதை மறந்து
உமிழ்நீரை உன் கண்ணங்களில்
கலங்கிய உன் கண்ணீரோடு
கரைத்து வழியவிட்டேன்.
அந்த உமிழின் சுவையை
வழியும் என் வியர்வையில்
கசியும் என் கண்ணீரில்
வறண்ட என் உதடுகளில்
துலாவும் என் நாக்கின் உதவியுடன்
இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.
.
என்றுமே அழைத்ததில்லை
நாம் என்ற எழுத்தே நம் முதல் அழைப்பானது
சிரித்து மகிழும் குழந்தையின்
குதூகலத்தை நாம் அருகில் இருந்த
இருக்கப்போகும் தருணங்களை
நீண்டுவிட்ட இந்த இடைவெளியில்
உன் பெயரைக்கொண்டு நிரப்பிக்கொள்கிறேன்.
தூரப்பயணங்கள் அரிதான இக்காலத்தில்
நினைவுகள் உன்னை நோக்கியிழுத்து
உன் ஊர் நோக்கி நடக்கையில்
விலாசம் இல்லா இத்தருணத்தில்
நீ வரைந்து கொடுத்த ஒன்றை வைத்துக்கொண்டு
கடந்துபோகும் புன்னகைகளை புறம்தள்ளி
தேட முற்படுகிறேன்.
ஓர் நாள்
பெருங்கூட்டமொன்றில் ஒற்றைப்புள்ளியாய்
மிகுந்துவிட்ட எறும்புக்கூட்டமொன்றில்
கூடுதெரியாமல் தவித்த என்னை
நீ கூவிக்கூவி அழைத்ததை
என்னிடம் பகிர்கையில்
கூட்டம் என்பதை மறந்து
உமிழ்நீரை உன் கண்ணங்களில்
கலங்கிய உன் கண்ணீரோடு
கரைத்து வழியவிட்டேன்.
அந்த உமிழின் சுவையை
வழியும் என் வியர்வையில்
கசியும் என் கண்ணீரில்
வறண்ட என் உதடுகளில்
துலாவும் என் நாக்கின் உதவியுடன்
இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.
.
Monday, July 12, 2010
ஒரு மேட்டரும் சில நினைவுகளும்
ஒரே ஒரு கண்டீசன் கடைசி வரைக்கும் படிங்க.
இந்த சங்காத்தமே வேண்டாம்னுதான நா உன்னைய விட்டு விலகி இருக்குறேன். ஏன் திரும்ப திரும்ப வந்து தொல்லை பண்ணுற. ஒழுங்கு மரியாதையா இத இத்தோட நிறுத்திடு. நான் பாட்டுக்கும் என் வழியப்பாத்துக்கிட்டு போயிடுறேன்.
வராத ஏய் வராத.... வராத வராத வராத எத்தனை தடவ சொல்லிட்டேன் வராதன்னு. இப்போ உனக்கு என்ன வேணும்குற. மேட்டர சொல்லு.
என்னது மேட்டரே இல்லயா. அப்ப ஏன் திருமபத்திருப்ப வந்துகிட்ட இருக்க.
ஆ.... மேட்டரு இருக்கா. ஆனா அது ஒரு பெரிய மேட்டரு இல்லயா.
இப்போ என்னத்த சொல்ல வார.
யாரப்பாத்து இந்தக்கேள்வியக்கேட்ட அதுவும் யாரப்பத்திக்கேட்ட. இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னா என்னையப்பத்தி என்னா நினைப்பாரு. இத வேற யாருக்கிட்டயும் கேட்டுறாது. அப்புடியே ஓடிப்போய்டு. திரும்ப இந்தப் பக்கம் வந்துராத. அப்புறம் நானே....
நான் ஒரு முக்கியமான வேலையா வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு பேசலாமே, இன்னைக்கே பேசனுமா. இல்லப்பா இன்னைக்கு முடியாது நாளைக்கு அங்க வந்துடுறியா, சொல்லுறதக்கேளு நாளைக்கு பாப்போம். முடியாதா. அப்ப நானும் உன்னையா பாக்கமுடியாது.
நான் எவ்வளோ முக்கியாமான வேலைன்னு சொல்லுறேன். சும்மா கேக்காம நீ சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க. இப்போ என்ன அவசரம் அதுக்கு. போ போய் வேற வேலையப்பாரு.
இதுக்கு இவ்வளவு, அதுக்கு அவ்வளவு, அந்ததுக்கு ஏன் எதுவுமே இல்ல. நல்லாத்தானய்யா இருக்கு. போ போய் அதுக்கும் கொஞ்சம் போட்டுட்டு வா. நீ போகமாட்டியா. சரி கொடு நானே போறேன்.
நல்லவேலை தப்புச்சேண்டா சாமி, கொலைகாரப்பயலுக நம்மளையே கவுக்கப் பாக்குறாய்ங்க. இந்தப் பாழாப்போன செருப்பு வேற பிச்சுக்கிட்டு நம்மள காலிப் பண்ணப் பாத்துச்சு. இப்போ எங்கப் போறது. ஒருத்தனையும் காணோம். ஹலோ யாருங்க, கொஞ்சம் நில்லுங்க. அங்க வரைக்கும் போகனும் ஒரு லிப்ட் கிடைக்குமா.
எதுவுமே தோனலன்னா இப்புடி எதயாச்சும் கிறுக்கிக்கிட்டே இருப்பேன். சில சமயம் விசயம் புடிபடும் சில சமயம் அப்புடியே மூடி வச்சு படுத்துடுவேன். அப்படி செய்யுறப்ப தானா வந்து விழுந்ததுதான் கீழ இருக்கக்கூடிய இந்த வரிகள்..
ஆக மொத்தம் அறுபது வீடு
அத்தனையும் அத்துப்படி
அனுமதியும் தேவையில்ல
அதகேக்குறதும் யாருமில்ல.
அங்க ஓடி இங்க ஓடி
தவிச்சா தண்ணிக்கிடைக்கும்
தவறவிட்டா கொண்டுவிடும்
நாளு கிழமையின்னா
ராத்திரி கண்ணு முழிச்சு
விதவிதமா வண்ணமிட்டு
அழகான கோலமிட்டு
நா முந்தி நீ முந்தின்னு
ருசிருசியா வந்துச்சேரும்.
முட்ட திண்ணுபுட்டு
கட்டம் வட்டம்போட்டு
விதவிதமா ஆடிப்பாடி
ஆறுமணியான பின்ன
எட்டுமணிக்கு முன்ன
அத்தனையும் முடிச்சுப்புட்டு
மீண்டும்
கட்டம் வட்டம் போட
சிட்டா பறந்து விடும்.
அரவம் அடங்கிய பின்ன
சீமையில வந்த ஒன்னு
நடுத்தெருவுல வந்து நின்னு
ஆட்டம்பாட்டம் காட்டி
எல்லாம் போக முன்ன
அடங்கிப்போகும் பின்ன.
எல்லாம் மாறிப்போச்சு
ஆகமொத்தம் எத்தனையின்னு
யாரும் அறியயில்ல
ஆடி ஓடியாட
கட்டம் வட்டம் போட
மண்ணும் ஏதுமில்ல.
தவிச்ச தண்ணித்தர
போனா கொண்டுவிட
நினைச்சா உள்ள போக
அனுமதியுமில்ல இங்க.
அரவம் அடங்குறதில்ல
நடுத்தெருவுக்கும் வாரதில்ல
எல்லாம் வீட்டுகுள்ள
இப்போ டீவிமுன்ன...............................................................!!!!!!

Tuesday, June 22, 2010
வெறுமை
எஞ்சியிருக்கும் எச்சத்தையும்
என்னுள் நிறைந்திருக்கும்
வெறுமை எடுத்துக்கொண்டது.
நினைவிலிருக்கும் நினைவுகளும்
ஏற்குமிடமில்லாமல் புறம் தள்ளிவிட்டது மனது.
என் மனக்குரங்கும்
முன்பு போல் எங்கும் தாவுவதில்லை
தவறிவிட்ட பக்கங்களும்
தவிர்த்து விடப்பட்ட பக்கங்களும்
என்னை பின்னோக்கி இழுக்கின்றன.
உள் வர மறுக்கும் புறம் தள்ளிவிட்ட நினைவுகளை
மீள் செய்ய முனைகிறேன்
மீண்டும் மீண்டும் வெறுமையே ஆட்கொள்கின்றது
மீண்டும் மீண்டும் முனைகிறேன்
மீண்டும் மீண்டும் மீள்கிறேன்
முனைவும் மீள்வும் முடிவில்லாமல் தொடர்கின்றது
வெறுமையை புறந்தள்ளாமல்.

Wednesday, March 31, 2010
அங்காடியும் நானும் - 2
இரவு மணி ஒன்பது கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய
அதிர்ச்சியாக இருந்தது. நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்
சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு
எப்படியிருக்குமென்று.
நேரம் ஆக ஆக கடைக்கு வரும் மக்களின் நிறம் மாறத்தொடங்கியது. துணிகளின் விலையும் மாறத் தொடங்கியது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள், நாள் முழுவதும் உடல் வருந்த உழைக்கும் மக்கள். இதை யாரும் சொல்லாமலே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.எத்தனையோ சினிமாக்களில்
நாயகன் நாளைய பண்டிகைக்கு அதற்கு முந்தைய நாள் இரவில் தனக்கு கிடைத்த பணத்தில் குழந்தைக்கும், மனைவிக்கும் துணி வாங்கிவிட்டு
தனக்கென்று ஒன்றும் வாங்காமல் செல்வது போன்ற காட்சிகள் வரும். அந்த நிஜத்தினை நேரில் கண்டேன். . காலையிலிருந்து நின்று கொண்டிருப்பதால்
கால்கள் வலிக்கத்தொடங்கியது. வலியினை உணரும் போதெல்லாம் என் தந்தையின் நினைவும் வந்து சென்றது.
பல வருடங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் தந்தைக்கும், மற்றவர்களுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்.
மணி இரவு பதினொன்று. காலகளில் வீக்கம் தெரிந்தது. முதுகிலும் வலியினை உணர்ந்தேன். என் முன்னே துணிகள் குவிந்து கிடந்தன. கூட்டம் அதிகமானதால் வருபவர்களை முழுமையாக
கவனிக்கமுடியவில்லை. சிலர் பொறுமை காத்தனர், சிலர் பொறுமை இழந்து தன்னைக் கவனிக்கச் சொல்லிக்கொண்டிருந்தனர்,சிலர் வெளியே சென்றனர். எனக்கும் இந்த அனுவம் இருந்திருக்கின்றது. அது இயல்பு தான் எனினும், அங்கே நிற்கும் பொழுதுதான் அது புரிந்தது.
அவருக்கு நாற்பது வயதிருக்கக்கூடும்.
கிளிசல்களுடன்அழுக்கேரிய சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தார்.
கூட்டத்துடன் நின்றிருந்தாலும்அவரை கவனத்திலேயே வைத்திருந்தேன்.
பேண்ட்களை எடுப்பதும், விலையினைப்பார்ப்பதும் மீண்டும் வைப்பதும் அதே போன்று சட்டைகளை எடுப்பதும் வைப்பதும். அவரை அழைத்தேன், என்ன வேண்டும்என்று கேட்டபடியே உள்ளதிலேயே விலை குறைவான
துணிகளாக எடுத்துக் காட்டினேன். அவருக்குப் பிடித்திருந்தாலும் இயலாமை அவர் முகத்தில் தெரிந்தது. மிகுந்த தயக்கத்துடன் ஒன்றையெடுத்து 100 ரூபாய்க்கு கிடைக்குமா என்று கேட்டார். அதன் மேல் 225 ரூபாய்க்கு விலை ஒட்டப்பட்டிருந்தது. நான் 200 என்று கூறினேன். முதலாளியிடம் பேசுங்கள் என்று சொல்லி 175 க்கு ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பினேன். அவரும் அதற்கு மேல்
குறைக்கவில்லை. முகத்தில் நிறைவும், மகிழ்ச்சியும் தெரிந்தாலும் அதையும் தாண்டி ஏக்கமும் தெரிந்தது. சுருட்டி வைத்திருந்த காகிததிலிருந்து
ரூபாய்நோட்டுக்களை எடுத்து கொடுத்தார். அத்தனையும் பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள்.
இரவு 12 மணியினை தாண்டியிருந்தது. ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார். அந்தப் பையனின் முகம் வாடியிருந்ததைக் கவனித்தேன். கேட்டது கிடைக்காத ஏக்கம் தெரிந்தது. அவர் சாதாரன பேண்ட்களை பார்த்துக்கொண்டிருந்தார். அவனது கண்களோ ஜீன்ஸ் பேண்ட்களின் மேல் இருந்தது. தந்தையும் மகனும் எதிர் எதிர் மன நிலையில். அவன் விருப்பத்தினை அவரிடம் கூறினாலும் அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவன் விருப்பத்தினை மீறி அவர் வாங்கிவிட்டார். அவர் வாங்கியது அங்கு இருந்த ஜீன்ஸ் பேண்ட்களை விட விலை அதிகமான ஒன்றானாலும் அவனுக்கு பிடிக்காதது. அவன் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. அழுகை மட்டும் இல்லை.
காலை நான்கு மணிக்குமேல் கூட்டம் குறையத்தொடங்கியது. என் கால்களும் முன்பை விட மிகப் பெரிதாக இருந்தன.
5 மணிக்கு மேல் யாரும் வரவில்லை. நண்பன் இருதய பிரச்சினை உடையவன். அவனால் நிற்க முடியவில்லை. உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டான். நானும் மற்றொரு நண்பனும் பேசிக்கொண்டிருந்தோம். முதலாளி வெளியே சென்றிருந்தார். அன்று நான் வாங்கப்போகும் சம்பளம் 500 மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன். என்னளவில் மிகக் கஷ்டப்பட்டு சம்பாரித்த இல்லை சம்பாதிக்கப்போகும் என் முதல் சம்பளம். ஒரு வாரக்காய்ச்சலில் தளர்ந்திருந்த என் உடல் அன்றைய 500 ரூபாய் என்ற இலக்கை நோக்கி அனைத்தையும் தாங்கிக்கொண்டது.
காலை 8 மணிக்கு முதலாளி வந்தார். நாங்களும் கிளம்புவதற்கு தயாரகயிருந்தோம். 500 ரூபாய் நோட்டுகளை எண்ணி தனியாக வைத்துவிட்டு 100 ரூபாய் நோட்டுகளை எண்ணி , ஒரு 50 தை சேர்த்து மொத்தமாக 1050 தை கொடுத்தார். விற்பனை எதிர்பார்த்த அளிவிற்கு இல்லையென்றும் அதனால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்றும் கூறினார். இரவு முழுவதும் மிகுந்த இரைச்சல், ஆராவாரங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த பகுதி வெறிச்சோடிக்கிடந்தது. எங்களை அழைத்து வந்திருந்த நண்பன்
பேசிப்பார்த்தான், அவருடையபேச்சில் அலட்சியமும்,
இடத்தை காலி செய் என்ற தொனியும் இருந்தது.
அவரிடம் வாக்குவாதம் செய்வதற்கோ, பிரச்சினைகள் செய்வதற்கோ எங்களிடம் சக்தியில்லை. வேறு வழியில்லாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு
பேருந்து நிறுத்தத்தினை நோக்கி நடக்கத்தொடங்கினோம். இன்று வரையிலும் அந்த 350 பது என் மனத்திற்கு 500 ஆகவே தெரிந்தாலும், என்னளவில் முதல் உழைப்பும், அந்த காகித நோட்டுகளும் மதிப்பிட
முடியாதவையாகவே இருக்கின்றன.
(காலையில் 800 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டி விறகப்பட்ட ஒரு பேண்ட்
நடு இரவில் பாதிவிலைக்கும் சற்று அதிகமாக விற்கப்பட்டது.)
Tuesday, March 30, 2010
அங்காடியும் நானும்
இது அங்காடித்தெரு படத்தினைப் பற்றியப்பதிவு அல்ல. ஒரு துணி அங்காடியில் ஒரு நாள் வேலைப்பார்த்த அனுபவம். திருச்சியில் தீபாவளியின் போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் துணிக்கடையினில் பகுதி நேர வேலைக்கு போவார்கள். என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது வீட்டில் அனுமதி கிடைக்காது என்று மறுத்துவிடுவேன்.
கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த பொழுது நண்பன் அழைத்தான், (என்ன வீட்டில் இருந்த பொழுது?வெட்டியா இருந்த
பொழுதுன்னு சொல்லு) வீட்டில் கேட்டபொழுது அனுமதி கிடைத்தது. இருபத்தி நான்கு மணி நேர வேலை, 500 ருபாய் சம்பளம். ரமலான் நோன்பு நேரமும் கூட. சரியாக காலை 9 மணியளவில் கடையில் நுழைந்தோம். நாங்கள் மூன்று பேர். எந்த விதமான முன் அனுபவமும் கிடையாது. கடையின் முதலாளி வட நாட்டுக்காரர். வந்தவுடன் எங்களை மேலிருந்து கீழ் வரை அளந்தார். என்னைப்பார்த்துவிட்டு நீ வெளியே நின்று கூட்டம் அதிகமாகும் பொழுது வருவோரை கட்டுப்படுத்தவும்,
வாங்கிச் செல்லும் பொருட்களையும் பில்லையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தினார்.
காலையில் பெரிதாக கூட்டம் இல்லை. ஒருவர் இருவராக வந்து கொண்டிருந்தனர். ஒரு வாரக்காய்ச்சலில் இருந்து மீண்டு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. நான் நினைத்த அளவிற்கு கடினமாக இல்லை என்று எண்ணிக்கொண்டேன். மதியத்திற்கு பின் கூட்டம்
அதிகமாகிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் உள்ளே ஆள் தேவைப்பட நானும் உள்ளே அழைக்கப்பட்டேன். நமது மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள். எத்தனை விதமான முகங்கள், ரசனைகள்,விருப்பங்கள், சண்டைகள்,கோபங்கள் இன்னும் பல என்று அனைத்தையும் கண்டேன். 5 வருடங்கள் கடந்த பின்னும் என்னுள் சிரிப்பினை உண்டாக்குகின்றன. அந்த சுவாரசியங்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வருபவர்கள் அதை இதை என்று அனைத்தையும் எடுத்துப்போட சொல்ல ஒவ்வொன்றாக எடுத்து போடுவதும் பின்பு மடித்து எடுத்து வைப்பதும், சிறிது நேரத்தில் சலித்துப்போனது.
பொருட்களுக்கு விலை சொல்வதில்தான் திறமையே இருக்கின்றது.
இன்று வரையிலும் நான் அங்கு விலை சொல்லி விற்றப்பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவில்லை. பேண்ட் வகை துணிகள் தரத்தினைப்பொருத்து விலை வேறுபடும். இது அனைத்து வகைக்கும் பொருந்தும் என்றாலும், அன்று நான் அதை விற்ற விதம் இன்று வரையிலும் புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. அதை இறுதியில் சொல்கிறேன்.
நாளை தீபாவளி. மாலை 6 மணி , கூட்டம் சமாளிக்கக்கூடிய அளவிலேயே இருந்தது. என் நண்பன் கூட்டம் நிறைய இருக்கும் சமாளிக்க முடியாது என்று சொல்லியிருந்தான். நோன்பு திறப்பதற்காக 20 நிமிடங்கள் முடப்பட்டது. வெளியே கூட்டம் முண்டியடித்து கொண்டிருந்தது. விட்டால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுவது போல் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள். நான் கதவைத்திறந்து வெளியே சென்று கூட்டத்தை சமாளிக்க முயன்று தோற்றுப்போனேன்.
நல்ல உயரம், கையில் மஞ்சள் பை, கருத்த மேனி பார்த்தவுடனே சொல்லிவிடலாம் கிராமத்தான் என்று. கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு என்னிடம் வந்து சேர்ந்தார்.
அந்த பச்ச கலரு, இந்த நீல கலரு, அது எவ்வளோ, இது எவ்வளோ என்று நிறைய பார்த்துவிட்டு வேண்டாம் என்று போய்விட்டார். ஒரு அறைமணி நேரத்தில் மீண்டும் வந்து மீண்டும் அதே மாதிரி,
கேட்ட அனைத்தையும் எடுத்துப் போட்டாகிவிட்டது. ஒன்றும் வாங்கவில்லை.
இப்பொழுது எனக்கு கோபம் வந்தது. ஆனால் என்னை நானே
சமாதானப்படுத்திக்கொண்டேன் இந்த வேலையில் இதெல்லம் சகசம் என்று. அறைமணி நேர இடைவெளியில் மீண்டும் வந்தார். இப்பொழுது
எண்ணிடம் இல்லை என் நண்பனிடம், சட்டைகள் பிரிவில். ஒன்றும்
வாங்கவில்லை. ஆனால் கையில் மற்றொரு கடையின் பையிருந்தது.
எனக்கு விளங்கிவிட்டது. மீண்டும் அதே ஆள், முதலாளியிடம்
கண்ணை காட்டிவிட்டேன். அவரை நுழைவு வாயிலிலேயே தடுத்து
உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.
இரவு மணி ஒன்பது கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்
சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு எப்படியிருக்குமென்று.
தொடரும்.
Monday, November 30, 2009
மலைகளின் உலகம் - ஹத்தா
HATTA மலைகளின் உலகம். துபை ஓமன் எல்லையில் இரண்டையும் பிரிக்கும் ஒன்றாக இருக்கும் பரந்து விரிந்த மலைத்தொடர். துபையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ளது.
முழுக்க முழுக்க பாறைகள் மட்டுமே.
பசுமை என்ற சொல்லை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மலைத்தொடரின் ஊடாக ஆறு ஒன்று செல்கிறது. தண்ணீர் சிறிய ஓடை போன்று ஓடுகிறது. ஒரு காலத்தில்
தண்ணீர் மிகுதியான அளவில் ஓடியிருக்கக்கூடும். ஆற்றுப்பாதையின் இரு கரைகளின் ஓரத்தில் ஒன்றிரண்டு ஈச்ச மரங்கள் ஆங்காங்கே உள்ளது.
மலையில் அடிவாரத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையிலும் கரடுமுரடான மண் பாதை மட்டுமே. சாகசப் பிறியர்கள் கார்களை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு
சைக்கிளில் ஏறுகின்றனர்.
சில இடங்களில் பாதை செங்குத்தாக இறங்கி ஏறுகின்றது. மிகப்பெரிய மலை முகடுகளை வெட்டி பாதைகளை அமைத்துள்ளனர்.
தாகத்துக்கு தண்ணீர் கூட கிடைக்காத இடம். இந்த மலைகளுக்கு மத்தியில் தங்குவதற்கு மரத்தினால் கட்டப்பட்ட சிறிய cottage உள்ளது.
உலத்தரமான படம்னு சொல்லுற மாதிரி உலகத்தரமான தார்சாலை. துபை நகர சாலைகளை விட தரமான சாலைகள். நம்ம வடிவேலு சொல்லுற மாதிரியே இருக்கு. திரில்லிங்கான அனுபவம் வேணும்னா போயிட்டு வாங்க.
முக்கியமான விசயம் மேல போய்ட்டா அலைபேசிக்கு வாய்ப்பேயில்ல.
Monday, November 23, 2009
வலி
அன்றைக்கு காலையில் 6 மணிக்கு மேல் தூக்கம் வரவில்லை. அவன் பதின்ம வயதை கடந்த பின் அவனது நெடுநாளைய விருப்பம் ஒன்று நிறைவேறப்போகின்ற மகிழ்ச்சியும் அந்த தருணத்தையும் நேற்றிலிருந்தே அவன் அனுவிக்க தொடங்கிவிட்டதன் காரணமாகவும் இருக்கலாம். வீட்டின் முன் பக்க கதவை திறந்து செய்திதாளினை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அன்றைய தினம் விடுமுறையாதலால் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை. அவனும் விடுமுறை நாட்களில்
தாமதாகத்தான் எழுவான். கடிகாரத்தை பார்த்தான் மணி 06.05 காட்டியது. காலைக்கடன்களை முடித்துவிட்டு புத்தாடையை உடுத்திக்கொண்டு வீட்டினை விட்டு வெளியேரும் போழுது மணி 06.30.
அவன் வீட்டிற்க்குப் பின்புறம் கருவேலங்காடு அதன் தொடர்ச்சியாக சுடுகாடும், இடுகாடும். அதனூடே ஒற்றையடிப்பாதை. பாதையின் இரு புறமும் கருவேலங்காடு. கருவேல மரங்களின் கிளைகளை முகத்தில் படாதவாறு ஒரு கையால் ஒதுக்கியவாரு நடக்கத்தொடங்கினான். பள்ளிக்காலங்களில்
இதே பாதையில்தான் சைக்கிளில் பள்ளிக்கு செல்வான்.
இவன் சைக்கிளில் போகும் போது பாம்புகள் இவனைக் கடந்துபோகும்.
சில நேரங்களில் பிரேக் அடித்து நிறுத்துவான். சில நேரங்களில் அதன் மீது ஏறிப்போவதும் உண்டு. அப்போது இல்லாத பயம் இப்போது இவனை தொற்றிகொண்டது. ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்தான். சுடுகாடு என்பதால் ஒற்றையடிப்பாதையின் இரண்டு பக்கமும் மனித மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் இருக்கும். அதனைப் பார்த்த போது பயம் கூடிப்போனது. பாம்புகளே மேல் என தோன்றியது. நடையில் வேகம் கூடியது.
ஒரு வழியாக சுடுகாட்டினைக் கடந்து நெல்வயலினை ஒட்டிய பிரதான சாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையை
அடைந்தான். இன்று அவன் பார்க்கும் அனைத்துமே அவன் பள்ளிக்குச்
செல்லும் போது பார்த்தவை தான் என்றாலும் எல்லாம் மாறிவிட்டாதாக எண்ணிக்கொண்டான். மாறிவிட்டது என்பதைவிட மோசமாகிவிட்டது என்பதே உண்மையென அவனுக்கு தோன்றியது. வேகமாக நடக்கத்தொடங்கினான். தென்னந்தோப்பைத் தாண்டி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்துவிட்டான். இப்பொழுது பசிக்கத்தொடங்கியது. பையைத் துலாவினான். காசு எடுக்காமல் வந்தது பையில் கையை வைத்தவுடன் நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு போனால் தான் சாப்பாடு. சரி வந்த கடைமையை முடித்துவிட்டே செல்லலாம் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
விடுமுறையானதால் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அதுவும் கரைவேட்டிகளின் நடமாட்டம்தான். எல்லோரும் இவனையே கவனிக்கிறார்களோ என்ற எண்ணம். புதுசட்டையும்,பேண்டும் தான் காரணமோ? யோசித்துக்கொண்டே வந்ததால் பைக்கில் வந்த கரைவேட்டி இவனை உரசிக்கொண்டே சற்று தள்ளிப்போய் நின்றான். இவன் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் விழுந்தான். முகம், கை,கால் என்று நிறைய இடங்களில் சிராய்ப்புகளுடன் இரத்தமும் வழியத்தொடங்கியது. மயக்கம் வருவது போலிருந்தது. கும்பல் கூடிவிட்டது. இருவர் கைகொடுத்து தூக்கி அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில் உட்காரவைத்தனர். கரைவேட்டி மேல் தவறில்லை என்றாலும் அவனை ஒரு சிலர் குறை சொல்லிக்கொண்டிருந்தனர். அவன் ஒன்றும் பேசவில்லை. எந்த ஏறியா, அப்பா பெயர், எதுக்கு வந்த இப்படி சில விசாரணைகளுக்கு பிறகு டீயும்,பன்னும் கிடைத்தது. அதனை சாப்பிட்ட பிறது கொஞ்சம் நிதானம் வந்தது போல் உணர்ந்தான்.
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நடக்கத்தொடங்கினான். வலது காலின் மூட்டு வலிக்கத்தொடங்கியது.
காவல் நிலையத்தைக் கடக்கும் போது யாரோ அவனை அழைப்பது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தான் யாரையும் காணவில்லை. இந்த வலியோடு எப்படிச் சுடுகாட்டினை தாண்டி வீட்டுக்கு போவது என்ற கவலையும் சேர்ந்த போது வலி இன்னும் அதிகரிக்கத்தொடங்கியது. ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டான். அங்கு இருபதுக்கும் மேலானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இவனும் வரிசையில் நின்று கொண்டான்.
அவனுக்கு இருந்த மகிழ்ச்சியில் வலி இருப்பதையே மறந்திருந்தான். பின்னால் இருந்தவர் காயங்களை பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார். நடந்தவைகளை சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் புலம்பிக்கொண்டு செல்வதை கவனித்தான். போலிஸ்காரர் பேசாதே என்று சைகைக்காட்டினார். இவன் பேசுவதை நிறுத்திக்கொண்டான். வரிசை சிறிது சிறிதாக குறைந்து இவனுடைய முறை வந்தது. அலுவலரிடம் அடையாள அட்டையைக் கொடுத்தான். மேஜையில் இருந்த புத்தகங்களில் அடையாள அட்டையினை வைத்துக்கொண்டு எதையோ தேடுவதில் முனைந்தார். இவன் கால்கள் தரையில் நிற்கவில்லை எங்கோ பறப்பது போல் உணர்ந்தான். அலுவலர் இவனைப் பார்த்தார். இவன் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கையை நீட்டினான்.
'தம்பி உங்க பேரு லிஸ்டுல இல்ல, அதனால நீங்க ஓட்டு போடமுடியாது'. காலின் வலி சுலிரென்று ஏறி மூளைக்குச் சென்றது.
Wednesday, November 11, 2009
ஒரு கப் காபி கிடைக்குமா
இந்த பதிவ எழுதலாமா வேண்டாமான்னு ரொம்ப யொசிச்சேன். ஏன்னா பதிவுல எழுதப்போற மேட்டரு அப்புடி. பொதுவா பாக்குறப்போ சாதாரண மேட்டருதான். ஆனா எனக்கு ரொம்ப புதுசு. இந்த விசயத்துல நான்(+1) கூட கிடையாது அப்புடின்னா(+0)ன்னு அர்த்தம். அனுபவம் இல்லாம ஒரு மேட்டர எழுதுனோம்னா அதுல காரம் கம்மியாதான் இருக்கும். உதாரணத்துக்கு ராமகிருஷ்னனோட துனையெழுத்துல இருந்த நெருக்கம் கதாவிலாசத்துல எனக்கு இல்ல. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க. எழுத்தாளர்ங்க எல்லாம் இந்தியாவ காசு இல்லாம சுத்தியிருக்கேன் சொல்லுறப்போ அது எப்புடின்னு நம்ம மூளை யோசிக்கும். அதுக்கு விடைய தெரிஞ்சுக்குறதிக்காக ஒரு சட்டை, முழுக்கால் பேண்டோட திருச்சிலேர்ந்து கிளம்பி தஞ்சாவூரு, திருவாரூரு, அப்புடியே அந்த பக்கம் இருக்குற எல்லா ஊருக்கும் இலக்கு இல்லாம சுத்தியிக்கேன். மேட்டருக்குள்ள போகாம எங்கயோ போய்ட்டிருக்கேன். இத அப்புறம பாப்போம். எந்த மேட்டர சொல்ல வந்தேனோ அந்த மேட்டருக்கு போவோம்.
கொஞசம் வருசத்துக்கு முன்னாடி சுஜாதா ஆ.விகடன்ல துபைய பத்தி எழுதியிருந்தாரு. அதுதான் மேட்டருக்கு ஆரம்பப்புள்ளி, ஆமா இதுக்கு காரணம் சுஜாதா தான்.
அதப்பத்தி தெரிஞ்சுக்குறதுக்காக அந்த இடத்துக்கு போறதுக்குண்டான வழிகள தேடிக்கிட்டே இருந்தேன். அதுக்குண்டான களப்பணியையும் இங்க வந்தவுடனேயே ஆரம்பிச்சுட்டேன். எங்கையும் போகாம எதையுமே செய்யாம உக்கார்ந்த எடத்துலயே அதங்க ஆபீஸ்லயே என்னோட அசிஸ்டண்டு வழியா (நம்ம ஆளு அடிக்கடி அங்க போவாரு போல: உபயம் அவங்க மாமா அங்க மேனேஜரு) குறிப்புகள் கிடச்சிக்கிட்டு இருந்துச்சு.
ரொம்ப கூச்சமா இருந்துச்சு, உள்ளார போறப்ப 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்குங்குற' மாதிரி நம்ம மனசு . ஆயிரக்கணக்கான டெசிபல்ல,கலர் கலரான விளக்குகளின் வெளிச்சத்தில்
நம்ம கண்கள் இரண்டால் ஒடிக்கிட்டு இருந்துச்சு. நம்ம பயகதான்னு மனசுல ஒரு தெம்பு. அநியாயத்துக்கு மரியாதையும் அன்னியோன்யத்தையும் காட்டுனாய்ங்க. கையோட கூப்பிட்டுகிட்டு போய் உட்காரவெச்சானுங்க. நமக்கு எதுத்தாப்ல ஸ்டேஜ். கொஞ்ச நேரத்துல ஒரு அம்மனி என் கிட்ட வந்து என்ன சாப்புட்றீங்கன்னு கேட்டுச்சு. நம்ம பாக்கெட்டுதான் காலியாச்சே, அப்போதைக்கு சமாலிக்குறதுக்காக பிரண்டுக்காக வெய்ட்டிங்னேன். அம்மனி அப்படியும் விடல, ஜுஸ் இருக்குன்னுச்சு (நிலைம தெரியாம). சாரி மேடம்! வேண்டாம்னுட்டேன். ஒரு மாதிரி பார்த்துட்டு போயிடுச்சு. அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்க ரொம்ப நேரம்லா தேவைப்படல, கொஞ்ச நேரத்துல எனக்கு பின்னாடி க்லாஸ் உடையுர சத்தம், ஒருத்தரோட சட்டைய புடிச்சு தர தரன்னு இழுத்துட்டுப்போய் வெளிய தள்ளுனாய்ங்க. சாப்பிட்டுட்டு காசு தரலயாம். என்ன சாப்பிட்டாருன்னு எனக்கு தெரியாது. இதெல்லாம் நம்ம அசிஸ்டண்டு சொல்லவேயில்லயே. அப்பத்தாம் புரிஞ்சுது மாட்டிகிட்டோம்டான்னு. அக்காவேர போறப்பையும் வாறப்பையும் நம்மலயே பார்க்குற மாதிரி ஒரு ஃபீலிங்கு. பாக்கெட்ட பார்த்தேன் 50 திர்ஹம்ஸ், படிச்சமா அதோட தூக்கி தூர எரிஞ்சமான்னு இல்லாம இதெல்லாம் உனக்கு தேவையான்னு அது என்ன பார்த்து கேக்குது. அந்த ஆள இழுத்துட்டு போனவைங்க எல்லாம் தமிழ் சினிமால வற்ர வில்லனோட அடியாளுங்க மாதிரி வாட்ட சாட்டமா இருந்தானுங்க.
அப்போதான் தைரியமா அத கேட்டுறுவோம்னு முடிவு செஞ்சு. அம்மனிய கூப்டேன், பக்கத்துல வந்துச்சு
""ஒரு கப் காபி கிடைக்குமா"".

Tuesday, November 10, 2009
துபை பஸ்ஸில் ஏறிய மானம்
இந்தியாவோட மானம் போன கதையும் அத தடுப்பதற்கு நம்ம ஹீரோ செய்த காரியமும். இதுதான் மேட்டரு. பிச்சகாசு 2 திர்ஹம்ஸ்க்காகன்னு சொல்ல முடியாது அதுவே ரொம்ப பெரிய விசயமா தெரிஞ்சதனாலதான் இத செஞ்சிருப்பாங்களோ தோனுது.
சாயங்காலம் மணி 8 இருக்கும். இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு. இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான். நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு. டிரைவரு நமக்கு ரொம்ப டியரு. ஓமான் காரரு. ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...

ஒருவழியா டிக்கட்ட கொடுத்து முடிச்சுட்டு பஸ் கதவ
மூடிட்டு எதயோ தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு
அப்போ அவரு கண்ணவுறுத்துற மாதிரு பச்ச கலர்ல
ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல.
மூடிட்டு எதயோ தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு
அப்போ அவரு கண்ணவுறுத்துற மாதிரு பச்ச கலர்ல
ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல.
அதே நெரத்துல அவரு கை வண்டியையும் ஸ்டார்ட் பண்ணுச்சு, ஆன் பண்ணுனத ஆஃப் பண்ணிட்டு அந்த 5 ருவாவ எடுத்துக்கிட்டு நம்மவூர்ல படத்துல SPECIAL லா விஜயகுமார் சிபரிசுல அப்பாய்ண்ட் பண்ணுன போலிஸ்காரராட்டம் கண்ணு சிவக்காம காத்து அடிக்காம இப்புடி எதுவுமெ இல்லாம ரொம்ப சாதாரணமா அப்புடியே அந்த நோட்டோடப் பக்கவாட்ல இரண்டு கையையும் புடிச்சுகிட்டு
நடந்து வந்தாரு.
யாருக்கும் ஒன்னும் புரியல நான்கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு.
முதல்ல லைட்டா கேட்டறு,
நடந்து வந்தாரு.
யாருக்கும் ஒன்னும் புரியல நான்கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு.
முதல்ல லைட்டா கேட்டறு,
கொஞம் குரல மாத்தி ஹர்டாவும் கேட்டுப்பாத்தாரு
நம்ம ஆளுங்கதான் எதையும் பிளான் பன்னி செய்ரவங்களாச்சே.
ஒருத்தரும் உண்மைய ஒத்துக்கல. ஒத்துக்கலனா இப்பவே இங்கயே இந்த நோட்ட கிளிச்சுடுவேன்னு இடிமாதிரி முழங்கி ரெடியானாரு அப்பொ STOP னு யாரோ கத்துனாங்க. யாரு நம்ம ஹீரோதான். நீயா அப்புடிங்கர மாதிரி அவருக்கு ஒரெ ஷாக்(மேஜர் சுந்தர்ராஜன் இருந்திருந்தார்னா, இரண்டு திர்ஹம்ஸ்க்கு பதிலா ஒரு ரூபாவும், ஒரு திர்ஹம்ஸ்சும்னு அன்னைக்கு ஏமாத்துனானே ஒருத்தன்னு இன்னைக்கு சொல்லுரதுக்கு நாகேஷ் இல்ல அத கேக்குறதுக்கு நம்ம மேஜர் சாரும் இல்ல)

உடனே குஸ்குஸ்னு எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க.
நம்ம ஹீரோவுக்கு இதெல்லாம் காதுல விழல அவனுக்கு அந்த நோட்டும் இந்தியாவொட மானமும் தான் தெரிஞ்சது.
5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான். இத்தாங்க கத, ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க. அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த, ஹீரோ இந்தியா வந்தப்போ திருட்டுப்போயிடுச்சுங்கறது வேற கதை.

Saturday, November 07, 2009
துபை - விபச்சாரத்தின் அறிமுகம்
இந்த பதிவுல துபைக்கு வந்தப்போ ஏற்பட்ட ஒரு அனுபவத்த சொல்லாலாம்னு இருக்கேன்.
துபை தேரா பகுதி நம்ம வசிக்குமிடம். பொதுவா தமிழ் மக்களும், தமிழ் ஆளுங்க கடைகளும், வாரக்கடைசில அனைவரும் கூடும் இடமா இருக்கும்.
வந்த புதுசுல வெளியில போறப்போ அறைல இருந்த அண்ணாச்சி பாத்து பத்திறமா போயிட்டுவாப்பான்னாரு. புதுசுங்கறதால சொல்லுறாரு போல நானும் தலைய
ஆட்டிட்டு கிளம்பிட்டேன். தேரா பஜார் ஏரியால நேறய சந்து சந்தா இருக்கும், சந்தோட முடிவுல குட்டையா கட்டையா பங்களாதேஸ் காரைங்க நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போறப்பல்லாம் நம்மல பாத்து ஏதோ ஒன்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க. நான் அத பெருசா காதுல வாங்கிக்காம கடந்து போய்கிட்டேயிருப்பேன். ஒரு நாள் ஒருத்தன் நேரா வந்து கைய கொடுத்தான். நானும் கையகொடுத்தேன். "லடுக்கிச்சாயே" அப்போதான் அந்த வார்த்தைய முதல் முதல்ல கேட்டேன். ஒன்னும் புரியாம நமக்கு தெரிஞ்ச இந்தில "கியா" ன்னேன். "அச்சா லடுக்கிஹே 30 திர்ஹாம்" னான் அப்பவும் விளங்கல, எதேச்சையா அந்த பக்கம் வந்த அறை அண்ணாச்சி இத பார்த்துட்டு ஓடிவந்து தலைல அடிச்சுக்காத குறயா அறைக்கு கூட்டிட்டுவந்துட்டார். வந்ததுக்கு பின்னாடி "இப்புடி இப்புடி அப்புடி அப்புடி னு" பெரிய விரிவுரையே நடத்துனார். அன்னைலேர்ந்து சந்துகள பார்த்தாலே பத்தடித் தள்ளி நடக்க ஆரம்பிச்சேன். அப்புடியும் சனி நம்மல விடுல இப்போ ஒரு பொம்பல வடிவுல. துபைல நான் பார்த்தா வகைல கருப்பின பெண்கள் நல்லா பருமனா பார்க்கவே பயம இருப்பாங்க எனக்கு. அண்ணாச்சி அவங்கள பத்தியும் விரிவுரை நடத்தியிருந்தால கொஞ்சம் எச்சரிக்கையவே இருந்துட்டு இருந்தேன். ஒரு நாள் பதினோரு மணியிருக்கு கொஞ்சம் ஆள் அரவம் இல்லாத ஏரியா நடந்து வந்துகிட்டிருந்தேன். திடீர்னு பின்னாடி போன கை முன்னாடி வரல என்னாடான்னு பார்த்தா கைய ஒரு பொண்ணு புடிச்சுக்கிட்டிருந்துச்சி. நான் திரும்புனதும் " im sudani" அப்புடின்னுச்சு நானும் பதிலுக்கு விட்டுகொடுக்காம பின்னாடி நடக்க போற வில்லங்கம் தெரியாம ரொம்ப கம்பீரமா "im indian" னேன். இப்போ கை கொஞ்சம் இருகுச்சு வலிக்குர மாதிரி இல்ல நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுச்சு. பொண்ணுன்னு சொன்னேன்ல அத பொம்பலன்னு மாத்திக்கோங்க. மறுபடியும் "im sudani" ன்னு சொன்னா. நான் "so what?" னேன். "GIVE ME 40 DIRHAM, OTHERWISE I WILL CALL THE POLICE" இப்போ நல்லாவே புரிஞ்சு போச்சு அம்மணி யாருன்னு. போலிஸ்னு சொன்னோன்னே பதட்டத்துல வியற்க்க ஆரம்பிச்சுடுச்சு. போய்தொலாயுது காச எடுத்து கொடுத்துட்டேன். "shall we go? " ன்னு கேட்டா. அடங்கொய்யால கைய ஒதரிட்டு நடக்க ஆரம்பிச்சுடேன். ஒரு விசியத்துல அவள பாராட்டாம இருக்க முடியல கொடுத்தா அம்பது திர்ஹம்சுக்கு நாப்பது போக மீதி பத்த கொடுத்தா. என்ன ஒரு நேர்மை.
Wednesday, November 04, 2009
கோர்பகான் பூங்கா - சிறிய அறிமுகம்
அண்ணாச்சிங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி என்னோட முதல் பதிவா இது அமைய காரணமா இருந்த அமீரக பதிவர்கள் சுற்றுலா பற்றிய பதிவுக்கு எதோ என்னாலான உதவியா இந்த பதிவு.
கோபர்கான் பீச்ச கடந்து cityக்கு உள்ள போனா ஒரு பூங்கா இருக்கு நல்ல அமைதியான இடம். இந்த பூங்கா கடற்கறைய ஒட்டி இருக்கு. சுத்தம்னா அப்புடி ஒரு சுத்தம். குடும்பத்தோடு போறவங்களுக்கு ரொம்ப வசதியான இடம்.
குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியா சின்னதா பூங்காவோட மத்தியில மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில விளையாட்டு கூடங்கள் இருக்கு.
கோபர்கான் கடற்கரைக்கு போற வழியில ரொம்ப பழமையான பள்ளிவாசல் ஒன்னு இருக்கு. அந்த இடத்துல கொஞ்சம் வாகன நெரிசல் இருக்கலாம்.
இந்த சுவரை தாண்டி கீழ இறங்கினோம்னா நண்டுங்க அப்புடியே சார சாரைய நிக்குங்க. சில பேர் அத புடிக்குறேன்னு கல்லால அடிச்சு காலிப்பண்ணிகிட்டு இருந்தங்க.
கார் பார்க்கிங் பிரச்சனை இல்லாதது ரொம்ப வசதியா இருந்தது.
கோபர்கான் பீச்ச கடந்து cityக்கு உள்ள போனா ஒரு பூங்கா இருக்கு நல்ல அமைதியான இடம். இந்த பூங்கா கடற்கறைய ஒட்டி இருக்கு. சுத்தம்னா அப்புடி ஒரு சுத்தம். குடும்பத்தோடு போறவங்களுக்கு ரொம்ப வசதியான இடம்.
குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியா சின்னதா பூங்காவோட மத்தியில மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில விளையாட்டு கூடங்கள் இருக்கு.
கோபர்கான் கடற்கரைக்கு போற வழியில ரொம்ப பழமையான பள்ளிவாசல் ஒன்னு இருக்கு. அந்த இடத்துல கொஞ்சம் வாகன நெரிசல் இருக்கலாம்.
கார் பார்க்கிங் பிரச்சனை இல்லாதது ரொம்ப வசதியா இருந்தது.
கோர்பகான்ல KFC தேடி அலைந்த கதை வரும் நாட்களில்...
படிக்குறப்போ ரொம்ப easyயா இருந்துச்சு இத எழுதுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு...
Subscribe to:
Posts (Atom)