Tuesday, August 10, 2010

ஒரு சில எண்ணங்களும்-துமிழ் அவர்களுக்கு நன்றியும்

மருத்துவர் துமிழ் அவர்களின் மனித உடலின் ஒரு பாகத்தினைப்பற்றிய ஒரு பதிவு.

              அந்தப்பதிவினைப்படித்த உடன் எனக்கு என் பள்ளிக்கால நினைவுகள் வந்து போனது.  காரணம் இருக்கின்றது.  உயிரியல் பாடத்தினை நான் என்றுமே மனனம் செய்து படித்ததில்லை.  அந்தப்பருவத்தில் வேறு முக்கியமான வேலையில்லாத சமயங்களில் அந்தப் பாடப் புத்தகத்தினை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அது வாழ்க்கைக் கல்வியாக இருந்ததனாலே அதன் மீது எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. யாரும் சொல்லாமலேயே முக்கியமாக மனனம் செய்யாமல் படித்துவிடுவேன்.  எங்கள் ஆசிரியரும் அதற்கு முக்கியமான காரணியாக இருந்தார்.  அவர் மூன்று மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தும் பொழுது எங்களுக்கு என்றுமே அயற்சி உண்டானதில்லை.  அத்தனை உற்சாகமாக இருக்கும்.  இடையே இடைவேளையும் கொடுப்பார்.  இடைவேளைக்குப் பின் இருக்கக்கூடிய ஒரு மணி நேரத்திற்காகவே நாங்கள் மூன்று மணி நேரத்தைக்கடந்தும் அதே உற்சாகத்துடன் அமர்ந்திருப்போம்.

         அந்த வயதினில் அந்த ஒரு மணி நேரம் மிக சுவரஸ்யமானதாகவும் மேலும் எங்கள் அறியாமையை போக்கும் ஒன்றாகவும் இருந்திருக்கின்றது,
என்பதை அறியாமலேயே கடந்து வந்து விட்டோம் என்பதை இன்று உணர்ந்திருக்கின்றேன்.  எங்களுக்கு இருக்கக்கூடியா பாலியல் ரீதியான சந்தேகங்களை விளக்குவதற்காகவே வாரத்தின் ஒரு நாளில் ஒரு மணி நேரத்தினை ஒதுக்குவார்.  ஒரு துண்டுச்சீட்டில் எங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை எழுதிக்கொடுப்போம்.  ஒவ்வொருவருக்கும் விதவிதமான சந்தேகங்கள்.  தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், அந்த வயதுக்கே உரிய ஒரு சில விருப்பங்களும் எங்களை தூண்டியது.  நாங்கள் எழுதிக்கொடுத்த அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு அதிலிருந்து பத்து சீட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக பதில் சொல்வார்.  மீதி இருக்கக்கூடிய கேள்விகளை படித்துவிட்டு அது பற்றிய போதுவான விசயங்களை கோர்வையாக எங்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவார்.

         பாடத்திட்டத்தில் இல்லாத பல விசயங்களை எங்களுக்கு அறியக்கொடுத்தார். ஒரு சிலக்கேள்விகளைப் படித்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தூக்கி குப்பையில் போடுவார்.  நாங்கள் புரிந்து கொள்வோம் எவனோ ஒருவன் விவகாரமான கேள்வியினைக் கேட்டுள்ளான் என்பதை.  நாங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் அதைக்கேட்டால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள் என்பார். அவர் பாதிரியார் என்பதால் நாங்கள் FATHER என்றே அழைப்போம்.  அப்பொழுது விளையாட்டுத்தனமாக நாங்கள் கேட்டக் கேள்விகள் அப்பருவத்தில் முழுமையாக இல்லையானாலும் பின்பு ஒரு சில விசியங்களில் புரிதலை எனக்குக்கொடுத்தது. மேலும் ஒரு சில விசயங்களை சுய ஆர்வத்தின் காரணமாக படித்து தெரிந்து கொண்டேன்.  நான் படித்தது ஒரு பாலர் பள்ளியில். அவர் ஒரு ஆண் என்பதால் நிறை விசயங்களை வெளிப்படையாக விவாதித்தார்.  அதுவே இருபாலர் என்றால் அதுவும் ஆசிரியர் பெண்ணாக இருந்திருக்கும் பட்சத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றே எனக்குத்தோன்றுகிறது.

           பின்பு கல்லூரிக்காலத்திலும் தொடர்ந்தது.  நான் கல்லூரியில் முதன்மைப் பாடமாக இயற்பியல் பாடத்தினை படித்தேன்.  அங்கும் NSS இல் இணைந்ததன் மூலமாக பல மருந்துவத்துறை கருந்தரங்களிலும் மற்றும் சமுதாயப்பணிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது.  எயிட்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு நாடங்களை நாங்கள் கிராமங்களில் சென்று அரங்கேற்றுவோம்.   எங்களில் ஒரு சிலருக்கு பார்த்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் முகபாவனைகளை கண்காணித்து அறிக்கை தருமாறு கூறுவார்கள்.  ஒரு சில மிகச் சிக்கலான வசனங்கள் அதாவது மிக வெளிப்படையாக(பச்சையாக) ஒரு சில விசயங்களை (வசனங்களில்) சொல்வோம். அப்பொழுது பெரும்பாலனவர்களின் முகம்மாறும். அதுவரை அவர்கள் நம்பிக்கொண்டிருந்த அல்லது செய்துகொண்டிருந்த ஏதோ ஒன்று தவறு எனப் புலப்படும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். 

       கல்லூரியில் படிக்கும் போது முக்கியமாக அறிவியல் பிரிவு அல்லாது மற்ற பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பாலியல் ரீதியான அறிவு இல்லை என்பது என் அனுமானம்.  ஒரு சிலர் என்னிடம் கேட்கும் அல்லது கேட்ட கேள்விகளில் இருந்து அனுமானிக்கின்றேன். இதை பள்ளிப்பருவத்திலே கொண்டுவருவது அவசியமான ஒன்றாகவே எனக்குப்படுகின்றது.  ஆனால் இதை தொடங்குவதற்கு முன் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கவேண்டியது அவசியம்.

இந்தப்பதிவை எழுதியதன் நோக்கமே பாலியல் கல்வி தேவை என்பதற்காகத்தான்.  அது எந்த அளவிற்கு இங்கு வெளிப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.  இது சம்பந்தமாக எத்தனையோ பதிவுகள் இந்த வலையுலகில் வந்துள்ளது. இது என்பங்காக இருக்கட்டும்.

மருத்துவர் துமிழ் அவர்களின் வலைப்பூ நிறைய பேருடைய சந்தேகங்களுக்கு நல்ல மருந்தாக அமைந்துள்ளது.  மேலும் ஒரு விசயம் அவருடைய வலைப்பூவின் பதிவுகள், என் நண்பர் ஒருவருடைய மனக்குறையை நீக்கி மண வாழ்க்கையை இனிமையாய் தொடங்கிட வழி கோலியுள்ளது.  என் நண்பரின் சார்பாக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

11 comments:

Barari said...

hai me the first.thambi munnetram veku vekamaaka irukkuthu.ennamo ponga.

விஜய் said...

மிக அவசியமான இடுக்கை தோழரே . இதை பற்றி நான் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் அழகாய் செய்து முடித்து இருக்கிறீர்கள் தோழரே ...
வாழ்த்துக்கள்...

இன்னும் வேண்டும் உங்களிடமிருந்து இதைபோன்ற அழகான பதிவுகள்

சௌந்தர் said...

நல்ல பதிவு யூத் ஃபுல் விகடன் வந்தவுடன் விழிப்புணர்வு பதிவர் ஆகிவிட்டார்....

இப்போது எயிட்ஸ் பற்றி விழிப்புணர்வு கொஞ்சம் பரவாயில்லை

ஜீவன்பென்னி said...

//Barari said...
hai me the first.thambi munnetram veku vekamaaka irukkuthu.ennamo ponga.// என்னோட பதிவுல மீத பர்ஸ்ட் போட்ட மொத ஆளூ நீங்கதாண்ணே. உங்கள் ஆதரவுக்கு நன்றிண்ணே.

ஜீவன்பென்னி said...

உங்கள் ஆதரவுக்கு நன்றி விஜய். நீங்களும் எழுதுங்க நான் படிக்கக்காத்திருக்கின்றேன்.

ஜீவன்பென்னி said...

தம்பி சவுந்தரு நீ சொல்லித்தான் அது யூத்புல் விகடன்ல வந்திருக்குன்னு தெரியும் இப்பவும் நீ சொல்லித்தான் அந்த விசயம் மற்றவங்களுக்கும் தெரியப்போகுது. இங்க எயிட்ஸ பத்தி எழுதவேயில்லப்பா பாலியல் கல்வியின் தேவையப்பத்தித்தான் எழுதியிருக்கேன். எனக்கு கிடைச்சது அந்தப் புரிதல் மற்றவங்களுக்கும் கிடைக்கனுங்கறதுதான் என் எண்ணம்.

அருண் பிரசாத் said...

நல்ல பதிவு பாஸ்

பனித்துளி சங்கர் said...

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . பதில்கள் தேடும் கேள்விகளுக்கு தேடாமல் விடை கொடுத்த பதிவு என்றுதான் சொல்லவேண்டும் . சிறப்பான பதிவு . நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது . பகிர்வுக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அவசியமான பதிவு... பகிர்வுக்கு நன்றி நண்பரே,,,

செல்வா said...

சொல்ல வந்த கருத்தை அருமையா சொல்லிருக்கீங்க அண்ணா ..!!
அருமை ..!!

சிங்கக்குட்டி said...

உண்மைதான் நானும் அவர் பதிவுகள் படித்திருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி ஜீவன்பென்னி.

Post a Comment