Tuesday, December 22, 2009

Hunter இது விமர்சனம் அல்ல

இது விமர்சனம் இல்ல.

வேட்டைக்காரன் படத்தினைப்பற்றி வரக்கூடிய விமர்சனங்கள படிச்சுட்டு ரொம்ப நல்ல காமெடி படம் போலன்னு நினைச்சுக்கிட்டு நேத்து டிக்கெட் கிடைக்காததால இனனிக்கு காட்சிக்கு நேத்தே டிக்கெட்ட வாங்கிகிட்டு வந்துட்டோம்.

உண்மைய சொல்லனும்னா இது தான் எனக்கு முதல் அனுபவம். என்னன்னா விஜய் நடிச்ச(மன்னிக்கனும்) ஒரு படத்த முதல் முறையா தியேட்டர்ல பார்த்தேன். 

கும்பல் இருக்காதுன்னு நினைச்சிக்கிட்டு போனா டிக்கெட்டே இல்லங்குறானுங்க.  இன்னைக்கும் முதல்ல ரெண்டு வரிசை மட்டும் நிரம்பாம இருந்துச்சு.

ரஜினிய பத்தி இப்புடித்தான் சொல்லுவாங்களாம்.  எப்புடின்னு கேக்காதீங்க தெரிஞ்சவங்க யார்கிட்டயாச்சும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.  அதே கதைதான் விஜய் படங்களுக்கும் நடக்குதோன்னு எனக்கு தோணுது.
சரியில்ல சரியில்லன்னு சொல்லிகிட்டே முக்காவாசிப்பேரு படத்த பார்த்துர்ராங்கங்குறதுதான் உண்மை.

விஜய் நடிச்ச படம் 100 நாள் ஓடுதாங்குறது முக்கியமில்ல.  ஆனா அவரு படம் முதலுக்கும் லாபத்துக்கும் மோசமில்லங்குறது மட்டும் உண்மை.

"என் உச்சி மண்டைல" ன்னு ஆரம்பிக்குற அந்த பாட்டுல ஒரு மாறுவேடப் போட்டியே நடத்தியிருந்தாரு.  அத பத்தி என்னன்னு சொல்ல.  ஆனா ஒரு விசயம் எனக்கு புரிஞ்சுது, அவரு இப்புடியே நடிக்குறது அவருக்கும் பாக்குறவங்களும் நல்லது.

இன்னொரு முக்கியமான காட்சி மலை அருவிலேர்ந்து கிழ குதிச்சு தப்பிக்குற காட்சி,   குதிக்குறப்போ நின்னுகிட்டே நீச்சலடிக்கப்போறாருன்னு தெரியும் ஆனா குதிச்சு தண்ணிகுள்ள இருந்து வெளிய வர்ற காட்சி எப்பா!!! அத காண கண் கோடி வேணும்.  அர்னால்டே(Predetor) தோத்து போய்டுவாரு.  அங்கதான் இயக்குனரோட திறமைய பாத்தேன்.

நண்பர்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்குறது,
நண்பன் இறந்து போறது இன்னும் நெறய வழக்கமான விசயங்கள்.
அவைகள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னுமில்ல.

விஜயோட அக்கா சாரி ஜோடி அனுஷ்கா. இந்த அறிமுகமே போதும் கதாநாயகிக்கு.  மனோபாலா சிரிக்க வைக்கிறாரு.  வில்லன்கள பத்தி என்னன்னு சொல்ல.  வர்றாங்க அடிவாங்குறாங்க, பறந்து பறந்து விழுறாங்க.

கடைசியில வில்லனுக்கு வணக்கம் சொல்லுறப்போ விஜய் என்னமா எக்ஸ்பிரசன் காட்டுறாரு. 

வேட்டைக்காரன் எம்ஜியார் நடிச்ச படம்.  அந்த படமும் இந்த படத்துக்கு எந்த விதத்துலயும் குறஞ்சது இல்ல.

Friday, December 11, 2009

க்ரைம் கதை- இறுதி பாகம்

இழு இழு நல்லா இழுடா...

ம்ம்ம்ம்ம் நல்லா இழு...

இவ்வளோடதாண்டா என்னால முடியும்.

சரி சரி.. இழு இழு...

வந்துடுச்சு வந்துடுச்சு இன்னும் கொஞ்சம் தான்.

போதும் விடு விடு கொஞ்சம் பிளேடு போட்டா வந்த்துடும்.

டொர் டொர் கிர் கிர்
கொர் கொர் டொர் டொர்

அப்பாடா வந்துடுச்சு.

கட்டுனதுதான் கட்டுனானுங்க சின்னதா கட்டக்கூடாது எவ்வளோ நீளம்
இதுக்கு இடையில கம்பிங்க வேற இதுனால எவ்வளோ கஷ்டம்.  இந்தப்பக்கட்லேர்ந்து அந்தப்பக்கம் போறதுக்கு அறை மணி நேரமாகுச்சு, இனிமே பிரச்சனையில்ல. காலைல அறை ம்ணி நேரம் லேட்டாவே எழுந்திரிக்கலாம் ஆபீஸ்லயும் எவனும் ஏண்டா லேட்னு கேக்கமுடியாது.

கத இங்க முடியுது.



க்ரைம் கதைன்னு போட்டிருந்துச்சு கதை அதுக்குள்ள முடிஞ்சுடுச்சு கேக்காதீங்க இன்னொரு முறை தலைப்ப நல்லா படிங்க.




இதுல இருக்குற ஒரு கம்பியத்தான் நம்ம கதைல அறுத்தாங்க.

Tuesday, December 08, 2009

க்ரைம் கதை-பாகம் 2

டொர்.... டொர்..... கிர் கிர்
டொர்.... டொர்..... கிர் கிர்

டேய் மெதுவாடா சத்தம் அதிகமா வருது பாரு.

இதுக்கும் மேல மெதுவ அறுக்க முடியாதுடா.  இப்புடி அறுத்தாலே இன்னைக்குள்ள முடிக்க முடியுமான்னு தெரியல. 

பாத்துக்கிட்டே இருடா எவனாச்சும் வராணான்னு.

ஆனா ஒன்னுடா இத மட்டும் நாம செஞ்சு முடிச்சுட்டோம் பல பிரச்சனைங்க தீர்ந்திடும்ல.  நிம்மதியான தூக்கம், டென்சன் இல்ல.
எவனும் ஏன்னு கேட்கமுடியாது.

ஒரு கம்பிய எடுத்தா போதுமா இல்ல ரெண்டு கம்பிய தூக்கனுமா.
 நீ கொஞ்சம் பாத்து சொல்லு. 

ஒரு கம்பியே போதும்டா.  நானும் நீயும் என்ன இரண்டு அடி அகலமா இருக்கோம்.
 
வேலையப்பாருடா கேள்விகேட்டுகிட்டு,  நாளைக்கு எப்புடி ஆபிஸ்க்கு போகப்போறன்னே தெரியல.  இப்பவே மணி 2.30 ஆச்சு.

டேய் டேய் நிப்பாட்டுடா சைரன் சத்தம் கேக்குது.

 ஓடு ஓடு அந்த மரத்துக்குப் பின்னால ஓடு.  ஆ..............ஆ.....................................

டேய் என்னடா ஆச்சு,  உன் முட்டியில சிவப்பா என்னமே வருது.  என்னடா அது.

நக்கலு,  பேசுடா பேசு.  இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.  உனக்கு உதவி பண்ண வந்தேன் பாரு என்ன சொல்லனும்.


சைரன் சத்தம் கிட்டக்க கேக்குதுடா நல்லா மறஞ்சிக்கோ.  எவன் கண்ணுலயாச்சும் மாட்டிக்கிற போறோம். அப்புறம் கம்பிதான்.


உய்ய் உய்ய் உய்ய்
உய்ய் உய்ய் உய்ய்
உய்ய் ஊய்ய் உய்ய்

டேய் இது ஆம்புலன்ஸ் வண்டியோட சத்தம் மாதிரியே இருக்குல்ல.

ஆம்புலன்ஸ் வண்டி மாதிரியே இல்ல ஆம்புலன்ஸ் வண்டியேதான்.

அடச்ச.................. 

இத கேட்டு ஓடி கால்ல ரத்தம் வந்ததுதான் மிச்சம்.

சரி சரி சீக்கிறம் ஆரம்பி டைம் ஆகிக்கிட்டே இருக்கு.

மணி 3.00

டொர்.... டொர்..... கிர் கிர்


டொர்.... டொர்..... கிர் கிர்

மணி 3.30

டொர்.... டொர்..... கிர் கிர்


டொர்.... டொர்..... கிர் கிர்

மணி 3.55

போதும்டா நாளைக்கு கண்டினியு பண்ணலாம்.

என்னது நாளைக்கா இன்னும் ஒரு அறை மணி நேரந்தான், எல்லாம் முடிஞ்சுடும்.  வெய்ட் பண்ணு.


தொடரும்...

Monday, December 07, 2009

க்ரைம் கதை-பாகம் 1

டேய் இன்னைக்கு எப்புடி ஓகே வா?  முடிச்சுடலாமா!
ரொம்ப கஷ்டமா இருக்குது என்ன சொல்லுற.

இன்னைக்கு ஓகே தான். ஒரு நாள்ல முடியும்கிற.

 ஆரம்பிச்சுடுவோம். முடியுறது நம்ம கைல இல்ல. 
அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்,  மாட்டிகிட்டோம்னா
 கம்பி எண்ணவேண்டி இருக்கும் நியாபகத்துல வச்சுக்கோ.

இப்போ மணி என்னா ஆகுது?

பத்து மணியாக பத்து நிமிசம் இருக்குடா.

இந்த ஊர் காரணுங்க அவ்வளோ சீக்கிரத்துல தூங்கமாட்டாங்களே.  இப்போ அங்க சன நடமாட்டமும் அதிகமா இருக்கும்.  ஒரு பண்ணிரெண்டு மணி வாக்குல கிளம்புவோம் என்ன சரியா. 

டேய் நாளைக்கு நான் வேளைக்கு போகனும்டா,  12 மணிங்குற.  ஒனக்கு லீவு, நீ தூங்குவ 12 மணி வரைக்கும்.  நமக்கு தாங்காதுப்பா. 

இப்படியே தள்ளிப்போட்டுகிட்டே போனா பின்னாடி ரொம்ப கஷ்டம்டா.  இத என்ன நாம மட்டும் தனியாவா செய்யப்போறோம், அவனுங்களும் தான வர்றேன்னு சொல்லியிருக்கானுங்க.  இது ஒரு கூட்டு முயற்ச்சிடா.  நீ சும்மா வந்து வேடிக்கைய மட்டும் பாரு.  மத்தத நான் பாத்துக்குறேன்.

உன்னோட வேலை போலிசு வந்தா சிக்னல் குடுக்குறதுதான்.  போறதுக்கு முன்னாடி சாமனெல்லாம் எடுத்து தயாரா வை. நா ஒரு தம்ம போட்டுட்டு வரேன்.


சாமான எடுத்துவச்சுட்டியா.  எதையும் மறந்துடாத.

ஆமா பெரிய இந்த சாமா.  ஆக்சா பிளேடும், ஒரு கத்தியும் இதுக்கு ஏண்டா இவ்வளோ பில்டப்பு.

எல்லா விசியத்துலயும் ப்ரொபசனலா இருக்கனும்ல அதுக்குத்தான்.

ஓகே கிளம்பலாம். மணி பதினொன்னு ஆச்சு,  இப்போ கிளம்புனோம்னா அங்க போய் சேர்றதுக்கு சரியா இருக்கும்.

கதவ பூட்டிட்டியா?  நல்லா பூட்டுடா, நாம போன நேரம் பார்த்து உள்ள புகுந்து லவட்டிட போறானுங்க. 

இருக்குறது இரண்டு கட்டிலும்,  கந்தலா ரெண்டு டிரஸும் அத எடுக்குற தைரியம் எவனுக்கும் வராது, கவலப்படாத.


இரவு 11.45:


எங்கடா அவனுங்களும் வருவானுங்கன்னு சொன்ன.  ஒருத்தனையும் காணோம்.  மணி 12 ஆகப்போகுது.  இதுக்குத்தான் முன்னாடியே போன் பன்னி கன்பார்ம் பண்ணிக்கனுங்குறது.

அவனுங்க வரமாட்டானுங்க.

ஏண்டா?

அவனுங்க வரோம்னு சொல்லவேயில்லயே.  அப்புறம் எப்புடி வருவானுங்க.

டேய் என்னா விளயாடுறயா?  நான் கிளம்புறேன்.

டேய் போய்டாதடா இன்னைக்கு ஒரு நாள் தான்.  இன்னைக்கு இத முடிச்சுட்டோம்னா வாழ்நாள் முழுக்க பிரச்சனையே இல்லடா.  ப்ளீஸ்.

சரி செஞ்சுத்தொலையுறன்.

இன்னும் ஒரு ஒரு மணிநேரம் போச்சுன்னா இந்த ஏரியாவுல ஆள் நடமாட்டம் குறஞ்சிடும் அப்புறமா நாம வேலைய ஆரம்பிப்போம்.
என்ன சரியா? 

பதில் சொல்லுடா!!

ஓகே சரி.


தொடரும்...

Friday, December 04, 2009

கதையாம் காதலாம்

முதல் நாள்:


"டேய் மச்சான் அங்க பார்டா அவ உண்ணையவே பார்க்குறா!"

"இல்லடா மச்சான் நா யாரையும் பாக்குறதா இல்ல, இவளுங்க சாவுகாசமே வேண்டாம்டா. பார்த்த வரைக்கும் போதும், பட்டதும் போதும்."

ஏண்டா மச்சான்? என்னாடா ஆச்சு? நீயா சொல்லுற! "


" உன்னைய பார்த்து அவ ஃபிரண்டு கிட்ட எதோ சொல்லுறாடா. டேய் ஒரே ஒரு தடவ அவள பாரேன்? "


"டேய் நிப்பாட்டுறயா இல்ல நான் கிளம்பட்டுமா? "

ஒருத்தன் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்காதே!


இரண்டாம் நாள்:


"டேய் மச்சான் நேத்து பாத்தோம்ல அவ இன்னைக்கும் நிக்குறாடா!"

"நெசமாவா? "


"நான் தான் சொன்னேன்ல அவ ஒன்னையத்தாண்டா பாக்குறான்னு. நீ தான் கேக்கவேயில்ல."


"இல்லடா மச்சான் பழச நா இன்னும் மறக்கல. அந்த வலி இன்னும் அப்புடியே இருக்கு. அத நினச்சுத்தான் நான் பாக்கலன்னு சொன்னேன்.
வேற ஒன்னும் இல்ல."


"மச்சான் எனக்கு என்னமோ இவ உனக்கு சூட் ஆவான்னு தோனுது."


சரிடா ஒரு வாரம் பாப்போம், அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம்.



ஏழாம் நாள்:


"என்னடா ஒரே சோகமா இருக்க"


"இல்லடா நாளு நாளா அவள பாக்கமுடியல"


"இந்த நாளு நாளா உண்ணையவும் பாக்கமுடியல,

போன் பண்ணுனா ஆஃப்னு சொல்லுச்சு எங்க போயிருந்த? "


"அத அப்புறம் சொல்லுறேன். இதுக்கெல்லாம் கவலபடாதடா,

அவ போனா போறா, உனக்குன்னு ஒருத்தி இந்த உலகத்துல

பிறக்காமலா போயிருப்பா!"



முதல் நாள்:

"அங்க பாருடி அவன் ஒண்ணையவே பார்த்துட்டு இருக்கான். "

"நான் பாக்கமாட்டேன்."

" அவன் எண்ணையதான் பாக்குறான்னு எப்புடி சொல்லுற"


இரண்டாம் நாள்:

"அவன் கூட இன்னொருத்தனும் நிக்குறான் இரண்டு பேறும் நம்மள பத்தித்தான் பேசிக்கிட்டு இருப்பானுங்க. இப்போ நாம அவனுங்கள பார்த்தோம்னா உடனே அவனுங்களுக்குள்ள பேசிக்குவானுங்க பாரு. \


"ஆமாண்டி பேசிக்குறானுங்க. "

"நான் தான் அப்பவே சொன்னேன்ல. "

"போய் பேசுவோமா. "

"ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி"



முப்பத்திரெண்டாம் நாள்:


"Hai Im sudha she is my friend vathini"

"Hai im suresh"

"எங்க உங்க பிரண்ட காணோம்"

"அவன் இப்போதான் கிளம்பிப்போனான்."

"போன் பண்ணுணா வந்துருவான்"


"வேண்டாம் உங்ககிட்டதான் பேசனும்"

"என்கிட்டயா? அவனுக்கு போன் பண்ணா வந்துடுவான்."

"அவருகிட்ட பேச என்னயிருக்கு, உங்க கிட்ட தானே பேசனும்."

"இல்ல அவனும் இருந்த நல்லயிருக்குமேன்னு நினச்சேன்"

"அவருட்ட அப்புறமா சொல்லிக்களாம்."

"இவ உங்கள லவ் பண்ணுறா, நீங்க என்ன சொல்லுறீங்க?"




இதுக்கு சுரேஷ் என்ன சொல்லியிருப்பாரு புரிஞ்சுக்க  ஏழாம் நாள மறுபடியும் படிங்க.(புரியாதவங்களுக்கு மட்டும்)






"செம்மொழிப் பைந்தமிழ் மன்றத்" தின் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை.


simpleblabla.blogspot.com


இந்த நீதிக் கதைலேர்ந்து கிடைக்குற நீதி என்னன்னு (இதையும் மதிச்சு நேரம் ஒதுக்கி படிச்சதுக்காக) தெரிஞ்சா நீங்களே விளங்கிக்குடுங்க.

Thursday, December 03, 2009

சில புகைப்படங்களும் ஒரு அணுகுண்டும்

Old Photographs from Indian History
புராதான படங்கள்:



The daughter of an Indian maharajah
Seated on a panther she shot, sometime during 1920s.

இப்புடி புகைப்படம் எடுப்பதற்க்காக எத்தனைய கொன்னாய்ங்களோ நாசம போறவனுங்க.




A British man gets a pedicure from an Indian servant .
இன்னமும் இந்த வேலையதான் பார்த்துக்கிட்டு இருக்கு நம்ம கவர்மெண்டு.


A rare view of the President's palace and the Parliament building in New Delhi.

உள்ள நடக்குறத பார்த்தா ஒன்னாங்கிளாஸ் புள்ளைங்களே பரவாயில்லன்னு தோனுது





The Grand Trunk Road , built by Sher Shah Suri,
Was the main trade route from Calcutta to Kabul

இப்புடிக்கா போன காபூலுக்கு போய்றலாமாம்.
சூப்பர் ரோடப்போய். இப்போ போனா சங்கு ஊதிடுவானுங்க.




A group of Dancing or nautch girls began performing
with their elaborate costumes and jewelry .

பணக்காரங்க போலிருக்கு போஸ் நல்லாதான் கொடுக்குறாக.

.

Women gather at a party in Mumbai ( Bombay ) in 1910 .

பார்ட்டி கொடுக்குறாங்களாம்.



An aerial view of Jama Masjid mosque in Delhi , built between 1650 and 1658.




The Imperial Airways 'Hanno' Hadley Page passenger airplane
carries the England to India air mail, stopping in Sharjah to refuel .

லண்டன்லேர்ந்து இந்தியாவுக்கு போறாக.



A group from Vaishnava, a sect founded by a Hindu mystic.
His followers are called Gosvami-maharajahs.

நம்ம ஊரு பாட்டுக்காரன்(ங்க)




அணுகுண்டு பார்ப்போம்!!!!



Just read what INDIA was as per LORD MACAULAY on his statement on

நம்ம மேக்காலே(இப்போஇவரு டிசைன் பண்ணுன கல்வி முறையதாம்யா
நாம் பின்பற்றுறோம்) இந்தியாவுக்கு வந்து நல்ல சுத்திபாத்துட்டு அவங்க அரசாங்கத்துக்கு அறிக்கைய அனுப்புறாரு.


2nd february 1835, in foll. snap..

2 ஆம் தேதி பிப்புரவரி மாசம் வருசம்  1835

Shocking .............Shocking [if truly authentic]

இவிங்க எல்லாம்(இந்தியா காரங்க) ரொம்ப நல்லவங்களாவும்,ரொம்ப ஒத்துமையாவும் இருக்கானுங்க.  இப்புடியே விட்டா இங்க காலந்தள்ளுறது ரொம்ப கஷ்டம்.  அதனால இவங்களோட முதுகு எலும்ப உடைக்கனும்.(பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்த சொல்லுறாரு)அதே மாதிரி ஆங்கிலமும் நம்முடைய கலாச்சாரமும், நம்ம ஊரும் அவங்களோட ரொம்ப புனிதமானது அப்புடின்னு நம்ப வைக்கோனும்.

இப்புடியெல்லாம் செஞ்சோம்னா நாம சொல்லுறமாதியெல்லாம் இவங்க வளைவாங்க.  நமக்கும் ரொம்ப ஈசியா இருக்கும்.




என்ன ஒரு வில்லத்தனம்.!!!!


கொலகாரப்பயலுக!!!



நம்ம பிரண்டு மின்னஞ்சல் அனுப்பி எல்லாத்துக்கும் பறப்புங்கன்னாரு.

பறப்பியாச்சு.

Monday, November 30, 2009

மலைகளின் உலகம் - ஹத்தா

HATTA மலைகளின் உலகம். துபை ஓமன் எல்லையில் இரண்டையும் பிரிக்கும் ஒன்றாக இருக்கும் பரந்து விரிந்த மலைத்தொடர்.  துபையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ளது.  


முழுக்க முழுக்க பாறைகள் மட்டுமே. 
பசுமை என்ற சொல்லை நினைத்துக்கூட பார்க்க முடியாது. 
மலைத்தொடரின் ஊடாக ஆறு ஒன்று செல்கிறது.  தண்ணீர் சிறிய ஓடை போன்று ஓடுகிறது.  ஒரு காலத்தில்
தண்ணீர் மிகுதியான அளவில் ஓடியிருக்கக்கூடும்.   ஆற்றுப்பாதையின் இரு கரைகளின் ஓரத்தில் ஒன்றிரண்டு ஈச்ச மரங்கள் ஆங்காங்கே உள்ளது.

மலையில் அடிவாரத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையிலும் கரடுமுரடான மண் பாதை மட்டுமே.  சாகசப் பிறியர்கள் கார்களை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு
சைக்கிளில் ஏறுகின்றனர்.

 

சில இடங்களில் பாதை செங்குத்தாக இறங்கி ஏறுகின்றது. மிகப்பெரிய மலை முகடுகளை வெட்டி பாதைகளை அமைத்துள்ளனர்.




தாகத்துக்கு தண்ணீர் கூட கிடைக்காத இடம்.  இந்த மலைகளுக்கு மத்தியில் தங்குவதற்கு மரத்தினால் கட்டப்பட்ட சிறிய cottage உள்ளது.



உலத்தரமான படம்னு சொல்லுற மாதிரி உலகத்தரமான தார்சாலை.  துபை நகர சாலைகளை விட தரமான சாலைகள். நம்ம வடிவேலு சொல்லுற மாதிரியே இருக்கு.  திரில்லிங்கான அனுபவம் வேணும்னா போயிட்டு வாங்க.
 முக்கியமான விசயம் மேல போய்ட்டா அலைபேசிக்கு வாய்ப்பேயில்ல.











Thursday, November 26, 2009

விடுதலை போராட்டம்

உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர்.




காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நிலங்களாக மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி வந்தனர். இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின் குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். இதனிடையே பதின்மூன்றாம் நூற்றாண்டில் நாடு பிடிக்கும் ஆசையில் கப்பல்களில் திசைக்கொரு பக்கமாக அலைந்த ஸ்பானியர்கள் மொராக்கோ வழியாக அல்ஜீரியாவுக்குள் நுழைந்தனர்.



அல்ஜீரியாவை ஆக்ரமித்தனர். அதன் பிறகு துருக்கியைச் சேர்ந்த ஏட்டோமான் வம்சத்தினர் அல்ஜீரியாவை ஸ்பெயினர்களிடமிருந்து கைப்பற்றினர். இறுதியாக, 1830ல் பிரெஞ்சுப் படை அல்ஜீரியாவை முழுமையாகத் தன் வசப்படுத்தியது. அப்போது பிரெஞ்சு அரசு ஏற்படுத்திய எல்லைகளின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இன்றைய அல்ஜீரிய அரசு. அது அல்ஜீரியாவை முழுமையாகக் கைப்பற்றியதோடு மட்மில்லாமல் அல்ஜீரிய மக்களின் சொத்துகளையும் கையகப்படுத்தியது. அல்ஜீரியாவில் முஸ்லிம்களைப் போலவே, யூதர்களும் பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால், பிரெஞ்சு அரசாங்கம், தனது குடியேற்ற பிரெஞ்சு மக்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுத்தது.



இதனால் பிரெஞ்சு குடியுரிமை அதிகாரத்தில் முக்கிய பதவிகளில் பிரெஞ்சு மக்களே பங்கேற்றனர். உடன் ஏகபோக சுகத்தையும் அனுபவித்தனர். இதனால் மண்ணின் மைந்தர்களாக இருந்த அல்ஜீரிய முஸ்லிம்களும் யூத இனத்தவர்களும் பிரான்சு அரசாங்கத்தின் மேல் கடும் கோபம் கொண்டிருந்தனர். கூட்டாக இணைந்து அரசாங்கத்தை எதிர்த்தனர். இதனால் 1865ல் பிரான்சை ஆண்ட மன்னன் நெப்போலியன் அல்ஜீரிய மக்களின் இந்த எதிர்ப்பை பலவீனப்படுத்த ஒரு திட்டம் வகுத்தான். அதன்படி யூத மக்களுக்கு மட்டும் வாக்குரிமை அதிகாரத்தை வழங்கினான். இது மண்ணின் பூர்வ குடிகளான அல்ஜீரிய மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. காலங்காலமாக இந்த மண்ணில் வாழும் தங்களுக்குக் குடியுரிமை இல்லாமல் குடியேற்றமாக வந்த வேறு இனத்தார் நம்மை அடக்கி ஆள்வதா?



மக்களிடம் இந்த கேள்வி குமுறலாக வெடித்தது. அல்ஜீரிய தேசிய அடையாள மீட்பு பணியில் அல்ஜீரிய மக்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர். படிப்பறிவு மிக்க அல்ஜீரிய மக்கள், இன உணர்வையும் தேசிய இனத்திற்கான தேவையையும் மக்களிடம் வலியுறுத்தி போராட்ட விதையை அல்ஜீரிய மக்களின் மனதிலே ஊன்றினர். 1930ல் இத்தகைய உணர்வெழுச்சிகள் ஒரு வடிவம் கொண்டன. தேசிய விடுதலை முன்னணி எனும் இயக்கம் அல்ஜீரிய முஸ்லிம்களிடையே உதயமானது. இச்சூழலில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. தொடக்கத்தில் முதல் உலகப் போரைப் போல இரண்டாம் உலகப்போரிலும் பிரெஞ்சு அரசை ஆதரித்தனர். போரின் இடையில் வெற்றி சட்டென ஜெர்மன் நாஜிக்களின் பக்கமாகத் திரும்ப அதுவரை அல்ஜீரிய மக்களிடையே இருந்து வந்த பிரெஞ்சு மக்களின் ஆதரவு குறையத் தொடங்கியது.



அல்ஜீரிய விடுதலைக்கான சுதந்திரக் குரல்கள் பகிரங்கமாக எழ ஆரம்பித்தன. 1943இல் பெர்ஹாத் அப்பாஸ் எனும் முஸ்லிம் தலைவர் 56 அல்ஜீரியத் தேசிய உலகத் தலைவர்களின் கையெழுத்துடன் கூடிய அல்ஜீரிய மக்கள் அறிக்கை ஒன்றைத் தயாரித்து பிரெஞ்சு அரசாங்கத் திடம் சமர்ப்பித்தார். அதில், அல்ஜீரிய முஸ்லிம் மக்களுக்கு அல்ஜீரிய ஆட்சியில், சட்ட வசதிகளில் சம உரிமை அளிக்க கோரி அந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிரெஞ்சு அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டுள்ள சிலருக்கு மட்டும் பிரெஞ்சு குடியுரிமை தருவதாக கூறியது. இது அல்ஜீரியாவில் கொந் தளிப்பை உருவாக்கவே மக்கள் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை காண்பிக்கத் திரண்டனர்.



மே 8, 1945.அல்ஜீரிய வீதிகளில், வீட்டுச் சுவர்களில், முதல் முறையாக ரத்தக்கறைகள் படிந்த நாள். அன்று மக்கள் பிரெஞ்சு அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி வீதியில் சென்றனர். பிரெஞ்சு அரசாங்கம் பாதுகாப்புக்காக வீதிகள்தோறும் எண்ணற்ற ராணுவத்தினரை வரிசையாக துப்பாக்கி மற்றும் லத்தியுடன் நிற்க வைத்தது. ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறிய சலசலப்பு சடுதியில் பெரிய கலவரமாக வெடித்தெழுந்தது. அதற்காகவே காத்திருந்த ராணுவத்தினர் வெறித் தாக்குதலை மக்கள் மீது நடத்தினர். தப்பித்து ஓடிய மக்கள் எல்லாரையும் விரட்டி விரட்டி போலீஸ் அடித்து நொறுக்கியது. பிரெஞ்சு அரசின் அதிகாரபூர்வ கணக்குப்படி மொத்தம் 1500 முஸ்லிம் மக்கள் இந்த கலவரத்தினால் இறந்ததாக கணக்குக் காட்டப்பட்டது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 6000 முதற்கொண்டு 45000 வரை இருக்கும் என பத்திரிகைச் செய்திகள் கூறின.



இந்த சம்பவம்தான் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது. பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அல்ஜீரிய இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது என உறுதியெடுத்துக் கொண்டனர். அவ்வப்போது பல எதிர்ப்புகள் ஊர்வலமாக நிகழ்த்தப்பட்டன. அதனை பிரெஞ்ச் அரசாங்கம் தனது வன்முறை நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கியது. இதனிடையே இரண்டாம் உலகப் போர் முழுவதுமாக முடிவடைந்து ஜெர்மனி பிரான்சிடம் முழுமையாக சரணடையவே அதுவரை பயந்திருந்த பிரெஞ்சு அரசு முழு பலத்துடன் அல்ஜீரிய போராளிகளை ஒடுக்க முடிவு செய்தது.



ராணுவத்தினர் இரவு பகலாக மறைமுகப் போராட்டங்களிலிருந்த முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிக் கொன்றது. கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 50,000 பேர் பிரெஞ்சு அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாக யூவ்ஸ் பெனாட் எனும் வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார். இதன் பிறகும் நாம் அமைதியாகப் போராடுவது வெற்றியைத் தராது என முடிவெடுத்த அல்ஜீரியா விடுதலை முன்னணியைச் சேர்ந்த மக்கள் இனி முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என முடிவு செய்தனர். அனைவரும் கைகளில் ஆயுதங்களுடன் சபதம் மேற் கொண்டனர். போராட்டத்தில் களமிறங்கினர். அதன் ஆரம்ப வேலையாக போராளிகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போருக்கான தகுந்த சமயத்திற்காக காத்திருந்தனர்.



நேரமும் வந்தது. அல்ஜீரிய சுதந்திரப் போர் நவம்பர் 1, 1954தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடங்கி, தனது போரைத் தொடங்கியது. பிரெஞ்ச் அரசாங்கத்தின் ராணுவக் கிடங்குகள், காவல் நிலையங்கள், பாதுகாப்பு முகாம்கள் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. சற்றும் எதிர்பாராத இந்த திட்டமிட்ட தாக்குதலால் பிரெஞ்ச் அரசு அதிர்ந்தது. முன்பே, தேசிய விடுதலை முன்னணியினர் தங்களது படைகள் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர் சங்கங்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் என பல்வேறு பிரிவுகளில் மக்களிடம் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தது. போராட்டக் குழுவின் தலைவர் அகமத் பென் பெலா எகிப்தின் கெய்ரோவிலிருந்து தனது திட்டங்களை துல்லியமாக தீட்டி உடனுக்குடன் தனது கொரில்லா வீரர்களை செயல்பட வைத்துக் கொண்டிருந்தார்.



அதேபோல் தேசிய விடுதலைப் படையின் மற்றொரு தலைவரான பிரான்ஸ்வா பனான், தேசிய விடுதலைப் படையின் இந்த அதிரடி கொரில்லா தாக்குதல் எந்த வகையில் நியாயமானது என்பதை அறிவார்ந்த ரீதியாக தெளிவாக உணர்ந்து அதற்கான சித்தாந்தங்களை உருவாக்கி உலக அரங்கில் போராட்டத்திற்கு ஒரு மதிப்பீட்டை உருவாக்கித் தந்திருந்தார். போராட்டத்தின் முதல் வேலையாக அல்ஜீரியாவின் கிராமங்களில் பண்ணைகள் மூலமாக ஏகப்பட்ட சொத்துக்களை வளைத்துப் போட்டிருந்த ஐரோப்பியர்களை அவரவர் நாட்டுக்கு விரட்டி அடித்துப் போராளிக் குழுவினர் சொத்துக்களை கைப்பற்றினர். பதிலுக்கு பிரெஞ்ச் அரசாங்கம் போராளிகளை நசுக்க கடும் நடவடிக்கை எடுத்தது.



போராளிகள், கைகளில் கிடைத்தால் அவர்களை பலவிதமாக சித்ரவதைக்குட்படுத்தி பொது மக்களிடம் தங்களது நடவடிக்கைகளின் கொடூரத்தை உணர்த்தி பயமுறுத்தி வந்தனர். போராளியின் வீடுகள் சூறையாடப்பட்டன. போராளிகளின் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால், போர் இரண்டு பக்கங்களிலும் அதிக அளவிலான வெறியை மென்மேலும் மூட்டியது. பிரெஞ்சு அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கைகள் காரணமாக போராளியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி தேசிய விடுதலை முன்னணிப் படை மேலும் வலுப்பெற்றதே ஒழிய, பயமேற்படவில்லை. விடுதலைப் போரையும் போராளிகளையும் எகிப்து உள்ளிட்ட இதர முஸ்லிம் நாடுகளின் அரசுகள் அங்கீகரிக்க தொடங்கியது.



எழுத்தாளர்கள் மற்றும் உலகப் புகழ் பெற்ற தத்துவவாதிகளான ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் ஆகியோர். பிரான்சிலிருந்து கொண்டு போராளிகளுக்கு ஆதரவாக தத்துவ நிலைப்பாட்டை உலகறிய தங்களது எழுத்துகள் மூலமாக பகிர்ந்துகொண்டனர். ழான் போல் சார்த்தர் ஒரு படி மேலாக சென்று இலக்கியத்திற்காக தனக்களித்த நோபல் பரிசையே போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிராகரித்து போராட்டத்தை உலகறியச் செய்தார். இதன் காரணமாக தேசிய விடுதலைப் படையின் இந்த அல்ஜீரியச் சுதந்திரப் போரானது உலகெங்கும் பெரிய ஆதரவைப் பெற்றது. அல்ஜீரியாவை அல்ஜீரியாவுக்கே விட்டுக் கொடுங்கள் என உலகம் முழுக்க அரசியல் தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.



இதில் ஆல்பர்ட் காம்யூ போராளிகளின் கொடூர சித்திரவதை குறித்து அறிந்து பிரெஞ்ச் அரசாங்கத்திடம் நீங்கள் சுதந்திரம் தராவிட்டாலும் பரவா யில்லை, மக்களை சுதந்திரமாகவாவது வாழவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், தேசிய விடுதலை முன்னணியினர் இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் “ஆல்பர்ட் காம்யூவை” முட்டாள் எனக் கூறினர். எங்களுக்கு நடுநிலையாளர்கள் தேவையில்லை. எங்களுக்கு விடுதலை வாங்கித் தர ஒத்துழைக்கும் ஆதரவாளர்கள் மட்டுமே தேவையென உறுதியாகக் கூறினர். அவர்கள் அப்படிக் கூறியதற்குக் காரணம் ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியர் என்றாலும் அவர் ஒரு ஐரோப்பிய வம்சாவளி யைச் சேர்ந்தவர் என்பதுதான். போர் துவங்கிய சில நாட்களிலேயே UDMA., PCA., கம்யூனிஸ்டுகள் என பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்த அல்ஜீரிய விடுதலைப் போராளிகள் ஒவ்வொருவராக தேசிய விடுதலை முன்னணியுடன் இணையத் தொடங்கினர்.



UDMAவின் தலைவரான அப்பாஸ் திலிழின் தலைமையிடமான கெய்ரோவிற்கு விமானத்தில் பறந்து சென்று தங்களது குழுவை இணைத்துக் கொள்ளும் தகவலைக் கூறினார். இவர்களுள் மெஸ்ஸாலி ஹெட்ஜ் என்பவரைத் தலைவராகக் கொண்ட MNA மட்டும் FLNன் வன்முறைப் பாதையைக் கடுமையாக எதிர்த்து வந்தது. பிரான்சிலிருந்த அல்ஜிரிய தொழிலாளர்கள் மத்தியில் MNA அமைப்புக்கு பெரும் ஆதரவு இருந்தது. அல்ஜீரியாவில் விழிகி தனது இந்த ஆதரவாளர்களுடன் போராடி வந்தது. FLNன் ராணுவப் பிரிவான ALN எனப்படும் கொரில்லாப் படை MNAன் இந்தச் சிறிய ஆதரவுச் குழுவை முழுமையாக பிரான்சிலேயே அழித்தொழித்தது. இதன் மூலம் அல்ஜீரியா முழுவதும் ஒரே போராளிக் குழுவாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது.



மேலும், பிரான்ஸ் நகர வீதிகளிலும், காபி கடைகளிலும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த போராளிகளும் திடீர் திடீரென மோதிக்கொண்டனர். இந்த மோதலில் மட்டும் ஏறக்குறைய 5000 போராளிகள் இறந்திருந்தனர். இதனிடையே பிரெஞ்ச் அரசாங்கம் 1955 ஜனவரியில் ஜாக்குஸ் ஸான்ஸ்டுலே (Jacues Sanstalle)வை கவர்னர் ஜெனரலாக அல்ஜீரியாவின் போராளிகளைச் சமாளிக்க அனுப்பிவைத்தது. அவர் முஸ்லிம் மக்களிடையே தன் மதிப்பைப் பெற்று அல்ஜீரியாவுக்கு ஆதரவாக சில திட்டங்களைத் தீட்டி பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு நன்மதிப்பை ஈட்ட பார்த்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதையும் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டார். பிரச்சினையின் தீவிரத்தை அதுவரை பிரான்ஸ் அரசு உணராமல் அசட்டையாகத்தான் இருந்தது.



ஆகஸ்ட் 1955ல் பிலிப் வில்லி (Philio Villee) நகரத்தில் FLN நடத்திய பெரும் தாக்குதல்கள் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு FLN ன் பலத்தையும் தீவிரத் தன்மையையும் உணர்த்தியது. அதுவரை கிராமங்களில் மட்டுமே போரிட்டு வந்த போராளிகள் முதன்முறையாக இச்சமயத்தில்தான் நகரத்தைக் குறிவைத்தனர். மேலும் அதற்கு முன்வரை பொதுச் சொத்துக்களுக்கு மட்டுமே சேதம் விளைவித்து வந்த போராளிகள் முதல் முறையாக கடுமையாக தாக்கியதில் 123 பேர் கொல்லப்பட்டனர். அதில் 79 பேர் பிரெஞ்ச் நாட்டவர். இறந்தவர்களில் வயதான பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.1956 ஆகஸ்டில் FLNல் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 34 பேர் அடங்கிய அதன் உயர்மட்டக் குழு ஒன்றாகக் கூடி FLNஐ இரண்டாகப் பிரித்தது. போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வென ஒரு குழுவும் வெளியுறவு நடவடிக்கைகளில் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றொரு குழுவுமாக பிரிக்கப்பட்டது.



இதனிடையே 1956 அக்டோ பரில் FLN ன் படைக்குழுத் தலைவர்களான அகமத் பென் பெல்லா, முகமது போதியர்ஃப், முகமத் சிதர் மற்றும் அஜித் அசயத், ஹோசின் ஆகியோர் மொராக்கன் DC-3 மைதானத்தில் சென்றபோது பிரெஞ்ச் விமானப்படை அதிகாரிகள் அத்துமீறி விமானத்தினுள் நுழைந்து போராட்ட தலைவர்களை கைது செய்தனர். அந்த கைது சம்பவத்திற்கு ஐ.நா.வின் அரபு நாடுகள் கூட்டணியினரிடமிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடமிருந்து பிரெஞ்சு அரசாங்கத்திற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில்தான் FLN தனது உச்சகட்டப் போரை நிகழ்த்த முடிவெடுத்தது. செப்டம்பர் 30, 1956 அன்று மூன்று பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.



இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன் அலுவலகமும் ஒன்று. 1957ல் இலையுதிர் காலம் வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்பு களையும் நிகழ்த்தி, FLN பிரெஞ்ச் அரசாங்கத்தை அலற வைத்தது. இதே காலகட்டங்களில் திலிழி மறைந்து தாக்கும் கொரில்லா யுத்த நடவடிக்கைகளில் மிகுந்த திறமையுடன் பயன்படுத்தியது. உடன் போராளிகளை காட்டிக் கொடுத்த சக அல்ஜீரியர்களையும் திலிழி போராளிகள் கொடூர முறையில் சித்திரவதை செய்தனர். இதில் கிராமத்தினர்கள், அரசாங்க ஊழியர்கள், அப்பாவி விவசாயிகள் சிலரும் திலிழின் இந்தக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் பலி வாங்கப்பட்டனர். காதுகளை அறுத்தல், மூக்குகளை அறுத்தல் போன்றவை அவர்களது நடவடிக்கைகளில் உட்சபட்ச கொடூரமாக பின்பற்றப்பட்டது.



FLN ன் உட்பிரிவுக்குழு ஒருபுறம் இதுபோன்ற பேரழிவு நடவடிக்கைகளில் இறங்க பிறக் குழுக்களானது ராஜதந்திர காரியங்களில் இறங்கி உலக நாடுகளின் கவனத்தை அல்ஜீரியாவின் பக்கம் திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு முக்கிய நிகழ்வாக 1957ல் அது அல்ஜீரியா முழுதும் மிகப் பெரிய வேலைநிறுத்தத்தை உருவாக்க திட்டமிட்டது. இப்படி ஒரு வேலை நிறுத்தம் மட்டும் நடந்து முழுவெற்றி பெற்றால் அது உலக நாடுகளுக்கு FLN மீது பொது மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும். அதனால், ஐ.நா.சபை பிரான்சிடம் அல்ஜீரியாவுக்கு திரும்பத் தரும்படி கட்டளை இடும். இதனால் தவிர்க்க முடியாமல் அல்ஜீரியாவை விடுதலை செய்ய நேர்ந்துவிடும் என முடிவெடுத்த பிரான்ஸ் அந்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட முடிவு செய்தது.



இதன் முதல் கட்டமாக தங்களது அல்ஜீரிய பிரதிநிதியான ஜெனரல் மாசுவுக்கு உடனடியாக கட்டளையிட்டது. எப்பாடுபட்டேனும் எந்த நடவடிக்கை எடுத்தாவது இவ்வேலை நிறுத்தத்தை தகர்க்க வேண்டும். ஜெனரல் மாசு உடனடியாக தன் வேட்டையை முதலில் கிராமங்களில் தொடங்கினார். ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாக புகுந்து திலிழி போராளிகளை கைது செய்தனர். அப்பாவி முஸ்லிம்கள் இரண்டு தரப்பிலும் சித்தரவதைக்கு உள்ளானார்கள். பல இடற்பாடுகளுக்கு இடையில் வேலை நிறுத்தம் நடந்தது. அல்ஜீரிய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கைகோர்த்தது போல் வேலை நிறுத்தத்தை முழுமையாக வெற்றியடையச் செய்தனர். தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன. ஜெனரல் மாசுவின் ராணுவ வீரர்கள் செய்த தந்திரங்கள் எதுவும் பலிக்கவில்லை.



ஐ.நா.சபையில் இந்த வேலை நிறுத்தம் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்தன. ஆனாலும், பிரெஞ்சு அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பலனாக சில மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்தன. டிக்காலே மீண்டும் பிரான்சின் அதிபராக பதவி யேற்றார். அல்ஜீரிய மக்களின் மன வேதனையை தான் முழுமையாக அறிந்துகொள்வதாக கூறினார். அல்ஜீரியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதன்மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண விரும்புவதாக அறைகூவல் விடுத்தார். போரினால், தொய்வுற்றிருந்த முஸ்லிம் மக்களுக்கு டிக்காலேவின் பேச்சு ஆதரவும் நம்பிக்கையும் தருவதாக இருந்தது. ஆனாலும், FLN இதற்கு உடன்படவில்லை. இதனூடே மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது. Force-K எனும் தலைப்பில் FLN போராளிகள் சிலர் பிரெஞ்ச் ராணுவத்தில் ஊடுருவல் நிகழ்த்தினர். ஆனால், ராணுவத்திற்கு எப்படியோ மூக்கு வியர்த்துவிட்டது.



வீரர்கள் மத்தியில் அடையாள பரிசோதனைகள் நடத்தப்பட்டு திடீர் திடீரென பல வீரர்கள் காணாமல் போயினர். திலிழின் இந்த Force-K நடவடிக்கையும் தோல்வியடைந்தது. இதனிடையே FLN ன் கூடுதலான வன்முறை நடவடிக்கைகளுக்கு மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என அல்ஜீரிய மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் FLN ஒரு முடிவுக்கு வந்தது.GPRA (Provisional Government of the Algerian Republic) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு அரபு நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் ஆதரவு அளித்தன. FLN ன் தலைவரான அப்பாஸ் தான் இதற்கும் தலைவராக அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த அமைப்பை இயக்கி வந்தார்.



இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதன்படி அல்ஜீரிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்றும், மக்கள் விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும் டிக்காலே உறுதி கூறினார். இதற்கு சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர்.அதன்படி 1962 ஜூலை 1 ல் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன் மக்கள்தொகையில் மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர். ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.



ஜூலை 5 மிகச்சரியாக பிரெஞ்ச் நாட்டினர் அல்ஜிரியாவுக்குள் நுழைந்து 132ஆவது ஆண்டில் அல்ஜீரியா முழு தேசிய விடுதலை நாடாக அறிவிக்கப்பட்டது. எண்ணற்ற பிரெஞ்ச் ஆதரவு முஸ்லிம்களும், யூதர்களும், இதர ஐரோப்பிய சமூகத்தினரும் அல்ஜீரியாவை விட்டு வெளியேறினர். அதனையும் மீறி அவர்கள் அங்கு இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதுதான் உண்மை. இந்த நீண்ட எட்டாண்டு விடுதலைப் போரில் ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் போரிலும் அதன் தொடர்பான நடவடிக்கைகளிலும் இறந்திருந்தனர். பிரெஞ்ச் தரப்பிலிருந்து 18000 பேர் பலியாகி இருந்ததாகவும் 65000 பேர் காயமுற்றதாகவும் அறிவிக்கப் பட்டனர்.



ஐரோப்பிய சமூகத்தில் 10,000 பேரும், பொது முஸ்லிம்கள் 70,000 பேரும் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டதாக இன்னொரு பட்டியல் கூறியது. விடுதலைப் பெற்ற நாளிலிருந்து FLN தலைவரான அகமது பென் பெலா மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்தார்.இன்னொரு FLN தலைவரான பென் கத்தா தலைமையில் மற்றொரு குழு ஆட்சிப் பதவிக்குப் போட்டியிட உடனடியாக பென் பெலாவால் அக்குழு அடக்கி ஒடுக்கப்பட்டது. செப்டம்பர் 20ல் முழுமையான தேர்தல் நடந்து அகமது பென் பெலா ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். தொடர்ந்து 109வது நாடாக அல்ஜீரியா அக்டோபர் 8, 1962ல் ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டது-.

நன்றி-புதினம்

Monday, November 23, 2009

வலி

அன்றைக்கு காலையில் 6 மணிக்கு மேல் தூக்கம் வரவில்லை. அவன் பதின்ம வயதை கடந்த பின் அவனது நெடுநாளைய விருப்பம் ஒன்று நிறைவேறப்போகின்ற மகிழ்ச்சியும் அந்த தருணத்தையும் நேற்றிலிருந்தே அவன் அனுவிக்க தொடங்கிவிட்டதன் காரணமாகவும் இருக்கலாம்.  வீட்டின் முன் பக்க கதவை திறந்து செய்திதாளினை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.  அன்றைய தினம் விடுமுறையாதலால் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை. அவனும் விடுமுறை நாட்களில்
தாமதாகத்தான் எழுவான்.  கடிகாரத்தை பார்த்தான் மணி 06.05 காட்டியது.  காலைக்கடன்களை முடித்துவிட்டு புத்தாடையை உடுத்திக்கொண்டு வீட்டினை விட்டு வெளியேரும் போழுது மணி 06.30.

அவன் வீட்டிற்க்குப் பின்புறம் கருவேலங்காடு அதன் தொடர்ச்சியாக சுடுகாடும், இடுகாடும்.  அதனூடே ஒற்றையடிப்பாதை.  பாதையின் இரு புறமும் கருவேலங்காடு.  கருவேல மரங்களின் கிளைகளை முகத்தில் படாதவாறு ஒரு கையால் ஒதுக்கியவாரு நடக்கத்தொடங்கினான்.   பள்ளிக்காலங்களில்
இதே பாதையில்தான் சைக்கிளில் பள்ளிக்கு செல்வான்.
இவன் சைக்கிளில் போகும் போது பாம்புகள் இவனைக் கடந்துபோகும்.
சில நேரங்களில் பிரேக் அடித்து நிறுத்துவான். சில நேரங்களில் அதன் மீது ஏறிப்போவதும் உண்டு.    அப்போது இல்லாத பயம் இப்போது இவனை தொற்றிகொண்டது.  ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்தான்.  சுடுகாடு என்பதால் ஒற்றையடிப்பாதையின் இரண்டு பக்கமும் மனித மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் இருக்கும்.  அதனைப் பார்த்த போது பயம் கூடிப்போனது.  பாம்புகளே மேல் என தோன்றியது.  நடையில் வேகம் கூடியது. 


ஒரு வழியாக சுடுகாட்டினைக் கடந்து நெல்வயலினை ஒட்டிய பிரதான சாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையை
அடைந்தான்.  இன்று அவன் பார்க்கும் அனைத்துமே அவன் பள்ளிக்குச்
செல்லும் போது பார்த்தவை தான் என்றாலும் எல்லாம்  மாறிவிட்டாதாக எண்ணிக்கொண்டான். மாறிவிட்டது என்பதைவிட மோசமாகிவிட்டது என்பதே உண்மையென அவனுக்கு தோன்றியது.  வேகமாக நடக்கத்தொடங்கினான்.  தென்னந்தோப்பைத் தாண்டி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்துவிட்டான்.  இப்பொழுது பசிக்கத்தொடங்கியது.  பையைத் துலாவினான்.  காசு எடுக்காமல் வந்தது பையில் கையை வைத்தவுடன் நினைவுக்கு வந்தது.   வீட்டிற்கு போனால் தான் சாப்பாடு.  சரி வந்த கடைமையை முடித்துவிட்டே செல்லலாம் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.


விடுமுறையானதால் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.  அதுவும் கரைவேட்டிகளின் நடமாட்டம்தான்.  எல்லோரும் இவனையே கவனிக்கிறார்களோ என்ற எண்ணம்.  புதுசட்டையும்,பேண்டும் தான் காரணமோ?  யோசித்துக்கொண்டே வந்ததால் பைக்கில் வந்த கரைவேட்டி இவனை உரசிக்கொண்டே சற்று தள்ளிப்போய் நின்றான்.  இவன் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் விழுந்தான்.  முகம், கை,கால் என்று நிறைய இடங்களில் சிராய்ப்புகளுடன் இரத்தமும் வழியத்தொடங்கியது.   மயக்கம் வருவது போலிருந்தது.  கும்பல் கூடிவிட்டது.  இருவர் கைகொடுத்து தூக்கி அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில் உட்காரவைத்தனர்.  கரைவேட்டி மேல் தவறில்லை என்றாலும் அவனை ஒரு சிலர் குறை சொல்லிக்கொண்டிருந்தனர்.  அவன் ஒன்றும் பேசவில்லை.  எந்த ஏறியா, அப்பா பெயர்,  எதுக்கு வந்த இப்படி சில விசாரணைகளுக்கு பிறகு  டீயும்,பன்னும் கிடைத்தது.  அதனை சாப்பிட்ட பிறது கொஞ்சம் நிதானம் வந்தது போல் உணர்ந்தான். 
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நடக்கத்தொடங்கினான். வலது காலின் மூட்டு வலிக்கத்தொடங்கியது.  


 காவல் நிலையத்தைக் கடக்கும் போது யாரோ அவனை அழைப்பது போல் இருந்தது.  திரும்பிப் பார்த்தான் யாரையும் காணவில்லை.  இந்த வலியோடு எப்படிச் சுடுகாட்டினை தாண்டி வீட்டுக்கு போவது என்ற கவலையும் சேர்ந்த போது வலி இன்னும் அதிகரிக்கத்தொடங்கியது.  ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டான்.  அங்கு இருபதுக்கும் மேலானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.  இவனும் வரிசையில் நின்று கொண்டான். 


அவனுக்கு இருந்த மகிழ்ச்சியில் வலி இருப்பதையே மறந்திருந்தான்.  பின்னால் இருந்தவர் காயங்களை பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்.  நடந்தவைகளை சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் புலம்பிக்கொண்டு செல்வதை கவனித்தான்.  போலிஸ்காரர் பேசாதே என்று சைகைக்காட்டினார்.   இவன் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.  வரிசை சிறிது சிறிதாக குறைந்து இவனுடைய முறை வந்தது.  அலுவலரிடம் அடையாள அட்டையைக் கொடுத்தான்.  மேஜையில் இருந்த புத்தகங்களில் அடையாள அட்டையினை வைத்துக்கொண்டு எதையோ தேடுவதில் முனைந்தார்.  இவன் கால்கள் தரையில் நிற்கவில்லை எங்கோ பறப்பது போல் உணர்ந்தான்.  அலுவலர் இவனைப் பார்த்தார்.  இவன் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கையை நீட்டினான். 

'தம்பி உங்க பேரு லிஸ்டுல இல்ல, அதனால நீங்க ஓட்டு போடமுடியாது'. காலின் வலி சுலிரென்று ஏறி மூளைக்குச் சென்றது.

Saturday, November 21, 2009

நினைவுகள்-2

துபையில் திருநங்கைகளை பார்க்கும் போது என்னுடன் படித்த மணி நினைவுக்கு வருவான்.  நல்ல கருமை நிறம். பேச்சிலும், நடையிலும் மற்றும் அவனுடைய எல்லா நடவடிக்கைகளிலும் பெண்மையின் நளினம் கலந்திருக்கும்.  பள்ளியின் ஆண்டுவிழாக்களென்றால் அவனுடைய கலை நிகழ்ச்சியுடந்தான் தொடங்கும்.  பரத நாட்டியத்தை சிறு வயதிலிருந்தே கற்று வருபவன்.  தமிழை தவிர்த்து இந்தியும் மலையாளமும் தெரியும். படிப்பிலும் படு சுட்டி.  பத்தாம் வகுப்பிற்க்கு பிறகு ஏற்கனவே நான் படித்த பள்ளியில் நான் வாங்கிய மதிப்பெண்ணை பார்த்த பிறகு எனக்கே அங்கு படிக்க வேண்டாம் என்று தோன்றியதால் பேச்சு வழக்கில் சாமியார் ஸ்கூல் என்று அழைக்கப்படும் திரு இருதயப் பள்ளியில் சேர்ந்தேன்.  முதல் நாள் அன்று மணியின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.  அவனுடைய நண்பர்கள் அவனை சீண்டிக்கொண்டே இருந்தார்கள்.  ஆனால் அவர்களிடம் அவன் தன் எதிப்பை காண்பிக்கவே இல்லை.  அவனுடைய இயல்புகளை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.  நான் அவனை கவனிப்பதை பார்த்துவிட்டு அவனாகவே எண்ணிடம் அவனுங்க அப்புடித்தான்! என்று கூறிவிட்டு கையை கொடுத்தான்.  பரஸ்பறம் அறிமுகத்துடன் முதல் நாள் முடிந்து போனது.  முதல் நாள் முடிவின் போது அவனுடைய இயல்புகளைப் பற்றி மற்றவர்களின் மூலமாக அறிந்து கொண்டேன். 

கண்களில் மையிட்டுக் கொள்வான்.  நன்றாக பாடுவான்.  கர்நாடக சங்கிதமும் கற்றுக்கொள்வதாக சொல்வான்.  ஆண்டு விழாவில் பரத நாட்டியம் ஆடப்போவதாக தெரிவித்தான்.  பெண்களை போல் உடை அணிந்து கொண்டு ஆடினான்.  எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்த அளவிற்கு மற்றவர்களிடம் எந்த விதமான கேள்விக்குறிகளும் இல்லை.  ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வருவதால் அவனை பற்றி அனைவருக்குமே புரிந்திருந்தது.  பழ்குவதற்கு இனிமையானவன்.

12ஆம் வகுப்பு இறுதியில் பள்ளி ஆண்டு விழாவில் நாடகம் போடுவதாக தீர்மாணித்தோம்.  இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அதை நடத்த முடிவுசெய்யப்பட்டது.  நாடகத்தில் நடிப்பவர்களும் கதா பாத்திரங்களும் முடிவுசெய்யப்பட்டு,  ஒரே பெண் கதாபாத்திரத்தை அவனே மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டான்.  எனக்கு கதையின் நாயகன் வேடம் கொடுக்கப்பட்டது.  5 பாடல்கள் மற்றும் தமிழ் அய்யாவின் தணிக்கையுடன் ஒரு காமெடி நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.  TR ரின் ஒரு பொன் மானை நான் காண என்ற டூயட் பாடலில் தொடங்கி முடிவில் நாயகன் நாயகியை காப்பாற்றிய உடன் பார்த்தேன் பார்த்தேன் என்ற பாடலுடன் முடியும். 

பள்ளிப்படிப்புக்கு பிறகு நாங்கு வருடங்களுக்கு அவனுடன் தொடர்பு இல்லை.  ஒரு நாள் திருச்சி சிங்காரத்தோப்பில் எதேச்சையாக அவனைக்  கண்டேன்.  அவனோடு மற்றொருவனும் இருந்தான் அவனை எனக்கு அறிமுகம் செய்துவிட்டு இவனும் என்னை மாதிரிதான் என்றான். தான் பி.இ படிப்பதாகவும் தெரிவித்தான்.  அவனுடன் பழகிய நாட்களில் என்றுமே அவன் பெண்மையை வெளிக்காட்டிகொள்ளவே விரும்பினான்.  அதற்காக அவன் என்றுமே தயங்கவில்லை.   துபையில் திருநங்கைகளை  பார்க்கும் போது மணியின் நினைவும்,  எப்போதோ படித்த ஒரு கவிதையின் ஒருவரியும் என்னை எப்போதும் கடந்து செல்லும் "சந்திப் பிழை போல நாங்கள் சந்ததிப் பிழைகள்'.

Friday, November 20, 2009

நிறவெறி


நான் படிக்கக்கூடிய விசயங்கள் எனக்கு பிடித்த விசயங்கள் என்று சில விசயங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடக உயிர்மெய் இதழில் வெளிவந்த இந்த கட்டுரையிலிருந்து சிறு பதிவினை இங்கு தருகிறேன்.

சொற்போராட்டமும் அரசியல்-சரியாக்கமும்



‘பாக்கி’ ஆங்கிலேய அன்றாட வழக்கில் இனவெறுப்பையும் ஆங்கிலேயரின் எரிச்சலையும் காண்பிக்கும் ஒரு இழிச் சொல்லாகவேதான் பாவிக்கப்படுகிறது. முதலில் பாகிஸ்தானியரைக் குவியமாகக் கொண்ட ஒரு சொல் நாளடைவில் பாகிஸ்தானியர், இந்தியர், வங்காளதேசியர்கள் இடையே இருக்கும் சமய, இன, மொழி வேறுபாடுகளைத் தட்டைப்படுத்தி, இச்சொல் அகல்விரிவாக்கப்பட்டு இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடியேறியவர்களைத் தூற்றும் வார்த்தையாக மாறிற்று. மேற்கோளாக உதைப்பந்தாட்ட மைதானங்களில் இனவெறிக் குண்டர்களால் பாடப்படும் ஒரு பாடலைத் தருகிறேன். A Man That Knew Too Much என்ற சினிமாவில் Dorris Day பாடிய que sera,seara பாட்டு மெட்டில் அமைக்கப்பட்டது. இப்பாடலை இன்னும் கொழும்பு, சென்னை, பங்களுரு இரவு விடுதிகளில் கேட்கலாம். இந்த வரிகளில் உட்பொதிந்திருக்கும் இனவாதத்தைச் சற்று மறந்துவிட்டு முடியுமானால் முணுமுணுத்துப் பாருங்கள்:




When I was just a little boy,

I asked my mother what will I be,

Will I be Pakistan, will I be India?,

And here’s what she said to me: Go

wash out your mouth son,

And go get your fathers gun,

Shoot some India Scum.



ஆங்கிலேயர்கள் மற்ற இனத்தவர்களுக்குச் சூட்டிய சில நாமங்கள்: ஆப்பிரிக்கர்களுக்கு நீக்ரோ (negro, coon), யூதர்களுக்கு Yid, அயர்லாந்துக்காரர்களுக்கு Paddy, வேல்ஸ்சில் (Wales) உள்ளவர்களுக்கு Taffy, பிரான்சு நாட்டவருக்கு frogs, ஜெர்மானியருக்கு krauts. இதே வரிசையில் பாக்கி என்ற பதமும் அடங்கும். பிரித்தானியர்களைச் சுருக்கி Brits என்று அழைப்பது போல் பாகிஸ்தானியரைப் ‘பாக்கி’ என்று கூப்பிடுவதில் என்ன தவறு என்று ஒரு வாதம் உண்டு. ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு. ‘பாக்கி’ இனவெறியையும் இஸ்லாம் மீதுள்ள அச்சத்தை உறுதிசெய்யும் அவதூறான, புண்படுத்தும் சினமான வார்த்தை. சீராட்டுப்பதமல்ல.



விளிம்புநிலை மக்கள் பற்றிய இனவாத இழிபெயர்கள் அடிக்கடிப் பிரபலங்களால் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு பழைய பிரதமர் மார்கிறெட் தட்சரின் மகள் கரல் தட்சர் ஒரு வெளிநாட்டுக் கறுப்பு டென்னிஸ் ஆட்டக்காரரை Golliwogg என்று அழைத்திருந்தார். Flosrence Kate Upton எழுதிய The Adventures of Two Dutch Dolls and a Golliwogg என்ற சிறுவர்களுக்கான புதினத்தில் வரும் ஒரு கறுப்புப் பொம்மைக் கதாபாத்திரம். 1895இல் வெளிவந்த நாவலின் பாத்திரத்தின் பெயர் வெள்ளையர் பொதுக்களத்தில் கறுப்பர்களுக்கெதிரான ஒரு வசைச் சொல்லாக மாறிற்று. பிற இனத்தவரைக் கேலி செய்வதைப் பிரிட்டிஷ் இராச குடும்பம் ஒரு கலைப்படிமமாக மாற்றியிருக்கிறது. இளவரசர் பிலிப்பு ஒரு சமவாய்ப்பு வைப்பாளர். ஒரு நைஜிரீய அரசியல் தலைவரின் நீண்ட அங்கியைப் பார்த்து நித்திரைக்குத் தயாராகிவிட்டீர்களா? என்று கேட்டார். ஒருமுறை சீனாவிற்குப் போனபோது அதிக நாட்கள் இங்குத் தங்கிவிட்டால் கண்கள் சீனர்களுடையதுபோல் குறுகிவிடாதா என்று கேட்டிருக்கிறார். பிறரைக் கேலிசெய்வது பிரித்தானிய அரச மரபணுவின் குணாம் சம்போல் தெரிகிறது. அவருடைய புத்திரன் இளவரசர் சார்ல்ஸ் போலோ (polo) விளையாடும் ஒரு இந்தியரை sooty என்று அழைத்திருக்கிறார். இது காலனிய நாட்களில் இந்தியர் நிறம் புகைக்கரிக்கு ஒத்திருப்பதை எள்ளலாக அடையாளப்படுத்தும் வார்த்தை. பேரன் வில்லியம்கூடச் சளைத்தவர் அல்ல. தன்னுடன் பணிபுரியும் சக இராணுவத்தினரை ‘பாக்கி’ என்று அழைத்திருக்கிறார்.


சச்சிதானந்தன் சுகிர்தராஜா
நன்றி:உயிர்மெய்

Tuesday, November 17, 2009

பிடித்தவர் பிடிக்காதவர்

என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்த சுந்தரராமன் சாருக்கு நன்றி.  நாம் எதிர்பார்க்காத ஒன்று எதிர்பார்க்காத தருணங்களில் நிறைவேறும் போது உண்டாகும் மண மகிழ்ச்சி அளவிடமுடியாதது. 

பிடித்தது பிடிக்காததுல சினிமா சேர்க்காம எழுதனும்னு எவ்வளவோ முயன்றும் அதுதான் அதிகபடியான இடத்தினை பிடித்துக்கொண்டது.

லிஸ்டுக்கு போவோம்.




பிடித்த இசை:  மனதுக்கு அமைதியை தரக்கூடிய எந்த ஒரு ஓசையும் இசைதான்.  பாடல்கள் வரிகள் இல்லாத இசைக்கோர்வைகள் ரொம்ப பிடிக்கும்.
பிடிக்காதது:    மேலே கூரியதின் எதிர்பதம்.

பிடித்த பாடல் காட்சி:  படத்தினுடைய பெயர் நினைவில் இல்லை. 
நான் விரும்பி பார்க்கும் பாடல். ஜெமினி கணேசனுடைய நடிப்பில் "அருகில் வந்தாள் அமைதி தந்தாள்"  என்று ஆரம்பிக்கும்.
பிடிக்காதது:  படத்திற்க்குள் சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்படும் பாடல்களும் காட்சிகளும்.

பிடித்த படங்கள்: எம்ஜிஆர்-மலைக்கள்ளன்: சிவாஜி-எத சொல்லுறது:
கமல்: குணா,மூன்றாம் பிறை,அன்பே சிவம்: ரஜினி-முள்ளும் மலரும்,ஜானி,தளபதி:
பிடிக்காதது:  அளவுக்கு அதிகமா ஹீரொவுக்கு பில்டப் கொடுத்து இப்போ வருகின்ற படங்கள்.

பிடித்த இசையமைப்பாளர் :  இளையாராஜாதான்
பிடிக்காதவர்:  சிரிகாந்த் தேவா(அப்படி ஒரு இனிமையான இசை இவருடையது)

பிடித்த பாடல் :  பாலைவனச்சோலைல- "மேகமே மேகமே" பாடல்-வாணி ஜெயராம் சூப்பரா பாடியிருப்பாங்க.
சிம்லா ஸ்பெஷல்- "உனக்கென்ன மேலே நின்றாய்"
பிடிக்காதது:  தற்பொழுது வரும் குத்து பாடல்கள்.

பிடித்த பாடகர் : சீர்காழி கோவிந்தராஜனும், SPB யும்.
பிடிக்காதவர்:  தமிழை கொலைசெய்யுறவங்க எல்லோருமே. யுவன் சங்கர் ராஜா அத ரொம்ப சூப்பரா, பாடுரேங்குற பேர்ல செஞ்சுக்கிட்டு இருக்காரு. இவரோட இசைல பாடுறவங்கள்ல ஒரு சிலர தவிற தமிழ கொலை செய்யுரவங்க தான் அதிகமா இருக்காங்க.

பிடித்த எழுத்தாளர்:  முதன்முதலில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது தினமணிதான். அதன் பிறகு பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்துல " இந்தியனே நீ இருக்க ஒரு இடம் தேடு கடவுளுக்கு வேண்டிய இடத்தை கடவுளே தேடிக்கொள்வார்" னு மு.மேத்தா அவர்களுடைய கவிதை என் மனதில்  பாதிப்ப ஏற்படுத்துச்சு.  அதன் பிறகு கல்லூரி நாட்களில் சுஜாதா,
சு.ரா, மனுச்சுயபுத்திரம், செல்லப்பா, ஆத்மானாம், அப்துல் ரஹீம்,  தோப்பில் முகமது மீரான்(சாய்வு நாற்காலி), காநாசு,ராமகிருச்சுனன்,கோணாங்கின்னு இந்த லிஸ்டு போய்கிட்டே இருக்கும்.
பிடிக்காதவர்:  யாருமே இல்ல ஏன்னா கல்கண்டையும் படிப்பேன் காலச்சுவடையும் படிப்பேன்.

ரொம்ப பிடித்த புத்தகம் :  சுஜாதாவோட விஞ்ஞான சிறுகதைகள்.  கன்னடத்து மொழிப்பெயற்ப்பு கதைகள் - மரணம் மற்றும்.
பிடிக்காதது: -----------------------------(NIL)

பிடித்த அரசியல் தலைவர்  :  காமராஜரும் தந்தை பெரியாரும்.  இவங்கள பத்தி படிக்க வாய்ப்பு கிடைத்ததினால்.   இவங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்க.
பிடிக்காதவர்:  ஈழப்பிரச்சிணைகளுக்கு பிறகு இப்போ இருக்கின்ற யாரையுமே பிடிக்கல.


பிடித்த விளையாட்டு: நொண்டி, கொக்கோ,கிரிகெட் மற்றும் கூடைப்பந்து.
பிடிக்காதது: டீவியில் கிரிகெட் பார்ப்பது(அமீரகத்திற்கு வந்த பிறகு)


இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும் (எங்கே? தொடர் பதிவுன்னாலே கருங்கல்லை கொண்டு அடிக்கிறாங்கஜி)
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்தத் தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்க இருப்பது:-

பதிவர் ராடு மாதவ்.
(simpleblabla.blogspot.com)

Saturday, November 14, 2009

சைடு பிசினஸ்

இது அமீரகத்தில் வசிப்பவர்களுக்கான பதிவுன்னு சொல்லமுடியாது.
உலகத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய(இதற்கான வாய்ப்புகள் இருப்பின்) மிகவும் சுலபமான எளிதில் துவங்கக்கூடிய, இழப்புகள் ஏற்பட்டாலும் தாங்கக்கூடிய இது போன்று இன்னும் ஏராளமான வசதிகளை உடைய தொழிலினைப் பற்றிய சிறிய அறிமுகம்.

இந்த தொழிலுக்குண்டான முதலீடு என்று பார்க்கும் போது  முக்கியமான மூன்று விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

1. இரண்டு அலைப்பேசிகள்

2. 100 திர்ஹம்ஸ்(வேறு நாடக இருந்தால் உங்கள் குறியீட்டினை சேர்க்கவும்)

3. மக்கள் நடமாடக்கூடிய முற்சந்தி அல்லது நாற்சந்தி

மூன்று முக்கியமான விசயம் என்று சொன்னேனல்லவா அது மூன்று அல்ல நான்கு.  நாங்காவது விசயம் மேலே கூரிய மூன்றையும் விட மிக முக்கியமானவை. அதை பற்றி பின்பு சொல்கிறேன்.

இதற்கு தேவை இரண்டு நாள் பயிற்சி மட்டுமே.  மிகவும் எளிமையானது.  ஒரு நாளில் இரண்டு மணித்துளிகள் மட்டும் பயிற்சி செய்தால் போதுமானது.  பயிற்சிக்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுதில்லை.  ஒரே இடத்தில் பத்துமுதல் இருபது வரையானவர்கள் பயிர்ச்சி அளிப்பார்கள். 

நீங்கள் செய்ய வேண்டியது, கண்காளிப்பாளர் போன்று அவர்களின் அருகினில் போவதும் வருவதுமாக இருக்க வேண்டும்.   அவர்களுக்கு உங்கள் மீது சந்தேகங்கள் வராதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.  முக்கியமாக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது வாடிக்கையாளறை அனுகவேண்டிய முறைமையினை.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது அலைபேசியினை இயக்கும் முறைமையினை.  வாடிக்கையாளரின் அலைபேசி எண்ணை மிகச்சரியான முறையில் பதிவுசெய்திருக்கின்றோமா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.  இதில் தவறிழைக்கும் பட்சத்தில் நீங்கள் இழப்பீட்டினை உங்கள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டி வரலாம்.  மிகவும் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.


இப்பொழுது நான்காவது முக்கியமான விசயம் என்னன்னா,
இதற்காக நீங்கள் சொல்லிப்பழக வேண்டிய சில சொல்லாடல்கள். உங்களுக்காக இங்கே முதல் முறையாக வெளியிடுகிறேன்.  முற்சந்தியிலோ அல்லது நாற்சந்தியிலோ நின்று பயிற்சி செய்யவும்.

 "DU ETISALAT BALANCE"

"DU ETISALAT BALANCE"

"DU ETISALAT BALANCE"  இதனை இடைவெளியில்லாமல் தொடர்ந்து சொல்லவும்.  ராகமாக சொல்லும் பொழுது பிசினஸ் நன்றாக நடப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. முயற்சி திருவினையாக்கும்.

இந்த வசதி அதாவது உங்கள் அலைப்பேசியில் இருந்து மற்றொறுவரின் அலைபேசிக்கு உங்களுடைய Balance சை Transfer  செய்வது. இதற்காக 50 fils(50 பைசா மாதிரி) மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் அமீரகத்தில் துபையில் அமலில் உள்ளது.  இந்த வசதி உங்கள் ஊரிலோ அல்லது நாட்டிலோ இருப்பின் முயற்சி செய்து பார்க்கலாம். தற்சமயம் துபையில் பங்களாதேஷ்காரர்களின் கைவண்ணத்தில் கொடிகட்டிப்பறக்கிறது. தினமும் 30 முதல் 50 திர்ஹம்ஸ் வரை சம்பாதிக்கிறார்கள்.  மிகக் குறைந்த முதலீடு.  நிறைவான சைடு பிசினஸ்.  வரும் நாட்களில் இதைவிட சிறப்பான சைடு பிசினஸ் தகவல்களோடு சந்திக்கிறேன்.


சைடு பிசினஸ்க்கு இணையான தமிழ் சொல்லினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, November 11, 2009

ஒரு கப் காபி கிடைக்குமா

இந்த பதிவ எழுதலாமா வேண்டாமான்னு ரொம்ப யொசிச்சேன். ஏன்னா பதிவுல எழுதப்போற மேட்டரு அப்புடி.  பொதுவா பாக்குறப்போ  சாதாரண மேட்டருதான்.  ஆனா எனக்கு ரொம்ப புதுசு.  இந்த விசயத்துல நான்(+1) கூட கிடையாது அப்புடின்னா(+0)ன்னு அர்த்தம்.  அனுபவம் இல்லாம ஒரு மேட்டர எழுதுனோம்னா அதுல காரம் கம்மியாதான் இருக்கும்.  உதாரணத்துக்கு ராமகிருஷ்னனோட துனையெழுத்துல இருந்த நெருக்கம் கதாவிலாசத்துல எனக்கு இல்ல. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.  எழுத்தாளர்ங்க எல்லாம் இந்தியாவ காசு இல்லாம சுத்தியிருக்கேன் சொல்லுறப்போ அது எப்புடின்னு நம்ம மூளை யோசிக்கும்.  அதுக்கு விடைய தெரிஞ்சுக்குறதிக்காக ஒரு சட்டை, முழுக்கால் பேண்டோட திருச்சிலேர்ந்து கிளம்பி தஞ்சாவூரு, திருவாரூரு, அப்புடியே அந்த பக்கம் இருக்குற எல்லா ஊருக்கும் இலக்கு இல்லாம சுத்தியிக்கேன். மேட்டருக்குள்ள போகாம எங்கயோ போய்ட்டிருக்கேன்.  இத அப்புறம பாப்போம். எந்த மேட்டர சொல்ல வந்தேனோ அந்த மேட்டருக்கு போவோம்.


கொஞசம் வருசத்துக்கு முன்னாடி சுஜாதா ஆ.விகடன்ல துபைய  பத்தி எழுதியிருந்தாரு. அதுதான் மேட்டருக்கு ஆரம்பப்புள்ளி, ஆமா இதுக்கு காரணம் சுஜாதா தான்.


 அதப்பத்தி தெரிஞ்சுக்குறதுக்காக அந்த இடத்துக்கு போறதுக்குண்டான வழிகள தேடிக்கிட்டே இருந்தேன்.   அதுக்குண்டான களப்பணியையும்  இங்க வந்தவுடனேயே ஆரம்பிச்சுட்டேன்.  எங்கையும் போகாம எதையுமே செய்யாம உக்கார்ந்த எடத்துலயே அதங்க ஆபீஸ்லயே என்னோட அசிஸ்டண்டு வழியா (நம்ம ஆளு அடிக்கடி அங்க போவாரு போல: உபயம் அவங்க மாமா அங்க மேனேஜரு) குறிப்புகள் கிடச்சிக்கிட்டு இருந்துச்சு.

ரொம்ப கூச்சமா இருந்துச்சு, உள்ளார போறப்ப 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்குங்குற' மாதிரி நம்ம மனசு . ஆயிரக்கணக்கான டெசிபல்ல,கலர் கலரான விளக்குகளின் வெளிச்சத்தில்
நம்ம கண்கள் இரண்டால் ஒடிக்கிட்டு இருந்துச்சு.  நம்ம பயகதான்னு மனசுல ஒரு தெம்பு.   அநியாயத்துக்கு மரியாதையும் அன்னியோன்யத்தையும் காட்டுனாய்ங்க.  கையோட கூப்பிட்டுகிட்டு போய் உட்காரவெச்சானுங்க.  நமக்கு எதுத்தாப்ல ஸ்டேஜ்.  கொஞ்ச நேரத்துல ஒரு அம்மனி என் கிட்ட வந்து என்ன சாப்புட்றீங்கன்னு கேட்டுச்சு.  நம்ம பாக்கெட்டுதான் காலியாச்சே, அப்போதைக்கு சமாலிக்குறதுக்காக பிரண்டுக்காக வெய்ட்டிங்னேன். அம்மனி அப்படியும் விடல, ஜுஸ் இருக்குன்னுச்சு (நிலைம தெரியாம).  சாரி மேடம்! வேண்டாம்னுட்டேன்.  ஒரு மாதிரி பார்த்துட்டு போயிடுச்சு. அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்க  ரொம்ப நேரம்லா தேவைப்படல, கொஞ்ச நேரத்துல எனக்கு பின்னாடி க்லாஸ் உடையுர சத்தம், ஒருத்தரோட சட்டைய புடிச்சு தர தரன்னு இழுத்துட்டுப்போய் வெளிய தள்ளுனாய்ங்க.  சாப்பிட்டுட்டு காசு தரலயாம். என்ன சாப்பிட்டாருன்னு எனக்கு தெரியாது.  இதெல்லாம் நம்ம அசிஸ்டண்டு சொல்லவேயில்லயே.  அப்பத்தாம் புரிஞ்சுது மாட்டிகிட்டோம்டான்னு. அக்காவேர போறப்பையும் வாறப்பையும் நம்மலயே பார்க்குற மாதிரி ஒரு ஃபீலிங்கு.  பாக்கெட்ட பார்த்தேன் 50 திர்ஹம்ஸ்,   படிச்சமா அதோட தூக்கி தூர எரிஞ்சமான்னு இல்லாம  இதெல்லாம் உனக்கு தேவையான்னு அது என்ன பார்த்து கேக்குது.  அந்த ஆள இழுத்துட்டு போனவைங்க எல்லாம் தமிழ் சினிமால வற்ர வில்லனோட அடியாளுங்க மாதிரி வாட்ட சாட்டமா இருந்தானுங்க.

அப்போதான்  தைரியமா அத கேட்டுறுவோம்னு முடிவு செஞ்சு.  அம்மனிய கூப்டேன்,  பக்கத்துல வந்துச்சு 

""ஒரு கப் காபி கிடைக்குமா"". 

Tuesday, November 10, 2009

துபை பஸ்ஸில் ஏறிய மானம்



இந்தியாவோட மானம் போன கதையும்  அத தடுப்பதற்கு நம்ம ஹீரோ செய்த காரியமும். இதுதான் மேட்டரு.  பிச்சகாசு 2 திர்ஹம்ஸ்க்காகன்னு சொல்ல முடியாது அதுவே ரொம்ப பெரிய விசயமா தெரிஞ்சதனாலதான் இத செஞ்சிருப்பாங்களோ தோனுது. 

சாயங்காலம் மணி 8 இருக்கும்.  இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு.  இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான்.  நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு.  டிரைவரு நமக்கு ரொம்ப டியரு.  ஓமான் காரரு.  ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...


ஒருவழியா டிக்கட்ட கொடுத்து முடிச்சுட்டு பஸ் கதவ
மூடிட்டு எதயோ தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு
 அப்போ அவரு கண்ணவுறுத்துற மாதிரு பச்ச கலர்ல
ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல.
அதே நெரத்துல அவரு கை வண்டியையும் ஸ்டார்ட் பண்ணுச்சு, ஆன் பண்ணுனத ஆஃப் பண்ணிட்டு அந்த 5 ருவாவ எடுத்துக்கிட்டு நம்மவூர்ல படத்துல SPECIAL லா விஜயகுமார் சிபரிசுல அப்பாய்ண்ட் பண்ணுன போலிஸ்காரராட்டம் கண்ணு சிவக்காம காத்து அடிக்காம இப்புடி எதுவுமெ இல்லாம ரொம்ப சாதாரணமா அப்புடியே அந்த நோட்டோடப் பக்கவாட்ல இரண்டு கையையும் புடிச்சுகிட்டு
 நடந்து வந்தாரு.


யாருக்கும் ஒன்னும் புரியல நான்கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு.
முதல்ல லைட்டா கேட்டறு,
கொஞம் குரல மாத்தி ஹர்டாவும் கேட்டுப்பாத்தாரு
நம்ம ஆளுங்கதான் எதையும் பிளான் பன்னி செய்ரவங்களாச்சே. 
ஒருத்தரும் உண்மைய ஒத்துக்கல.  ஒத்துக்கலனா இப்பவே இங்கயே இந்த நோட்ட கிளிச்சுடுவேன்னு இடிமாதிரி முழங்கி ரெடியானாரு அப்பொ STOP னு யாரோ கத்துனாங்க. யாரு நம்ம ஹீரோதான்.  நீயா அப்புடிங்கர மாதிரி அவருக்கு ஒரெ ஷாக்(மேஜர் சுந்தர்ராஜன் இருந்திருந்தார்னா,  இரண்டு திர்ஹம்ஸ்க்கு பதிலா ஒரு ரூபாவும், ஒரு திர்ஹம்ஸ்சும்னு அன்னைக்கு ஏமாத்துனானே ஒருத்தன்னு  இன்னைக்கு சொல்லுரதுக்கு நாகேஷ் இல்ல அத கேக்குறதுக்கு நம்ம மேஜர் சாரும் இல்ல) 
உடனே குஸ்குஸ்னு எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க.
நம்ம ஹீரோவுக்கு இதெல்லாம் காதுல விழல அவனுக்கு அந்த நோட்டும் இந்தியாவொட மானமும் தான் தெரிஞ்சது.

5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான்.  இத்தாங்க கத,  ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க.  அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த,  ஹீரோ இந்தியா வந்தப்போ திருட்டுப்போயிடுச்சுங்கறது வேற கதை.

Monday, November 09, 2009

தமிழ் வாழ்க

தமிழ்வழிக்கல்வியில் பன்னிரெண்டு வருடம் படித்துவிட்டு அதற்கு பிறகு தமிழை படிப்பதற்கு வாய்ப்புகள் இருந்த அளவிற்கு தமிழில் எழுதுவதற்குண்டான வாய்ப்புகள் கிடைக்காததினால் இந்த வலைப்பூவில் என்னால முடிஞ்ச அளவிற்க்கு "ழ,ள,ல" வையும் "ற,ர" வையும் "ண,ன" வையும் உயிர் எழுத்துக்களையும் எங்கு சேர்க்கவேண்டும் எங்கு சேர்க்கக்கூடாது என்று தெரியாமல் தமிழை கொலைசெய்துகொண்டுடிருக்கிறேன்.  'SHAME ON ME' .  தமிழை முதல் மொழியா படித்ததற்க்கு பிறகும் இவ்வளவு கடினமாக இருக்கும் பொழுது தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது தமிழையே படிக்காமல் இருப்பவர்களை நினைக்கும் போது.... ஒன்றும் சொலவதற்க்கில்லை.  இதனை ஒரு லட்சியமாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்த அளவிற்க்கு சிறப்பான முறையில் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்.
 கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பன் ஒருவனுக்கு தமிழ் தெரியாது.  தமிழ் படிக்கத்தெரியவில்லை என்கின்ற சிறு வருத்தம் கூடயில்லாமல் அவனால் இருக்கமுடிந்தது.  பிரஞ்சு மொழியினை முதல் மொழியா படித்திருந்தான். நுனி நாக்கு ஆங்கிலத்தில் மிகவும் அற்புதமாக உரையாற்றக்கூடியவன்.  தமிழை மற்றவர்களை படிக்கச்சொல்லி உணர்ந்துகொள்வான்.  அவன் தமிழ் கொலைசெய்வதை நாங்கள் கேட்டு மகிழ்ந்ததுண்டு.  இப்பொழுது நினைக்கும் பொழுது மறுபடியும் "SHAME ON ME".  தன் மொழி கொலைசெய்யப்படுவதை கைத்தட்டி ரசிக்கும் ஒரு முட்டாளாக நான் இருத்திருக்கின்றேன் என்று நினைக்கின்ற பொழுது,  வருந்துகிறேன்.


துபையில் ஓர் இரவு- வரும் நாட்களில்

Saturday, November 07, 2009

துபை - விபச்சாரத்தின் அறிமுகம்

இந்த பதிவுல துபைக்கு வந்தப்போ ஏற்பட்ட ஒரு அனுபவத்த சொல்லாலாம்னு இருக்கேன்.

துபை தேரா பகுதி நம்ம வசிக்குமிடம். பொதுவா தமிழ் மக்களும், தமிழ் ஆளுங்க கடைகளும், வாரக்கடைசில அனைவரும் கூடும் இடமா இருக்கும்.
வந்த புதுசுல வெளியில போறப்போ அறைல இருந்த அண்ணாச்சி பாத்து பத்திறமா போயிட்டுவாப்பான்னாரு.  புதுசுங்கறதால சொல்லுறாரு போல நானும் தலைய
ஆட்டிட்டு கிளம்பிட்டேன். தேரா பஜார் ஏரியால நேறய சந்து சந்தா இருக்கும், சந்தோட முடிவுல குட்டையா கட்டையா பங்களாதேஸ் காரைங்க நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போறப்பல்லாம்    நம்மல பாத்து ஏதோ ஒன்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க.  நான் அத பெருசா காதுல வாங்கிக்காம கடந்து போய்கிட்டேயிருப்பேன்.  ஒரு நாள் ஒருத்தன் நேரா வந்து கைய கொடுத்தான்.  நானும் கையகொடுத்தேன்.  "லடுக்கிச்சாயே" அப்போதான் அந்த வார்த்தைய முதல் முதல்ல கேட்டேன். ஒன்னும் புரியாம நமக்கு தெரிஞ்ச இந்தில "கியா" ன்னேன்.  "அச்சா லடுக்கிஹே 30 திர்ஹாம்" னான் அப்பவும் விளங்கல,  எதேச்சையா அந்த பக்கம் வந்த அறை அண்ணாச்சி இத பார்த்துட்டு ஓடிவந்து தலைல அடிச்சுக்காத குறயா அறைக்கு கூட்டிட்டுவந்துட்டார்.  வந்ததுக்கு பின்னாடி "இப்புடி இப்புடி அப்புடி அப்புடி னு" பெரிய விரிவுரையே நடத்துனார்.  அன்னைலேர்ந்து சந்துகள பார்த்தாலே பத்தடித் தள்ளி நடக்க ஆரம்பிச்சேன்.   அப்புடியும் சனி நம்மல விடுல இப்போ ஒரு பொம்பல வடிவுல.  துபைல நான் பார்த்தா வகைல கருப்பின பெண்கள் நல்லா பருமனா பார்க்கவே பயம இருப்பாங்க எனக்கு. அண்ணாச்சி அவங்கள பத்தியும் விரிவுரை நடத்தியிருந்தால கொஞ்சம் எச்சரிக்கையவே இருந்துட்டு இருந்தேன்.  ஒரு நாள் பதினோரு மணியிருக்கு கொஞ்சம் ஆள் அரவம் இல்லாத ஏரியா நடந்து வந்துகிட்டிருந்தேன்.  திடீர்னு பின்னாடி போன கை முன்னாடி வரல என்னாடான்னு பார்த்தா கைய ஒரு பொண்ணு புடிச்சுக்கிட்டிருந்துச்சி. நான் திரும்புனதும் " im sudani" அப்புடின்னுச்சு நானும் பதிலுக்கு விட்டுகொடுக்காம பின்னாடி நடக்க போற வில்லங்கம் தெரியாம ரொம்ப கம்பீரமா "im indian" னேன்.  இப்போ கை கொஞ்சம் இருகுச்சு வலிக்குர மாதிரி இல்ல நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுச்சு. பொண்ணுன்னு சொன்னேன்ல அத பொம்பலன்னு மாத்திக்கோங்க. மறுபடியும் "im sudani" ன்னு சொன்னா. நான் "so what?" னேன். "GIVE ME 40 DIRHAM, OTHERWISE I WILL CALL THE POLICE" இப்போ நல்லாவே புரிஞ்சு போச்சு அம்மணி யாருன்னு.  போலிஸ்னு சொன்னோன்னே பதட்டத்துல வியற்க்க ஆரம்பிச்சுடுச்சு.  போய்தொலாயுது காச எடுத்து கொடுத்துட்டேன்.  "shall we go? " ன்னு கேட்டா. அடங்கொய்யால கைய ஒதரிட்டு நடக்க ஆரம்பிச்சுடேன்.  ஒரு விசியத்துல அவள பாராட்டாம இருக்க முடியல கொடுத்தா அம்பது திர்ஹம்சுக்கு நாப்பது போக மீதி பத்த கொடுத்தா. என்ன ஒரு நேர்மை.

Wednesday, November 04, 2009

கோர்பகான் பூங்கா - சிறிய அறிமுகம்

அண்ணாச்சிங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி என்னோட முதல் பதிவா இது அமைய  காரணமா இருந்த அமீரக பதிவர்கள் சுற்றுலா பற்றிய பதிவுக்கு எதோ என்னாலான உதவியா இந்த பதிவு.


கோபர்கான் பீச்ச கடந்து cityக்கு உள்ள போனா ஒரு பூங்கா இருக்கு நல்ல அமைதியான இடம்.  இந்த பூங்கா கடற்கறைய ஒட்டி இருக்கு.  சுத்தம்னா அப்புடி ஒரு சுத்தம். குடும்பத்தோடு போறவங்களுக்கு ரொம்ப வசதியான இடம்.



 
குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியா சின்னதா பூங்காவோட மத்தியில மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில விளையாட்டு கூடங்கள் இருக்கு.






கோபர்கான் கடற்கரைக்கு போற வழியில ரொம்ப பழமையான பள்ளிவாசல் ஒன்னு இருக்கு.  அந்த இடத்துல கொஞ்சம் வாகன நெரிசல் இருக்கலாம்.





இந்த சுவரை தாண்டி கீழ இறங்கினோம்னா நண்டுங்க அப்புடியே சார சாரைய நிக்குங்க.  சில பேர் அத புடிக்குறேன்னு கல்லால அடிச்சு காலிப்பண்ணிகிட்டு இருந்தங்க.





கார் பார்க்கிங் பிரச்சனை இல்லாதது ரொம்ப வசதியா இருந்தது.





கோர்பகான்ல KFC தேடி அலைந்த கதை வரும் நாட்களில்...

படிக்குறப்போ ரொம்ப easyயா இருந்துச்சு இத எழுதுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு...