என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்த சுந்தரராமன் சாருக்கு நன்றி. நாம் எதிர்பார்க்காத ஒன்று எதிர்பார்க்காத தருணங்களில் நிறைவேறும் போது உண்டாகும் மண மகிழ்ச்சி அளவிடமுடியாதது.
பிடித்தது பிடிக்காததுல சினிமா சேர்க்காம எழுதனும்னு எவ்வளவோ முயன்றும் அதுதான் அதிகபடியான இடத்தினை பிடித்துக்கொண்டது.
லிஸ்டுக்கு போவோம்.
பிடித்த இசை: மனதுக்கு அமைதியை தரக்கூடிய எந்த ஒரு ஓசையும் இசைதான். பாடல்கள் வரிகள் இல்லாத இசைக்கோர்வைகள் ரொம்ப பிடிக்கும்.
பிடிக்காதது: மேலே கூரியதின் எதிர்பதம்.
பிடித்த பாடல் காட்சி: படத்தினுடைய பெயர் நினைவில் இல்லை.
நான் விரும்பி பார்க்கும் பாடல். ஜெமினி கணேசனுடைய நடிப்பில் "அருகில் வந்தாள் அமைதி தந்தாள்" என்று ஆரம்பிக்கும்.
பிடிக்காதது: படத்திற்க்குள் சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்படும் பாடல்களும் காட்சிகளும்.
பிடித்த படங்கள்: எம்ஜிஆர்-மலைக்கள்ளன்: சிவாஜி-எத சொல்லுறது:
கமல்: குணா,மூன்றாம் பிறை,அன்பே சிவம்: ரஜினி-முள்ளும் மலரும்,ஜானி,தளபதி:
பிடிக்காதது: அளவுக்கு அதிகமா ஹீரொவுக்கு பில்டப் கொடுத்து இப்போ வருகின்ற படங்கள்.
பிடித்த இசையமைப்பாளர் : இளையாராஜாதான்
பிடிக்காதவர்: சிரிகாந்த் தேவா(அப்படி ஒரு இனிமையான இசை இவருடையது)
பிடித்த பாடல் : பாலைவனச்சோலைல- "மேகமே மேகமே" பாடல்-வாணி ஜெயராம் சூப்பரா பாடியிருப்பாங்க.
சிம்லா ஸ்பெஷல்- "உனக்கென்ன மேலே நின்றாய்"
பிடிக்காதது: தற்பொழுது வரும் குத்து பாடல்கள்.
பிடித்த பாடகர் : சீர்காழி கோவிந்தராஜனும், SPB யும்.
பிடிக்காதவர்: தமிழை கொலைசெய்யுறவங்க எல்லோருமே. யுவன் சங்கர் ராஜா அத ரொம்ப சூப்பரா, பாடுரேங்குற பேர்ல செஞ்சுக்கிட்டு இருக்காரு. இவரோட இசைல பாடுறவங்கள்ல ஒரு சிலர தவிற தமிழ கொலை செய்யுரவங்க தான் அதிகமா இருக்காங்க.
பிடித்த எழுத்தாளர்: முதன்முதலில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது தினமணிதான். அதன் பிறகு பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்துல " இந்தியனே நீ இருக்க ஒரு இடம் தேடு கடவுளுக்கு வேண்டிய இடத்தை கடவுளே தேடிக்கொள்வார்" னு மு.மேத்தா அவர்களுடைய கவிதை என் மனதில் பாதிப்ப ஏற்படுத்துச்சு. அதன் பிறகு கல்லூரி நாட்களில் சுஜாதா,
சு.ரா, மனுச்சுயபுத்திரம், செல்லப்பா, ஆத்மானாம், அப்துல் ரஹீம், தோப்பில் முகமது மீரான்(சாய்வு நாற்காலி), காநாசு,ராமகிருச்சுனன்,கோணாங்கின்னு இந்த லிஸ்டு போய்கிட்டே இருக்கும்.
பிடிக்காதவர்: யாருமே இல்ல ஏன்னா கல்கண்டையும் படிப்பேன் காலச்சுவடையும் படிப்பேன்.
ரொம்ப பிடித்த புத்தகம் : சுஜாதாவோட விஞ்ஞான சிறுகதைகள். கன்னடத்து மொழிப்பெயற்ப்பு கதைகள் - மரணம் மற்றும்.
பிடிக்காதது: -----------------------------(NIL)
பிடித்த அரசியல் தலைவர் : காமராஜரும் தந்தை பெரியாரும். இவங்கள பத்தி படிக்க வாய்ப்பு கிடைத்ததினால். இவங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்க.
பிடிக்காதவர்: ஈழப்பிரச்சிணைகளுக்கு பிறகு இப்போ இருக்கின்ற யாரையுமே பிடிக்கல.
பிடித்த விளையாட்டு: நொண்டி, கொக்கோ,கிரிகெட் மற்றும் கூடைப்பந்து.
பிடிக்காதது: டீவியில் கிரிகெட் பார்ப்பது(அமீரகத்திற்கு வந்த பிறகு)
இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும் (எங்கே? தொடர் பதிவுன்னாலே கருங்கல்லை கொண்டு அடிக்கிறாங்கஜி)
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்தத் தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்க இருப்பது:-
பதிவர் ராடு மாதவ்.
(simpleblabla.blogspot.com)
1 comment:
இப்போ தான் பார்த்தேன் ....நல்ல பதிவு ...ஒளிவு / மறைவு இல்லாமல் இருக்கு
Post a Comment