Friday, November 20, 2009

நிறவெறி


நான் படிக்கக்கூடிய விசயங்கள் எனக்கு பிடித்த விசயங்கள் என்று சில விசயங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடக உயிர்மெய் இதழில் வெளிவந்த இந்த கட்டுரையிலிருந்து சிறு பதிவினை இங்கு தருகிறேன்.

சொற்போராட்டமும் அரசியல்-சரியாக்கமும்‘பாக்கி’ ஆங்கிலேய அன்றாட வழக்கில் இனவெறுப்பையும் ஆங்கிலேயரின் எரிச்சலையும் காண்பிக்கும் ஒரு இழிச் சொல்லாகவேதான் பாவிக்கப்படுகிறது. முதலில் பாகிஸ்தானியரைக் குவியமாகக் கொண்ட ஒரு சொல் நாளடைவில் பாகிஸ்தானியர், இந்தியர், வங்காளதேசியர்கள் இடையே இருக்கும் சமய, இன, மொழி வேறுபாடுகளைத் தட்டைப்படுத்தி, இச்சொல் அகல்விரிவாக்கப்பட்டு இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடியேறியவர்களைத் தூற்றும் வார்த்தையாக மாறிற்று. மேற்கோளாக உதைப்பந்தாட்ட மைதானங்களில் இனவெறிக் குண்டர்களால் பாடப்படும் ஒரு பாடலைத் தருகிறேன். A Man That Knew Too Much என்ற சினிமாவில் Dorris Day பாடிய que sera,seara பாட்டு மெட்டில் அமைக்கப்பட்டது. இப்பாடலை இன்னும் கொழும்பு, சென்னை, பங்களுரு இரவு விடுதிகளில் கேட்கலாம். இந்த வரிகளில் உட்பொதிந்திருக்கும் இனவாதத்தைச் சற்று மறந்துவிட்டு முடியுமானால் முணுமுணுத்துப் பாருங்கள்:
When I was just a little boy,

I asked my mother what will I be,

Will I be Pakistan, will I be India?,

And here’s what she said to me: Go

wash out your mouth son,

And go get your fathers gun,

Shoot some India Scum.ஆங்கிலேயர்கள் மற்ற இனத்தவர்களுக்குச் சூட்டிய சில நாமங்கள்: ஆப்பிரிக்கர்களுக்கு நீக்ரோ (negro, coon), யூதர்களுக்கு Yid, அயர்லாந்துக்காரர்களுக்கு Paddy, வேல்ஸ்சில் (Wales) உள்ளவர்களுக்கு Taffy, பிரான்சு நாட்டவருக்கு frogs, ஜெர்மானியருக்கு krauts. இதே வரிசையில் பாக்கி என்ற பதமும் அடங்கும். பிரித்தானியர்களைச் சுருக்கி Brits என்று அழைப்பது போல் பாகிஸ்தானியரைப் ‘பாக்கி’ என்று கூப்பிடுவதில் என்ன தவறு என்று ஒரு வாதம் உண்டு. ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு. ‘பாக்கி’ இனவெறியையும் இஸ்லாம் மீதுள்ள அச்சத்தை உறுதிசெய்யும் அவதூறான, புண்படுத்தும் சினமான வார்த்தை. சீராட்டுப்பதமல்ல.விளிம்புநிலை மக்கள் பற்றிய இனவாத இழிபெயர்கள் அடிக்கடிப் பிரபலங்களால் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு பழைய பிரதமர் மார்கிறெட் தட்சரின் மகள் கரல் தட்சர் ஒரு வெளிநாட்டுக் கறுப்பு டென்னிஸ் ஆட்டக்காரரை Golliwogg என்று அழைத்திருந்தார். Flosrence Kate Upton எழுதிய The Adventures of Two Dutch Dolls and a Golliwogg என்ற சிறுவர்களுக்கான புதினத்தில் வரும் ஒரு கறுப்புப் பொம்மைக் கதாபாத்திரம். 1895இல் வெளிவந்த நாவலின் பாத்திரத்தின் பெயர் வெள்ளையர் பொதுக்களத்தில் கறுப்பர்களுக்கெதிரான ஒரு வசைச் சொல்லாக மாறிற்று. பிற இனத்தவரைக் கேலி செய்வதைப் பிரிட்டிஷ் இராச குடும்பம் ஒரு கலைப்படிமமாக மாற்றியிருக்கிறது. இளவரசர் பிலிப்பு ஒரு சமவாய்ப்பு வைப்பாளர். ஒரு நைஜிரீய அரசியல் தலைவரின் நீண்ட அங்கியைப் பார்த்து நித்திரைக்குத் தயாராகிவிட்டீர்களா? என்று கேட்டார். ஒருமுறை சீனாவிற்குப் போனபோது அதிக நாட்கள் இங்குத் தங்கிவிட்டால் கண்கள் சீனர்களுடையதுபோல் குறுகிவிடாதா என்று கேட்டிருக்கிறார். பிறரைக் கேலிசெய்வது பிரித்தானிய அரச மரபணுவின் குணாம் சம்போல் தெரிகிறது. அவருடைய புத்திரன் இளவரசர் சார்ல்ஸ் போலோ (polo) விளையாடும் ஒரு இந்தியரை sooty என்று அழைத்திருக்கிறார். இது காலனிய நாட்களில் இந்தியர் நிறம் புகைக்கரிக்கு ஒத்திருப்பதை எள்ளலாக அடையாளப்படுத்தும் வார்த்தை. பேரன் வில்லியம்கூடச் சளைத்தவர் அல்ல. தன்னுடன் பணிபுரியும் சக இராணுவத்தினரை ‘பாக்கி’ என்று அழைத்திருக்கிறார்.


சச்சிதானந்தன் சுகிர்தராஜா
நன்றி:உயிர்மெய்

No comments:

Post a Comment