தமிழ்வழிக்கல்வியில் பன்னிரெண்டு வருடம் படித்துவிட்டு அதற்கு பிறகு தமிழை படிப்பதற்கு வாய்ப்புகள் இருந்த அளவிற்கு தமிழில் எழுதுவதற்குண்டான வாய்ப்புகள் கிடைக்காததினால் இந்த வலைப்பூவில் என்னால முடிஞ்ச அளவிற்க்கு "ழ,ள,ல" வையும் "ற,ர" வையும் "ண,ன" வையும் உயிர் எழுத்துக்களையும் எங்கு சேர்க்கவேண்டும் எங்கு சேர்க்கக்கூடாது என்று தெரியாமல் தமிழை கொலைசெய்துகொண்டுடிருக்கிறேன். 'SHAME ON ME' . தமிழை முதல் மொழியா படித்ததற்க்கு பிறகும் இவ்வளவு கடினமாக இருக்கும் பொழுது தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது தமிழையே படிக்காமல் இருப்பவர்களை நினைக்கும் போது.... ஒன்றும் சொலவதற்க்கில்லை. இதனை ஒரு லட்சியமாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்த அளவிற்க்கு சிறப்பான முறையில் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்.
கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பன் ஒருவனுக்கு தமிழ் தெரியாது. தமிழ் படிக்கத்தெரியவில்லை என்கின்ற சிறு வருத்தம் கூடயில்லாமல் அவனால் இருக்கமுடிந்தது. பிரஞ்சு மொழியினை முதல் மொழியா படித்திருந்தான். நுனி நாக்கு ஆங்கிலத்தில் மிகவும் அற்புதமாக உரையாற்றக்கூடியவன். தமிழை மற்றவர்களை படிக்கச்சொல்லி உணர்ந்துகொள்வான். அவன் தமிழ் கொலைசெய்வதை நாங்கள் கேட்டு மகிழ்ந்ததுண்டு. இப்பொழுது நினைக்கும் பொழுது மறுபடியும் "SHAME ON ME". தன் மொழி கொலைசெய்யப்படுவதை கைத்தட்டி ரசிக்கும் ஒரு முட்டாளாக நான் இருத்திருக்கின்றேன் என்று நினைக்கின்ற பொழுது, வருந்துகிறேன்.
துபையில் ஓர் இரவு- வரும் நாட்களில்
1 comment:
நானும் துபாய்தான்! நீங்க எங்க இருக்கீங்க?
ஏன் அமீரக பதிவர் குழுமத்தில் இல்லை?
உங்க போன் நம்பர் குடுங்க... கால் பண்ணுறேன்!
Contact : rkarasans@gmail.com
Post a Comment