முதல் நாள்:
"டேய் மச்சான் அங்க பார்டா அவ உண்ணையவே பார்க்குறா!"
"இல்லடா மச்சான் நா யாரையும் பாக்குறதா இல்ல, இவளுங்க சாவுகாசமே வேண்டாம்டா. பார்த்த வரைக்கும் போதும், பட்டதும் போதும்."
ஏண்டா மச்சான்? என்னாடா ஆச்சு? நீயா சொல்லுற! "
" உன்னைய பார்த்து அவ ஃபிரண்டு கிட்ட எதோ சொல்லுறாடா. டேய் ஒரே ஒரு தடவ அவள பாரேன்? "
"டேய் நிப்பாட்டுறயா இல்ல நான் கிளம்பட்டுமா? "
ஒருத்தன் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்காதே!
இரண்டாம் நாள்:
"டேய் மச்சான் நேத்து பாத்தோம்ல அவ இன்னைக்கும் நிக்குறாடா!"
"நெசமாவா? "
"நான் தான் சொன்னேன்ல அவ ஒன்னையத்தாண்டா பாக்குறான்னு. நீ தான் கேக்கவேயில்ல."
"இல்லடா மச்சான் பழச நா இன்னும் மறக்கல. அந்த வலி இன்னும் அப்புடியே இருக்கு. அத நினச்சுத்தான் நான் பாக்கலன்னு சொன்னேன்.
வேற ஒன்னும் இல்ல."
"மச்சான் எனக்கு என்னமோ இவ உனக்கு சூட் ஆவான்னு தோனுது."
சரிடா ஒரு வாரம் பாப்போம், அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம்.
ஏழாம் நாள்:
"என்னடா ஒரே சோகமா இருக்க"
"இல்லடா நாளு நாளா அவள பாக்கமுடியல"
"இந்த நாளு நாளா உண்ணையவும் பாக்கமுடியல,
போன் பண்ணுனா ஆஃப்னு சொல்லுச்சு எங்க போயிருந்த? "
"அத அப்புறம் சொல்லுறேன். இதுக்கெல்லாம் கவலபடாதடா,
அவ போனா போறா, உனக்குன்னு ஒருத்தி இந்த உலகத்துல
பிறக்காமலா போயிருப்பா!"
முதல் நாள்:
"அங்க பாருடி அவன் ஒண்ணையவே பார்த்துட்டு இருக்கான். "
"நான் பாக்கமாட்டேன்."
" அவன் எண்ணையதான் பாக்குறான்னு எப்புடி சொல்லுற"
இரண்டாம் நாள்:
"அவன் கூட இன்னொருத்தனும் நிக்குறான் இரண்டு பேறும் நம்மள பத்தித்தான் பேசிக்கிட்டு இருப்பானுங்க. இப்போ நாம அவனுங்கள பார்த்தோம்னா உடனே அவனுங்களுக்குள்ள பேசிக்குவானுங்க பாரு. \
"ஆமாண்டி பேசிக்குறானுங்க. "
"நான் தான் அப்பவே சொன்னேன்ல. "
"போய் பேசுவோமா. "
"ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி"
முப்பத்திரெண்டாம் நாள்:
"Hai Im sudha she is my friend vathini"
"Hai im suresh"
"எங்க உங்க பிரண்ட காணோம்"
"அவன் இப்போதான் கிளம்பிப்போனான்."
"போன் பண்ணுணா வந்துருவான்"
"வேண்டாம் உங்ககிட்டதான் பேசனும்"
"என்கிட்டயா? அவனுக்கு போன் பண்ணா வந்துடுவான்."
"அவருகிட்ட பேச என்னயிருக்கு, உங்க கிட்ட தானே பேசனும்."
"இல்ல அவனும் இருந்த நல்லயிருக்குமேன்னு நினச்சேன்"
"அவருட்ட அப்புறமா சொல்லிக்களாம்."
"இவ உங்கள லவ் பண்ணுறா, நீங்க என்ன சொல்லுறீங்க?"
இதுக்கு சுரேஷ் என்ன சொல்லியிருப்பாரு புரிஞ்சுக்க ஏழாம் நாள மறுபடியும் படிங்க.(புரியாதவங்களுக்கு மட்டும்)
"செம்மொழிப் பைந்தமிழ் மன்றத்" தின் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை.
simpleblabla.blogspot.com
இந்த நீதிக் கதைலேர்ந்து கிடைக்குற நீதி என்னன்னு (இதையும் மதிச்சு நேரம் ஒதுக்கி படிச்சதுக்காக) தெரிஞ்சா நீங்களே விளங்கிக்குடுங்க.
No comments:
Post a Comment