டேய் இன்னைக்கு எப்புடி ஓகே வா? முடிச்சுடலாமா!
ரொம்ப கஷ்டமா இருக்குது என்ன சொல்லுற.
இன்னைக்கு ஓகே தான். ஒரு நாள்ல முடியும்கிற.
ஆரம்பிச்சுடுவோம். முடியுறது நம்ம கைல இல்ல.
அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம், மாட்டிகிட்டோம்னா
கம்பி எண்ணவேண்டி இருக்கும் நியாபகத்துல வச்சுக்கோ.
இப்போ மணி என்னா ஆகுது?
பத்து மணியாக பத்து நிமிசம் இருக்குடா.
இந்த ஊர் காரணுங்க அவ்வளோ சீக்கிரத்துல தூங்கமாட்டாங்களே. இப்போ அங்க சன நடமாட்டமும் அதிகமா இருக்கும். ஒரு பண்ணிரெண்டு மணி வாக்குல கிளம்புவோம் என்ன சரியா.
டேய் நாளைக்கு நான் வேளைக்கு போகனும்டா, 12 மணிங்குற. ஒனக்கு லீவு, நீ தூங்குவ 12 மணி வரைக்கும். நமக்கு தாங்காதுப்பா.
இப்படியே தள்ளிப்போட்டுகிட்டே போனா பின்னாடி ரொம்ப கஷ்டம்டா. இத என்ன நாம மட்டும் தனியாவா செய்யப்போறோம், அவனுங்களும் தான வர்றேன்னு சொல்லியிருக்கானுங்க. இது ஒரு கூட்டு முயற்ச்சிடா. நீ சும்மா வந்து வேடிக்கைய மட்டும் பாரு. மத்தத நான் பாத்துக்குறேன்.
உன்னோட வேலை போலிசு வந்தா சிக்னல் குடுக்குறதுதான். போறதுக்கு முன்னாடி சாமனெல்லாம் எடுத்து தயாரா வை. நா ஒரு தம்ம போட்டுட்டு வரேன்.
சாமான எடுத்துவச்சுட்டியா. எதையும் மறந்துடாத.
ஆமா பெரிய இந்த சாமா. ஆக்சா பிளேடும், ஒரு கத்தியும் இதுக்கு ஏண்டா இவ்வளோ பில்டப்பு.
எல்லா விசியத்துலயும் ப்ரொபசனலா இருக்கனும்ல அதுக்குத்தான்.
ஓகே கிளம்பலாம். மணி பதினொன்னு ஆச்சு, இப்போ கிளம்புனோம்னா அங்க போய் சேர்றதுக்கு சரியா இருக்கும்.
கதவ பூட்டிட்டியா? நல்லா பூட்டுடா, நாம போன நேரம் பார்த்து உள்ள புகுந்து லவட்டிட போறானுங்க.
இருக்குறது இரண்டு கட்டிலும், கந்தலா ரெண்டு டிரஸும் அத எடுக்குற தைரியம் எவனுக்கும் வராது, கவலப்படாத.
இரவு 11.45:
எங்கடா அவனுங்களும் வருவானுங்கன்னு சொன்ன. ஒருத்தனையும் காணோம். மணி 12 ஆகப்போகுது. இதுக்குத்தான் முன்னாடியே போன் பன்னி கன்பார்ம் பண்ணிக்கனுங்குறது.
அவனுங்க வரமாட்டானுங்க.
ஏண்டா?
அவனுங்க வரோம்னு சொல்லவேயில்லயே. அப்புறம் எப்புடி வருவானுங்க.
டேய் என்னா விளயாடுறயா? நான் கிளம்புறேன்.
டேய் போய்டாதடா இன்னைக்கு ஒரு நாள் தான். இன்னைக்கு இத முடிச்சுட்டோம்னா வாழ்நாள் முழுக்க பிரச்சனையே இல்லடா. ப்ளீஸ்.
சரி செஞ்சுத்தொலையுறன்.
இன்னும் ஒரு ஒரு மணிநேரம் போச்சுன்னா இந்த ஏரியாவுல ஆள் நடமாட்டம் குறஞ்சிடும் அப்புறமா நாம வேலைய ஆரம்பிப்போம்.
என்ன சரியா?
பதில் சொல்லுடா!!
ஓகே சரி.
தொடரும்...
No comments:
Post a Comment