Thursday, August 12, 2010

அறியாத ஒன்று

யாரிடம் கேட்பது.....
எப்பொழுதும் கேள்விகளோடே
இந்த வாழ்க்கை நகருமென்றால்
என்ன பதில் சொல்வது
மனசாட்சிக்கு....

மாறாத எண்ணங்களுடன்
மீறாத காதலுடன்
மீளாத நினைவுடன்
இடையிடையே வந்துபோகும்
இல்லை என்னைக் கடந்துபோகும்
நான் அறியாப் பிம்பங்களை
நிறுத்திப்பார்க்கின்றேன்....
மறைந்து போன பிரியங்களோ இல்லை
மறைத்து வைக்கப்பட்ட எதன் பிம்பங்களோ
மீட்க முனைகின்ற ஒரு தருணத்தில்
வெற்றிடமாகிப்போன இந்த உள்ளொளியினில்
மெல்ல உட்புக முனையும் அதன் முன்முயற்ச்சியினை
நான் யாதென்று விளிப்பேன்.....

8 comments:

அருண் பிரசாத் said...

சூப்பர் தல, ஓவர் பீலிங்ஸோ!

Jeyamaran said...

தல அட்டகாசம்

நசரேயன் said...

//நான் யாதென்று விளிப்பேன்//

தெரியலையே

செல்வா said...

//மறைந்து போன பிரியங்களோ இல்லை
மறைத்து வைக்கப்பட்ட எதன் பிம்பங்களோ///
எனக்குத் தெரியாதுங்க ..!!
ஆனா கவிதை நல்லாத்தான் இருக்கு ..

Unknown said...

எப்போதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அறிய இயலாமல்தான் போகிறது ...

சௌந்தர் said...

மாறாத எண்ணங்களுடன்
மீறாத காதலுடன்
மீளாத நினைவுடன்
இடையிடையே வந்துபோகும்///

இந்த வரிகள் ஹம் சூப்பர்...

தேவன் மாயம் said...

அட்டகாசம் நண்பரே!

விஜய் said...

//மாறாத எண்ணங்களுடன்
மீறாத காதலுடன்
மீளாத நினைவுடன்
இடையிடையே வந்துபோகும்
இல்லை என்னைக் கடந்துபோகும்
நான் அறியாப் பிம்பங்களை
நிறுத்திப்பார்க்கின்றேன்.//

புதிது புதிதாய் எண்ணங்களை உருவாக்கி எழுத்தாய் உருக்கி வடித்தி இருக்கிறீர்கள் ஜீவன்...ம்ம்ம். கலக்குங்க...
வாழ்த்துக்கள் விஜய் இடமிருந்து

Post a Comment