உருகும் வெண்பனிமலையின்
குளுமையை உணர்ந்தேன்
நீ அருகில் இருக்கும் தருணங்களில்.
இங்கு நீ என்று எழுதியதால்
அவனோ அவளோ அதுவோ
நானோ நீயோ என்னோ உன்னோ
என்று வைத்துக்கொள்கிறேன் இல்லை
வைத்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சிக் குலாவும் ஊரித்திரியும்
குழந்தையெனக்கொள்கிறேன் அதன் திரிதல்களை.
விடிகாலைப்பொழுதை நீ வெள்ளனவே என்னும் போது
உருமாறிய வார்த்தையைப் போல்
உன் விருப்பங்களும் திரிதல்களும்
நகரும் பூகோளத்தினை யொத்தெ நகர்கின்றது.
வெற்றுக்கால்களுடன் உன்னுடன் நான் பயணிக்கும்
தருணங்களில் என் மீது மோதிச்செல்லும் காற்றாய்
கிளரிச்செல்லும் மண்வெளியாய்
பட்டுத்தெரிக்கும் வாகன ஒளியாய்
விண்ணில் மின்னும் மின்னல் பூச்சிகளாய்
வான்வெளியின் மங்கிப்போன விண்மீன்களாய்
என்று எங்கும் நிறைந்த உன் இருப்பை என்னுள்
உணர்த்துகிறாய் உன் திரிதலின் மூலம்.
தொடர்பற்ற வார்த்தைகளைக் கொண்டு
அதனை தொடர்புருத்தவே விளைகிறேன்
நீண்டுவிட்ட இந்த வார்த்தைகளைப்போல்
முடிவிலிகளின் சூத்திரத்தைத்
தொடர்பற்ற சமன்பாடுகளால்
அதன் திரிதல்களைக்கொண்டு
சமன் செய்ய முனைகிறேன்
என் திரிதல்களோடு.
6 comments:
அருமை நண்பரே...
ரசித்து எழுதி இருப்பது தெரிகிறது. :-)
//தொடர்பற்ற வார்த்தைகளைக் கொண்டு
அதனை தொடர்புருத்தவே விளைகிறேன்
//
ஆஹா .. இது நாளா இருக்கு ..
ஆனா முழுசா நீங்க முதல்ல இருந்து எனக்கு கொஞ்சம் புரியலை அண்ணா ..!!
சூப்பர் ஜீவன்பென்னி.
அருமையான ரசிக்க தக்க வரிகள் :-)
உங்கள் பதிவுகளுக்கு ஒட்டு போட முடியவில்லை... கொஞ்சம் பாருங்கள்
//
வெற்றுக்கால்களுடன் உன்னுடன் நான் பயணிக்கும்
தருணங்களில் என் மீது மோதிச்செல்லும் காற்றாய்
கிளரிச்செல்லும் மண்வெளியாய்
பட்டுத்தெரிக்கும் வாகன ஒளியாய்
விண்ணில் மின்னும் மின்னல் பூச்சிகளாய்
வான்வெளியின் மங்கிப்போன விண்மீன்களாய்
என்று எங்கும் நிறைந்த உன் இருப்பை என்னுள்
உணர்த்துகிறாய் உன் திரிதலின் மூலம்.//
அட அட ...ஜீவன் நிஜமா நீங்க கலக்கிட்டு வரீங்க...
நிஜமா பயங்கர வளர்ச்சி தெரியுது ..
வாழ்த்துக்கள் ஜீவன்
இன்னும் எழுதுங்க நாங்க காத்து இருக்கோம், உங்களை வாழ்த்துவதற்கு
Post a Comment