Saturday, August 28, 2010

கண்ணாமூச்சியாட்டம்

உள் விழும் கிரகணங்களை
ஊடுருவிச் சென்று எப்போதும்
தேடிக்கொண்டிருக்கும் புழுதிகளை
அது மின்னி மறையும் தருணங்களில்
நான் நினைத்துக்கொள்வேன்
விடை கிடைத்து விட்டதென்று...

மின்சாரமற்ற ஒரு நாளின்
பகல் பொழுதொன்றில்
இருண்டு கிடக்கும் என் அறையின்...
அசைந்தாடும் ஒற்றை மஞ்சள் நிற விளக்கொளி
 பரப்பிக்கிடந்த புத்தகங்களின் பின் பக்கத்தினை
வெளிச்சமிட்டு காட்டிக்கொண்டிருந்தது...

நின்றுபோன கடிகாரத்தில்
முன்பின் என முண்டியடித்துகொண்டிருந்த நொடிமுள்ளின்
நகர்வுகளில் எதையோ தேடிக்கொண்டிருந்தது
அசைவற்ற மஞ்சள் நிறப் பல்லியொன்று.

தேடித்திரியும் வண்டுகள் போல்
பொதுவான ஒன்றான ஒன்றை
நேற்று இன்று நாளை என்று...
அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
அதன் செயல்களில் ஒளிந்துகொண்டு
கண்களை திறந்து கொண்டு விளையாடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்...

15 comments:

செல்வா said...

நான்தான் முதல் ..படிச்சிட்டு வரேன் ..

Prathap Kumar S. said...

யோவ்...எப்படிய்யா... இது... நல்லாருக்கு ராசா...:))
வார்த்தைகளைப்போட்டு விளையாண்டுருக்க....

dheva said...

கண்ணாமூச்சி ஆட்டத்தை வார்த்தைகளை வைத்து விளையாடி இருக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்...!

மெச்சூரிட்டியும் ஒரு வித தெளிவும் தெரிகிறது படைப்பில்..தம்பி...Keep going...!

செல்வா said...

///மின்சாரமற்ற ஒரு நாளின்
பகல் பொழுதொன்றில்
இருண்டு கிடக்கும் என் அறையின்...
அசைந்தாடும் ஒற்றை மஞ்சள் நிற விளக்கொளி
பரப்பிக்கிடந்த புத்தகங்களின் பின் பக்கத்தினை
வெளிச்சமிட்டு காட்டிக்கொண்டிருந்தது...///
ஹய்யோ .. இந்த வரிகள் அருமையா இருக்கு அண்ணா ..

///கண்களை திறந்து கொண்டு விளையாடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்//

என்னமோ சொல்ல வரீங்க ஆனா என்ன அப்படின்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு ..

Mohan said...

கவிதை நல்லா இருக்குங்க!

சௌந்தர் said...

செல்வா நீ சொல்லிட்டே நான் சொல்ல வில்லை (:

அது ஒரு கனாக் காலம் said...

//கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்//arumaiyaana iruthi varigal

என்னது நானு யாரா? said...

///கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்...///

எல்லாம் அந்த பிரபஞ்ச இயக்கவியலில் சிக்கி இருக்கிறோம் இதில் பல்லி என்ன நாம் என்ன? அருமை நண்பரே!

VELU.G said...

நல்லாயிருக்குங்க வரிகள்

Chitra said...

தேடித்திரியும் வண்டுகள் போல்
பொதுவான ஒன்றான ஒன்றை
நேற்று இன்று நாளை என்று...
அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
அதன் செயல்களில் ஒளிந்துகொண்டு
கண்களை திறந்து கொண்டு விளையாடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்...


.....wow! Superb!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தேடித்திரியும் வண்டுகள் போல்
பொதுவான ஒன்றான ஒன்றை
நேற்று இன்று நாளை என்று...
அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
அதன் செயல்களில் ஒளிந்துகொண்டு
கண்களை திறந்து கொண்டு விளையாடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்..

//

நல்லாயிருக்கு நண்பரே..

MR.BOO said...

அருமையான கண்ணாமூச்சி ஆட்டம் கவிதையில் சமீர்.
நான் ஏற்கனவே சொன்னது போல்.. உங்களது கவிதைகளின் வடிவம் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கின்றது. கலக்குங்கள். வாழ்க வளர்க... வாழ்த்துக்கள்.

ஜெயந்தி said...

உங்கள் தேடலும் நல்லாயிருக்கு.

விஜய் said...

ஜீவன்

பின்னி இருக்கீங்க போங்க...இதை எப்படி miss பண்ணிநேன்ன்னு தெரியல ...

//உள் விழும் கிரகணங்களை
ஊடுருவிச் சென்று எப்போதும்
தேடிக்கொண்டிருக்கும் புழுதிகளை
அது மின்னி மறையும் தருணங்களில்
நான் நினைத்துக்கொள்வேன்
விடை கிடைத்து விட்டதென்று...//

நல்ல கவிதை நயம் ஜீவன்...ம்ம்ம்ம்...கலக்குங்க கலக்குங்க

சிங்கக்குட்டி said...

வாவ் சூப்பர் ஜீவன்பென்னி :-)
அருமையான வரிகள்.

Post a Comment