Sunday, September 26, 2010

முதல் முதல்

முதல் சிரிப்பில்
அதிர்ந்துதான் போனது
பின் வந்த சென்ற ஒவ்வொருச் சிரிப்பிலும்
அதிர்ந்து அதிர்ந்து அதிர்வு நிரந்தரமான ஒன்றானது....

முதல் பார்வையில்
சிறகுகள் முளைத்தது
பின் வந்த சென்ற ஒவ்வொருப் பார்வையிலும்
அறியாத் திசை நோக்கிப் பறக்கச் செய்தது.......

முதல் ஸ்பரிசத்தில்
அருகாமையின் அருமையை
சிலிர்த்து அடங்கும் மயிற்கால்கள்
நிதமும் உணரவைத்தது........


முதல் மோதலில்
அடங்கித்தான் போனது....
பின் வந்த தொடர் மோதல்களில்
முன் வரும் கோபம் பின்வராமல் போனது..........


முதல் கோணலில்
கனவுக்கோட்டையின் பாதாளத்தில்
காவு வாங்கிய கைதியின்
உயிர் பிரியும் வலியிருந்தது........


முதல் முத்தம்
அறியும் தருணம்  வரவில்லை
கொடுக்கவோ இல்லை தடுக்கவோ
யார் கையும் உதடும் துடிக்கவில்லை......

முதல் முதல் என்று நீண்டு கொண்டிருந்த ஒவ்வொன்றும்
கற்பனையின் உச்சத்தில் தூர நின்று ரசிக்கும்
சராசரிப் பார்வையாளனின் ஒரு மணிநேர
பேருந்துப் பயணத்தில் முடிந்து போனது.........

6 comments:

செல்வா said...

///முதல் முத்தம்
அறியும் தருணம் வரவில்லை
கொடுக்கவோ இல்லை தடுக்கவோ
யார் கையும் உதடும் துடிக்கவில்லை......//

இது கலக்கல் அண்ணா ,, கொடுக்கவும் இல்லை ,
தடுக்கவும் இல்லை .. ஹய்யோ ..
எப்படித்தான் யோசிக்கிறீங்களோ ..!!

Jeyamaran said...

*/முதல் மோதலில்
அடங்கித்தான் போனது....
பின் வந்த தொடர் மோதல்களில்
முன் வரும் கோபம் பின்வராமல் போனது........../*

அண்ணா very very nice poem...............

dheva said...

கவிதைக்கு கமெண்ட் போடுறது இருக்கட்டும் தம்பி....

நீ ஏன் அடிக்கடி எழுதமாட்டேங்கிற...இவ்வளவு எழுத்து திறமையை வச்சுகிட்டு....


Lovely thoughs pa.. superb!

ஜீவன்பென்னி said...

நன்றி அருண்,செல்வா மற்றும் ஜெயமாறன்.

தேவாண்ணே.... நேரமில்லண்ணே(உங்களுக்கு தெரியாததா இனிமே தொடர்ந்து எழுத முயற்சி செய்யுறேன், பாவம் இந்த பதிவுலகம்)

எஸ்.கே said...

அனைத்து கவிதைகளும் மிக நன்றாக உள்ளன வாழ்த்துக்கள்! நன்றிகள்!

சௌந்தர் said...

முதல் சிரிப்பில்
அதிர்ந்துதான் போனது
பின் வந்த சென்ற ஒவ்வொருச் சிரிப்பிலும்
அதிர்ந்து அதிர்ந்து அதிர்வு நிரந்தரமான ஒன்றானது..///

இந்த வரிகள் அழகா அருமையா இருக்கு

Post a Comment