Thursday, October 07, 2010

நிறைவு

இவர் என் வாழ்க்கையின் உள்ளே வருவார் என்று நான் நினைத்துப்பார்த்தது இல்லை.  அவரும் நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்.  ஆனால் அது நடந்துவிட்டது.  அதனில் தானே வாழ்க்கையின் சுவரசியமும் அடங்கியிருக்கின்றது. அவருடைய பதிவுகளை படிக்காமலேயே தலைப்பைப் பார்த்த நொடியில் ஓட்டுப்போட்டுவிட்டேன்.  அந்த பதிவு அறை வீடு.  வோட் செய்த அடுத்த அரைமணி நேரத்தில் சாட் விண்டோவில் ஒரு அழைப்பு.  அனுமதித்துவிட்டு காத்திருந்தேன்.

அடுத்த நொடியில் வணக்கம் என்ற வாசகத்துடன், வாக்களித்ததிற்கு நன்றி என்ற தகவல் வந்தது.  நான் எந்தப்பதிவுக்கு என்றேன்.  என் பதிவுக்கு தற்பொழுதுதானே வாக்களித்தீர்கள் என்றார். மீண்டும் எந்த பதிவு என்றேன். அறைவீடு என்றார்.  நான் அப்படியா உங்கள் பதிவின் தொடுப்பை அனுப்புங்கள் என்றேன்.  பார்த்துவிட்டு உங்கள் பதிவின் தலைப்பையும், புகைப்படத்தையும்  பார்த்தேன் பிடித்திருந்தது.  அதனால் வாக்களித்தேன், ஆனால் இன்னும் படிக்கவில்லை என்றேன்.   பிறகு பரஸ்பர அறிமுகத்தில் இருவரும் ஒரே ஊர் என்று தெரிந்தது.  நான் என் தொலைப்பேசி எண்ணை அவரிடம் அளித்துவிட்டு அவருடைய எண்ணைக்கேட்டேன்.  அவர் தரவில்லை.

அடுத்த நாள் காலைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.  தன் பதிவின் முகவரியை கொடுத்து புதிய பதிவு என்றார்.  நேற்று அவருக்கு வாக்களித்த பதிவையே இன்னும் படிக்கவில்லை,  அதற்குள் மற்றொன்றா.  ஆஹா வசமா மாட்டிக்கிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.  நான் அவரிடம் இதற்கு முந்தைய பதிவையே நான் இன்னும் படிக்கவில்லையே, எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே கருத்துறையும், வாக்கும் அளிப்பேன் என்றேன்.


அலுவலக நேரத்தில் பதிவுகளை படிக்க இயலாத சமயங்களில் வாக்களித்துவிட்டு தமிழிஸின் என்னுடைய புரொபைலில் சென்று அன்று வாக்களித்த பதிவுகளை படிப்பது என் வழக்கமாக இருந்தது அப்போது.
தொடர்ந்து அவரும் அவருடையப் பதிவுக்கான தொடுப்புகளை அனுப்பிக்கொண்டே இருந்தார்.  நான் அப்பொழுது பதிவுகள் எழுதுவதை நிருத்தி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. (உருப்படியான ஒன்றையும் எழுதியதில்லை அதனால்)  பதிவுலகில் சில பல அரசியல்களும் அரங்கேறிய நேரம் அது. ஒரு சலிப்பு என்று கூட அதனை சொல்லலாம்.

ஒரு வழியாக அறைவீடு பதிவினைப் படித்தேன்.  அதில் நான் இருந்தேன்.  என் பாட்டியும் தாத்தாவும் இருந்தார்கள்.  அருமையான பதிவு அது.  எங்கள் அறைவீடு என் கண்முன் வந்துச்சென்றது.  ஒரு ஈர்ப்பு உண்டாது, அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வந்தது.  அவருடைய எழுத்துக்கள் ஒரு தேடலை நோக்கிச்செல்வதாக தோன்றியது.  அவருடைய பழைய பதிவுகளையும் படிக்கத்தொடங்கினேன்.

முதலில் முழுவதுமாக விளங்கவில்லை.  அவரது பதிவின் பயணம் நம்மை எங்கே கொண்டு போய் நிருத்தப் போகின்றது,  அதன் மையம் எங்கே என்றக் கேள்வி எங்கே என்ற தேடலின் உந்துதல் உண்டானது.  அடுத்த பதிவில் மரணத்திற்குப்பிறகான வாழ்க்கை என்ற கருவைக்கொண்டு வடித்திருந்தார்.  அந்தப்பதிவைப் போடுவதற்கு ஒரு நாள் முன், தொலைப்பேசி எண்ணைக் கேட்டார் முதல் முறையாக பேசினோம்.   அந்தப் பதிவின் கேள்வியைக்கேட்டார்.  நானும் அதற்கான பதிலை தந்துவிட்டேன்.  அடுத்த நாள் அந்தக்கேள்வியே ஒரு பதிவாக நீண்டிருந்தது.  பின்பு அந்தக் கேள்வி என்னிடம் மட்டும் கேட்கப்படவில்லை என்று தெரிந்துகொண்டேன்.

ஒன்று மட்டும் உறுதி, தன் இலக்கு என்னவென்பதை சரியாகத்தெரிந்தவனுக்கு எதுவுமே ஒரு பிரச்சனையில்லை.  இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவருக்குப் பொருந்தும்.  தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.  தன் புரிதலை உடைக்கும் முகமாய யாராகிலும் வரமாட்டார்களா என காத்துக்கொண்டிருப்பவர். இது புகழ்ச்சியாகத்தெரிந்தால் அது உங்கள் தவறு.


 தொடர்ச்சியான உரையாடல்களில் புரிதல்களின் அடையாளமாய்    எங்கள் உரையாடல்களின் தோரணை மாறிய ஒரு பொழுதில் திட்டமிடாமல் ஒரு சந்திப்பு அவர் வீட்டினில் நடைப்பெற்றது.  அங்கிருந்து தொடங்கிய அண்ணன் என்கின்ற புதிய உறவு ஒரு நாளின் அனேக நேரங்களை அவருடன் பேசுவதிலேயே கழிந்துவிடச்செய்கின்றது.


இதற்கு பதிவுலகத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பதிவுலகத்திற்குள் வந்த நாட்களில் ஒரு சில பதிவர்களுக்கிடையேயான உரையாடல்களையும், பதிவுகளைப் படிக்கும் பொழுதும் அவர்களுக்கிடையேயான ஒரு அன்யோன்யத்தை உணர முடியும். இது எப்படி என்று வியந்து போவேன். அதை என் வாழ்விலும் சாத்தியமாக்கி உணர வைத்த பதிவுலகம் என்ற களத்திற்கு நன்றிகள்.

  அண்ணனுக்கு இன்றைக்கு பிறந்த நாளாம்,  ஒரு வாரமாக எனக்கு நியாபக அஞ்சல்கள் வந்துகொண்டேயிருக்கின்றது.  பிறந்த நாளை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  எப்பொழுதும் அதையும் வருடத்தின் ஒரு நாளாகவே என்னளவில் எடுத்துக்கொள்வேன்.  என் பிறந்த தினத்தையே மறந்துவிடும் அளவிற்கே என் ஆர்வம் இருக்கும். ஆனால் இன்று ஓர் மாற்றம்.

தேவா அண்ணா, பிறந்தநாள் வாழ்த்துகள்.

11 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா.....

உங்கள் நட்பு இனிதே தொடரட்டும்... :-))

சௌந்தர் said...

உங்கள் நட்பு தொடரட்டும் இந்த தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா

Kousalya Raj said...

//இது எப்படி என்று வியந்து போவேன்.//

உங்களுக்கு ஒரு நல்ல நட்பை கொடுத்த பதிவுலகத்தை எண்ணி வியக்கிறேன். உங்கள் இருவரின் நட்பு இறுதி வரை உறுதியாக இருக்க என் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்.....!!

தன் பிறந்தநாள் பற்றி அவர் சொல்லாமல் நண்பர்களை பேச வைத்ததில் இருந்தே தெரிகிறது.....அவர் பல நல்ல இதயங்களை சம்பாதித்து இருக்கிறார் என்று....!!

வாழ்த்துகிறேன்....!!

கருடன் said...

உங்களுக்கு ஒரு நல்ல நட்பை கொடுத்த பதிவுலகத்தை எண்ணி வியக்கிறேன். உங்கள் இருவரின் நட்பு இறுதி வரை உறுதியாக இருக்க என் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்.!!

தன் பிறந்தநாள் பற்றி அவர் சொல்லாமல் நண்பர்களை பேச வைத்ததில் இருந்தே தெரிகிறது.....அவர் பல நல்ல இதயங்களை சம்பாதித்து இருக்கிறார் என்று.!!

வாழ்த்துகிறேன்.!!

அருண் பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா

செல்வா said...

உண்மைலேயே படிக்கரக்கு அருமையா இருக்கு அண்ணா .,
உங்களது மன்னிக்கணும் நமது நட்பு மறுபடியும் மன்னிக்கணும் உறவு ( அண்ணன் ,தம்பி ) தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிகொள்கிறேன் ..!!

jothi said...

//தன் இலக்கு என்னவென்பதை சரியாகத்தெரிந்தவனுக்கு எதுவுமே ஒரு பிரச்சனையில்லை. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவருக்குப் பொருந்தும். தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர். தன் புரிதலை உடைக்கும் முகமாய யாராகிலும் வரமாட்டார்களா என காத்துக்கொண்டிருப்பவர்//

உண்மை நண்பரே .
உங்கள் நட்பை பற்றி பெருமைபடுகிறேன் . வாழ்த்துக்கள் .
i wish dheva.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா

Jeyamaran said...

*/உருப்படியான ஒன்றையும் எழுதியதில்லை அதனால் Comedy/*

தேவா அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......

சிங்கக்குட்டி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா :-).

பகிர்வுக்கு நன்றி ஜீவன்பொன்னி.

தேவன் மாயம் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே!

Post a Comment