தடம் மாறி உன் வழி நடக்கையில்...
நான் தொடரும் நிழலின் மோதல்களில்...
உன் ஸ்பரிசத்தினை உணருகின்றேன்...
நீ இல்லாமலே.....!
நிறைந்திருக்கும் துயரங்களின் போது...
உன் அறைவனப்பின் மிதப்பினை...
கடந்து செல்லும் மிகுந்து போன எச்சங்களில்...
முகர்ந்து முகர்ந்து கலைத்துப்போகிறேன்...
உன் சுவாசம் இல்லாமல்....!
உன் நினைவுகளுக்கு சிறகுகள் வரைந்து...
கட்டற்ற காலப்பெட்டகத்தின் திக்கற்ற வெளியினில்...
பறக்கவிட நினைக்கையில்...
விடுமுன்னே உதிரத்தொடங்கி விடுகிறதே சிறகுகள்...!
சுமை கூடித்தான் போகிறது....!
இறக்கி வைக்க மனமின்றி
தூக்கிக்கொண்டே திரிகின்றேன்...
மீண்டும்....
தடம் மாறி உன் வழிநடக்கையில்...
நான் தொடரும் நிழலின் மோதல்களில்
ஸ்பரிசத்தினை உணருகின்றேன்
நீ இல்லாமலே.....
14 comments:
ஹா..ஹா..ஹா... ஐய்யோ ஐய்யோ!!
//தடம் மாறி உன் வழி நடக்கையில்...//
அதான் தடம் மாறிட்ட தெரியுது இல்லை. அப்போ உன் வழிக்கு வா
//நான் தொடரும் நிழலின் மோதல்களில்...//
நிஜத்த தொடரு மச்சி
//உன் ஸ்பரிசத்தினை உணருகின்றேன்...
நீ இல்லாமலே.....!//
பாக்கெட்ல பைசா இல்லாம இப்படி இருக்க மாதிரி உணர்ந்தா எப்படி இருக்கும்.. :))
//நிறைந்திருக்கும் துயரங்களின் போது...//
பாட்ல் காலியானா நமக்குள்ள துயரம் நிறையரது சகஜம் தான்.
//உன் அறைவனப்பின் மிதப்பினை...//
மப்பு ஏறி போச்சி.. குட்
//கடந்து செல்லும் மிகுந்து போன எச்சங்களில்... //
துபாய் முனிசிபாலிட்டி வண்டி போன அப்புறம் கூடதான் எச்சம் மிச்சமிருக்கு
//முகர்ந்து முகர்ந்து கலைத்துப்போகிறேன்...
உன் சுவாசம் இல்லாமல்....!//
ஆக்ஸிஜன் சொல்லவா மச்சி!!
//உன் நினைவுகளுக்கு சிறகுகள் வரைந்து...
கட்டற்ற காலப்பெட்டகத்தின் திக்கற்ற வெளியினில்...
பறக்கவிட நினைக்கையில்...
விடுமுன்னே உதிரத்தொடங்கி விடுகிறதே சிறகுகள்...!
//
சிறகை நல்ல அழுத்தி வரை மச்சி
அருமையான கவிதை!
ஆனா இது காதல் கவிதையா? இல்ல நட்பு கவிதையா?
U have got an excellent poetic talent Sameer, I got very much impressed reading ur kavithai.
Wishes.. Keep it up!
காதலி இல்லாது இருக்கும்போது அவள் விட்டுச் சென்ற மிச்சங்களில்(உணர்வுகளில்) காதலை உணர்ந்து அவளின் இருப்புக்காக ஏங்குவது போல் எழுதியுள்ள இக்கவிதை அருமை!
//உன் நினைவுகளுக்கு சிறகுகள் வரைந்து...
கட்டற்ற காலப்பெட்டகத்தின் திக்கற்ற வெளியினில்...
பறக்கவிட நினைக்கையில்...
விடுமுன்னே உதிரத்தொடங்கி விடுகிறதே சிறகுகள்...!//
செம! செம! :))
@டெர்ரர் மாப்ஸ்
ஹா..ஹா..ஹா... ஐய்யோ ஐய்யோ!!
@எஸ்.கே
உணர்வுக் கவிதை... பிரிச்சுப்பார்த்தெல்லாம் எழுதலீங்க..
@சுபா
வாங்க சுபத்ரா உங்க கவிதைகள் எல்லாம் நல்லாருக்குங்க. முதல் வருகைக்கு நன்றிங்க... வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
உணர்வுக் கவிதை...அருமையான கவிதை!
//உன் நினைவுகளுக்கு சிறகுகள் வரைந்து...
கட்டற்ற காலப்பெட்டகத்தின் திக்கற்ற வெளியினில்...
பறக்கவிட நினைக்கையில்...
விடுமுன்னே உதிரத்தொடங்கி விடுகிறதே சிறகுகள்...!/
இரண்டு தடவ படிச்சேன் அண்ணா , இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு .
ஹாய் சமீர், கவிதை சூப்பர்-ஆ எழுதுறீங்களே..
ஆரம்பமே அசத்திடீங்க.. :-)
//தடம் மாறி உன் வழி நடக்கையில்...
நான் தொடரும் நிழலின் மோதல்களில்...
உன் ஸ்பரிசத்தினை உணருகின்றேன்...
நீ இல்லாமலே.....! //
ரொம்ப அருமையான ஃபீல் இது.. ரொம்ப பிடிச்சது.. தேங்க்ஸ்.
தொடர்ந்து கலக்குங்க..
பாடலும் ரொம்ப டச்சிங்-ஆ இருக்கு.. நன்றி. :-)
thanks Ananthi....
Post a Comment