Monday, May 16, 2011

பொதிகள்

அலை மோதும் நினைவுகளில் தேங்கிக்கிடக்கின்றதோ
உனக்கான என் கவிதாஞ்சலிகள்...
மிச்சமிருக்கும் அத்தனையும் வெற்றுத் தாள்களாய் போய்விடட்டும்..
ஒற்றைபுள்ளிகளில் சேதிகள் கேட்கின்றேன்...
அவிழும் முடிச்சுகளில் நிறைந்திருக்கின்றது காதல்...

படிநிலைகளை சில நேரங்களில் ஒரே பாய்ச்சலில் கடக்கின்றேன்..
மெத்தென விழும் அடிகளில் தெரிக்கின்றன பஞ்சு பொதிகள்..
நாசியில் ஏறும் துகள்களில் வாசம் தேடுகின்றேன்...
சில, காதோரம் வந்து கவனமாய் திரும்பிச்செல்கின்றது...

மின்மினிகள் நிலைகொள்ளாமல் கண்சிமிட்டுகின்றன
அங்கும் காதல் கதைகள் கதைக்கப்படுமோ!
ஒன்று மட்டும் ஓடித்திரிகின்றதே கண்சிமிட்டாமல்
அது ஆணா? பெண்ணா?
ஆண் என்றால் சுலபம், பெண் என்றால்...... விடை காணாக் கேள்விதான்.

5 comments:

பனித்துளி சங்கர் said...

அழகான ரசனைகள் கவிதையின் வார்த்தைகளில் . பகிர்ந்தமைக்கு நன்றி

Chitra said...

Welcome back! அருமையாக எழுதி இருக்கீங்க... அடிக்கடி எழுதுங்க.

குணசேகரன்... said...

இத்தனை நாளா உங்க பதிவு அறிமுகம் ஆகல. இன்றுதான் பார்த்தேன்.படித்தேன்.ரசிக்க வைக்கிறது .

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Surya Prakash said...

அருமையான கவிதை

Post a Comment