Monday, November 21, 2011

பிதற்றல்கள்

தூக்கம் வரா இரவுகளை
சிறு துக்கத்திற்குப் பின் தந்தவள் நீ.

எதிர்மறை அர்த்தங்களில்
சிந்திச் சிதறும் எண்ணங்கள்
முற்றுப் புள்ளிக்குப் பின் ஒற்றை வார்த்தையில்
மொத்தமாய் சேரக்கூடும்.

மூடிவைத்த காற்றுப்பைக்குள்
அழுத்தி அழுத்தி நிறப்பப்பட்ட
என் சுவாசத்தினுள்
எதை கலந்திருப்பேன் என்று
தெரிந்து கொள்ளாமலா போய்விடுவாய்...!

தடுமாறாமல் தள்ளாடுகிறேன்
காதல் கொண்டு நிமிர்ந்திடவே
உன் கரம் பற்றி நடந்திடவே
நீளம் பாரமல் எழுதிச் செல்லவே
என் விரல்கள் துடிக்கிறதே.

கண்மூடும் தருணங்களில் நிழலாடிய பல நூறு பிம்பங்களில்
எல்லாம் கரைந்து நீ மட்டும் தனித்து நிற்கும் விந்தை ஏனடி!!!
நீதான் எனக்கானவளோ!!!!
நிதமும் எண்ணி மகிழ்கிறேன்...............!

ஒரு வித தடுமாறிய மன நிலையில் எழுதிய ஒன்று. இருக்கட்டும் என்று ஏற்றி வைக்கின்றேன்.





5 comments:

சுபத்ரா said...

சமீர்... இது நிஜமாவே நீ தான் எழுதுனியா :))) கலக்கல்.. அதிலும்,

எதிர்மறை அர்த்தங்களில்
சிந்திச் சிதறும் எண்ணங்கள்
முற்றுப் புள்ளிக்குப் பின் ஒற்றை வார்த்தையில்
மொத்தமாய் சேரக்கூடும்.

இவ்வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்..

ஜீவன்பென்னி said...

//சமீர்... இது நிஜமாவே நீ தான் எழுதுனியா// குட் கொஸ்டின்...:-))))))) நன்றிகள் சுபா.

Barari said...

தடுமாற்றம் இருந்தாலே பிதற்றம் தான். வாழ்த்துகள்.தம்பியின் கவிதை சிறப்பாக இருக்கிறது.

Marc said...

தடுமாற்றத்திலும் தடம் மாறாத கவிதை அற்புதம்.வாழ்த்துகள்.

Unknown said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News

Post a Comment