சென்ற பதிவுகளில் துபாயில் இருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டைனை தொடர்பான செய்தி. அதனை படிக்காதவர்கள் இங்கே கிளிக்கவும்.
அவர்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு கொலையை செய்த்ததினாலே இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் செய்த தவறை தனது மேல் அதிகாரிக்களுக்கு தெரிவிக்க முற்பட்டாதால், அவரை கொலைசெய்துள்ளனர். ஒரு காரினை வாடகைக்கு எடுத்து மக்கள் நடமாற்றம் இல்லத விமான நிலையத்தினை ஒட்டிய கார் பார்க்கிங் பகுதியில், காருக்குள்ளே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் கழுத்தினை பிடித்துக்கொள்ள மற்றொருவர் கத்தியினை வைத்து கழுத்தினை அறுத்து கொன்றுள்ளனர். பின்பு அந்த கத்தியினையும், காரினையும் அங்கேயே விட்டு விட்டு இரத்தக்கறை படிந்த ஆடையை மாற்றிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி அறைக்குச் சென்று அங்கிருந்த மற்றைய துணிகளையும் அதனோடு சேர்த்து சலவை நிலையத்தில் கொடுத்துள்ளனர்.
சலவை நிலையத்தார் சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு
தகவல் தெரிவித்ததும் அவர்கள் கொலை செய்தவர்களின் அறையில் இருந்த அனைவரையும் கைது செய்து விசாரனை செய்து காரினை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தவரை கைது செய்தனர். அவரின் மூலமாக கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரனைக்குப் பின் தண்டனை வழ்ங்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டுள்ள இருவருக்கும் இளம் வயது , ஒருவருக்கு தற்பொழுத்தான் முதல் குழ்ந்தை பிறந்துள்ளது.
கொலையுண்டவரின் மனைவி மன்னிக்கும் பட்சத்தில் மரணதண்டனை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஒரு சிலர் தெரிவித்தனர். ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
2 comments:
http://gulfnews.com/news/gulf/uae/crime/behind-bars-the-final-call-1.595184
வருகைக்கும் தொடுப்பிற்கும் நன்றிகள். அவரை மன்னித்து விடுதலை செய்தால் நன்று.
Post a Comment