Tuesday, March 09, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

இந்த விண்ணைதாண்டி வருவாயா விடாது கருப்புங்குற கதையா என்ன சுத்தி சுத்தி அடிக்குது. என் வேலைய முடிச்சுட்டு ரூமுக்கு திரும்பிக்கிட்டிருந்தேன், பாசக்கார பயபுள்ள ஒருத்தன் கால் பண்ணி விண்ணைதாண்டனும் கூட வாடான்னா. ஒரு தடவ தாண்டுனதுக்கே எனக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு, மறுபடியுமான்னு யோசுச்சேன்.

மனசு கிடந்துக்கிட்டு போ போ போயி எஞ்சாய் பண்ணுன்னு பாடம் எடுத்துச்சு. அன்னைக்கு புடிச்ச பைத்தியம் தெளிஞ்சு இப்போதான் நார்மலாயிருக்கு.


இந்த படத்துல அப்புடி என்னதான் ஸ்பெஷல்னு பார்த்தா கதை ரீதியாவோ, இல்ல படமாக்கிய விதத்துலயோ புதுசா ஏதும் இல்ல. ஆனா ஒரு FEEL இருந்துச்சு. என்னதாண்டா உன்னோட பீலிங்கு? ரொம்ப பிலிம் காட்டுறன்னு யோசிக்குறீங்களா. அதுகெல்லாம் அனுபவம் வேணும். உங்களுடைய முதல் காதல் அது உண்மையான காதலா(உண்மையான காதல்னா என்னங்க?) இருந்து அது நிறைவேறாமல் போயிருந்தா நான் சொல்லுற அந்த FEEL கிடைக்கும். (இந்த FEEL எனக்கு வரலங்க, நம்ம பிரண்டு FEELல பத்தி என்கிட்ட சொல்ல அத இங்க எழுதிட்டேன்..எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.)


3சா!!! இந்தப் பொண்ணுக்கு யாராச்சும் நடிக்க சொல்லித்தந்தா பரவாயில்ல. ரொம்ப கொடுமைடா சாமி. எல்லாத்துகும் முஞ்ச சுரிக்கிக்கிட்டு/சுளிச்சுக்கிட்டு/உதட ஊன்னு வச்சுக்கிட்டு ஒரு எக்ஸ்பிரசனக் காட்டுது. சிர்க்கிறத விட்டா அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்.  சிலம்பரசன் நடிச்ச படத்த தியேட்டர்ல பார்த்ததே ஒரு புதுமைதான். நம்பி வந்த என்ன ஏண்டா வந்தன்னு என்னைய நானே கேட்டுக்காத அளவுக்கு நல்ல முன்னேற்றம். ரொம்பவே அடக்கி வாசிக்க வச்சிருக்காரு டிரைக்டரு.

காதலன்,காதலி,காதல் இவங்க முனு பேருமே முக்கால்வாசி படத்த ஆக்கிரமிச்சுட்டாங்க. காக்க காக்க காமேரா மேன் கணேஷ். செம வாய்ஸ், என்னோட clap's அவருக்கு. இந்த படத்தோட தயரிப்பாளர்கள்ல ஒருத்தரு போல. நார்மலாவே அவர் அப்புடித்தான் பேசுராறு. டைட்டில்ல ஆரம்பிச்சு எண்டு டைட்டில் வரைக்கும் ஏஆர் அந்த FEELல Maintain பண்ணியிருக்குறார். கேமேராமேன் பரமஹம்சா.(லென்சுக்கு நேரா வேளிச்சம் படக்கூடாது, படம் புடிக்குறப்போ) எப்பவோ யாரோ எனக்கு சொல்லி இன்னைக்கும் வரைக்கும் போட்டோ புடிக்குறப்போ பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். கண்களை உறுத்தாத படப்பிடிப்பு. படத்துல ஒரே ஒரு தேவையில்லாத செம பில்டப் காமெடி சண்டை. சாதரணமான கதைல டிபரண்டானா கிளைமாக்ஸ், இரைச்சல் இல்லாத இசை, கண்களுக்கு குளிர்ச்சியான கேரளம், பில்டப் இல்லாத ஹீரோன்னு  செய்சுட்டாரு டிரைக்டரு கவுதம்.


படம் முடிஞ்சு வெளிய வர்ரப்போ நண்பன் பெருசா ஒரு பெருமூச்சு விட்டான். என்னான்னு கேட்டேன். மச்சான் என் வாழ்க்கைலயும் "இரண்டு TRUE LOVE !!!!" இருக்குதுன்னு சொன்னான்.

2 comments:

துபாய் ராஜா said...

நானும் மனைவி,குழந்தையோடு நல்லா ஃபீல் பண்ணி பார்த்தேன். என் குழந்தை தொந்திரவு ஏதும் பண்ணாமல் அமைதியாக படம் பார்த்தது பெரிய ஆச்சரியம்.

ஜீவன்பென்னி said...

வருகைக்கு நன்றி ராஜா.

Post a Comment