Saturday, March 20, 2010

இது நம்ம ஆளு-3

நம்மாளு பஸ்ல ஏற்றதுக்காக நின்னுக்கிட்டு இருந்தாரு.  கூட்டமோ கூட்டம் செம கூட்டம், லைன் கட்டி நிக்குது. மொத பஸ்ஸு, இரண்டாம் பஸ்ஸுன்னு வரிசையா மூனு பஸ்ஸு போயிடுச்சு, அப்படியும் நம்மாளுக்கு முன்னாடி இருவது பேரு நிக்குறாக.  யப்பானு ஒரு பெருமூச்ச விட்டாறு.  அடுத்த பஸ்ஸு வர்றதுக்கு எப்படியும் இன்னும் அரைமணி நேரம் ஆகும்போல, என்ன செய்யுறது(மனசுக்குள்ள).  வெளிய சொன்னாலும் யாருக்கும் புரியப்போறது இல்ல.
சுத்தித் தமிழ் தெரியாதவுகலா இருந்தா எப்புடி புரியும்.  இப்போ மலையாளிகள மனசுக்குள்ள திட்டுனாறு.  வந்தவுக ஒழுங்க மலையாளத்த பேசியிருக்க வேண்டியதுதான எதுக்கு இந்திய பேசுனாங்க.  இப்போ பாரு எல்லா அரபியும் இந்திய பேசுறாங்க.  நமக்கு தெரியலன்னு சொன்னா,  நீ இந்தியாதானேன்னு சந்தேகமா கேக்குறாங்க.  

பஸ்ஸு ஒன்னு வந்து நின்னுச்சு. முன்னாடி நம்பரையே காணோம்,
எங்க போகுதுண்ணும் தெரியல.  நம்மாளு நமக்குத்தான் தெரியலையோன்னு கண்ண சுருக்கி கைய நெத்தில வச்சு பாக்குறாரு அப்பயும் ஒன்னும் தெரியல.  எல்லாத்தையும் எறக்கிவிட்டுட்டு அது கிளம்பிடுச்சு.  பின்னாலயே அடுத்த பஸ்ஸு,  வரிசையில இருக்குறவுக எல்லாம் பறக்குறதுக்கு ரெடியாகுற மாதிரி பஸ்ஸுல ஏர்றது ரெடியானாங்க.  நம்மாளும் ரெடியானாரு.  ஒவ்வொருத்தரா ஏற ஏற நம்மாளு வரிசைல முன்னாடி போனாரு. 

டிக்கெட்ட வாங்குறதுக்காக பாக்கெட்லருந்து பர்ஸ எடுத்து மெஷின் மேல வைக்க டிக்கட் வெளிய வந்துச்சு. நம்மாளுக்கு ஒரே ஆச்சரியம்,
இத்தனை நாளா இது தெரியாம போச்சேன்னு. நம்மாளும் டிக்கெட் மெஷின்ல தன்னோட பர்ஸ வைக்க டிக்கெட் வரல.  வச்சு வச்சு எடுக்குறாரு.  ஒன்னும் நடக்கல.  டிரைவரு அண்ணாச்சி பர்ஸ வாங்கி வச்சு பாத்தாரு.  அப்பயும் வரல.  மெஷின்தான் கோலாரு பண்ணுதுன்னு அத கலட்டிப்பாத்தாரு.  டிக்கட் பேப்பரையும் மாத்துனாரு.  எல்லாத்தையும் செட் பண்ணி மீண்டும் வச்சா ஹுஹும் நோ டிக்கட்.  பின்னாடி நின்னவுக இரண்டு பேரு தன்னோட பர்ஸ வைக்க இப்போ டிக்கெட் வந்துச்சு.  இப்போ மறுபடியும் நம்மாளு தன்னோட பர்ஸ வைக்க டிக்கெட் வரல. 

பிலிப்பினி அண்ணாச்சி அதங்க நம்ம டிரைவரு பர்ஸ வாங்குனாரு, பிரிச்சுப்பாத்துட்டு நம்மாளுக்கு புரியாத பாசைல திட்டிப்புட்டு,  காசு இருக்கான்னு கேக்க நம்மாளு ஒன்னும் புரியாம முளிக்க அதப்பாத்த சேட்டன் ஒருத்தரு வந்து என்னனு கேக்க, பஸ்ஸே சிரிக்குது நம்மாளப்பாத்து.  அப்புறம் ஒரு வழியா காச கொடுத்து டிக்கெட்ட வாங்கி உள்ள போய் உக்காந்தாரு.  பின்னாடியே வந்த சேட்டன் எப்படியா இப்படிங்குற மாதிரி ஒரு பார்வைய பாக்க நம்மாளு சீரியஸ்ஸா அதுக்கு வெளக்கம் சொன்னாரு.  இது(பர்ஸ்ல பஸ் கார்டு இல்லாம டிக்கெட் எடுக்குறது) புது சிஸ்டம் போலன்னு நினைச்சுட்டேன்.

2 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

நல்லா இருக்கு விளையாட்டு.
நம்ம ஊரு மாதிரி காசு குடுக்காமையே போகப் பார்த்தாரோ?

ஜீவன்பென்னி said...

@?????? ???? ???????????

வருகைக்கு நன்றிகள்.

Post a Comment