ஒரு சமயம் பீகாரில் உள்ள மக்களிடம் இந்தியாவின் குடியரசுத்தலைவர் யார் என்று கேட்ட பொழுது லாலு பிரசாத் யாதவ் என்றும், பிரதமர் அமிதாப் பச்சன் என்றும் சொன்னதாக படித்தேன்.
நேற்று மதியம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக்கொண்டு வரும் போது வீ தொலை அலைவரிசையில் எதேச்சையாக அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. அதில் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் மற்றும் பதில்கள் கீழே,
இந்தியாவின் தேசிய விலங்கு எது?
முதாலமவர் : காக்கா
இரண்டாமவர் : யானை
மூன்றாமவர் : சிங்கம்
நாங்காமவர் : ????????
இந்தியாவின் தேசிய பறவை எது?
முதாலமவர் : கிளி
இரண்டாமவர் : காக்கா
மூன்றாமவர் : கழுகு
நாங்காமவர் : ??????
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
முதாலமவர் : கிரிக்கெட் இல்ல கபடி
இரண்டாமவர் : கிரிக்கெட்
மூன்றாமவர் : கிரிக்கெட்
நாங்காமவர் : கிரிக்கெட்
5ஆமவர்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கிரிக்கெட் இல்ல ஹாக்கி.
இந்தியாவின் தேசிய மொழி எது?
முதாலமவர் : ஹிந்தி
இரண்டாமவர் : ஹிந்தி
மூன்றாமவர் : ஹிந்தி
நாங்காமவர் : ஹிந்தி
நாள் முழுவதும் களியாட்டங்களை ஒளிபரப்பும் ஒரு தொலைக்காட்சியில் நாளைய இந்தியாவின் சிற்பிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.
அதில் ஒருவருக்கு விலங்குக்கும், பறவைகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. கேள்விகேட்கப்பட்டவர்கள் அனைவரும் சற்று மேல்தர வர்க்கம் என்று அனுமானிக்க அவர்கள் உடைகளும், உரையாடல்களும் உதவின. வயது 20-22 குள் இருக்கும். தன் தேசத்தினைப்பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட அவர்களுக்கு இல்லை. தனக்கு தெரியாததை பெறுமையாக கருதுகிறார்கள்.
நல்லவேளை தேசியக்கொடியின் வண்ணங்களைப்பற்றி கேட்கவில்லை.
6 comments:
இந்தியாவின் தேசிய விளையாட்டாக கிரிக்கெட்டை சொன்னதில் ஆச்சர்யமில்லை...அந்த 5மவருக்கு பதக்கமே கொடுக்கலாம்...
தேசிய மொழியை மட்டும் சரியாய் சொன்னது அவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களாகையால் சொல்லி இருக்கலாம்...
வேதனைக்குரிய விஷயமே...
நன்றி பாரதி பரணி.
இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது. வடக்கத்தவர்கள் அவர்களாகவே நினைத்துக்கொண்டார்கள். இந்திய அரசியலமைப்பில் அப்படி ஒரு சரத்தே இல்லையாம்.
ஹிந்தி பயன்பாட்டு மொழி மட்டுமே.
அன்பு ஜீவன் ,
// நல்லவேளை தேசியக்கொடியின் வண்ணங்களைப்பற்றி கேட்கவில்லை //
சுதந்திர தினத்தன்று தலை கீழாக தேசியக் கோடியை குத்திக் கொள்பவர்கள் வாழும் நாடு தாம் நம்ம நாடு ...
உங்கள் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன் தோழர் ...
வருகைக்கு நன்றி நியோ.
என்ன கொடுமை சார் இது...
Post a Comment