Thursday, August 05, 2010

புகை எனக்குப் பகை-உங்களுக்கும் தான்

 



அவர்கள் இருவரும் மிக சுவரசியமான முறையில் அந்த பகுதியே அலரும் வகையில் கத்திக்கொண்டிருந்தனர், இல்லையில்லை அவர்களைப்பொறுத்த வரையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.   அவர்கள் இருவருக்கும் நிச்சயம் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயது இருக்கக்கூடும்.  அவர்களுக்கு என்னைக்கண்டால் பிடிப்பதில்லை.  நான் வந்தால் என்னை முறைப்பதும்,  போகும் வழியினை வேண்டுமென்றே மறைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள்.  நான் இருப்பதும் அவர்கள் இருப்பதும் ஒரே அடுக்குமாடிக்குடியிருப்பில்தான்.


அவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதிற்கு காரணம், எனக்கு பிடிக்காத ஆனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம்.  அவர்கள் கைகளும், வாய்களும் எப்போதும் புகைபோக்கிக்கொண்டிருக்கும்.  அதை ஒரு முறை நான் கண்டிக்க முற்படுகையில், அவர்களுக்கும் எனக்குமான முதல் பேச்சுவார்த்தை சிறு முறைப்புடன் முடிந்தது.  நான் அவர்களிடம் இங்கு வேண்டாம், இந்த இடத்திலிருந்து வெளியே சென்று அதை செய்யலமே என்றேன். ஏனென்றால், மாடிப்படி ஏறும் இடத்தில் குறுக்கலாக நின்று கொண்டு முழுப்பாதையையும் மறித்தோ அல்லது மறைத்தோ போவோர்க்கும் வருவோர்க்கும் இடைஞ்சலாக தானும் கெட்டு, போவோர் வருவோரையும் சேர்த்து தன் புகைபழக்கத்தினால் தொந்தரவு செய்துகொண்டிருந்தனர்.

ஒரு நாள் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் விட்டுச் சென்றுவிட்டிருந்தார்கள்.  நான் அணைத்துவிட்டு நேரக அவர்கள் வீட்டுக்சென்று அதைப்பற்றி கேட்கப்போக அது மீண்டும் பிரச்சனையில் முடிந்தது.  மேலும் அதை தாங்கள் செய்யவில்லை என்று சொல்லிவிட்டனர்.  அதற்குமேல் அங்கு விவாதம் செய்வது வீண் வேலை என்று தோன்றவே அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  அதன் பிறகே நான் மேலே சொல்லிய எதிர்வினைகள் எனக்கு கிடைத்தது.  அன்று முதல் சிகரெட்டை அணைப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டிருந்தார்கள்.  எப்போதும் புகைந்துகொண்டேயிருக்கும்.  நானும் என் கண்ணில் படும் நேரங்களில் அணைத்துக்கொண்டேயிருந்தேன்.

ஒரு வாரம் சென்றிருக்கும்,  அவர்கள் இருவரில் ஒருத்தருடைய குழந்தையை மருந்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல் வந்தது.  குழந்தையின் முகத்தினில் காயம், நன்றாக ஜுரமும் அடித்துக்கொண்டிருந்தது.  மருந்துவமணையில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.  அவர்கள் இருவரும் என்னைப் பார்ப்பதற்குத் தயக்கம் கொண்டு நான் சென்ற நேரம் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தனர்.  அழகான முகத்தின் கண்ணங்களின் ஒரு பக்கத்தில் திருஷ்டிப்பொட்டுப்போல் நல்ல ஆழமான   காயம், நெருப்பினால் சுட்டமாதிரி இருந்தது. அந்த பிஞ்சிற்கு எப்படி வலித்திறுக்கும்.  அதை நினக்கும்போது எனக்கும் வலித்தது. வலியில் குழந்தை சிணுங்கிக்கொண்டிருந்தது.


அதன் பிறகு இரண்டு முறை அவர்கள் வீட்டிற்கு சென்று  குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன்.  குழந்தைக்கு முகத்தினில் இருந்த காயம் ஆரத்தொடங்கியிருந்தது. சிறு குழந்தையாதலால் வளரும் போது இந்தக்காயம் மறைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அதன் தாயார் கூறினார்.  குழந்தைக்குக் காயம்பட்ட அடுத்த நாளிலிருந்து மாடிப்படிகளில் சிகரெட் வாசமும்,  வழியினை மறித்து பேசுவதும்  முற்றிலும் நின்றுவிட்டிருந்தது.   
காரணம் வேறொன்றும் இல்லை,  இவர்கள் அணைக்காமல் விட்டுச்சென்ற சிகரெட் அவர்களுடைய குழந்தையை தண்டித்துவிட்டது.  புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை அறியாத குழந்தை அந்த இடத்தில் கால் தடுமாறி விழ அங்கிருந்த அந்த நச்சுபாம்பு அந்த குழந்தையின் முகத்தை சுட்டுவிட்டது.

அவர்கள் சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக பின்பு அறிந்துகொண்டேன்.  இதை நான் கூறிய அன்றே நிறுத்தியிருந்தார்களானால் இந்த அசம்பாவிதமே நடந்திருக்காது.  நான் அவர்களை விட வயதில் இளையவன்,  இது கூட அவர்கள் என்னைப் புறக்கணிக்க காரணமாக இருந்திருக்கக்கூடும்.  இங்கு தனக்கென்று ஒன்று வரும் போதுதான் நம் மக்கள் அதன் வீரியத்தை உணருகின்றார்கள்.  வரும் முன் காப்போம் என்பதை நினைவு படுத்தினாலும் உணருவதில்லை.  இதை நான் கூறுவதால் நான் நல்லவன் என்று நினைக்கவேண்டாம்.  இந்தப் புகை விசயத்தில் நான் அதற்கு எதிரானவன் என்பதனால்தான் இங்கே இதைப் பகிற்கிறேன்.  இன்றும் என்றும் நடைப்பாதையில் கண்ணில் படும் புகைந்து கொண்டிருக்கும் அந்த புகையிலை அரக்கனை நான் அணைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன்,  என் காலைப் பதம்பார்த்த நாளிலிருந்து.  உங்களுக்கு புகைபழக்கம் இருக்குமானல் அதை விட்டுவிடுங்கள் இல்லையானல் அணைக்க முற்படுங்கள்.

18 comments:

Chitra said...

உங்களுக்கு புகைபழக்கம் இருக்குமானல் அதை விட்டுவிடுங்கள் இல்லையானல் அணைக்க முற்படுங்கள்.


...... அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு....

ஜீவன்பென்னி said...

சித்ராக்கா அதுக்குள்ளவா........ இன்னும் submit பண்ணவே இல்ல.

MR.BOO said...

நல்ல அருமையான பதிவு ஜீவன். இதுபோல் சமூக அக்கறை உள்ள பதிவுகள் நிறைய வர வேண்டும்.

எல் கே said...

tehvayana avasiyamaana pathivu

ஜில்தண்ணி said...

"என்னதான் உங்க சொந்த உழைப்பில் வாங்கியே இத உரிஞ்சாலும் இது வேற யாரு உசுரையோ உரிய போறதில்ல உங்க உசுரதான் உரியும்"

இப்பலாம் பொடி பசங்கெல்லாம் சிகரெட் அடிக்க ஆரம்பிச்சிடானுங்க :) ஒன்னும் சொல்லும்படியா இல்ல

சௌந்தர் said...

ஆலோசனை சொன்னால் யார் கேட்கிறார்கள் பட்டால் தான் திருந்துவார்கள் நல்ல கருத்து

விஜய் said...

அவசியமான பதிவு தோழரே...வாழ்த்துக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு....இது போன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல கருத்து

Barari said...

thambi ithu enakku vaiththa vettaa?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அருமையான அவசியமான பதிவு...

வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

எனக்கு தெரியும் ராசா நீ நல்லவன்னு....
புகை அனைவருக்கும் பகை...

அருண் பிரசாத் said...

பிள்ளைகளை நம்பாமல்
தனக்கு தானே கொள்ளி

கையில் சிகரெட்

- எங்கோ படித்த கவிதை

நல்ல பதிவு ஜீவன்

வில்லன் said...

இவருக்கு புகையே பிடிக்காத உத்தமரு கதைக்கிறாரு கதை.. ஏண்ட இப்படி கொல்லுறீங்க...

Riyas said...

அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பரே ...

செல்வா said...

சொல்புத்தி வேணும் இல்ல சுயபுத்தி வேணும்..
இல்லனா இப்படி அனுபவிச்சாத்தான் தெரியும் ..!!

mkr said...

அக்கறையான பதிவு என்று சொல்ல கூட முடிய வில்லை.என்னா நமக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கு.(மறக்கமால் அணைத்து விடுவேன்...)

ஜீவன்பென்னி said...

உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றிகள்.

இங்க இது உடலிற்கு கெடுதல் என்று தெரிந்தேதான் புகைக்கின்றோம். என் குடும்பத்தில் இருப்போரும் விதிவிலக்கல்ல.

Arun Alwar said...

Hi this page is really good you may also like this negative campaign http://madurabeats.blogspot.com/2010/08/smoking-is-good.html

Post a Comment