Wednesday, July 28, 2010

கொஞ்சம் கரைக்க முனைகிறேன்

வறண்டு போன பாலைவனம் என்று சொன்னால் அதில் புதுமையேதுமில்லை
வறண்டு போன நதி என்று சொன்னாலும் அதிலும் புதுமையில்லை
வற்றாத கடல் எனக்கொள்கிறேன் என் வறட்சியை,
அது மீண்டும் மீண்டும் பெருகுமே அன்றி வறண்டுபோகதல்லவா
காரணம் ஏதென்று யோசிக்கின்றேன்...

ஒரு முறைமட்டுமே வந்ததால் இது இப்படி என்று ஒருவர் சொன்னார்
நான் முற்றாக மறுக்கவில்லை,
தொலைத்தொடர்பில் ஒரே அலைவரிசையில் பேசியதுண்டா?
தொலைப்பேசியில்லாமல் ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததுண்டா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக யாரிடமாவது சண்டையிட்டிருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
பேருந்தின் முன் இருக்கையில் நீ இருக்கையில்
பின் இருக்கையில் நான் இருக்க பின் வந்து மோதும்
உன் ஸ்பரிசத்தினை உணர்ந்திருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
இதிலும் புதுமையில்லைதான் ஆனால்
எத்தனை முறை ஆம் என்று கொட்டிக்கொண்டாலும்
வெறுமை என்னும் கடல் கூடிக்கொண்டே போகின்றதடி.

இன்றும் உன் அருகாமையை உணர்கிறேன்
ஆம் ஆம் என்று சொல்லும் போதெல்லாம்
முகத்தினில் முறுவல் தோன்றுதடி.
காய்ந்த சறுகுகள் கூட பசுமையாய் தோன்றிய காலமடி.
அந்த பசுமையை எழுத நினைக்கையில் வெறுமையாய்
வார்த்தைகள் விழுகுதடி.
இது முதல் முறையல்ல
இது எத்தனையாவது முறை என்ற
கணக்கும் என்னிடம் இல்லை
இது தொடர்கதையடி....
முடிவு வரும் வரை தொடருமடி....

என்றாவது ஒரு நாள் பதிவுசெய்வேன் பசுமையுடன்
என்ற நம்பிக்கை அற்றுப்போகவில்லையடி
நீ எங்கிருக்கின்றாய் என்று அறியேனடி
ஒருவர் சொன்னார் காலம் மாறும் வாழ்வில் வசந்தம் வருமென்று!!!!
என் பசுமை உன்னிடம் உள்ளதடி..
ஏன் என்னிடம் பகைமை கொண்டாயடி..

ஒரு நாள் கண்டேன் உன்னை தூரத்தில்
ஐந்து நிமிடத்தில் உன் அருகினில்
ஆழமாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தேன்...

அன்று அறிந்தோ தெரிந்தோ இல்லை
எனக்காகவோ தெரியவில்லை
எதற்காகவோ மூச்சு வாங்கினேன்
அதில் உன் மூச்சும் கலந்திருந்தது,
சேர்த்து இழுத்துக்கொண்டிருந்தேன்
நீயும் இழுத்துக்கொண்டிருந்தாய்
இருவரும் அறிந்திருக்கவில்லை
ஆனால் மறுக்க முடியாது,
என் உன் என இரண்டும் உள்ளும் வெளியும்
கலந்து கலந்து உடல் முழுதும்
அனைத்து செல்களிலும் பொதிந்து விட்டது
அந்த நொடியில் இருவரின் ஜீவனும் ஜனித்திருந்தது
இருவரின் மூச்சிலே அல்லவா!!
இன்றும் உணர்கிறேன் அந்த சுவாசத்தினை
மூச்சு வாங்கும்போதெல்லாம்.

இங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,
என் வெறுமை வெளிப்படுகிறாத என்று,
நீங்கள் இதை சுய புராணம் என்றாலும்
சுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,
இதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்
கரைக்க முற்படுகின்றேன் அவ்வளவே.

7 comments:

Prathap Kumar S. said...

ஏம்யா... உயில் எழுதிருக்கியா.... எங்கேயுமே முற்றுப்புள்ளியே இல்லை....

தமிழ் பிளாக் வச்சுருக்கேன்னு சொன்னே.... இங்க வேற மொழில்ல எழுதிருக்கே...ஒண்ணுமே பிரியலயே நைனா...

Unknown said...

இப்படிதான் அப்பட்டமா போட்டு உடைக்கிறதா?

Chitra said...

இங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,
என் வெறுமை வெளிப்படுகிறாத என்று,
நீங்கள் இதை சுய புராணம் என்றாலும்
சுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,
இதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்
கரைக்க முற்படுகின்றேன் அவ்வளவே


...... சரி, சரி...... ஆனது ஆகி போச்சு.... ம்ம்ம்ம்.....

சௌந்தர் said...

இங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,
என் வெறுமை வெளிப்படுகிறாத என்று,
நீங்கள் இதை சுய புராணம் என்றாலும்
சுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,
இதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்///

இதை எப்படி நீங்க சொல்லாம் நாங்கள் தான் சொல்ல்வோம்

செல்வா said...

நல்லா இருக்கு அண்ணா ...!!!
//ஒருவர் சொன்னார் காலம் மாறும் வாழ்வில் வசந்தம் வருமென்று!!!!///
யாரு அது ...???

அ.முத்து பிரகாஷ் said...

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை ,புதுமை ...

சரி ..போனதெல்லாம் போகட்டும் ... வாங்க ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம் ..

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Post a Comment