ஆழக்குழி தோண்டி
மண்ணிலே தாழி செய்து
அடங்கிவிட்ட பிண்டத்தினை
அடைத்துவிட்டு நகர்ந்த பின்னே
அரித்து போகும் பூவுடலும்
முடிவிலா ஆசைகளும்
அதனுடனே முடிந்து போனதோ.
விட்டுப் பிரிந்த
சொந்தங்களும் கேள்வி ஏதும் கேட்பதில்லை.
மறைந்துபோன
மனிதர்களும் வந்து ஏதும் சொல்வதில்லை.
மெய் என்பது உண்டென்றால்
விட்டுப்பிரிவதும் அதுவென்றால்
விடைக்காணா கேள்விகளும்
கடைக்கோடி நட்சத்திரங்களும்
உறைவிடம் தேடி அலைகின்றதோ!
(எதுக்கு எழுதினேன்னு எனக்கே தெரியல)
5 comments:
அருமைங்க...!!
//மெய் என்பது உண்டென்றால்
விட்டுப்பிரிவதும் அதுவென்றால்
விடைக்காணா கேள்விகளும்
கடைக்கோடி நட்சத்திரங்களும்
உறைவிடம் தேடி அலைகின்றதோ!///
தொடர்ந்து எழுதுங்கள் ..!!
அருமையான கவிதை சகோதரா..
தொடர்ந்து எழுதுங்கள்..
@செல்வர்குமார் & வெறும்பய உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.
ரொம்ப நல்லாயிருக்கு பாஸ். மெய்-ங்குறாங்க ஆனா அழிஞ்சு போயிடுதே? அப்போ அது பொய் தானே?
ரொம்ப சரியான கேள்வி வில்சன் அண்ணே.
Post a Comment