Saturday, July 10, 2010

காதல் என்னும் படிநிலை

மறக்க வேண்டிய ஒரு சில விசயங்களை நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மறக்கமுடியாது.  அவை சோகமான, இன்று நினைத்தாலும் மனதை வறுந்தச் செய்யும் சம்பவங்களாகவோ அல்லது மகிழ்ச்சியான மனதை வருடும் ஒன்றாகவோ இருக்கக்கூடும். அது நட்போ,காதலோ, இரண்டின் பிரிவோ ஏதாவது ஒன்றாக இருக்கக்கூடும்.  இந்த இரண்டு வார்த்தைக்கு பின்னும் எத்தனையோ கணக்கிட முடியாத அற்புதமான கதைகளும் இருக்கக்கூடும்.  அவை மகிழ்வையும், சோகத்தையும் இரு சேர கலந்த நம் வாழ்வின் எச்சமாக நம்மோடு ஒட்டிக்கொண்டு,  வாழ்நாள் முழுவதும்  நம்மோடு பயனித்துக்கொண்டிருக்கக்கூடும்.

இது எங்கு துவங்கி எங்கு முடியும் என்று தெரியாது.  எழுதத்துவங்கும் எனக்குத் தெரியாது என்று துவங்கியது எங்கு முடியப்போகின்றது என்று.  காதல் என்ற உணர்வுக்கு யாரும் விதிவிலக்கில்லை.  காதலுக்கும் பருவம் உண்டு காலமும் உண்டு.  ஒரு மனிதனின் வாழ்க்கை படிநிலைபோல் ஒவ்வொரு படிநிலையிலும் அவனோடு ஒட்டிக்கொண்டு பயனிக்கும்.  அதுவே அவன் வாழ்க்கை படிநிலையை முடிவுசெய்கிறது.  அதை எவரும் புறம் தள்ளமுடியாது.  காதல் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்கி மீண்டும் அதே ஒற்றைப்புள்ளியில் நாம் வந்து சேரும் போது நாம் என்பது இல்லாது போயிருக்கும்.

ஆதார  சுருதியான, ஆதியான ஓர் உணர்வு.  அதை கதைசொல்லியாக சொல்ல முறச்சி செய்கின்றேன்.  எழுத்தில் எந்தக்காதலை சொல்வது.  எந்தக்காதலை சொல்லாமல் செல்வது.  காதல் என்பது அனைத்திலும் நிறைந்திருக்கக்கூடிய அபாயம் இங்கிருப்பதால்,  அனைத்தையும் சொல்லத்தோன்றியது, நானும் ஆதியிலிருந்து எழுத்த தொடங்கினேன்.  எழுதி முடித்துவிட்டு படிக்கவில்லை எழுதும்போதே நிறுத்திவிட்டேன்.  அதில் எதனை எடுப்பது எதனை சேர்ப்பது.   என் காதலை முழுமையாக என்னால் ஏன் எழுதமுடியவில்லை. அசிங்கம் என்பது ஏதுமில்லை. நான் தூக்கிச் சுமந்த என் காதலின் முன்னே என் முகத்திரை அல்ல மனத்திறை கிழியும் ஓசைக்கேட்டது.  என் காதல் படிநிலைகள் என்னை அடித்து கீழை தள்ளி என் முகத்தில் காரி உமிழ்ந்தன.


 எத்தனை பக்கங்கள் எழுதியிருப்பேன் என்பது எனக்குத்தெரியவில்லை.  என் காதல்களைப் பொருத்து என் கையெழுத்துக்களும் படிநிலைகளுடன் இருந்தன.  கையெழுத்துகளும் காதல் கொண்டது.  இங்கு பிடித்ததும், பிடிக்காததும் அனைத்திற்கு பொதுவான ஒன்றே.  இங்கு என் காதல் என்பது  அனைத்து திணைகளையும் குறிப்பதாகவே நான் கருதுகிறேன்.  என் மீது காரி உமிழும் என் காதலை அப்படியே ஏற்றுக்கொண்டு வெளிக்கொணர முடியவில்லை.  அவ்வாறு செய்யும் படசத்தில் இந்த உலகம் என்னை தூற்றத்தொடங்கிவிடும்,  அதுவும் அதன் பங்கிற்கு காரத்துடங்கும் , அதன் காதலை மறைத்துக்கொண்டு.  இங்கு காதல் பொதுவான ஒன்று.  என் மீது துப்பப்படும்,தூற்றப்படும் அனைத்தும் தங்கள் மீது காரி
உமிழ்வதற்கு ஒப்பானதாக இருக்கக்கூடும்.  

 இரண்டு படிநிலைகள் ம்னித உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது.  ஒன்று குடும்பம் என்ற உறவுகள், அதன் பின் வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான என்ற இரண்டு நிலைகள்.


மீண்டும் எழுதத்தொடங்கினேன்.  இந்தக்காதல் சுவையாக இருந்தது.  கேலிகளும் கிண்டல்களும்,  கவலையில்லா முகங்களும் அனைத்தும் இதுவரையில்லாத மகிழ்வுடன் கூடிய மறுமலர்ச்சியினை கொண்டிருந்தது.
இது எங்கு எப்போது மலர்ந்தது என்று எனக்குத்தெரியாது.  முகமும்,உடலும் மற்றும் மனம் எங்கும் ஒரு பரவசநிலை பரவியது.  இந்தக்காதல் அவளுக்கும், அவனுக்குமானது.  இந்தப்பரவச நிலை இருவருக்கும் பொதுவானது.  காலையில் தொடங்கி மாலையில் முடியும் பருவகால நிலையில்லாதது.  ஒரு தாம்பத்தியத்தின் அடிநிலையின் முதல் படிநிலையினை நாம் உணர்ந்துகொள்ள உதவக்கூடியது. குறிக்க இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்.  தூங்க மறந்த இரவுகள் அதிகம்,  இமைகள் மூடினாலும் அவள் முகமோ,  அவன் முகமோ கரிய இருட்டுக்குள் வெளிச்சம் போட்டுக்காட்டிக்கொண்டிருக்கும்.   இது முதல்படிநிலையானதால் புரிந்து கொள்ளக்கூடிய சாத்தியங்களும்,  அதை வளர்க்க வேண்டா சந்தர்ப்பங்களும் அதிகமிருக்கக்கூடும்.  விட்டுப்பிரிவதும் மறக்கவோ மறைக்கவோ முயல்வதும் இயலாது போகக்கூடும். இதனை விட்டுப்பிரிவது அத்தனை சுலபமில்லை.  ஒற்றைப்புள்ளியில் தொடங்கி மற்றொரு ஒற்றைப்புள்ளியில் முடியும் ஒரு நாளில் இது மறையக்கூடும்.

 எத்தனையோ படிநிலைகளை கடந்துவிட்ட இந்த வாழ்க்கையில்  இந்த ஒரு படிநிலையினை ஆழமாக இல்லாமல் மேலோட்டமாகவே என்னால் எழுதமுடிந்தது.  மற்றவைகளை பற்றி ஒரு சிறிய குறிப்பினைக்கூட இங்கு எழுதமுடியவில்லை.  அவை மறைக்கப்பட்ட பக்கங்களாக மனதின் ஆழ்கிணற்றில் எங்கோ ஓர் மூளையில் ஒளிந்திருக்கக்கூடும்.  கடக்க வேண்டிய காதல் படிநிலைகளை கடக்கும் போது அவை ஒரு நாள் வெளிப்படக்கூடும்.  இதை இப்போது எழுதவிடாமல் தடுத்ததும்,  ஒரு நாள் எழுதச் சொல்லப்போவதும் இதே காதல்தான்.


அதுவரை எங்கோ தொடங்கி எங்கோ முடியும் அறியாத்தெரியா ஒன்றைப்போல் இந்தப் பயணம் தொடரும்.

                                                           

5 comments:

School of Energy Sciences, MKU said...

காதல்!!! . . ஒரு அருமையான உணர்வு . . . அதை எழுதுவதும் வாசிப்பதும் அவ்வளவு ஆனந்தம் தரும். காத்திருக்கிறேன் . . . நண்பனின் பகிர்வுக்காய்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

அட்டகாசமா எழுதியிருக்கீங்க பாஸ்

நீங்க சொன்னது போலவே காதல் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு படிமனாகவே ஒட்டிக்கொண்டு பயணிக்கும் ஆனால் ஏதோ ஒரு பருவத்தில் அதை தட்டிவிட்டு செல்லும் நிலையும் வரும்...

எழுத்துப்பிழைகள் அங்கங்கே பரவாயில்லை தொடர்ச்சியாக எழுத எழுத சரியாகிவிடும் காதலைப்போலவே...

சௌந்தர் said...

எத்தனையோ படிநிலைகளை கடந்துவிட்ட இந்த வாழ்க்கையில் இந்த ஒரு படிநிலையினை ஆழமாக இல்லாமல் மேலோட்டமாகவே என்னால் எழுதமுடிந்தது.

மேலோட்டம் இதுவே அருமை. இன்னும் எழுதினால் அருமையோ அருமை. காதலை பற்றி எழுதி கொண்டே இருக்கலாம் தொடருங்கள்.....

Barari said...

aka en thambi engo poi vittaar.

jothi said...

////மறைக்கப்பட்ட பக்கங்களாக மனதின் ஆழ்கிணற்றில் எங்கோ ஓர் மூளையில் ஒளிந்திருக்கக்கூடும். கடக்க வேண்டிய காதல் படிநிலைகளை கடக்கும் போது அவை ஒரு நாள் வெளிப்படக்கூடும்.//// all we cross.....

Post a Comment