Wednesday, July 21, 2010

துபாய் பஸ்ஸில் ஏறிய மானம் (மீள் பதிவு )

(இந்த வலை பதிவ ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை மீண்டும் மீண்டும்  படிக்கப்படுகின்ற பதிவில் அதிகம் முறை படிக்கப்பட்ட என் பதிவு இதுதான் )

இந்தியாவோட மானம் போன கதையும்  அத தடுப்பதற்கு நம்ம ஹீரோ செய்த காரியமும். இதுதான் மேட்டரு.  பிச்சகாசு 2 திர்ஹம்ஸ்க்காகன்னு சொல்ல முடியாது அதுவே ரொம்பப்  பெரிய விசயமா தெரிஞ்சதனாலதான் இத செஞ்சிருப்பாங்களோன்னு  தோனுது. 

ராத்திரி 8 மணி இருக்கும்.  இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு.  இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான்.  நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு.  டிரைவரு நமக்கு ரொம்ப டியரு.  ஓமான் காரரு.  ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...


ஒரு வழியா டிக்கெட்ட கொடுத்து முடிச்சுட்டு பஸ் கதவ மூடிட்டு எதயோ 
தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு அப்போ அவரு கண்ணவுறுத்துற 
மாதிரி  பச்ச கலர்ல ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல. அதே நெரத்துல 
அவரு கை, வண்டியையும் ஸ்டார்ட் பண்ணுச்சு, ஆன் பண்ணுனத 
ஆஃப் பண்ணிட்டு அந்த 5 ருவாவ எடுத்துக்கிட்டு நம்மவூர்ல படத்துல SPECIAL லா விஜயகுமார் சிபரிசுல அப்பாய்ண்ட் பண்ணுன 
போலிஸ்காரராட்டம் கண்ணு சிவக்காம, காத்து அடிக்காம இப்புடி எதுவுமெ இல்லாம ரொம்ப சாதாரணமா அப்புடியே அந்த நோட்டோடப் பக்கவாட்ல இரண்டு கையையும் புடிச்சுகிட்டு நடந்து வந்தாரு.


யாருக்கும் ஒன்னும் புரியல நான் கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால 
ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு. முதல்ல லைட்டா கேட்டறு,
கொஞ்சம் குரல மாத்தி ஹர்டாவும கேட்டுப்பாத்தாரு.  நம்ம ஆளுங்கதான் எதையும் பிளான் பண்ணி செய்ரவங்களாச்சே.  ஒருத்தரும் உண்மைய 
ஒத்துக்கல.  ஒத்துக்கலனா இப்பவே இங்கயே இந்த நோட்ட 
கிளிச்சுடுவேன்னு இடிமாதிரி முழங்கி ரெடியானாரு அப்பொ STOP னு யாரோ கத்துனாங்க. யாரு நம்ம ஹீரோதான்.  நீயா!!! அவருக்கு ஒரெ ஷாக்.....
(மேஜர் சுந்தர்ராஜன்இருந்திருந்தார்னா,  இரண்டு திர்ஹம்ஸ்க்கு பதிலா ஒரு ரூபாவும், ஒரு திர்ஹம்ஸ்சும்னு அன்னைக்கு ஏமாத்துனானே ஒருத்தன்னு  இன்னைக்கு சொல்லுரதுக்கு நாகேஷ் இல்ல அத கேக்குறதுக்கு நம்ம மேஜர் சாரும் இல்ல) 
உடனே எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க. நம்ம ஹீரோவுக்கு 
இதெல்லாம் காதுல விழல அவனுக்கு அந்த நோட்டும் இந்தியாவோட
மானமும் தான் தெரிஞ்சது.

ஹீரோ 5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான்.  இத்தாங்க கத,  ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க.  அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த,  ஹீரோ இந்தியா வந்தப்போ நல்லவங்க யாரோ திருடிட்டாங்கங்குறது வேற கதை.

17 comments:

சௌந்தர் said...

ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க.// யாருப்பா அது நீ தானே

ப.செல்வக்குமார் said...

இது நான் ஏற்கெனவே படிச்சிட்டேன் ...!!

நாஞ்சில் பிரதாப் said...

அவ்ளோ நல்ல்ல்ல்லவனாய்யா நீயி...

வில்சன் said...

உன்னை மாதிரி கொஞ்சம் பேர் இருப்பதால் தான் துபாயில அப்பப்போ மழை பெய்யுது தம்பி

க‌ரிச‌ல்கார‌ன் said...

ம் ந‌ட‌க்க‌ட்டும்

dheva said...

முதல்லேயே சொல்லிக்கிறேன்...இது கதைன்னா நான் விட்டுடுறேன்.....ஆனா உண்மையிலேயே நடந்துச்சுன்னு சொன்னினா....சும்மா விடமாட்டேன்..!

//சாயங்காலம் மணி 8 இருக்கும். இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு. இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான். நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு. டிரைவரு நமக்கு ரொம்ப டியரு. ஓமான் காரரு. ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...//

1) எந்த ஊர்லப்பு 8 மணின்னா சாயங்காலம்....? அது நைட்டு இல்லையா....அவ்வ்வ்வ்வ்வ்வ்

2) சீனாக்காரன் வெள்ளைக்காரன் எல்லாம் பஸ்ஸுக்கு நின்னானா? ஏண்டா.. பிலிப்பைனியா பாத்தா உனக்கு வெள்ளைக்காரன் மாதிரி தெரியுதா...ஆனா லாஜிக் ஒத்துக்குறேன்..அவனும் வெள்ளையாத்தான் இருக்கான்

3) டிரைவர் ஓமான் காரரா? நல்லா பாத்தியா மலையாளியா இருக்க போறான்...

//ஹீரோ 5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான். இத்தாங்க கத, ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க. அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த, ஹீரோ இந்தியா வந்தப்போ நல்லவங்க யாரோ //


அர்ஜுன் படம் நிறைய பாத்திருப்பியோ....! உனக்கு ஒண்ணு தெரியுமா....ஊரா இருந்தாலும் நிஜமா 5 ரூபாய கிழிச்சுதான் போடணும்....! கேட்டுப் பாரு ஊர்ல 5 ரூபாய்க்கு என்ன கிடைக்கும் சொல்லுவாங்க

வர்ட்டா....!

Barari said...

namba hero unmaiyileye mika nallavar.(veluththathu ellam paal endru nambubavar)oru kalum nam hero vidamirunthu poi varathu.

ஜீவன்பென்னி said...

//1) எந்த ஊர்லப்பு 8 மணின்னா சாயங்காலம்....? அது நைட்டு இல்லையா....அவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஒத்துக்குறேன் ராத்திரின்னு.


//அர்ஜுன் படம் நிறைய பாத்திருப்பியோ....! உனக்கு ஒண்ணு தெரியுமா....ஊரா இருந்தாலும் நிஜமா 5 ரூபாய கிழிச்சுதான் போடணும்....! கேட்டுப் பாரு ஊர்ல 5 ரூபாய்க்கு என்ன கிடைக்கும் சொல்லுவாங்க//

இது நடந்து முனு வருஷம் ஆகப்போகுது.

சி. கருணாகரசு said...

நீங்க ரொம்ப நல்லவரு!
உங்க செயலுக்கு என் வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

நீங்க தான் உண்மை நாயகன்.
பாராட்டுக்கள்.

Riyas said...

ம்ம்ம் நல்லது..

//சாயங்காலம் மணி 8 இருக்கும். இடி இடிக்கல மழையும் பெய்யல//

என்னது மழையா... அப்பிடின்னா.. காமெடி கீமடி பன்னல்லயே துபாயில வந்து இடியாம் மழையாம்..

ஜீவன்பென்னி said...

//ம்ம்ம் நல்லது..

//சாயங்காலம் மணி 8 இருக்கும். இடி இடிக்கல மழையும் பெய்யல//

என்னது மழையா... அப்பிடின்னா.. காமெடி கீமடி பன்னல்லயே துபாயில வந்து இடியாம் மழையாம்.. //

இந்த பதிவு எழுதறப்போ நான் பதிவுலகத்துக்கு கத்துக்குட்டிங்க. எல்லாம் ஒரு ஃபுலோ எழுதுனது. லைன்ல விடுங்க.

நாஞ்சில் பிரதாப் said...

இனி என்னிக்காவதுத இது திரும்புவும் போட்ட அந்தமகாத்மா காந்திக்கே பொறுக்காது...ஓடியேப்போயிரு...

ஜீவன்பென்னி said...

//இனி என்னிக்காவதுத இது திரும்புவும் போட்ட அந்தமகாத்மா காந்திக்கே பொறுக்காது...ஓடியேப்போயிரு...//

மாம்ஸ் ஒரே போஸ்ட்க்கு ஒரு வருசம் கழிச்சு ரெண்டாவது தடவ கமெண்ட் போட்ட பெருமை உனக்குத்தான்யா. போஸ்ட் போட்டோம்னா ஏதாச்சும் பண்ணனும்யா அத இந்த போஸ்ப் பண்ணியிருக்குய்யா.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நல்லவர் - வல்லவர்- ஹீரோ - நீங்கதானா?

ஜீவன்பென்னி said...

நல்லவர் - வல்லவர் நான் இல்லீங்க ஆனா ஹீரோ.......ங்க.


வாங்கக்கா வாங்க உங்க முதல் வருகைக்கு நன்றிகள்.

விஜய் said...

நீங்க நல்லவரு, வல்லவரு, நாளும் தெரிந்தவரு ஜீவன், கோல்ட், வைரம் இது எலாம் ஜீவன் இப்டி நீங்க சொல்ல சொன்னத அப்டியே எழுதிட்டேன் ஜீவன்..
கமிசனை வீட்ல பசிப்போம்,இங்க வேண்டாம்

Post a Comment