Saturday, July 17, 2010

விடிவெள்ளியுடன் ஒரு சந்திப்பு-நம்ம தேவா அண்ணன்தான்எதிர்பார்த்து நடப்பதை விட எதிர்ப்பாராமல் நடக்கும் சந்திப்புகள் சுவையானதாக இருக்கக்கூடும்.  அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அண்ணனுக்கு போன் செய்தேன்.  வழக்கமாக உரையாடிவிட்டு வைக்கும் முன், இன்று உங்களை பார்க்க வருகிறேன் என்றேன்.  போன் பேசிய ஐந்து நிமிட வேளையில் மனதில் தோன்றிய ஒன்று.  அலுவலகத்திலிருந்து அரை மணி நேரம் முன்பாகவே கிளம்பிவிட்டேன். தேராவிலிருந்து டேக்ஸி பிடித்து அல் நாதா செல்ல வேண்டும்.  அஞ்சப்பர் முன் நின்று கொண்டு மீண்டும் அழைத்தேன்.  புரிந்தும் புரியாமலும் வழியை கேட்டுக்கொண்டு வேலிதாண்டி சென்றேன். அண்ணன் சொல்லிய பின்புதான் தெரியும் அந்த வேலி துபாயையும்,சார்ஜாவையும் பிரிக்கும் எல்லைக்கோடு என்று.

வெயில் 55 டிகிரி அடித்து முடித்த களைப்பில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தது.  அமீரகத்திற்கு வந்த பின் சார்ஜாவுக்குள் செல்வது இது இரண்டாவது முறை.  அரைமணிநேரத்தேடலுக்குப் பின் ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அடுத்த சோதனை காத்திருந்தது அது 45 மாடிக் கட்டிடம், கீழே லிப்டில் ஏறுவதற்கு வரிசை ஒன்று நின்றுகொண்டிருந்தது.  இது வேரா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.  இருபது நிமிட காத்திருப்பிற்கு பின் எனக்கும் உள்ளே இடம் கிடைத்தது.

அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தேன். உள்ளிருந்து ஒரு வெண்கலக் கவர்ந்திலுக்கும் காந்தக்குரல் கேட்டது. நான் அதிர்ந்து போனேன். போனில் நாம் கேட்டது இந்தக்குரல் இல்லையே. நாம் தவறாக வந்துவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே ஒரு உருவம் கதவை திறந்தது, அந்த நொடியில் நான் இரண்டடி என்னையும் அறியாமல் பின்னால் இழுத்துச்செல்லப்பட்டு பின் உள்ளிழுக்கப்பட்டேன். அந்த அனுபவம் ஒரு பரவசநிலையினைக்கொடுத்தது. கை கொடுத்த அடுத்த வினாடியே என் ஆன்மா உள்நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் ஒரே இருள் சூழ்ந்திருந்தது. எனக்குள் இது சூனியமோ என்ற எண்ணம். ஆனால் உள்ளுணர்வு வந்தவுடன் இது அண்ணனின் வீடு என்று உணர்ந்துகொண்டேன். கவனிக்க தெரிந்துகொள்வதும், உணர்ந்துகொள்வதும் வேறு வேறு.


நீண்ட நெடிய பாதை, பக்கவாட்டில் சமையலறை ஒரு பத்தடி இருக்கும் அதை கடந்த பின் முகப்பறை. உட்காருவதற்கு ஏதுவாக இரண்டு பெரிய பஞ்சுப்பொதிகள் நிரம்பிய நாற்காலிகள். அட்சயாவுக்கு அண்ணிக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அண்ணனைப்பார்த்தேன். ஒரு உண்மையை விளங்கிக்கொண்டேன். கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்வது பொய் என்று. அவருடைய போதி மரத்தையும் கண்டேன். இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார் போதி மரத்துடன். அருவியில் கூட தண்ணீர் வரண்டு காய்ந்துவிடும். ஆனால் இங்கு ஆஹா ஆஹ்ஹா அது ஒரு பரவச அனுபவம்.

என்னுடன் பேச ஆரம்பிக்கும் முன் நானும், அண்ணனும் குடித்து முடித்திருந்தோம் கோலாவை.  ஒரு வழியாக என் பக்கம் வந்தார்,  போதிமரத்தை மூடி வைத்துவிட்டு. இனி பேசலாம் என எத்தனித்த போது அண்டைவீட்டிலிருந்து இருவர் எங்களோடு வந்து இணைந்து
கொண்டார்கள்.

என்னவென்று சொல்வேன் கடவுளின் திருவிளையாடலை.
அங்கிருந்து கிளம்பும் வரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.  இங்கு அவர்களை குறைச்சொல்லவில்லை, எல்லாம் எல்லாம் ஆனதால் எல்லாம் எல்லாம் ஆகிப்போனது. அப்படிப்பட்ட நிலையிலும் அண்ணனும் நானும் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.  சில மின்புத்தகங்களை படிக்கக்கொடுத்தார்.  மணி 10.30 ஐ தாண்டிவிட்டது.  இப்பொழுதும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.  அனைவரிடம் சொல்லிவிட்டு நான் விடைபெற எத்தனிக்கையில் அண்ணியின்(நன்றிகள்) வற்புறுத்தலில் அங்கேயே சாப்பிட்டுவிட்டு விடைப்பெற்றேன். 

அடிக்கடி போனில் பேசி அறிமுகமாகிவிட்டதால் அறிமுகப்படலமும் தேவைப்படவில்லை. போதிமரம்ங்கிறது அவரோட லாப்டாப். 

சீக்கிரமாக முடிந்துவிட்டாதாக தோன்றும் பெரிதாக எழுத வேண்டிய அளவிற்கு விடயங்கள் இல்லாத போது இவ்வளவுதான் எழுத முடிந்தது. அடுத்த சந்திப்பில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் அப்டேட் செய்கிறேன்.


பின்குறிப்பு:  அட்சயாக்கிட்ட உனக்கு பிடிச்ச நிறம் என்னண்ணு கேட்டேன்.  பிங்க் சொல்லுச்சு. ஏன் கேட்டா கேர்ள்ஸ் எல்லாம் கியூட் அதானால அதோட தொடர்ச்சியா சொல்லுச்சு பாய்ஸ்கு பிளாக்னு ஏன்னுகேட்டதுக்கு அவங்க எல்லாம்...... அப்புடின்னுச்சு. உங்கப்பாக்கூடாவான்னு கேட்டேன்.... அதுக்கு...... முடிஞ்சா அண்ணன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

24 comments:

நாஞ்சில் பிரதாப் said...

போதிமர புத்தரை நானும் தரிசித்தேன்...:))

என்ன பேசினீங்கன்னும் எழுதிருக்கலாமே என்னவோய்...நீரு... இதெல்லாம் ஒரு சந்திப்பா...
இதுக்கு அல் நாதா எல்.ஓ.சி-யை வேற தாண்டிருக்கீரு...
ஆமா கடைசில பாப்பா பாய்ஸ் பத்தி என்ன சொன்னாங்க... ஏன் எல்லாரும் கருப்பா இருக்கறோமோம்???

நாஞ்சில் பிரதாப் said...

நம்ம மாம்சு போட்டோவுல கூட சன்கிளாஸ் போட்டீருக்காரே ஏன்னு தெரியுமா???
மச்சான் நீ கேளேன்... மாமு நி கேளேன்....

கே.ஆர்.பி.செந்தில் said...

இனிமையான அனுபவங்கள்தான்.. எனக்கும் ஒரு சந்திப்பின் மகிழ்வை தந்தது உங்கள் பதிவு..
அப்புறம் எனக்கும் கருப்புதான் பிடிக்கும்...

ப.செல்வக்குமார் said...

///இருபது நிமிட காத்திருப்பிற்கு பின் எனக்கும் உள்ளே இடம் கிடைத்தது.///
இவ்ளோ நேரம் காத்திருக்கணுமா ..?

ப.செல்வக்குமார் said...

அருமையான பதிவு அண்ணா ..!! நான் எப்பொழுது தேவா அண்ணாவை பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை .. இந்தியா வந்தா சொல்லுங்கோ..!!

விஜய் said...

கலக்கிடீங்க ஜீவன்,
அண்ணாவ நேர்ல போயி பார்த்து இருக்கீங்க ..வாழ்த்துக்கள் ..நட்புக்கு எல்லை இல்லை அப்டின்னு
நிரூபிச்சுட்டீங்க ஜீவன் ....

அழகா எழுதி இருகீங்க ..வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok. annankitta kettutuvom

சௌந்தர் said...

ஒரு உண்மையை விளங்கிக்கொண்டேன். கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்வது பொய் என்று.///

இதற்கு நடுவில் நான் வந்து பேசினேன் அதை காணவில்லை ...

நாஞ்சில் பிரதாப் said...

// ப.செல்வக்குமார் said...
அருமையான பதிவு அண்ணா ..!! நான் எப்பொழுது தேவா அண்ணாவை பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை .. இந்தியா வந்தா சொல்லுங்கோ..!! //

இப்போ சந்திச்சு என்னப்பண்ணப்போறிங்க தம்பி... நம்ம மாம்சு இருக்காரே...அவரோட ஒருமுகத்தைததான் நீங்க பார்த்திருக்கிங்க...போட்டோவுல பாருங்க ஒரு சைடாத்தன் நிக்கிறார்...
இன்னொரு சைடை பாரத்தீங்க..... அவர் டெரரர்....

ஜீவன்பென்னி said...

//இப்போ சந்திச்சு என்னப்பண்ணப்போறிங்க தம்பி... நம்ம மாம்சு இருக்காரே...அவரோட ஒருமுகத்தைததான் நீங்க பார்த்திருக்கிங்க...போட்டோவுல பாருங்க ஒரு சைடாத்தன் நிக்கிறார்...
இன்னொரு சைடை பாரத்தீங்க..... அவர் டெரரர்...// //கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்வது பொய் என்று.// மாம்ஸ் நாஞ்சிலு கரகிட்ட சொன்னைய்யா. இதுலேர்ந்து தெரியரது என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க.

ஜீவன்பென்னி said...

//சௌந்தர் said...
ஒரு உண்மையை விளங்கிக்கொண்டேன். கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்வது பொய் என்று.///

இதற்கு நடுவில் நான் வந்து பேசினேன் அதை காணவில்லை ... // அவரு உன்கிட்டதானய்யா பேசுனாரு என் கிட்ட எங்க பேசுனாரு. இல்ல பின்னாடி பேசத்தான் விட்டாங்களா நல்லவங்க.

ப.செல்வக்குமார் said...

//இப்போ சந்திச்சு என்னப்பண்ணப்போறிங்க தம்பி... நம்ம மாம்சு இருக்காரே...அவரோட ஒருமுகத்தைததான் நீங்க பார்த்திருக்கிங்க...போட்டோவுல பாருங்க ஒரு சைடாத்தன் நிக்கிறார்...
இன்னொரு சைடை பாரத்தீங்க..... அவர் டெரரர்..///

நான் உங்க கூட டூ ... என் ப்ளாக் பக்கமே வரமாட்டேன்கிரீங்க ...?

ஜீவன்பென்னி said...

விஜய், ரமேஷ், செந்தில், செல்வா அனைவருக்கும் நன்றிகள்.

இராமசாமி கண்ணண் said...

யாருங்க அவரு ?

ஜீவன்பென்னி said...
This comment has been removed by the author.
அருண் பிரசாத் said...

அண்ணன் வீட்டுக்கு நேர்ல போன மாதிரி இருக்கு. மறுபடியும் போய் பேசி அந்த சந்திப்பை பற்றி எழுதுங்க

ஜீவன்பென்னி said...

சூனியம்னா என்னன்னு தெரியுமா, ஆன்மான்னா என்னன்னு தெரியுமா, இல்ல வெளின்னாதான் என்னன்னு தெரியுமா இதெல்லாம் தெரிஞ்சிருந்தா அவரு யாருன்னு நீங்க கேட்டிருக்கவே மாட்டீங்க.

குசும்பன் said...

யாரு ராசா போட்டோவில் இருக்கும் ஹீரோ, அவரு பேரை கூட சொல்ல மாட்டேங்கிறீங்க!

ஜீவன்பென்னி said...

// குசும்பன் said...
யாரு ராசா போட்டோவில் இருக்கும் ஹீரோ, அவரு பேரை கூட சொல்ல மாட்டேங்கிறீங்க!//


அப்புடியே மேல இருக்குற லின்க் கிளிக்கு பண்ணிப்பாருங்களேன். அண்ணன பத்தி சொன்னாப்புரியாதுண்ணே படிச்சாத்தான் தெரியும்.

dheva said...

நல்லா இருக்கு ராசா....உன் நாடகம்....! ஏன் இப்படி....வீட்டுக்கு வந்ததுக்கு இவ்ளோ பில்டப்பா....! வடிவேலு ரேஞ்சுக்கு ஒரு காமெடியனா ஆக்கிட்டீங்க.....!

பத்தா குறைக்கு மாப்ஸ் நாஞ்சில் வேற...பகல்லயே பசுமாடு தெரியாது ... நைட்ல யா எரும மாடு தெரிய போகுது.... உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ அடி.... அதுக்கப்புறம் ஒரு ஆட்டோவுல போட்டு வேறாயாருக்காச்சும் அனுப்பி விடு....


எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன் மாப்ஸ்.... நான் ரொம்ப நல்லவன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ரோஸ்விக் said...

உரையாடியில் பேசியபோதே மனம் பார்க்க விரும்பிய நண்பன் இந்த தேவா... பேசுவோம் தேவா... முடிந்தால் எப்போதாவது சிந்திப்போம்.

இராமசாமி கண்ணண் said...

//ஜீவன்பென்னி said...

சூனியம்னா என்னன்னு தெரியுமா, ஆன்மான்னா என்னன்னு தெரியுமா, இல்ல வெளின்னாதான் என்னன்னு தெரியுமா இதெல்லாம் தெரிஞ்சிருந்தா அவரு யாருன்னு நீங்க கேட்டிருக்கவே மாட்டீங்க. //

ஏன் பொங்குறீங்க ராசா :)

அவரு ரொம்ப நல்லவருதான். அதுக்காக இப்படி ஆளுக்காளு உசுப்பேத்தி ஏன் அவரு உடம்ப ரணகளமாக்குறீங்க :)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல சந்திப்புதான் .வெயில்தான் அதிகமாக அடிக்கிறது அமீரகத்தில் .

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அடடே அண்ணனை சந்திச்சாச்சா :) மகிழ்ச்சி

இங்க எல்லோரும் சொல்றாங்க அண்ணனோட மறுபக்கம் ரொம்ப டெர்ரர்ன்னு....மெய்யாலுமேவா ??

அண்ணனோட அந்த பக்கத்து போட்டோவையும் போட்டா நல்லாயிருக்கும் :))

Post a Comment