Tuesday, July 13, 2010

தொடர்பில்லாதவை






















ஒரு கணம் போதும் என்பேன்
உருப்பெரும் ஒவ்வொன்றும்
அதனதன் அகப்புறப்பொருளுடன்
தொடரும் இல்லை முடிவுரும்
முடிவினையெடுக்க.

இப்படித்தான் இருக்குமா
இல்லை இப்படித்தான் வலிக்குமா
வலிந்து பிரிப்பதில்லை
இது விடுதலையுமில்லை.

நிலைவாசலும் அதன் பின்னோ
அல்லது முன்னோ வரும்
முன்வாசலும் பின்வாசலும்,
இதில் முன்பின் என்று
யார் பிரித்தது ஏன் வந்தது
மறந்து இடித்துக்கொள்ளும்
கூரைவீட்டு நிலைக்கும்
இது பொதுதானே.

இடித்துக்கொள்வது
அதன் பின் வலிப்பது
ஒன்றன் பின் ஒன்றாய்
வரிசைக்கட்டி வரும்
குசலங்களும் வருத்தங்களும்
இதுவும் பொதுதானே.

இங்கு
விடுதலையுமில்லை
விட்டுப்பிரிவதுமில்லை
தொடுவதுமில்லை
தொடர்வதுமில்லை
நீயே தொலைந்துபோ.

1 comment:

விஜய் said...

//நிலைவாசலும் அதன் பின்னோ
அல்லது முன்னோ வரும்
முன்வாசலும் பின்வாசலும்,
இதில் முன்பின் என்று
யார் பிரித்தது ஏன் வந்தது
மறந்து இடித்துக்கொள்ளும்
கூரைவீட்டு நிலைக்கும்
இது பொதுதானே.//

வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் அவுனுக்குள்ளான கனவை தேர்ந்தெடுக்க ஒரு சந்தர்ப்பமாய் அழகான வரிகளை தேர்ந்துடுத்து இருக்கிறீர்கள் ஜீவன்..

மிக்க அருமை...இன்னும் நிறையா எழுத என் வாழ்த்துக்கள் ...

Post a Comment