இந்த பதிவுல துபைக்கு வந்தப்போ ஏற்பட்ட ஒரு அனுபவத்த சொல்லாலாம்னு இருக்கேன்.
துபை தேரா பகுதி நம்ம வசிக்குமிடம். பொதுவா தமிழ் மக்களும், தமிழ் ஆளுங்க கடைகளும், வாரக்கடைசில அனைவரும் கூடும் இடமா இருக்கும்.
வந்த புதுசுல வெளியில போறப்போ அறைல இருந்த அண்ணாச்சி
பாத்து பத்திறமா போயிட்டுவாப்பான்னாரு.
புதுசுங்கறதால சொல்லுறாரு போல நானும் தலைய ஆட்டிட்டு
கிளம்பிட்டேன். தேரா பஜார் ஏரியால நேறய சந்து சந்தா இருக்கும்,
சந்தோட முடிவுல குட்டையா கட்டையா பங்களாதேஸ் காரைங்க
நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போறப்பல்லாம் நம்மல பாத்து ஏதோ ஒன்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க. நான் அத பெருசா காதுல வாங்கிக்காம கடந்து போய்கிட்டேயிருப்பேன். ஒரு நாள் ஒருத்தன் நேரா வந்து கைய கொடுத்தான். நானும் கையகொடுத்தேன். "லடுக்கிச்சாயே" அப்போதான் அந்த வார்த்தைய முதல் முதல்ல கேட்டேன். ஒன்னும் புரியாம நமக்கு தெரிஞ்ச இந்தில "கியா" ன்னேன். "அச்சா லடுக்கிஹே 30 திர்ஹாம்" னான் அப்பவும் விளங்கல, எதேச்சையா அந்த பக்கம் வந்த அறை அண்ணாச்சி இத பார்த்துட்டு ஓடிவந்து தலைல அடிச்சுக்காத குறயா அறைக்கு கூட்டிட்டுவந்துட்டார். வந்ததுக்கு பின்னாடி "இப்புடி இப்புடி அப்புடி அப்புடி னு" பெரிய விரிவுரையே நடத்துனார். அன்னைலேர்ந்து சந்துகள பார்த்தாலே பத்தடித் தள்ளி நடக்க ஆரம்பிச்சேன்.
அப்புடியும் சனி நம்மல விடுல இப்போ ஒரு பெண் வடிவுல. துபைல நான் பார்த்தா வகைல கருப்பின பெண்கள் நல்லா பருமனா பார்க்கவே பயமா இருப்பாங்க. அண்ணாச்சி அவங்கள பத்தியும் விரிவுரை நடத்தியிருந்தால கொஞ்சம் எச்சரிக்கையவே இருந்துட்டு இருந்தேன்.
ஒரு நாள் பதினோரு மணியிருக்கு கொஞ்சம் ஆள் அரவம் இல்லாத ஏரியா நடந்து வந்துகிட்டிருந்தேன். திடீர்னு பின்னாடி போன கை முன்னாடி வரல என்னாடான்னு பார்த்தா கைய ஒரு பொண்ணு புடிச்சுக்கிட்டிருந்துச்சி. நான் திரும்புனதும் " im sudani" அப்புடின்னுச்சு நானும் பதிலுக்கு விட்டுகொடுக்காம பின்னாடி நடக்க போற வில்லங்கம் தெரியாம ரொம்ப கம்பீரமா "im indian" னேன். இப்போ கை கொஞ்சம் இருகுச்சு வலிக்குர மாதிரி இல்ல நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுச்சு. பொண்ணுன்னு சொன்னேன்ல அத பொம்பலன்னு மாத்திக்கோங்க. மறுபடியும் "im sudani" ன்னு சொன்னா. நான் "so what?" னேன்.
"GIVE ME 40 DIRHAM, OTHERWISE I WILL CALL THE POLICE" இப்போ நல்லாவே புரிஞ்சு போச்சு அம்மணி யாருன்னு. போலிஸ்னு சொன்னோன்னே பதட்டத்துல வியற்க ஆரம்பிச்சுடுச்சு. போய்தொலாயுது காச எடுத்து கொடுத்துட்டேன். "shall we go? " ன்னு கேட்டா. அடங்கொய்யால கைய ஒதரிட்டு நடக்க ஆரம்பிச்சுடேன். ஒரு விசியத்துல அவள பாராட்டாம இருக்க முடியல கொடுத்தா அம்பது திர்ஹம்சுக்கு நாப்பது போக மீதி பத்த கொடுத்தா. என்ன ஒரு நேர்மை.
8 comments:
//அம்பது திர்ஹம்சுக்கு நாப்பது போக மீதி பத்த கொடுத்தா. என்ன ஒரு நேர்மை.//
அம்புட்டு நேர்மையாவா நடந்துகிறாங்க ..??
கொஞ்சம் எச்சரிக்கையவே இருந்துட்டு இருந்தேன்.//
இன்னும் எச்சரிக்கையா இருக்கனும் பாஸ்
அவ்ளோதானா.... என்னவோய் சட்டுனு முடிச்சுட்டீரு... அது எப்படி வோய் உன்னைப்பார்த்து கரீட்டா புடிக்கிரானுங்க... ஒரு கருப்பு டெரர் இப்படி என்னையும் புடிச்சுது...அடிங்...சொல்லிட்டு எஸகேப்பு....
நாஞ்சில் பிரதாப் said...
அவ்ளோதானா.... என்னவோய் சட்டுனு முடிச்சுட்டீரு... அது எப்படி வோய் உன்னைப்பார்த்து கரீட்டா புடிக்கிரானுங்க... ஒரு கருப்பு டெரர் இப்படி என்னையும் புடிச்சுது...அடிங்...சொல்லிட்டு எஸகேப்பு...
மாப்பு உண்மையா நீ எஸ்கேப்பு ஆனியா இல்ல மாமா வந்து உன்னைய காப்பாத்தினாரா.
//என்ன ஒரு நேர்மை//
:)
http://vaarththai.wordpress.com
Nalla comedy..
lols
அல் மத்தினா சாலையிலும் இந்த தொந்தரவு இருக்கு.ஒரு முறை அரை இருட்டில் ஒருவன் என்னைப்பார்த்து இந்தி மலையாளம் தமிழ் இருக்கு என்றான்.அவனைக்கடந்து சிறிது நேரம் கழித்து தான் எனக்கு அதன் அர்த்தம் உறைக்க ஆரம்பித்தது.
Post a Comment