நண்பர் ஒருவருடைய தொல்லைப்பேசி தொலைந்துவிட்டது. இது நடந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது. தொலைப்பேசியின் விலை 20,000 ரூபாயை தொடும். முக்கியமான விசயம் விலையில்லை அதில் சேமித்து வைத்து இருக்கக்கூடிய அவரது தொழில் தொடர்பான தொகுப்புகள். என்ன செய்வது என்று தெரியாமல் என்னிடம் வந்தார். நான் அவரைக் கூப்பிட்டுக்கொண்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்காகச் சென்றேன்.
காவல் நிலையத்தில் புகார் பதிவாளர் இல்லாத காரணத்தால் சிறிது நேரம் காத்திருக்கச்சொன்னார்கள். எங்கள் பக்கத்தில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். எங்களிடம் என்ன வேலையாக வந்திருக்கின்றீர்கள் என்று விசாரித்து விட்டு, அவர் வேறொரு ஆலோசை கூறினார். அவர் ஆலோசனையின் பேரில், பேருந்தில் தொலைந்து போயிருந்த காரணத்தால் நண்பர் இறங்கிய பேருந்து நிலையத்திற்குச் சென்று விசாரித்தோம்.
வெயில் அடித்து காயப்போட்டுக்கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தின் அலுவலகத்திற்குச் சென்று நாங்கள் வந்த காரணத்தை விளக்கிவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திருந்தோம். எங்களை வெய்டிங் ரூமில் காத்திருக்கச்சொல்லிவிட்டு கணினியில் மும்முராமாக வேலைச் செய்யத் தொடங்கினார். எங்கள் இரண்டு பேருக்கும் நம்பிக்கையில்லை கிடைக்கும் என்று, ஏனென்றால் தொலைந்து இன்றோடு ஒரு வாரக் காலமாகிவிட்டது. எடுத்தவர் நல்லவராக இருந்திருந்தால் போன் செய்த போதே எடுத்துப்பேசியிருப்பார். ஆனால் அது அணைக்கப்பட்டு இருந்தது.
அரை மணி நேரக்காத்திருக்குப் பின் எங்களை அழைத்தனர். என்று தொலைந்தது, எங்கு தொலைந்தது, எப்போது தொலைந்தது, அப்பொது எத்தனை மணியிருக்கும், அதன் நிறம், தயாரிப்பாளர் மற்றும் குறியீட்டு எண் என அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டு மீண்டும் எங்களைக் காத்திருக்கச்சொன்னார். சிறிது நம்பிக்கை வந்தது. நம் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதால். சிறிது நேரம் கழித்து எங்களை அழைத்து நண்பரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிப் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு கடிதத்தை காகித உறையில் போட்டு ஒரு விலாசத்தைக்கூறி அங்குப் போகுமாறு கூறினார்.
நாங்கள் அவரிடம் நன்றி கூறி விடைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்துக் கிளம்பி அவர் கூறிய இடத்திற்குச் சென்றோம். அந்த அலுவலகம் முழுவதும் பழைய கனரகவாகனங்கள், குப்பையைப்போன்று குவியலாகக்கிடந்தன. அவற்றின் மத்தியில் அலுவலகக்கட்டிடம் நல்ல விசாலமான முறையில் கட்டப்பட்டிருந்தது. உள் நுழையும் போதே குளிந்த காற்று உடலையும் சேர்த்து மனதையும் வருடிச்சென்றது. வரவேற்பறையில் இருந்த ஒருவர் எங்களிடம் வெயில் அதிகமா இருக்கிறதா என்று கேட்டுவிட்டு எங்களை ஒரு இடத்தைக்காட்டி ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார். இருவரும் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் . அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்ட படியால் இதை கவனிக்கவில்லை.
நாங்கள் அவர் காட்டிய அறையில் சென்று அமர்ந்து கொண்டோம். அது குளிரூட்டப்பட்ட அரை. அவர் கூறியதற்கும் காரணம் இருக்கின்றது. எங்கள் சட்டைகள் வியர்வையில் நனைந்து தொப்பல் தொப்பலாக இருந்தது. பின் ஒருவர் வந்து குடிப்பதற்குத் தண்ணீரும், அதனுடன் பழச்சாரையும் கொடுத்துவிட்டுப்போனார். மீண்டும் அதே ரேகைகள். இது அரசு அலுவலகம் தானா. பெருமூச்சும், ஆச்சரியங்களும் மாறி மாறி வந்துபோனது. மீண்டும் அதே அலுவலர் வந்து அழைத்து என்ன பிரச்சனையென்று கேட்க நாங்கள் அந்தக்கடிதத்தை அவரிடம் கொடுத்தோம். படித்து விட்டு மீண்டும் எங்களை காத்திருக்கச்சொன்னார். பத்து நிமிட நேர இடைவெளியில் அலைப்பேசி எங்களிடம் வந்து சேர்ந்தது. ஒரு சிறு கீரல் கூட இல்லாமல் விட்டது விட்ட படியே எங்கள் கைகளில். நண்பரின் மன மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.
ஆச்சரியங்கள் அதோடு முடியவில்லை. எங்களிடம் எங்கே போகவேண்டும் என்றார். நாங்கள் இடத்தைச்சொல்லவும் நானும் அங்கே தான் செல்கிறேன். வாருங்கள் என்று அழைத்து வந்து எங்கள் இடத்தில் விட்டுவிட, அவரிடம் நன்றி சொல்லி விடைப்பெற்றோம். ஒரே நாளில் அதுவும் வெகு சுலபமாக எங்கள் வேலை முடிந்தது.
இது நடந்தது அமீரகத்தில். அந்த அலுவலர் தனது பணியைத்தான் செய்தார். ஆனால் அதில் மனிதமும், நேயமும் கலந்திருந்தது. தொலைந்த ஒன்று கிடைத்த மகிழ்ச்சியிருந்தாலும், ஒவ்வொரு அதிர்ச்சியின் போதும் நம் நாட்டின் நினைவுவராமலில்லை. இது இந்தியாவில் நடந்திருக்குமானால். திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, அப்படியே நல்லவர்கள் யாராவது அதை இப்படி ஒப்படைத்திருந்தாலும் இத்தனை எளிதில் கிடைத்துவிடுமா. அங்கே இங்கே என்று சில ஆயிரங்கள் நம்மை விட்டுப் போயிருக்கக்கூடும். ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பதற்கோ, இத்தனையும் கொடுத்த பின்பு நமக்கு கிடைக்க வேண்டிய குறைநதபட்ச மரியாதைக்கோ உத்திரவாதம் கிடையாது. மனிதத்திற்கு விலையென்ன என்றிருப்பார்கள்.
இந்த சம்பவத்தில் எனக்கு பொருள் கிடைத்தது என்பதை விட மனிதம் என்னும் அடிப்படை உணர்வு அற்றுப்போகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அது ஒவ்வோரு மனிதனுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றது. வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது.
மரம் வளர்ப்போம் மனிதமும் வளர்ப்போம்.
17 comments:
மரம் வளர்ப்போம் மனிதமும் வளர்ப்போம்.
வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது//
நீங்கள் தொடர்ந்து கலக்குங்கள்
எவ்வளவு வித்யாசம் இந்தியாவிற்க்கும் அதற்கும்
இந்தியா இப்டி இருந்தா எப்டி இருக்கும் ???
பகிர்ந்தமைக்கு நன்றி ஜீவன் :))
என்னய்யா இது... துபாயும் இந்தியாவும் ஒண்ணா....!!
இந்தியாவோட மக்கள் தொகை என்ன? பிரச்சனைகள் என்ன... இந்தமாதிரி சேவைகள்லாம் எதிர்பார்க்கவே கூடாது...
நீங்க சொன்னாமாதிரி பண்ணாத்தான் நம்மளை மாதிரி ஆளுங்க இங்க பொழைக்கவும், பிசினஸ் பண்ணவும் வருவானுங்க... நாமமல்லாம் அவங்களக்கு ஒரு கஸ்டமர் மாதிரிப்பா...அவனுங்க பண்ணித்தான் ஆகனும்...
கடைசியில இது கனவா இருக்குமோன்னு நினைச்சேன்... அதைவிட பெரிய திருப்பமா இது அமீரகம்னு சொல்லிட்டீங்க... ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்... இந்தியாவுல இதுல ஒரு வரிகூட சாத்தியமில்லை...
ஏன்னா, என் வாழ்க்கையில இதுவரை ஒரு தடவைதான் லஞ்சம் குடுத்து இருக்கேன்... 100 ரூப.. போன வருஷம் செல்ஃபோன் தொலைஞ்சுபோயி போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கறப்போ, மூணு போலிஸ் முறைச்ச பார்வையோட “ஃபீஸ் குடுத்துட்டுப்போங்க” ன்னு டாக்டர் மாதிரி கேட்டாங்க... ”எதுக்கு”-ன்னு கேட்க நினைச்சது வாயை விட்டு வெளியே வரல... குடுத்துட்டு வந்தேன்...
nalla anubavam.nam naattai ninaiththu peru moochchu thaan vidavendi irukkirathu.
//மனிதம் என்னும் அடிப்படை உணர்வு அற்றுப்போகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அது ஒவ்வோரு மனிதனுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றது. வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது.//
நல்லா சொன்னிங்க பென்னி..
//என்னய்யா இது... துபாயும் இந்தியாவும் ஒண்ணா....!!
இந்தியாவோட மக்கள் தொகை என்ன? பிரச்சனைகள் என்ன... இந்தமாதிரி சேவைகள்லாம் எதிர்பார்க்கவே கூடாது... // மாம்ஸ் இங்க சூஸு மேட்டரே இல்ல. பேசக்கூடிய வார்த்தைகளும், நம்மை நடத்தும் விதமும்தான் மேட்டரு.
அதானே பார்த்தேன்.. படிக்கும்போது மலைப்பாக இருந்தது நம்ம ஊர்தானா? அடடா என்ன ஒரு மாதரம் என்று..?
அமீரகத்தில் என்றவுடன்தான் பெருமூச்சு வந்தது.. சமீபத்தில் மலேசியாவில் நம் சக பதிவர் செல்போனை அவரை அழைத்துவந்த டாக்சி டிரைவரே ஆட்டைய போட்டதை பதிவு எழுதியிருந்தார்..
அமீரகத்திற்கு என் வந்தனம்...
இங்க டாக்சில போகும் போது பேச ஆரம்பிச்சோம்னா ஒவ்வொருத்தருக்கிட்டையும் நிறைய கதை இருக்கும், அடிக்கடி டாக்சில போறதால பேச்சுக்கொடுத்த்தோம்னா சொல்லிகிட்டே போவாங்க. ஒரு பதிவு இல்ல 100 பதிவா எழுதிக்கிட்டே போகலாம். அவ்வளவு இருக்கு.
அமீரகத்திலாவது இந்த மனிதம் என்னும் அடிப்படை உணர்வு கொஞ்சமாவது இருக்கு இந்தியாவில் அதையெல்லாம் தொலைத்து பல வருடங்களாக தேடும் நிலை . நல்ல பதிவு சிந்திக்கத் தூண்டியது . பகிர்வுக்கு நன்றி
அருமையான பதிவு நண்பா,இங்க எனக்கு ஒருமுறை ஷார்ஜா கான்கோர்டிலும் இதேபோல மொபைல் தொலைந்து கிடைத்தது,இதுக்குன்னே லெட்ஜர் எல்லாம் மெயிண்டைன் பண்றாங்க.
ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..! அந்த மாதிரி நம்ம ஊரிலும் எல்லோரும் இருந்தா மகிழ்ச்சி ..!
aYYA, COMMENT MODERATION POTTUKITTU APPURAM YEN
NEENGAL ANONY OPTION OPEN PANNI VAIKKA VENDUM
YENGE YENATHU COMMENT
அனானி அவர்களுக்கு இங்கு நாகரிகமான முறையில் எழுதி எனது கருத்துறை எங்கே என்று கேட்கும் நீங்கள் இதே முறையில் உங்கள் கருந்துக்களை பதிந்திருந்தால் வெளியிட்டிருப்பேன்.
//இங்க சூஸு மேட்டரே இல்ல. பேசக்கூடிய வார்த்தைகளும், நம்மை நடத்தும் விதமும்தான் மேட்டரு. //
அது
சௌந்தர்
ஜில்தண்ணி - யோகேஷ்
ஜெய்
Riyas
கே.ஆர்.பி.செந்தில்
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
|கீதப்ப்ரியன்|
ப.செல்வக்குமார்
கரிசல்காரன் அனைவருக்கும் நன்றிகள்.
கொஞ்சம் இந்தியாவுல இதை எதிர்பார்க்கிறது தப்பு தான், இருந்தாலும் இந்தியாவும் ஒரு நாள் மாறும், அது வெகு தொலைவில் இல்லை...விரைவில் முடியும் நாம் நினைத்தால்,,
அருமையான் சிந்திக்க தூண்டும் பதிவு ஜீவன்
Post a Comment