தொடரும் பயணங்களில்
வழிந்தோடிக்கொண்டிருக்கின்றது
என்னுள் நிறைந்திருக்கும்
உன் சாரல் மழை.
நினைவுகளை நின்று விட்ட மழையின்
ஒற்றைத் துளி அடித்துச் செல்ல
சோ வென்ற மழை மொழி புதிதாய்
நிரம்பத்தொடங்குகின்றது.
காயத் தொடங்கும் முற்றத்து வாசலில்
குறுக்கும் நெடுக்குமாய் நேர்கோட்டில்
அணி சேரத்தொடங்கினர்
என் அழைய விருந்தாளிகள்.
மழைமேகங்கள் விலகிச்செல்ல
ஒற்றைத்துளியாய் சுழ் எங்கும்
பசுமை போர்த்திக்கொண்டு
பறவையின் சிலும்பல்களில்
சிந்திக்கொண்டிருந்தது என்னின்
ஒற்றை மழைத்துளி.
7 comments:
தொடரும் பயணங்களில்
வழிந்தோடிக்கொண்டிருக்கின்றது
என்னுள் நிறைந்திருக்கும்
உன் சாரல் மழை.///
குடை இருக்கா இல்லை யாராவது கொண்டு வருவாங்களா
ஒரு படைப்பாளிக்கு எதுவெல்லாம் கருவகிறது பாருங்கள்...
இங்கே தம்பிக்குக் ஒற்றை மழைத்துளி....அது எங்கேல்ல்லாம் இருக்கிறதோ அவை எல்லாம் கவிதையாக பார்க்கத் தெரிந்த ஒரு பூ போன்ற மனதின் உணர்வில் இருந்து ஜனித்திருக்கும் கவிதை அழகுதானே....
எல்லா திறமைகளும் இருந்தும் அதை எழுதத்தெரிந்தும் அதை ஏன் எழுத மட்டேன்ற நீ...
செம தம்பி! வாழ்த்துக்கள்!
ஆமாம். இவருக்கு மட்டும் துபாய்ல மழை பேய்து... போடாங்க...
என்ன துபாய் லே மழையா.....சொல்லவே இல்லை
ஓவரா மழையில நனையாதீங்கப்பு...உடம்புக்கு நல்லதில்ல...
மழையின் மூலமாக வெளிப்பட்ட உங்களின் உணர்வுகள் அற்புதம்...
//என் அழைய விருந்தாளிகள்.//
நல்ல ரசனை.
//காயத் தொடங்கும் முற்றத்து வாசலில்
குறுக்கும் நெடுக்குமாய் நேர்கோட்டில்
அணி சேரத்தொடங்கினர்
என் அழைய விருந்தாளிகள்./
எறும்பு ..?
Post a Comment