Friday, January 07, 2011

தென்மேற்குப் பருவகாற்று



உலகத்துல இருக்குற படத்த எல்லாம் தேடித்தேடி பாக்குறப்போ நம்ம ஊர்க்காரங்க ஏன் இப்புடி எல்லாம் எடுக்கமாட்டேங்குறாங்கன்னு ஒரு ஏக்கம் இருக்கும்.  அந்த ஏக்கத்த இந்தப்படத்தோடு ஒரு பாட்டே போக்கிடுச்சு. ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு அம்மா பாடல்.  படம் தொடங்கும் போதே டைடில் பின்னனியில் நம்மை படத்தோட பயணிக்க வைக்குது.  ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை.   மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு நிரந்தரமான ஒர் அமைதியை பறவவிட்டு......

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.....
என்னைக் கல்லொடச்சு வளர்த்த நீயே.....
முள்ளுக்காட்டில் முளச்ச தாயே...
என்னை முள்ளுத்தைக்க விடல நீயே......

இப்புடிப்போகும் பாடல்தான் படத்தின் முடிவில் காட்சிகளின் பின்னனியில் தாக்கத்தைக் கொடுத்து மனதைக் கனத்துப்போக வைக்கின்றது.  படத்தினைப் பார்த்துவிட்டு இதை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கில்லை.   இதற்கு முன்பு கனா கண்டேன் படத்தின் முதல் பாடலில் "தாய் சொல்லும் உறவை வைத்தே உலகம் சொந்தம்" என்று ஆரம்பித்து அந்தப்பாடலின் பின்னனியில் ஒரு கதையை சொல்லி முடித்திருப்பார் இயக்குனர்.   இரண்டு பாடலுக்கும் சொந்தக்காரர் வைரமுத்து அவர்கள்.

இந்த மாதிர் பாடல்கள் வராதா என்று நீண்ட நாட்களாக இருந்த எனது ஏக்கத்தை தீர்த்து வைத்த தென்மேற்கு பருவக்காற்று குழுவினருக்கும் படம் முழுவதும் இரைச்சல் இல்லாத பாடல்களை தெளிவாகப் புரியும் வகையில் இசையமைத்து இசையமைப்பாளருக்கும் வாய்ப்பினைக் கொடுத்த இயக்குனருக்கும் நன்றிகள்.


இந்த நொடி வரையிலுல் காட்சிகளின் பின்னனியில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.  யாருமற்ற தனிமையில் கேட்டுப்பாருங்கள் உணர்வீர்கள் அதன் வலிமையை.

10 comments:

எஸ்.கே said...

பாடல் கேட்க இனிமையா இருக்கு!

Prabu M said...

அருமையான பாடல்....
உணர்ந்து எழுதியிருக்கீங்க நண்பரே..

அன்புடன் நான் said...

ஒரு நல்ல திரைப்படத்திற்கு நீங்க கொடுத்த இடத்திற்கும்.....தரமான பாடலை வெளிக்காட்டியதற்கும் என் வணக்கம் ... நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

paadalkal anaiththume nenjil nintravai...

nalla pathivu

arasan said...

அழகான இசையுடன் அருமையான வரிகளுடன் சேர்த்து கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு
நன்றிகள் கூற கடமைப்பட்டுள்ளோம் ...
நல்ல படைப்புக்களை ஆதரித்த உங்களுக்கும் மிக்க நன்றி

Chitra said...

அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

Philosophy Prabhakaran said...

படம் இன்னும் பார்க்கலையா... ரத்தினச்சுருக்கமா சொல்லிட்டீங்க...

செல்வா said...

//கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.....
என்னைக் கல்லொடச்சு வளர்த்த நீயே.....
முள்ளுக்காட்டில் முளச்ச தாயே...
என்னை முள்ளுத்தைக்க விடல நீயே......//

இந்தப்பாட்டு நானும் கேட்டிருக்கிறேன் , உண்மைலேயே ரொம்ப அருமையா இருக்கும் அண்ணா! அடிக்கடி FM ல போடுவாங்க!

ஜீவன்பென்னி said...

//படம் இன்னும் பார்க்கலையா... ரத்தினச்சுருக்கமா சொல்லிட்டீங்க..// ரத்தின சுருக்கம்லாம் இல்லங்க, என்னைய எது பாதிச்சதோ அதப்பத்தி எழுதியிருக்கேன்.

Asiya Omar said...

உணர்ந்து எழுதும் உங்கள் எழுத்துக்களே மனதை தொடுகிறது,நிச்சயம் இந்த பாடல் அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.மிக்க நன்றி.

Post a Comment