Monday, February 21, 2011

கூடிக்கழித்த பொழுதுகள்

உதட்டோரம் வழியும் பிரியங்களை..
எதை கொண்டு துடைக்கப்போகிறாய்..
விழியில் தொடங்கி விழியில் முடியும் பார்வை கொண்டு..
வழிநடத்திச்சென்றாயே விழிப்பெண்ணே...

பிரகாசமான இரவுகளின் துவக்க விழா...
நிலவுகளும் நட்சத்திரங்களும் விழித்திருக்க..
எனக்குள் உன்னையேற்றி வைத்து..
விழிக்குள் விழிமூடி இமைக்குள் பேசிக்கொண்டோம்...

காத்திருப்புகளை எனக்கான கவிதைகளாக மாற்றினாயே..
கவிதைக்காணவே காத்திருப்புகள் தொடர்கதையானதோ...
(என்) கவிதையின் தொடக்கம் எது வென்று அறிவேனடி..
பிரியத்தின் கவிதைகாலமது...
.
விரல் பிடித்து நடக்கவே உரசல்களின் வழி அழைத்தேன்..
சட்டென கரம் பிடித்து கன்னத்தில் இச்சென முத்தம் பதித்தாய்..
திகைத்துப்போனேனடி நித்தம் உன் செய்கைகளால்..
கள்ளமில்லா கள்ளி அவள்..

"நீ ஒரு குழந்தடா"
இதை நீ சொல்லாத நாளில்லை..
நானும் காரணம் கேட்டதில்லை..

முடிக்கவியலாமல் தடுமாறுகிறேன்..
எங்கிருக்கிறாய் நீ..
வா பெண்ணே...
உன் கரம்பற்றி நடக்கவே
நாம் கடந்து சென்ற வழிப்பாதைகள்
காத்திருக்கின்றன..







  

6 comments:

எஸ்.கே said...

இனிமையான வரிகள்!

சுபத்ரா said...

அழகான ஒரு காதல் கவிதை! ரசித்தேன். காத்திருப்புகளில் கூட காதல் சுகமானது போல :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப அழகான அழைப்பு தான்.. உங்க விழிப் பெண்ணுக்கு...!

நல்லா இருக்குங்க... கவிதை :)
வாழ்த்துக்கள்.

Chitra said...

அழகான கவிதை..... பாராட்டுக்கள்!

dheva said...

என்ன சமீரு........இப்டி கிளம்பிட்ட...........

சரி சரி நல்லாருக்கு சமீர் அண்ணே!

ஜீவன்பென்னி said...

தேவாண்ணா..............ஓக்கேண்ணா.

Post a Comment