Sunday, March 21, 2010

(18+) விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்

இளகிய மனதுடையவர்கள் பார்க்கவேண்டாம்.



இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.

ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

மற்றபடி

வாழ்க (வல்லரசு) இந்தியா...

http://pathipakkam.blogspot.com/2009/11/blog-post.html

13 comments:

பதி said...

இது போன்ற நிகழ்வுகளை மேலும் மற்றவர்களுக்கு அறியத் தாருங்கள்.

ஆனால், தலைப்பிலிருந்து, பதிவில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் வரை எங்கிருந்து எடுத்தீர்கள் என்றாவது சொல்லியிருக்கலாமே??

http://pathipakkam.blogspot.com/2009/11/blog-post.html

Anonymous said...

Terrorists are not born they are made like this incidents.

Still India is not get freedom from Caste and Untouchability.

I am very shame to be watching this as a common man.

Anonymous said...

"A great civilization is not conquered from without until it has destroyed itself from within."-Will Durant

-Rajasekaran

ரவிசாந் said...

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.

Anonymous said...

அட ச்சே , இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே எனக்கு வெட்கமாகவும், பெருத்த அவமானமாகவும் இருக்கிறது.

Anonymous said...

படியின் பின்னூட்டத்தை வெளியிட்டு இருப்பதற்கு வாழ்த்துக்கள்

ஜீவன்பென்னி said...

// பதி.........
இது போன்ற நிகழ்வுகளை மேலும் மற்றவர்களுக்கு அறியத் தாருங்கள்.

ஆனால், தலைப்பிலிருந்து, பதிவில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் வரை எங்கிருந்து எடுத்தீர்கள் என்றாவது சொல்லியிருக்கலாமே??

http://pathipakkam.blogspot.com/2009/11/blog-post.html //

பதி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. பதிவின் இறுதியில் இணையதள முகவரியை கொடுத்துள்ளேனே.

ஜீவன்பென்னி said...

// பதி.........
இது போன்ற நிகழ்வுகளை மேலும் மற்றவர்களுக்கு அறியத் தாருங்கள்.

ஆனால், தலைப்பிலிருந்து, பதிவில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் வரை எங்கிருந்து எடுத்தீர்கள் என்றாவது சொல்லியிருக்கலாமே??

http://pathipakkam.blogspot.com/2009/11/blog-post.html //

பதி உங்கள் பதிவினை படித்தேன். manithan.com உங்கள் பதிவை வரிக்கு வரிக்கு அப்படியே வெளியிட்டுள்ளனர். தவறுக்கு வருந்துகிறேன்.

பதி said...

ஜீவன்,

புரிந்து கொண்டேன். இதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லை. சுட்டிக்காட்ட விரும்பினேன், குற்றம் சாட்ட அல்ல. அவ்வளவே.

மற்றபடி, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல், இது போன்ற நிகழ்வுகளை மற்றவர்களுக்கு அறியத் தாருங்கள். ஏனெனில், நம்மிடையே ஏராளமான "காமன்மேன்"கள் உலாவிக் கொண்டுள்ளனர்..

Unknown said...

பாதிவரை பார்த்ததற்கே தாங்க முடியவில்லை. இன்னும் மக்களே மாக்களாய் வாழ்கின்ற நாடு. அவமானம். இந்த காலத்திலும் துணியுடுத்தி காட்டு விலங்குகள் நாட்டில் அலையும் கொடுமை.

குலவுசனப்பிரியன் said...

விலங்குகள் கொலை வெய்வதில்லை, அவற்றோடு இந்த கொடியவர்களை ஒப்பிடாதீர்கள்.

//
ஜீவன் பதியின் பின்னூட்டத்தை அனுமதித்தற்கு நன்றி. உங்கள் நேர்மையையும் பதியின் பெருந்தன்மையும் பாராட்ட வேண்டும்.

t sekar said...

மிகவும் வருத்தமான நிகழ்வு !!!

நாம் நாகரிகமான சமுதாயத்தில் வாழவில்லை !!!

நமது -கல்வி -முறை -நாகரிகத்தை -சொல்லிதரவில்லை

த சேகர்

ஜீவன்பென்னி said...

வருகைக்கு நன்றிகள்........

பதி
அனானிகள்
ராஜசேகரன்
ரவிசாந்
சுல்தான்
குலவுசனப்பிரியன்
சேகர்.

Post a Comment