இது அங்காடித்தெரு படத்தினைப் பற்றியப்பதிவு அல்ல. ஒரு துணி அங்காடியில் ஒரு நாள் வேலைப்பார்த்த அனுபவம். திருச்சியில் தீபாவளியின் போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் துணிக்கடையினில் பகுதி நேர வேலைக்கு போவார்கள். என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது வீட்டில் அனுமதி கிடைக்காது என்று மறுத்துவிடுவேன்.
கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த பொழுது நண்பன் அழைத்தான், (என்ன வீட்டில் இருந்த பொழுது?வெட்டியா இருந்த
பொழுதுன்னு சொல்லு) வீட்டில் கேட்டபொழுது அனுமதி கிடைத்தது. இருபத்தி நான்கு மணி நேர வேலை, 500 ருபாய் சம்பளம். ரமலான் நோன்பு நேரமும் கூட. சரியாக காலை 9 மணியளவில் கடையில் நுழைந்தோம். நாங்கள் மூன்று பேர். எந்த விதமான முன் அனுபவமும் கிடையாது. கடையின் முதலாளி வட நாட்டுக்காரர். வந்தவுடன் எங்களை மேலிருந்து கீழ் வரை அளந்தார். என்னைப்பார்த்துவிட்டு நீ வெளியே நின்று கூட்டம் அதிகமாகும் பொழுது வருவோரை கட்டுப்படுத்தவும்,
வாங்கிச் செல்லும் பொருட்களையும் பில்லையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தினார்.
காலையில் பெரிதாக கூட்டம் இல்லை. ஒருவர் இருவராக வந்து கொண்டிருந்தனர். ஒரு வாரக்காய்ச்சலில் இருந்து மீண்டு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. நான் நினைத்த அளவிற்கு கடினமாக இல்லை என்று எண்ணிக்கொண்டேன். மதியத்திற்கு பின் கூட்டம்
அதிகமாகிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் உள்ளே ஆள் தேவைப்பட நானும் உள்ளே அழைக்கப்பட்டேன். நமது மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள். எத்தனை விதமான முகங்கள், ரசனைகள்,விருப்பங்கள், சண்டைகள்,கோபங்கள் இன்னும் பல என்று அனைத்தையும் கண்டேன். 5 வருடங்கள் கடந்த பின்னும் என்னுள் சிரிப்பினை உண்டாக்குகின்றன. அந்த சுவாரசியங்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வருபவர்கள் அதை இதை என்று அனைத்தையும் எடுத்துப்போட சொல்ல ஒவ்வொன்றாக எடுத்து போடுவதும் பின்பு மடித்து எடுத்து வைப்பதும், சிறிது நேரத்தில் சலித்துப்போனது.
பொருட்களுக்கு விலை சொல்வதில்தான் திறமையே இருக்கின்றது.
இன்று வரையிலும் நான் அங்கு விலை சொல்லி விற்றப்பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவில்லை. பேண்ட் வகை துணிகள் தரத்தினைப்பொருத்து விலை வேறுபடும். இது அனைத்து வகைக்கும் பொருந்தும் என்றாலும், அன்று நான் அதை விற்ற விதம் இன்று வரையிலும் புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. அதை இறுதியில் சொல்கிறேன்.
நாளை தீபாவளி. மாலை 6 மணி , கூட்டம் சமாளிக்கக்கூடிய அளவிலேயே இருந்தது. என் நண்பன் கூட்டம் நிறைய இருக்கும் சமாளிக்க முடியாது என்று சொல்லியிருந்தான். நோன்பு திறப்பதற்காக 20 நிமிடங்கள் முடப்பட்டது. வெளியே கூட்டம் முண்டியடித்து கொண்டிருந்தது. விட்டால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுவது போல் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள். நான் கதவைத்திறந்து வெளியே சென்று கூட்டத்தை சமாளிக்க முயன்று தோற்றுப்போனேன்.
நல்ல உயரம், கையில் மஞ்சள் பை, கருத்த மேனி பார்த்தவுடனே சொல்லிவிடலாம் கிராமத்தான் என்று. கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு என்னிடம் வந்து சேர்ந்தார்.
அந்த பச்ச கலரு, இந்த நீல கலரு, அது எவ்வளோ, இது எவ்வளோ என்று நிறைய பார்த்துவிட்டு வேண்டாம் என்று போய்விட்டார். ஒரு அறைமணி நேரத்தில் மீண்டும் வந்து மீண்டும் அதே மாதிரி,
கேட்ட அனைத்தையும் எடுத்துப் போட்டாகிவிட்டது. ஒன்றும் வாங்கவில்லை.
இப்பொழுது எனக்கு கோபம் வந்தது. ஆனால் என்னை நானே
சமாதானப்படுத்திக்கொண்டேன் இந்த வேலையில் இதெல்லம் சகசம் என்று. அறைமணி நேர இடைவெளியில் மீண்டும் வந்தார். இப்பொழுது
எண்ணிடம் இல்லை என் நண்பனிடம், சட்டைகள் பிரிவில். ஒன்றும்
வாங்கவில்லை. ஆனால் கையில் மற்றொரு கடையின் பையிருந்தது.
எனக்கு விளங்கிவிட்டது. மீண்டும் அதே ஆள், முதலாளியிடம்
கண்ணை காட்டிவிட்டேன். அவரை நுழைவு வாயிலிலேயே தடுத்து
உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.
இரவு மணி ஒன்பது கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்
சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு எப்படியிருக்குமென்று.
தொடரும்.
6 comments:
அருமை....
எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு... ஆனால் நான் இருந்தது சூப்பர் மார்கெட்...
பட்... சேம் பிளட்...
அனுபவபகிர்வு அருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.
விற்ற விதத்தினை இறுதியில் சொல்கிறேன் என்று கூறி விட்டு சொல்ல வில்லை போலிருக்கிறது
இதன் இரண்டாம் பாகம் படிக்கவில்லயா?
Machan, I am very to see this. becasuse i also with you on that shop, (I am the one you mentioned three guys). realy i was happy to read. I have no words to proceed yar. You just continue da.
A.Abdul Kareem
Post a Comment