Wednesday, June 30, 2010

யாருங்க போராடுறது

ஒன்ன மறக்கனும்னா அங்கிருந்து நகர்ந்துடுன்னு சொல்வாங்க.  நம்ம தலைவர்கள் அதனை செம்மையாக செய்யுறாங்க.  கறைய கழுவுவதற்கோ இல்ல மறைக்குதற்கோ ஒரு மாநாட்ட கோடில கொட்டி  நடத்தி முடிச்சாச்சுங்க.   தப்ப தப்புன்னு சொல்ல வேண்டிய எதிர்கட்சிகளோ தெருக்கட்சிகள் போல ஆகிப்போச்சுங்க.

இப்போ அடுத்ததாக ஒரு குண்டு(பெட்ரோல்,கேஸ் விலை உயர்வுதாங்க) நம்ம அட்டாக் பாண்டிக்கிட்டயிருந்து  வந்திருக்குங்க. அதாங்க நம்ம வச்ச நமக்கான நம்ம மத்திய அரசு. இந்தியா முழுசுக்கும் யாருக்கும் வஞ்சனையேயில்லாம எல்லாத்துக்கு மேலயும் போட்டுடுச்சுங்க.  இதுல ஒரு கோஷ்டிக்கு ஒரு பிரச்சனயும் இல்லங்க. யாரு எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு ஒரு .......இல்லங்க.  மிச்சமிருக்குறது இரண்டு கோஷ்டிங்க.  ஒருத்தருக்கு தானே கெட்டாலும் ஏன் கேக்குறதுக்கு தெம்பே இல்லங்க.  இன்னொருத்தர்,  இவங்க ரொம்ப பேருங்க. எண்ணுனா கோடில இருப்பாங்க.  எதையும் சீக்கிறமா ஜீரணம் செய்ற சக்தி இவங்கக்கிட்ட ரொம்ப அதிகமா இருக்குறதால இந்த விசயத்த மறந்து மன்னிச்சு டிவி முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்ணீர் விடுற புரட்சிநாயகியப்பார்த்து தானும் கண்ணீர் விட்டு நாளைக்கு என்னாகுமோங்குற  பயத்துல காத்துக்கிட்டு இருப்பாங்க.


இப்போ இந்த அணுகுண்டை எதிர்த்து தொடர்ந்து போரடப்போறவங்க யாருங்க? அவங்க எங்கயிருக்காங்க?  எங்கிருந்து வரப்போறாங்க?
அப்புடியே போரடுனாலும் விட கிடைக்குமா? இல்ல விடிவு தான் கிடைக்குமா?

இந்த கேள்வி என் மண்டையப்போட்டு குடையுதுங்க.  கம்பியூட்டரு முன்னாடி உட்கார்ந்துகிட்டு நல்லா கேள்வி மட்டும் கேட்கத்தெரியுதுள்ள,
நீ இறங்கி போறடுன்னு மனசு சொல்லுதுங்க.

ஆனா பாருங்க இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு வரலாற்றுக்கதைய சொல்லவேண்டியிருக்கு.  அது என்னனா சுதந்துரத்துக்கு முன்னாடி எங்க ஊர்ல ஒருத்தரு கொடிய புடிச்சிக்கிட்டு வீட்லேர்ந்து கிளம்பி தெருமுனைக்கு போனவரு, கால்ல கல்லு குத்துதனால அப்புடியே திரும்பிட்டாருங்க. மறுபடியும் ஒரு முறை இதே மாதிரி கிளம்புனாருங்க.  அன்னைக்கும் திரும்பி வந்துட்டாருங்க.  ஏன்னூ கேக்குறீங்களா? அன்னைக்கு ஆகஸ்ட் 16 ,1947.

இப்புடிதாங்க அனனைகிருந்தே இந்த நாட்டைக்காப்பற்ற புறப்பட்டு இன்னைவரைக்கும் காப்பத்திக்கிட்டே இருக்கோம்.  என் உயிரு தமிழுக்கு,  உடலு இந்த மண்ணுக்குங்க.  இப்போ பிரச்சனை என்னன்னா ' எனக்கு ரொம்பா முக்கியமான வேற வேலையிருக்குங்க, போரட்டத்துக்கு என்னோட முழு ஆதரவு உண்டுங்க.  என் வேலை முடிஞ்சதும் நிச்சயமா உங்க போராட்டத்துல கலந்துக்குவேங்க.'

சரிங்க, இப்போ யாருங்க போராட்டத்த ஆரம்பிக்கப்போறீங்க.  பந்தல் போடுறது,
டீ, காபி,டிபன் இப்புடி போராட்டத்துக்கு தேவையான அனைத்துவகையான தேவைகளுக்கும் குறைந்த செலவுல அனைத்தையும் நாங்க செஞ்சுகொடுப்போங்க. எனக்கு நீங்க எப்போவேனா கால் பண்ணலாங்க. 
24 ஹவர் சரிவீஸ்ங்க.

6 comments:

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

இங்கு முழு அடைப்பு போராட்டம் நடக்குது அது நாங்களும் போராட்டம் நடத்தினோம் என்று காட்ட தான்

உண்மையான போராட்டம் இல்லை

ப்ரியமுடன்...வசந்த் said...

//இப்புடிதாங்க அனனைகிருந்தே இந்த நாட்டைக்காப்பற்ற புறப்பட்டு இன்னைவரைக்கும் காப்பத்திக்கிட்டே இருக்கோம். //

:))

ஜீவன்பென்னி said...

நன்றி வசந்த்.

நன்றி சவுந்தர்.

மங்குனி அமைச்சர் said...

டீ, காபி,டிபன் இப்புடி போராட்டத்துக்கு தேவையான அனைத்துவகையான தேவைகளுக்கும் குறைந்த செலவுல அனைத்தையும் நாங்க செஞ்சுகொடுப்போங்க. எனக்கு நீங்க எப்போவேனா கால் பண்ணலாங்க.///


சாமி நம்மளையும் கூட்டணி சேதுகங்கோ

ஜீவன்பென்னி said...

//சாமி நம்மளையும் கூட்டணி சேதுகங்கோ //உங்களோட கூட்டனி ரொம்ப டேஞ்சராச்சே. பஞ்சர் ஆக்கிட்டுதானே மறுவேலை பார்ப்பீங்க.

Post a Comment