Thursday, November 18, 2010

எனக்குப் பிடித்த ரஜினி படங்கள்

சினிமா சம்பந்தமா எழுதி ரொம்ப நாளாச்சு.  சின்ன வயசுல ரஜினி ரசிகனா இருந்து ஒரு கட்டத்துல கமல் படங்களுக்கு ரசிகனா மாறியாச்சு. நான் முதல்ல பார்த்த அதாவது தியேட்டர்ல பாத்த ரஜினி படம் சிவாஜிதாங்க,  இத நீங்க நம்பித்தான் ஆகனும்.  இப்போ வரிசைக்கு போகலாம்.................


1.முள்ளும் மலரும்....

சின்ன வயசுல ரஜினியோட ஆக்சன் படங்களா பார்த்துட்டு இந்தப் படத்த பார்க்கும் போது செம போர் அடிச்சுது.  என் ரசனை மாறி ஹீரோவும் மாறினப்பிறகு இந்தப் படத்த பார்த்தேன்.  "காளி ரொம்ப கெட்டவன் சார்" இந்த டயலாக்கும், இந்தப்படத்தின் பாடல்களும் மறக்கமுடியாத ஒன்னு. 


2.ஜானி...

மேல சொன்ன அதே கேட்டகிரியிலதான் இந்தப் படமும்.  இந்தப் படத்த பொதிகைல தான் முதன் முதல்ல பார்த்தேன்.  கார் திருடுறதுல ஆரம்பிச்ச உடனே சரி இதுவும் வழக்கமான ரஜினி படமோன்னு தான் நினைச்சேன்.  ஆனா இயக்குனர் மகேந்திரன் ரசினிய ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடிப்ப ரசினிக்கிட்டேர்ந்து கொடுத்திருப்பார்.  ஆனா ரசினி கண்ணாடி போட்ட வேசத்துல ரகளை பண்ணியிருப்பார்.

3.தளபதி...

இந்தப் படத்த எத்தனை தடவ போட்டாலும் பார்ப்பேன்.  எங்கயுமே தொய்வே வராது.  ஆர்ப்பாட்டமோ,  ஸ்டைலோ இல்ல பன்ச் டயலாக்கோ எதுவுமே இல்லாத, ரஜினியோட இன்னோரு பெஸ்ட் இந்தப் படம்.


4.மன்னன்....

படம் ஆரம்பிச்சதுலேர்ந்து கடைசி வரைக்கும் ரஜினி ரஜினி ரஜினி. அவருக்கு சம்மான வேடம் விஜயசாந்திக்கு.  என்ன சொல்ல இந்தப் படத்துல வர்ற டயலாக் எல்லாம் செம ரகளை. ரஜினி ஆண்-பெண் ஏட்டிக்குப் போட்டியா நடிச்ச படங்கள் எல்லாமே  சூப்பராதான் இருக்கும். படையப்பா(6)வும் இந்த வகைலதான் சேரும். பட் மன்னன் தான் பெஸ்ட்.


5.மூன்று முடிச்சு....

கமலும் ரசினியும் சேர்ந்து நடிச்ச படம்.  இதும் ஆண்-பெண் எதிர் எதிர் என்ற கேட்டகிரியிலதான் சேருது.  கமல் இறந்து போன பின்னாடிதான் கதையே ஆரம்பிக்கும்.  ஸ்ரீதேவி ரஜினி காம்பினேசன்ல இதுவும் எனக்குப்பிடிச்ச படம்.

 ஒரு முக்கியமான விசயம் ஆக்சன் படங்களிலேயே த பெஸ்ட் அப்புடின்னு சொன்னா அது பாட்சா(7) மட்டும் தான்.  என்னா படங்க அது. இது எழுதும்போதே எனக்கு சிலிர்த்துப்போகுது.  எத்தனை தடவ பார்த்திருக்கேன் கணக்கே இல்லங்க.  இந்த மாதிரி ஒரு படம் மறுபடியும் வருமாங்குறது எனக்குத்தெரியல.  பட் என்ன சொல்ல சூப்பரோ சுப்பர் இததான் சொல்லமுடியும்.

தொடர் பதிவுக்கு அழைத்த தேவா அண்ணாவுக்கு நன்றிகள் .

12 comments:

செல்வா said...

வடை வடை ..!

செல்வா said...

முள்ளும் மலரும் , ஜானி , தளபதி , மன்னன் , மூன்று முடிச்சு ...
இந்த அஞ்சு படமுமே நான் பார்க்கலை .. !! ஆனா பாட்ச நிறைய தடவ பார்த்திருக்கேன் ..!!

சௌந்தர் said...

இந்த 5 படமும் எனக்கும் பிடிக்கும் ஏன் 10 படம் தானே எழுதணும் இதில் 5 தான் இருக்கு....

ஜீவன்பென்னி said...

தம்பி சவுந்தர் புடிச்ச படம்தானே எழுதனும்........ இல்ல புடிக்காத படத்தையும் எழுதனுமா???

சௌந்தர் said...

ஜீவன்பென்னி said...
தம்பி சவுந்தர் புடிச்ச படம்தானே எழுதனும்........ இல்ல புடிக்காத படத்தையும் எழுதனுமா??///

சரி சரி விடுங்க விடுங்க அருண் வந்து கேட்ப்பார் :)

சௌந்தர் said...

பாத்த ரஜினி படம் சிவாஜிதாங்க////, இத நீங்க நம்பித்தான் ஆகனும். இப்போ வரிசைக்கு போகலாம்.................


இதோ பாருங்க இது 8 வது

"காளி///// ரொம்ப கெட்டவன் சார்" இந்த டயலாக்கும்,

இது 9 வது ஓகே வா இதையும் சொல்லுங்க

ஜீவன்பென்னி said...

இன்னும் ஒன்னு இடிக்குதே அதையும் நீயே போட்டிடு கூட்டி கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியாப்போய்டும்.

NaSo said...

//இந்த மாதிரி ஒரு படம் மறுபடியும் வருமாங்குறது எனக்குத்தெரியல. பட் என்ன சொல்ல சூப்பரோ சுப்பர் இததான் சொல்லமுடியும்.//

உண்மை தாங்க. இனிமேல் ரஜினியே நினைத்தாலும் பாட்ஷா போல் ஒரு படம் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான்!v

ஜீவன்பென்னி said...

வாங்க நாகராஜன் முதல் வருகைக்கு நன்றி.

Prabu M said...

எனக்கு ரஜினி படம் எல்லாமே தீபாவளிதான் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தொகுப்பு நண்பரே... தலைவர்ன்னா சும்மாவா..

அருண் பிரசாத் said...

நல்ல தொகுப்பு....

தொடர்பதிவு எழுதியதற்கு நன்றிங்க

Post a Comment