இது விமர்சனம் இல்ல.
வேட்டைக்காரன் படத்தினைப்பற்றி வரக்கூடிய விமர்சனங்கள படிச்சுட்டு ரொம்ப நல்ல காமெடி படம் போலன்னு நினைச்சுக்கிட்டு நேத்து டிக்கெட் கிடைக்காததால இனனிக்கு காட்சிக்கு நேத்தே டிக்கெட்ட வாங்கிகிட்டு வந்துட்டோம்.
உண்மைய சொல்லனும்னா இது தான் எனக்கு முதல் அனுபவம். என்னன்னா விஜய் நடிச்ச(மன்னிக்கனும்) ஒரு படத்த முதல் முறையா தியேட்டர்ல பார்த்தேன்.
கும்பல் இருக்காதுன்னு நினைச்சிக்கிட்டு போனா டிக்கெட்டே இல்லங்குறானுங்க. இன்னைக்கும் முதல்ல ரெண்டு வரிசை மட்டும் நிரம்பாம இருந்துச்சு.
ரஜினிய பத்தி இப்புடித்தான் சொல்லுவாங்களாம். எப்புடின்னு கேக்காதீங்க தெரிஞ்சவங்க யார்கிட்டயாச்சும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அதே கதைதான் விஜய் படங்களுக்கும் நடக்குதோன்னு எனக்கு தோணுது.
சரியில்ல சரியில்லன்னு சொல்லிகிட்டே முக்காவாசிப்பேரு படத்த பார்த்துர்ராங்கங்குறதுதான் உண்மை.
விஜய் நடிச்ச படம் 100 நாள் ஓடுதாங்குறது முக்கியமில்ல. ஆனா அவரு படம் முதலுக்கும் லாபத்துக்கும் மோசமில்லங்குறது மட்டும் உண்மை.
"என் உச்சி மண்டைல" ன்னு ஆரம்பிக்குற அந்த பாட்டுல ஒரு மாறுவேடப் போட்டியே நடத்தியிருந்தாரு. அத பத்தி என்னன்னு சொல்ல. ஆனா ஒரு விசயம் எனக்கு புரிஞ்சுது, அவரு இப்புடியே நடிக்குறது அவருக்கும் பாக்குறவங்களும் நல்லது.
இன்னொரு முக்கியமான காட்சி மலை அருவிலேர்ந்து கிழ குதிச்சு தப்பிக்குற காட்சி, குதிக்குறப்போ நின்னுகிட்டே நீச்சலடிக்கப்போறாருன்னு தெரியும் ஆனா குதிச்சு தண்ணிகுள்ள இருந்து வெளிய வர்ற காட்சி எப்பா!!! அத காண கண் கோடி வேணும். அர்னால்டே(Predetor) தோத்து போய்டுவாரு. அங்கதான் இயக்குனரோட திறமைய பாத்தேன்.
நண்பர்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்குறது,
நண்பன் இறந்து போறது இன்னும் நெறய வழக்கமான விசயங்கள்.
அவைகள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னுமில்ல.
விஜயோட அக்கா சாரி ஜோடி அனுஷ்கா. இந்த அறிமுகமே போதும் கதாநாயகிக்கு. மனோபாலா சிரிக்க வைக்கிறாரு. வில்லன்கள பத்தி என்னன்னு சொல்ல. வர்றாங்க அடிவாங்குறாங்க, பறந்து பறந்து விழுறாங்க.
கடைசியில வில்லனுக்கு வணக்கம் சொல்லுறப்போ விஜய் என்னமா எக்ஸ்பிரசன் காட்டுறாரு.
வேட்டைக்காரன் எம்ஜியார் நடிச்ச படம். அந்த படமும் இந்த படத்துக்கு எந்த விதத்துலயும் குறஞ்சது இல்ல.
13 comments:
ம்ம் ..
"
பிரியமுடன்...வசந்த் said...
ம்ம் .."
விஜயகாந்த் எபக்டு மாதிரி தெரியுது.
எப்படி நீங்க எம்ஜிஆரை விஜயுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தலாம்?
என் கண்டனங்கள் :-))
"
ஜெஸிலா said...
எப்படி நீங்க எம்ஜிஆரை விஜயுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தலாம்?
என் கண்டனங்கள் :-))"
முதல் முறையா வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
நீங்க எம்ஜியாரோடா வேட்டைக்காரன் படத்த பாருங்க நான் ஏன் அப்புடி சொன்னேன்னு தெரியும்.
அட... நீயுமா???
வித்தியாசமான பதிவு!
(விஜய்ய கும்மலியே...)
"கலையரசன்...
அட... நீயுமா???
வித்தியாசமான பதிவு!
(விஜய்ய கும்மலியே...)"
பட்டு சேலையவே சட்டையா தச்சு போட்டாச்சு இதுக்கு மேல நான் என்னத்த கும்முறது.
\\விஜயோட அக்கா சாரி ஜோடி அனுஷ்கா. இந்த அறிமுகமே போதும் கதாநாயகிக்கு.// இந்த ஒரு வரி விமர்சனமே போதும் இந்தப் படத்துக்கு! :)
வித்தியாசமா தான் கூவுறிங்க..:)
ரவிபிரகாஷ் said...
\\விஜயோட அக்கா சாரி ஜோடி அனுஷ்கா. இந்த அறிமுகமே போதும் கதாநாயகிக்கு.// இந்த ஒரு வரி விமர்சனமே போதும் இந்தப் படத்துக்கு! :)
வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி சார்.
வினோத்கெளதம் said...
வித்தியாசமா தான் கூவுறிங்க..:)
குயிலுமாதிரியா இல்ல......
தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வினோத்.
vasanth1717
"bublu
sathya2
razack
ajeevatharshan
jollyjegan
mounakavi
ldnkarthik
Mahizh
ashok92
paarvai
mohamedFeros"
இவங்க எல்லோரும் ஓட்டு போட்டு தமிழிஸ்ல பிரபலப்படுத்தியிருக்காங்க அனைவருக்கும் நன்றி.
ஜீவன்,அட வித்தியாசமான ஒரு பார்வை,இன்னும் எழுதுங்க தொடர்ந்து வந்து ஓட்டு போட்டு ஊக்கம் தருவோம்
செம டரியலா இருக்கே........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
Post a Comment