Saturday, January 23, 2010

நிகர்நிலை பல்கலை கழகமும் - நானும்

நிகர்நிலை பல்கலை கழகங்களின் அங்கிகாரம் ரத்து- மாணவர்கள் போராட்டம். இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து இந்த பிரச்சனை தேசிய அளவில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே இந்த வருசம் Autonomous ஆகிடும்னு  கல்லூரில நுழையும் போதே காதுக்கு செய்தி வந்து சேர்ந்தது. அப்படி மட்டும் நடக்கக்கூடாது என்று  மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். ஏன்னு கேக்குறீங்களா?  அத அப்புறமா சொல்லுறேன்.

முதல் நாள் வகுப்பில் வந்த பேராசிரியரும் அதைப்பற்றியே பேசினார்.  Autonomous அந்தஸ்தின் முலம் அந்த course, இந்த course என்று அவருக்கு தெரிந்த அந்த கல்லூரியில் இல்லாத  பட்டப்படிப்புகளை பட்டியலிட்டு,  புதிதாக காலத்துக்கு ஏற்ற மாதிரியான படிப்புகளையும்,  .
பாடத்திட்டங்களையும் நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.  இது நல்ல விசயம் என்ற வகையில் மாணவர்களும் மிகுந்த
ஆர்வத்துடன் கேட்டுகொண்டார்கள்.
முதல் செமஸ்டர் முடிந்து முடிவுகளும் வெளியானது.  முதல் ஆறு மாதத்ததில் நாங்க செய்த சேட்டைகளை பேராசிரியர்கள் பொறுத்துக்கொண்டார்கள்.  சிலபேர் தாங்க முடியாமல் இன்னும் ஆறு மாதம்தான் அதற்குள் கல்லூரிக்கு நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிவிடும் அதன்பிறகு இவர்களை பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தனர்.  ஆனால் அதிர்ஷ்ட வசமா நாங்கள் சேர்ந்த வருடம் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.


முதல் செமஸ்டர் முடிந்து இனிமேல் பிரச்சனை இல்லையென்ற நிலையில் அடுத்து ஒரு செய்தி, இடியா  மாணவர்கள் மத்தியில் புயலாக கிளம்பியது, அடுத்த செமஸ்டருக்குள் அனுமதி கிடைத்துவிட்டால எல்லோரையும்   Autonomous க்கு மாற்றிவிடுவார்கள் என்று.  அந்த ஆறு மாதமும் நான் பயந்துகொண்டேயிருந்தேன்.  ஆனால் ஆறு மாதத்தில் இரண்டாவது செமஸ்டரும் முடிந்து முடிவுகளும் வெளியானது. 
இனிப் பிரச்சனையில்லை.

பேராசிரியர்கள் ஒருசிலருக்கு இவர்களை அடக்க முடியலவில்லை எங்கின்ற குறை.  நினைவு  கைகூடாது போன ஏமாற்றம்.  அவங்க கையிலிருந்த ஒரே ஒரு துருப்புச்சீட்டு 'பிராக்டிகல்'  எங்கின்ற செய்முறைத்தேர்வு.  அதைவைத்து எங்களை பயமுறுத்திப்பார்த்தார்கள்.  ஆனால் அது அவர்கள் நினைத்த  அளவிற்கு பயம்பெறவில்லை.

Autonomous அந்தஸ்த்து வழங்குவதற்கு முன் தில்லியிலிருந்து ஒரு குழு வந்து கல்லூரியில் மாணவர்களிடம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களின்
கருத்தையும் கேட்டனர்.  பேராசிரியர்களிடமும் கலந்தாய்வு நடைபெற்றது.   இப்போதைக்கு இன்றைய காலகட்டதுக்கு இந்த மாதிரியான பயிற்சிகளும்,  இந்த மாதிரியான பாடத்திட்டங்களும், இந்த மாதிரியான புதிய படிப்புகளும் என்று  அவர்கள் செய்யப்போகின்ற மாற்றங்களைப் பற்றி விவரித்தார்கள்.  இதற்குப்பிறகு தில்லிக்காரர்கள் ஒரு வழியாக அனுமதியை கொடுத்தார்கள்.  அதனால்ஒருசில நன்மைகள் கிடைசத்தது.  கல்லூரிக்கட்டணம் குறைக்கப்பட்டது,
புதிதாக ஒரு சில பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் மாணவர்களின் சுதந்திரம் பறிபோனது உண்மை.   நாங்கள் தப்பித்தாலும் எங்களுக்கு அடுத்து சேர்ந்த மாணவர்கள் மாட்டிக்கொண்டார்கள். ஏன் மாட்டிக்கொண்டார்கள் என்றால், எங்களுக்கு கல்லூரியாக இருந்தது அவர்களுக்குப் பள்ளிக்கூடமாகக்கூட இல்லாமல் டியுசன் செண்டராக மாறிப்போனது.

2 comments:

ஹுஸைனம்மா said...

நிகர்நிலைப் பலகலைக்கழகங்கள் ஏன் வேண்டாம் என்பதை இன்னுங்கொஞ்சம் விவரமா சொல்லிருக்கலாம். தனியார் கல்லூரிகளிலும் மாணவர்களின் சுதந்திரம் பறிபோகத்தானே செய்கிறது.

ஜீவன்பென்னி said...

//ஹுஸைனம்மா//

உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

// நிகர்நிலைப் பலகலைக்கழகங்கள் ஏன் வேண்டாம் என்பதை இன்னுங்கொஞ்சம் விவரமா சொல்லிருக்கலாம்//

விவரமா எழுதியிருக்கலாம் தான். ஆனால் பரிட்சை எழுதும் போதே ரொம்ப போர் அடிச்சு பேப்பர் கொடுத்துவிடுவேன். அந்த பழக்கம் இன்னும் போகமாட்டேங்குது.

Post a Comment