Tuesday, January 26, 2010

இது நம்ம ஆளு-2

இதுவும் நம்மாள பத்தின கதைதான்.  இதுக்கு காரணம் நம்மாளு செல்போன்ல பேசிக்கிட்டிருக்கறப்போ, ஹாரன் அடிச்ச அந்த பஸ்காரனத்தான் சொல்லமுடியும்.

அண்ணனுக்கு கலயாணங்குறதால நம்மாளு துபாய்க்கு வந்து வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாள்லயே 15 நாள் விடுமுறைல இந்தியாவுக்கு வந்திருந்தாரு. கல்யாணம் முடிஞ்சு ஊருக்கு கிளம்புறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி திருச்சி பால்பண்ணை ரவுண்டான கிட்ட போய்க்கிட்டுருக்கிறப்போ செல்போன் அடிச்சுது, எடுத்து பேசிக்கிட்டு இருக்குறப்போ மின்னல்னு பேர் போட்ட தனியார் பஸ் ஒன்னு மின்னல் வேகத்துல இவர கடந்து போச்சு.  புரிஞ்சும் புரியாம இவரும் ஓகே ஓகேன்னு தலையாட்டிட்டு வச்சுட்டாரு.  மனசுக்குள்ள ஒரே குழப்பம்,  துவரம் பருப்பு ஓக்கே,  ஆனா குளுக்கோஸ் கொஞ்சம் இடிக்குதே.


ஏன் துபைல குளுக்கோஸ் கிடைக்காதா.  துவரம் பருப்பு வாங்கியாச்சு, குளுக்கோஸ வாங்கலாமா வேண்டாமா? சரி ஒரு தடவ போன் பண்ணி கேட்டுருவோம். " நீங்கள் டையல் செய்த எண் switch off  செய்யப்பட்டுள்ளது"
ஆனது ஆகட்டும்,  இன்னைக்கு ராத்திரி பொட்டிய கட்டனும். இப்பவே ரொம்ப நெரமாகிடுச்சுன்னு நம்மாளு துவரம் பருப்பையும் குளுக்கோஸையும் வாங்கி பொட்டியையும் கட்டிட்டாரு.  ஆனா அவரு மனசுக்குள்ள குளுக்கோஸ் மேட்டரு மட்டும் ஓடிக்கிட்டே இருக்கு.


அநேகமா இந்தியாலேர்ந்து துபைக்கு குளுக்கோஸ் வாங்கிட்டுப்போனது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன்.
ஒரு வழியா துபைல இறங்கி பொட்டிய பிரிச்சு நம்மாளு யாராருக்கு என்னென்ன கொடுக்கனுமோ அதயெல்லாத்தையும் கொடுத்துட்டு குளுக்கோஸையும்,  துவரம் பருப்பையும்  கேட்டவருக்கிட்ட கொடுத்தாரு.  அவருக்கு ஒன்னும் புரியல.  துவரம் பருப்பு ஒகே, ஆனா குளுக்கோஸ் இடிக்குதேன்னு அவரு மனசுல ஓடுறத நம்மாளு அவரு முகத்துல படமா பாக்குறாரு.

கொஞ்ச நேரத்துல கூட்டம் கூடிடுச்சு.  எல்லோரும் சிரிக்குறாய்ங்க
சிரிக்குறாய்ங்க அடக்க முடியாம சிரிக்குறாய்ங்க.  கூட சேர்ந்து நம்மாளும்
சிரிக்குறாரு. அவரு என்ன செய்வாறு இதெல்லாம் தெரிஞ்சா நடக்குது,  அவங்ககிட்ட போய் இதுக்குக்காரணம் நா இல்ல அந்த பஸ்காரந்தான்னு
சொல்லவா முடியும்.  அப்புடியே சொன்னாலும் நம்பவா போறாங்கன்னு அந்த உண்மைய அப்புடியே மூடி மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டாறு.  அந்த ரணத்த எங்கிட்ட சொன்னதால அது என்ன தாக்கிடுமோன்னு பயந்து இங்க கொட்டிட்டேன்.  நீங்க யாரும் டென்ஷ்ன் ஆகாதீங்க.

அட எதுக்கு சிரிச்சாங்கன்னு சொல்லவேயில்லன்னு கேக்குறீங்களா,  ஒன்னுமில்ல குளுக்கோஸுக்கு பதிலா அங்க குல்கந்து இருந்திருக்கனும் அவ்வளோதான்.

10 comments:

Sangkavi said...

ஹா ஹா ஹா....

கிளியனூர் இஸ்மத் said...

(((((((((((((((:

நாஞ்சில் பிரதாப் said...

குல்கந்த் அப்படின்னா என்னாங்க?

ஜீவன்பென்னி said...

// நாஞ்சில் பிரதாப் said...
குல்கந்த் அப்படின்னா என்னாங்க? //

ரோஜாவ தேன்ல ஊர வேச்சு இருப்பாங்க. ரொம்வ டேஸ்டா இருக்கும். நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கின்றேன்.

ஜீவன்பென்னி said...

சங்கவி: உங்கள் முதல் வருகைக்கும் ஆதரவிற்கு நன்றி.

கிளியனூர் இஸ்மத் : நன்றி இஸ்மத் அண்ணாச்சி

மற்றும் தமிழ்10 ஓட்டு போட்ட

// kishore
thamilnenjan
truetamils
tamilsoolai
vinaavu
podipayyan
deva
hemnath
addboxdinesh //

இவங்க எல்லாதுக்கும் நன்றி

வினோத்கெளதம் said...

:)

ஜீவன்பென்னி said...

// mohamedFeros, Tamilalagan, mdsultan, gowtham, suthir1974, jntube, kosu, Rajeshh, inbadurai, mvetha, msrgobenath //

தமிழிஸ்ல ஓட்டு போட்ட உங்க அனைவருக்கும் நன்றி.

துபாய் ராஜா said...

நல்லவேளை. துவரம் பருப்புக்கு பதில் வேறெதுவும் வாங்காம போனாரே.... :))

ஜீவன்பென்னி said...

வாங்க ராஜா வாங்க.

cheena (சீனா) said...

இது இன்னிக்கும் நடக்குது ஜீவன் பென்னி - கேக்கறத ஒழுங்காக் கேக்கணும் - கவனம் இருக்கனும் - ம்ம்ம்ம்ம்

Post a Comment