Tuesday, June 22, 2010

வெறுமை

எஞ்சியிருக்கும் எச்சத்தையும்
என்னுள் நிறைந்திருக்கும்
வெறுமை எடுத்துக்கொண்டது.
நினைவிலிருக்கும் நினைவுகளும்
ஏற்குமிடமில்லாமல் புறம் தள்ளிவிட்டது மனது.
என் மனக்குரங்கும்
முன்பு போல் எங்கும் தாவுவதில்லை
தவறிவிட்ட பக்கங்களும்
தவிர்த்து விடப்பட்ட பக்கங்களும்
என்னை பின்னோக்கி இழுக்கின்றன.
உள் வர மறுக்கும் புறம் தள்ளிவிட்ட நினைவுகளை
மீள் செய்ய முனைகிறேன்
மீண்டும் மீண்டும் வெறுமையே ஆட்கொள்கின்றது
மீண்டும் மீண்டும் முனைகிறேன்
மீண்டும் மீண்டும் மீள்கிறேன்
முனைவும் மீள்வும் முடிவில்லாமல் தொடர்கின்றது
வெறுமையை புறந்தள்ளாமல்.

7 comments:

Barari said...

aka thambi kavithaiyil kalakuraarappa? thambiyin verumaiyai viratta ore vazi manam thirumanam.thambi kavalai vendaam uriyavaridaththil intha kavithai serkkapadum.

MR.BOO said...

Wow.....Jeevan...

This is a kind of feelings unable to explain.
Dont sit alone.

I think 'Marriage' is the best remedy for this fever.... :-)

Enjoy..... the life

ஜீவன்பென்னி said...
This comment has been removed by the author.
Riyas said...

கவிதை நல்லாயிருக்கு...

ஜீவன்பென்னி said...

Barari அண்ணே, ஒரு மாசமா ஒன்னுமே எழுதலயேன்னு எழுதுனா நீங்க ரூட்டையே மாத்திபுட்டீங்களே.

வாங்க MR.BOO உங்கள் வருகைக்கு மட்டும் நன்றி. கருத்துக்கு கிடையாது. நான் ரொம்ப சின்ன பையங்க.

மாங்குனி அமைச்சர் வருகைக்கு வந்தனம் .

நன்றி ரியாஸ்

ஜெய் said...

அருமையா இருக்குது ஜீவன்...

மதுரை சரவணன் said...

//மீண்டும் மீண்டும் வெறுமையே ஆட்கொள்கின்றது
மீண்டும் மீண்டும் முனைகிறேன்
மீண்டும் மீண்டும் மீள்கிறேன்
முனைவும் மீள்வும் முடிவில்லாமல் தொடர்கின்றது//

அருமை வாழ்த்துக்கள்

Post a Comment