Wednesday, June 23, 2010

மகிழ்ச்சி

எங்கோ ஓர் மூலையில்
முடிந்துவிட்டதாக மூடிவைக்கப்பட்டதாக
உறைந்துவிட்டதாக என எண்ணிக்கொண்ட
பிழையில்லா முகமறியாப் பிரியங்களை
வந்து சேர்ந்த புன்னகையில்
கரைத்துவிட்டு கரையேறினேன்.
ஆறறிவின் மிகுந்துவிட்ட எச்சங்களை
புறம்தள்ளி குருதியில்லாக் கொலை செய்து
புறத்தில் வழிந்தோடிய
முடிவில்லா முடிவிலிகளை
அள்ளிக்குடித்துவிட்டு நிமிர்ந்த வேலையில்
வந்தனைத்த ஆறறிவின் புன்னகையில்
முடிவிலிகள் மிகுந்துபோனது.

6 comments:

Barari said...

thambi meendathu enakkum makilchi.kavithaikal thodarattum.kvithai sirappaka irukkirathu.vazthukal.

MR.BOO said...

Nice...Jeevan..
I think nowadays you r focusing on poems. Keep it up..

ப்ரியமுடன் வசந்த் said...

ஹா ஹா ஹா

எவ்ளோ நாளைக்கு நம்மள நாமலே திட்டிக்கிறது?

geethappriyan said...

ஜீவன் அருமையா,ஜீவனோட இருக்கு கவித.கீப் இட் அப்!!!

cheena (சீனா) said...

என எண்ணிகொண்ட = இங்கு "என" என்ற சொல் வருமா ? தேவையற்றதா ?

ஜீவன்பென்னி said...

அந்த சொல் இல்லையென்றாலும் ஒரே பொருளைத்தான் தரும். தேவையற்ற ஒன்றுதான்.

Post a Comment