Wednesday, November 04, 2009

கோர்பகான் பூங்கா - சிறிய அறிமுகம்

அண்ணாச்சிங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி என்னோட முதல் பதிவா இது அமைய  காரணமா இருந்த அமீரக பதிவர்கள் சுற்றுலா பற்றிய பதிவுக்கு எதோ என்னாலான உதவியா இந்த பதிவு.


கோபர்கான் பீச்ச கடந்து cityக்கு உள்ள போனா ஒரு பூங்கா இருக்கு நல்ல அமைதியான இடம்.  இந்த பூங்கா கடற்கறைய ஒட்டி இருக்கு.  சுத்தம்னா அப்புடி ஒரு சுத்தம். குடும்பத்தோடு போறவங்களுக்கு ரொம்ப வசதியான இடம்.



 
குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியா சின்னதா பூங்காவோட மத்தியில மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில விளையாட்டு கூடங்கள் இருக்கு.






கோபர்கான் கடற்கரைக்கு போற வழியில ரொம்ப பழமையான பள்ளிவாசல் ஒன்னு இருக்கு.  அந்த இடத்துல கொஞ்சம் வாகன நெரிசல் இருக்கலாம்.





இந்த சுவரை தாண்டி கீழ இறங்கினோம்னா நண்டுங்க அப்புடியே சார சாரைய நிக்குங்க.  சில பேர் அத புடிக்குறேன்னு கல்லால அடிச்சு காலிப்பண்ணிகிட்டு இருந்தங்க.





கார் பார்க்கிங் பிரச்சனை இல்லாதது ரொம்ப வசதியா இருந்தது.





கோர்பகான்ல KFC தேடி அலைந்த கதை வரும் நாட்களில்...

படிக்குறப்போ ரொம்ப easyயா இருந்துச்சு இத எழுதுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு...

7 comments:

கலையரசன் said...

ரைட்டுங்கண்ணா...
படங்கள் அருமை!!

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

ஜீவன்பென்னி said...

பின்னுட்டமிட்டு correction செய்த கலையரசன் அண்ணச்சிக்கு நன்றி.

சிங்கக்குட்டி said...

நல்ல படங்கள், எந்த ஊரில் இருக்கு இந்த இடம் அதை சொல்லவே இல்லையே?

ஜீவன்பென்னி said...

இது அமீரகத்தில் இருக்கக்கூடிய ஏழு ஊர்ல fujairaல இருக்கு. துபை,ஷார்ஜா,அபுதாபி முழு பாலைவனமா இருக்கும் புஜைரா, அலைன்,அஜ்மான்,ராஸ் அல் கைமா இந்த நாலு ஊரும் கொஞ்சம் பசுமையா இருக்கும். வலைப்பூக்கு வந்து பின்னூட்டம் இட்ட சிங்ககுட்டி அண்ணாச்சிக்கு நன்றி.

சென்ஷி said...

:)

ஆஹா.. டூருக்கு கிளம்பும்முன்னே உங்க பதிவை பார்த்திருந்தா சூப்பரா இந்த பதிவையும் லிங்க் கொடுத்து இருப்பேனே :(

cheena (சீனா) said...

அன்பின் ஜீவன் பென்னி - முத்லாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு துவங்கும் நேரத்தில் வலைசசர ஆசிரியர் பொறுப்பேற்ரு - ஒளிரத் துவங்கி விட்டீர்கள் - மேன்மேலும் வளர்ச்சியடைய - புகழடைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment