Saturday, November 14, 2009

சைடு பிசினஸ்

இது அமீரகத்தில் வசிப்பவர்களுக்கான பதிவுன்னு சொல்லமுடியாது.
உலகத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய(இதற்கான வாய்ப்புகள் இருப்பின்) மிகவும் சுலபமான எளிதில் துவங்கக்கூடிய, இழப்புகள் ஏற்பட்டாலும் தாங்கக்கூடிய இது போன்று இன்னும் ஏராளமான வசதிகளை உடைய தொழிலினைப் பற்றிய சிறிய அறிமுகம்.

இந்த தொழிலுக்குண்டான முதலீடு என்று பார்க்கும் போது  முக்கியமான மூன்று விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

1. இரண்டு அலைப்பேசிகள்

2. 100 திர்ஹம்ஸ்(வேறு நாடக இருந்தால் உங்கள் குறியீட்டினை சேர்க்கவும்)

3. மக்கள் நடமாடக்கூடிய முற்சந்தி அல்லது நாற்சந்தி

மூன்று முக்கியமான விசயம் என்று சொன்னேனல்லவா அது மூன்று அல்ல நான்கு.  நாங்காவது விசயம் மேலே கூரிய மூன்றையும் விட மிக முக்கியமானவை. அதை பற்றி பின்பு சொல்கிறேன்.

இதற்கு தேவை இரண்டு நாள் பயிற்சி மட்டுமே.  மிகவும் எளிமையானது.  ஒரு நாளில் இரண்டு மணித்துளிகள் மட்டும் பயிற்சி செய்தால் போதுமானது.  பயிற்சிக்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுதில்லை.  ஒரே இடத்தில் பத்துமுதல் இருபது வரையானவர்கள் பயிர்ச்சி அளிப்பார்கள். 

நீங்கள் செய்ய வேண்டியது, கண்காளிப்பாளர் போன்று அவர்களின் அருகினில் போவதும் வருவதுமாக இருக்க வேண்டும்.   அவர்களுக்கு உங்கள் மீது சந்தேகங்கள் வராதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.  முக்கியமாக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது வாடிக்கையாளறை அனுகவேண்டிய முறைமையினை.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது அலைபேசியினை இயக்கும் முறைமையினை.  வாடிக்கையாளரின் அலைபேசி எண்ணை மிகச்சரியான முறையில் பதிவுசெய்திருக்கின்றோமா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.  இதில் தவறிழைக்கும் பட்சத்தில் நீங்கள் இழப்பீட்டினை உங்கள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டி வரலாம்.  மிகவும் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.


இப்பொழுது நான்காவது முக்கியமான விசயம் என்னன்னா,
இதற்காக நீங்கள் சொல்லிப்பழக வேண்டிய சில சொல்லாடல்கள். உங்களுக்காக இங்கே முதல் முறையாக வெளியிடுகிறேன்.  முற்சந்தியிலோ அல்லது நாற்சந்தியிலோ நின்று பயிற்சி செய்யவும்.

 "DU ETISALAT BALANCE"

"DU ETISALAT BALANCE"

"DU ETISALAT BALANCE"  இதனை இடைவெளியில்லாமல் தொடர்ந்து சொல்லவும்.  ராகமாக சொல்லும் பொழுது பிசினஸ் நன்றாக நடப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. முயற்சி திருவினையாக்கும்.

இந்த வசதி அதாவது உங்கள் அலைப்பேசியில் இருந்து மற்றொறுவரின் அலைபேசிக்கு உங்களுடைய Balance சை Transfer  செய்வது. இதற்காக 50 fils(50 பைசா மாதிரி) மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் அமீரகத்தில் துபையில் அமலில் உள்ளது.  இந்த வசதி உங்கள் ஊரிலோ அல்லது நாட்டிலோ இருப்பின் முயற்சி செய்து பார்க்கலாம். தற்சமயம் துபையில் பங்களாதேஷ்காரர்களின் கைவண்ணத்தில் கொடிகட்டிப்பறக்கிறது. தினமும் 30 முதல் 50 திர்ஹம்ஸ் வரை சம்பாதிக்கிறார்கள்.  மிகக் குறைந்த முதலீடு.  நிறைவான சைடு பிசினஸ்.  வரும் நாட்களில் இதைவிட சிறப்பான சைடு பிசினஸ் தகவல்களோடு சந்திக்கிறேன்.


சைடு பிசினஸ்க்கு இணையான தமிழ் சொல்லினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

9 comments:

உங்கள் ராட் மாதவ் said...

இடைத் தொழில்... சூப்பரு... :-))

Barari said...

THAMBIKKU INTHA THOZILIL PARICHCHIYAM UNDO? BANGALI POL IPPADI NIRPATHIL VERU SILA APATHTHUKALUM UNDE THERIYUMAA?

இளங்கோ கிருஷ்ணன் said...

அன்புள்ள ஜீவன் பென்னி,

இன்றுதான் உங்கள் வலைப்பூவுக்குள் வந்தேன். உங்கள் பதிவுகள் நன்று தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
இளங்கோ கிருஷ்ணன்

ஜீவன்பென்னி said...

"அன்புள்ள ஜீவன் பென்னி,

இன்றுதான் உங்கள் வலைப்பூவுக்குள் வந்தேன். உங்கள் பதிவுகள் நன்று தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
இளங்கோ கிருஷ்ணன்"

உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி இளங்கோ.

குட்டிக் குரங்கு said...

உப தொழில்?

கலையரசன் said...

கரைக்டா சவுண்டு குடுக்குறதை பார்த்தா... உன் மேல ஒரு சின்ன டவுட்டு வருது சமீர்!!

ஜீவன்பென்னி said...

""கலையரசன் கூறியது...

கரைக்டா சவுண்டு குடுக்குறதை பார்த்தா... உன் மேல ஒரு சின்ன டவுட்டு வருது சமீர்!!""

நாமெல்லாம் ரொம்ப ஷார்ப்புன்னு புரிஞ்சுக்கணும்.

ஜீவன்பென்னி said...

"" சென்ஷி கூறியது...

:)""


:)
:)
நன்றி.

ஜீவன்பென்னி said...

"குட்டிக் குரங்கு கூறியது...

உப தொழில்?"

தகவலுக்கு நன்றி.

Post a Comment