Saturday, November 21, 2009

நினைவுகள்-2

துபையில் திருநங்கைகளை பார்க்கும் போது என்னுடன் படித்த மணி நினைவுக்கு வருவான்.  நல்ல கருமை நிறம். பேச்சிலும், நடையிலும் மற்றும் அவனுடைய எல்லா நடவடிக்கைகளிலும் பெண்மையின் நளினம் கலந்திருக்கும்.  பள்ளியின் ஆண்டுவிழாக்களென்றால் அவனுடைய கலை நிகழ்ச்சியுடந்தான் தொடங்கும்.  பரத நாட்டியத்தை சிறு வயதிலிருந்தே கற்று வருபவன்.  தமிழை தவிர்த்து இந்தியும் மலையாளமும் தெரியும். படிப்பிலும் படு சுட்டி.  பத்தாம் வகுப்பிற்க்கு பிறகு ஏற்கனவே நான் படித்த பள்ளியில் நான் வாங்கிய மதிப்பெண்ணை பார்த்த பிறகு எனக்கே அங்கு படிக்க வேண்டாம் என்று தோன்றியதால் பேச்சு வழக்கில் சாமியார் ஸ்கூல் என்று அழைக்கப்படும் திரு இருதயப் பள்ளியில் சேர்ந்தேன்.  முதல் நாள் அன்று மணியின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.  அவனுடைய நண்பர்கள் அவனை சீண்டிக்கொண்டே இருந்தார்கள்.  ஆனால் அவர்களிடம் அவன் தன் எதிப்பை காண்பிக்கவே இல்லை.  அவனுடைய இயல்புகளை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.  நான் அவனை கவனிப்பதை பார்த்துவிட்டு அவனாகவே எண்ணிடம் அவனுங்க அப்புடித்தான்! என்று கூறிவிட்டு கையை கொடுத்தான்.  பரஸ்பறம் அறிமுகத்துடன் முதல் நாள் முடிந்து போனது.  முதல் நாள் முடிவின் போது அவனுடைய இயல்புகளைப் பற்றி மற்றவர்களின் மூலமாக அறிந்து கொண்டேன். 

கண்களில் மையிட்டுக் கொள்வான்.  நன்றாக பாடுவான்.  கர்நாடக சங்கிதமும் கற்றுக்கொள்வதாக சொல்வான்.  ஆண்டு விழாவில் பரத நாட்டியம் ஆடப்போவதாக தெரிவித்தான்.  பெண்களை போல் உடை அணிந்து கொண்டு ஆடினான்.  எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்த அளவிற்கு மற்றவர்களிடம் எந்த விதமான கேள்விக்குறிகளும் இல்லை.  ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வருவதால் அவனை பற்றி அனைவருக்குமே புரிந்திருந்தது.  பழ்குவதற்கு இனிமையானவன்.

12ஆம் வகுப்பு இறுதியில் பள்ளி ஆண்டு விழாவில் நாடகம் போடுவதாக தீர்மாணித்தோம்.  இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அதை நடத்த முடிவுசெய்யப்பட்டது.  நாடகத்தில் நடிப்பவர்களும் கதா பாத்திரங்களும் முடிவுசெய்யப்பட்டு,  ஒரே பெண் கதாபாத்திரத்தை அவனே மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டான்.  எனக்கு கதையின் நாயகன் வேடம் கொடுக்கப்பட்டது.  5 பாடல்கள் மற்றும் தமிழ் அய்யாவின் தணிக்கையுடன் ஒரு காமெடி நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.  TR ரின் ஒரு பொன் மானை நான் காண என்ற டூயட் பாடலில் தொடங்கி முடிவில் நாயகன் நாயகியை காப்பாற்றிய உடன் பார்த்தேன் பார்த்தேன் என்ற பாடலுடன் முடியும். 

பள்ளிப்படிப்புக்கு பிறகு நாங்கு வருடங்களுக்கு அவனுடன் தொடர்பு இல்லை.  ஒரு நாள் திருச்சி சிங்காரத்தோப்பில் எதேச்சையாக அவனைக்  கண்டேன்.  அவனோடு மற்றொருவனும் இருந்தான் அவனை எனக்கு அறிமுகம் செய்துவிட்டு இவனும் என்னை மாதிரிதான் என்றான். தான் பி.இ படிப்பதாகவும் தெரிவித்தான்.  அவனுடன் பழகிய நாட்களில் என்றுமே அவன் பெண்மையை வெளிக்காட்டிகொள்ளவே விரும்பினான்.  அதற்காக அவன் என்றுமே தயங்கவில்லை.   துபையில் திருநங்கைகளை  பார்க்கும் போது மணியின் நினைவும்,  எப்போதோ படித்த ஒரு கவிதையின் ஒருவரியும் என்னை எப்போதும் கடந்து செல்லும் "சந்திப் பிழை போல நாங்கள் சந்ததிப் பிழைகள்'.

3 comments:

அது ஒரு கனாக் காலம் said...

:-)

அது ஒரு கனாக் காலம் said...

துபாய்ல கூட இவர்கள் இருக்கிறார்கள் இல்லையா ?.... அதிகம் பேர் பிலிப்பய்னே நாட்டை சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன் .

ஜீவன்பென்னி said...

"அது ஒரு கனாக் காலம் கூரியது

துபாய்ல கூட இவர்கள் இருக்கிறார்கள் இல்லையா ?.... அதிகம் பேர் பிலிப்பய்னே நாட்டை சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன் ."

ஆமா நிறைய பேர் இருக்காங்க, நல்ல நிலைமையில.

முதல் முறையாக வந்து பின்னுட்டம் இட்டதற்க்கு நன்றி

Post a Comment