HATTA மலைகளின் உலகம். துபை ஓமன் எல்லையில் இரண்டையும் பிரிக்கும் ஒன்றாக இருக்கும் பரந்து விரிந்த மலைத்தொடர். துபையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ளது.
முழுக்க முழுக்க பாறைகள் மட்டுமே.
பசுமை என்ற சொல்லை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மலைத்தொடரின் ஊடாக ஆறு ஒன்று செல்கிறது. தண்ணீர் சிறிய ஓடை போன்று ஓடுகிறது. ஒரு காலத்தில்
தண்ணீர் மிகுதியான அளவில் ஓடியிருக்கக்கூடும். ஆற்றுப்பாதையின் இரு கரைகளின் ஓரத்தில் ஒன்றிரண்டு ஈச்ச மரங்கள் ஆங்காங்கே உள்ளது.
மலையில் அடிவாரத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையிலும் கரடுமுரடான மண் பாதை மட்டுமே. சாகசப் பிறியர்கள் கார்களை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு
சைக்கிளில் ஏறுகின்றனர்.
சில இடங்களில் பாதை செங்குத்தாக இறங்கி ஏறுகின்றது. மிகப்பெரிய மலை முகடுகளை வெட்டி பாதைகளை அமைத்துள்ளனர்.
தாகத்துக்கு தண்ணீர் கூட கிடைக்காத இடம். இந்த மலைகளுக்கு மத்தியில் தங்குவதற்கு மரத்தினால் கட்டப்பட்ட சிறிய cottage உள்ளது.
உலத்தரமான படம்னு சொல்லுற மாதிரி உலகத்தரமான தார்சாலை. துபை நகர சாலைகளை விட தரமான சாலைகள். நம்ம வடிவேலு சொல்லுற மாதிரியே இருக்கு. திரில்லிங்கான அனுபவம் வேணும்னா போயிட்டு வாங்க.
முக்கியமான விசயம் மேல போய்ட்டா அலைபேசிக்கு வாய்ப்பேயில்ல.
6 comments:
ஏங்க இதெல்லாம் பார்க்கறமாதிரியான இடங்களா...பார்த்தாலே பயமா இருக்கு...
HILL HAVE EYES படத்துல வர்ற மாதிரி இருக்கு... அன்னிக்கு கோர்பகான் சுற்றுலா போனபோதும் இதே மாதிரி மலைகள்தான் வழிமுழுவதும்...
என்னமோ ஊட்டி, டார்ஜீலிங் போயிட்டு வந்தமாதிரி போட்டோ வேற போட்டிருக்கீங்க...எங்களை வச்சு காமெடி எதுவும் பண்ணலையே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
எத்தன மலை..
ஒரு மரத்தக்கூட காணோம்.
என்ன தல, குடிக்க தண்ணி வேணும்னா எங்கிட்டு போறது..
varanda pirathesaththai varnippathilum thambiyin thani thanmai velipadukirathu.thambiyin varnanai suvaraasiyam aka irukkirathu.
"
நாஞ்சில் பிரதாப் said...
ஏங்க இதெல்லாம் பார்க்கறமாதிரியான இடங்களா...பார்த்தாலே பயமா இருக்கு...
HILL HAVE EYES படத்துல வர்ற மாதிரி இருக்கு... அன்னிக்கு கோர்பகான் சுற்றுலா போனபோதும் இதே மாதிரி மலைகள்தான் வழிமுழுவதும்...
என்னமோ ஊட்டி, டார்ஜீலிங் போயிட்டு வந்தமாதிரி போட்டோ வேற போட்டிருக்கீங்க...எங்களை வச்சு காமெடி எதுவும் பண்ணலையே...."
துள்ளுவதோ இளமை
ஓவ்வொன்றும் புதுமை...
""அகல்விளக்கு said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
எத்தன மலை..
ஒரு மரத்தக்கூட காணோம்.
என்ன தல, குடிக்க தண்ணி வேணும்னா எங்கிட்டு போறது..""
வணக்கமுங்க வந்துட்டு போனதுக்கு நன்றிங்க.
super photos ....
Post a Comment