நம்மாளுக்கு ஆங்கிலத்துல இருக்குற புலம தமிழ்ல கூட கிடையாது. இலக்கணச் சுத்தமா பேசுவாறு ஆங்கிலத்துல. வேலைக்குச் சேர்ந்தப் புதுசுல, எங்கன்னா துபாய்ல, ஏறகனவே ஹிந்திகாரங்க தொல்லைய தாங்க முடியாது இப்போ இந்த அரபிங்களும் நம்மாளுங்ககிட்ட ஹிந்தி பேசி வெந்த புண்ணுல வேல பாய்ச்ச ஆரம்பிச்சுட்டாங்க.
நம்மாளுக்கு வந்த புதுசுல இதெல்லாம் தெரியல. ஆனா போகப்போக அச்சா அச்சான்னு ஆரம்பிச்சு சொச்சமா ஹிந்திய கத்துக்கிட்டாறு.
ஆனா அச்சா அச்சா பகூத்தச்சாங்குற வார்த்தை இப்புடி கால வாறிவிடும்னு அவருக்கு முன்னமே தெரியாம போயிடுச்சு.
ஒரு நாள் வேலையில்லா சமயத்துல கடையோட வாட்சுமேன் நம்மாளுக்கிட்ட பேசிக்கிட்டிருந்தாப்ல, ஹிந்தில பேசுனதால நம்மாளுக்கு முழுசாப் புரியலன்னாலும் புரிஞ்சா மாதிரி நல்லா தலைய ஆட்டி ஆட்டி கேட்டுகிட்டாரு, கூட அச்சாவையும் அங்க அங்க சேர்த்துக்கிட்டாரு. வாட்ச்மேன் முகம்மாறுனதையும்,
கண்கள் கலங்கிப்போனதையும் நம்மாளு கவனிக்கவே இல்ல.
அவன் பேசுறத நிறுத்தின உடனே நம்மாளு அச்சா, பகூத்தச்சான்னாறு.
இப்போ நம்மாள அவன் அடிக்காதது ஒன்னுதான் குறை.
" நான் எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ரொம்ப சீர்யஸாயிருக்காருன்னு சொல்லிகிட்டு இருக்கேன் நீங்க அச்சா அச்சா பகூத்தச்சாங்குறீங்க' ன்னு அவனுக்கு தெரிஞ்ச ஹிந்திங்கிலிஸ்ல சொல்ல. நம்மாளு பதறியே போனாரு. அதுக்கப்புறம் அவன் சமாதானம் ஆனாலும் நம்மாளுக்கு ரெண்டு நாள் தூக்கம் போனது வேற கதை.
அதுக்கப்புறம் அச்சாங்குற வார்த்தையும், பகூத்தச்சாங்குற வார்த்தையையும் நம்மாளு சொல்லுறதேயில்ல. இப்போ அவரு ஹிந்தில சொல்லுற ஒரே வார்த்த 'ஹிந்தி மாலும் நஹீ'.
7 comments:
OWN EXPERINCE
thambi kavalai vedaam.muyarchi seithaal hindi arabi farsi anaiththum karkalaam.thambikku erppatta anubavam pol ingu palarukkum undu.
பகூத் அச்சா
அச்சச்சா... வாழ்த்துக்கள்..
டிகே பாய் சாப் :-)
Anonymous said...
OWN EXPERINCE
ஆமான்னு சொல்லமுடியாது இல்லன்னும் சொல்லமுடியாது.
Barari said...
thambi kavalai vedaam.muyarchi seithaal hindi arabi farsi anaiththum karkalaam.thambikku erppatta anubavam pol ingu palarukkum undu.
நன்றின்னே
விஜய்,அண்ணாமலையான்,
சிங்கக்குட்டி அனைவருக்கும் நன்றி.
எனது பதிவை பார்த்ததற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஜீவன்.
Post a Comment