ஒரே ஒரு கண்டீசன் கடைசி வரைக்கும் படிங்க.
இந்த சங்காத்தமே வேண்டாம்னுதான நா உன்னைய விட்டு விலகி இருக்குறேன். ஏன் திரும்ப திரும்ப வந்து தொல்லை பண்ணுற. ஒழுங்கு மரியாதையா இத இத்தோட நிறுத்திடு. நான் பாட்டுக்கும் என் வழியப்பாத்துக்கிட்டு போயிடுறேன்.
வராத ஏய் வராத.... வராத வராத வராத எத்தனை தடவ சொல்லிட்டேன் வராதன்னு. இப்போ உனக்கு என்ன வேணும்குற. மேட்டர சொல்லு.
என்னது மேட்டரே இல்லயா. அப்ப ஏன் திருமபத்திருப்ப வந்துகிட்ட இருக்க.
ஆ.... மேட்டரு இருக்கா. ஆனா அது ஒரு பெரிய மேட்டரு இல்லயா.
இப்போ என்னத்த சொல்ல வார.
யாரப்பாத்து இந்தக்கேள்வியக்கேட்ட அதுவும் யாரப்பத்திக்கேட்ட. இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னா என்னையப்பத்தி என்னா நினைப்பாரு. இத வேற யாருக்கிட்டயும் கேட்டுறாது. அப்புடியே ஓடிப்போய்டு. திரும்ப இந்தப் பக்கம் வந்துராத. அப்புறம் நானே....
நான் ஒரு முக்கியமான வேலையா வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு பேசலாமே, இன்னைக்கே பேசனுமா. இல்லப்பா இன்னைக்கு முடியாது நாளைக்கு அங்க வந்துடுறியா, சொல்லுறதக்கேளு நாளைக்கு பாப்போம். முடியாதா. அப்ப நானும் உன்னையா பாக்கமுடியாது.
நான் எவ்வளோ முக்கியாமான வேலைன்னு சொல்லுறேன். சும்மா கேக்காம நீ சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க. இப்போ என்ன அவசரம் அதுக்கு. போ போய் வேற வேலையப்பாரு.
இதுக்கு இவ்வளவு, அதுக்கு அவ்வளவு, அந்ததுக்கு ஏன் எதுவுமே இல்ல. நல்லாத்தானய்யா இருக்கு. போ போய் அதுக்கும் கொஞ்சம் போட்டுட்டு வா. நீ போகமாட்டியா. சரி கொடு நானே போறேன்.
நல்லவேலை தப்புச்சேண்டா சாமி, கொலைகாரப்பயலுக நம்மளையே கவுக்கப் பாக்குறாய்ங்க. இந்தப் பாழாப்போன செருப்பு வேற பிச்சுக்கிட்டு நம்மள காலிப் பண்ணப் பாத்துச்சு. இப்போ எங்கப் போறது. ஒருத்தனையும் காணோம். ஹலோ யாருங்க, கொஞ்சம் நில்லுங்க. அங்க வரைக்கும் போகனும் ஒரு லிப்ட் கிடைக்குமா.
எதுவுமே தோனலன்னா இப்புடி எதயாச்சும் கிறுக்கிக்கிட்டே இருப்பேன். சில சமயம் விசயம் புடிபடும் சில சமயம் அப்புடியே மூடி வச்சு படுத்துடுவேன். அப்படி செய்யுறப்ப தானா வந்து விழுந்ததுதான் கீழ இருக்கக்கூடிய இந்த வரிகள்..
ஆக மொத்தம் அறுபது வீடு
அத்தனையும் அத்துப்படி
அனுமதியும் தேவையில்ல
அதகேக்குறதும் யாருமில்ல.
அங்க ஓடி இங்க ஓடி
தவிச்சா தண்ணிக்கிடைக்கும்
தவறவிட்டா கொண்டுவிடும்
நாளு கிழமையின்னா
ராத்திரி கண்ணு முழிச்சு
விதவிதமா வண்ணமிட்டு
அழகான கோலமிட்டு
நா முந்தி நீ முந்தின்னு
ருசிருசியா வந்துச்சேரும்.
முட்ட திண்ணுபுட்டு
கட்டம் வட்டம்போட்டு
விதவிதமா ஆடிப்பாடி
ஆறுமணியான பின்ன
எட்டுமணிக்கு முன்ன
அத்தனையும் முடிச்சுப்புட்டு
மீண்டும்
கட்டம் வட்டம் போட
சிட்டா பறந்து விடும்.
அரவம் அடங்கிய பின்ன
சீமையில வந்த ஒன்னு
நடுத்தெருவுல வந்து நின்னு
ஆட்டம்பாட்டம் காட்டி
எல்லாம் போக முன்ன
அடங்கிப்போகும் பின்ன.
எல்லாம் மாறிப்போச்சு
ஆகமொத்தம் எத்தனையின்னு
யாரும் அறியயில்ல
ஆடி ஓடியாட
கட்டம் வட்டம் போட
மண்ணும் ஏதுமில்ல.
தவிச்ச தண்ணித்தர
போனா கொண்டுவிட
நினைச்சா உள்ள போக
அனுமதியுமில்ல இங்க.
அரவம் அடங்குறதில்ல
நடுத்தெருவுக்கும் வாரதில்ல
எல்லாம் வீட்டுகுள்ள
இப்போ டீவிமுன்ன...............................................................!!!!!!
11 comments:
avv enna solreenga boss
இத கொஞ்சம் சிட்டி பேக்டிராப்ல பில்டப் பண்ணீங்கன்னா,
ARR மீயூசிக்ல
பிளாக்கை தாண்டி போவாயான்னு
கௌதம் மேனன் படம் பண்ணீருவாரு...
http://vaarththai.wordpress.com
அரவம் அடங்குறதில்ல
நடுத்தெருவுக்கும் வாரதில்ல
எல்லாம் வீட்டுகுள்ள
இப்போ டீவிமுன்ன...............................................................!!!!!!//
இந்தவரிகள் ரொம்ப நல்ல இருக்கு
நல்ல கவிதை.. பாராட்டுக்கள் ..
கவிதை அருமை நண்பரே...
பாராட்டுக்கள் ..
உங்க கண்டிசன நான் மூணு தடவை கடை பிடித்தேன் ..
அதாங்க உங்க கவிதைய மூணு தடவை படித்தேன் ..
நீங்க என்னை சொல்லுறீங்கன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு ..
அந்த கவிதைக்கான பொருள் என்னன்னா
"அதாவது இவரு ஊருல இருக்குறப்போ சொல்லா விளையாடிட்டு இருந்தாரமா , இப்போ வேலைக்கு வந்தா பின்னாடி அப்படி எதுவு பண்ண முடியலைங்கிறார்"
விளக்கம் தப்பா இருந்தா மன்னிச்சுருங்க ..
ஹலோ பென்னி, சும்மா பின்னி எடுக்கிறீங்க. கலக்கல் கவிதை தெம்மாங்கு பாணியில். வாழ்த்துக்கள். தொலைந்து போன அந்த நாட்கள் நம் சந்ததிக்காவது கிடைக்கனும்.
தம்பி ஜீவன் பென்னி....@ சொல்ல வர்றது... நினைக்கிறது எல்லாமே சூபர் கருத்துக்கள்..திகொஞ்சம் எளிமையான வெகுஜன தொடர்புள்ள வார்தைகள் போட்டீன்னா....இன்னும் அட்டகாசம இருக்கும் பா.....
அசத்தல் கரு...சூப்பர் கவிதை தம்பி....வாழ்த்துக்கள்!
அது ஒரு கனாக் காலம் :-)
உங்கள் அனைவரின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.
சுவிசில் இந்திய மதவாதியின் குறான் எரிப்பு
மேலும்... www.thambi.tk
Post a Comment