விழுந்த இடத்தில் கல்லாய்
விரிசல் விழுந்த மனமாய்
பறந்து விழுந்த பறவையாய்
சரிந்து போன வாழ்க்கையாய்
நீண்டு கொண்டே போனதடி
நீ இல்லாத இந்த வாழ்க்கை
தொலைத்துவிடவே முயன்றேன்
உன் நினைவுகளை
தொடவே முடியாத தூரத்தில்
தொடர்பே அற்ற இத்தருணத்தில்
மீண்டும் மீண்டும் துரத்துதடி
உன் கரிய முகம்.
கோணல் என்பார்கள்
பின்னால் பேசிச்சிரிப்பார்கள்
முன்னால் போகும் எனக்கோ
முடிவுரை எழுதத்தோன்றும்.
கையை பிடித்து இழுத்து வருவாய்
பின் கண்ணீரால் என் கையை நனைத்து விடுவாய்.
கருமை நிறக் கடவுளுக்கே அழகுமுகத்தின் தேவை இங்கே
கத்திப்பேசி சண்டையிடுவேன்
நீ என் அழகியென்று.
சிரித்து சிரித்துப் பேசும்பொழுது
சிதறி விழும் புன்னகையை
சிந்தவிடாமல் அள்ளிப் பருகிக்கொள்வேன்.
அறிமுகம் செய்ய அழைத்துப்போக
பேரைச்சொல்லும் முன்னே
கோணலாய் போனதடி அகமுகம்.
முகம் காட்ட மறுத்த முகத்தை
முறைத்துவிட்டு வெளியேறினேன்.
அறியேனடி விட்டுப்பிரிவாய் என்று
தேடித்திரிந்தேனடி இலக்கறியாமல்.
தேடிக்களைத்த ஒரு பொழுதில்
சேதி வந்ததடி நீ வந்துவிட்டாய் என்று
ஓடிவந்தேனடி உறைந்து நின்றேனடி
கரியமுகம் காணவில்லையடி.
பின்னே யாரோ பேசும் ஓசைக்கேட்டது
உன் முகத்தை இரயில் தண்டவாளம் எடுத்துக்கொண்டது என்று.
8 comments:
அருமையாக உள்ளது சமீர்.
நாளுக்கு நாள் உங்கள் கற்பனை மெருகேறுகின்றது. வாழ்த்துக்கள்.
கவிதை நல்லாயிருக்குங்க!
கடைசி வரியில் கணக்க வைக்குறீங்க பென்னி,
மிக அருமையானா வரிகளை பிடித்துவந்து
ஒன்றுபடுத்தி மனதை கணக்க வைக்குறீர்கள் ..
எழுத்துக்கள் என்றால் ஏதாவது செய்ய வேண்டும் படிப்பவனை
இதை அழகாய் நிறைவேற்றி இருக்குறீர்கள் ..
வாழ்த்துக்கள் தொடருங்கள் ...
ஹய்யோ .. அருமைங்க ..
சத்தியமா கலக்கி இருக்கீங்க ..
நன்றி MR.BOO
நன்றி மோகன். உங்க கவிதைகளும் நல்லாயிருக்கு.
விஜய் எனக்கு ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் இட்டு என்னை எழுதத்தூண்டும் உனக்கு நன்றிகள்
செல்வா இதுக்குக்காரணமே நீதானப்பா.
கல்லாய்
மனமாய்
பறவையாய்
வாழ்க்கையாய்
படிக்க படிக்க மிகவும் அருமையா இருந்தது
எங்களுக்கு மொக்கை தான் போட்ட தெரியும் இங்கு கவிதை மழை.....
//எங்களுக்கு மொக்கை தான் போட்ட தெரியும் இங்கு கவிதை மழை....//
மொக்கை போடுறது ஒன்னும் ஈசியில்லத்தம்பி அதுவும் ஒரு கலை. அது எனக்கெல்லாம் ரொம்ப கஷ்டம் ஆனா உனக்கு அடிச்சு நவுத்து.
Post a Comment