Tuesday, July 13, 2010

விலாசம் இல்லா இத்தருணத்தில்

நான் நீ என்று 
என்றுமே அழைத்ததில்லை
நாம் என்ற எழுத்தே நம் முதல் அழைப்பானது
சிரித்து மகிழும் குழந்தையின்
குதூகலத்தை நாம் அருகில் இருந்த
இருக்கப்போகும் தருணங்களை
நீண்டுவிட்ட இந்த இடைவெளியில்
உன் பெயரைக்கொண்டு நிரப்பிக்கொள்கிறேன்.

தூரப்பயணங்கள் அரிதான இக்காலத்தில்
நினைவுகள் உன்னை நோக்கியிழுத்து
உன் ஊர் நோக்கி நடக்கையில்
விலாசம் இல்லா இத்தருணத்தில்
நீ வரைந்து கொடுத்த ஒன்றை வைத்துக்கொண்டு
கடந்துபோகும் புன்னகைகளை புறம்தள்ளி
தேட முற்படுகிறேன்.

ஓர் நாள்
பெருங்கூட்டமொன்றில் ஒற்றைப்புள்ளியாய்
மிகுந்துவிட்ட எறும்புக்கூட்டமொன்றில்
கூடுதெரியாமல் தவித்த என்னை
நீ கூவிக்கூவி அழைத்ததை
என்னிடம் பகிர்கையில்
கூட்டம் என்பதை மறந்து
உமிழ்நீரை உன் கண்ணங்களில்
கலங்கிய உன் கண்ணீரோடு
கரைத்து வழியவிட்டேன்.

அந்த உமிழின் சுவையை
வழியும் என் வியர்வையில்
கசியும் என் கண்ணீரில்
வறண்ட என் உதடுகளில்
துலாவும் என் நாக்கின் உதவியுடன்
இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.
 .               

7 comments:

சௌந்தர் said...

உமிழ்நீரை உன் கண்ணங்களில்
கலங்கிய உன் கண்ணீரோடு
கரைத்து வழியவிட்டேன்.//

ஜொள்ளு விட்டதை எப்படி சொல்லுறாரு பாருங்க

MR.BOO said...

அருமை சமீர்...
எப்படி உங்களால் இப்படி கற்பனை செய்ய முடிகின்றது...

எல் கே said...

ONNUM PURIYALA

செல்வா said...

@LK
எனக்கும் தாங்க ..!!

ஜீவன்பென்னி said...

LK said...
ONNUM PURIYALA

அண்ணாத்த இப்புடி சொன்னா எப்புடி. :)

Barari said...

thambiyin karpanai valam virinthu konde pokirathu.manadhin azaththil pathukki vaiththathu ippothu vootraki vazikirathu.

விஜய் said...

//என் வியர்வையில்
கசியும் என் கண்ணீரில்
வறண்ட என் உதடுகளில்
துலாவும் என் நாக்கின் உதவியுடன்
இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.//

ரொம்ப அழகா எழுதி இருகீங்க ஜீவன் பென்னி,

வாசிக்கும் பொழுது கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கி அதன் பாதையில் பயணிக்க செய்து இருக்கிறீர்கள் . நிஜமாய் இன்னும் ஆழமாய் உங்களால் எழுத முடியும் என்பது உண்மை ஆகிறது ....

வாழ்த்துக்கள் தோழா ... விரியட்டும் உன் கனவுலகம் இங்கே கவிதையாய் ..

Post a Comment