ஆராவாரங்கள் அற்றுபோனது.
கதவுகளின் உராய்வுகளில்
நிறைந்திருக்கும் ஓசைகளும்
அங்கும் இங்கும்
எங்கும் ஓடித்திரியும்
மழலைகளின் காலடிச்சத்தங்களும்
சுவர்களில் பட்டுத்தெறிக்கும்
கள்ளமில்லா கொஞ்சல்களும்
அடிக்கடி நிகழும்
மனதில் பதியா சண்டைகளும்
பின்வரும் பஞ்சாயத்துகளும்
கலைந்துகிடக்கும் கோலங்களாய்
நிறைந்துகிடக்கும் நினைவூட்டும்
இருத்தல்களும்
காணக்கிடைக்கவில்லை.
5 comments:
மழழைகளின் காலடிச்சத்தம்,
சுவர்களில் பட்டுத்தெரிக்கும்
கள்ளமில்லா கொஞ்சல்களும்
அடிக்கடி நிகழும்//
நல்ல கவிதை எழுதுறிங்க கவிதை எழுத தெரியும் சொல்லவே இல்லை
உள்ளுக்குள் உறங்கிக் கிடந்த கவிதை சிங்கம் உணர்ந்து விட்டது என்று நினைக்கின்றேன். நன்றாக இருக்கின்றது. தொடரட்டும் ஜீவன்...
Jeevan for your info.
(மழழை என்பது மழலை)
நன்றி Boo.
ம்ம்ம் சமகால நிலை.. நல்லாயிரிக்கி
Post a Comment